Pages

Saturday, December 17, 2011

ஈரோடு சங்கமம் 2011-ஒரு பார்வை .....


அன்பர்களே....

டிஸ்கி:- 1
இங்க போட வேண்டிய முன்குறிப்பு.----
பின்குறிப்பாக...டிஸ்கி:-2,,3,,4,,5,,-ல் 

ஈரோடு பதிவர் சந்திப்புக்கு முதன் முதலாய் போயிருதேன் .....
சனிக்கிழமை இரவே ஈரோடு சென்றுவிட்டேன்....
சங்கம உறுப்பினர்கள் மிக அருமையாக---இரவே வந்தவர்களுக்கு 
தங்க விடுதி ஏற்ப்பாடு செய்திருந்தனர் ....
வந்திருந்த பதிவர்களிடம் என்னை அறிமுகப்படுதிக்கொண்டேன் ....
சிலர் சந்து பக்கம் ஒதுங்கினார்கள் ....( பேர் வேண்டாமே ப்ளீஸ் )
( என்ன என் ப்ளாக் பேர் சொன்னாலும் அப்படி ஒன்னு இருக்குதா.....என்று கேட்டார்கள் ....நாம வளரனுமோ ?? )

மறுநாள் ஞாயிற்றுகிழமை 9.00 கே விழா நடந்த அரங்கத்திற்கு 
சென்றுவிட்டேன் ....அறிமுகமான பதிவர்களுடன் .....

அட அட என்ன அன்பு இந்த ஈரோடு பதிவர்களிடம் ....
கையை பிடித்து இழுத்து செல்லாத குறையாக என்னை சாப்பாட்டு  கூடத்திற்கு அழைத்துசென்று சாப்பிட உட்கார வைத்துவிட்டு---தான் சென்றார்கள்..... 

காலை டிபன் மிக அருமை...பூரி,,முட்டை,,,குருமா,,இட்லி,,வடை,,,
என மிக பிரமாதமான விருந்து ....சுவையோ ...அப்படி...
மீண்டும் இந்த சுவை இனி அடுத்த சங்கமத்திற்கு தான்...
வேறுஎங்கும் வாய்ப்பேயில்லை....

மிக சரியாக 9.45 க்கு நிகழ்ச்சிகள் ஆரம்பித்தன....
அறிமுகபடலம்.,,ப்ளாக்-ன் எதிர்காலம்,,,ஈரோடு சங்கமத்தின்
உருவாக்கம்...இப்படி நிறைய ....
(இவை பற்றி என் அடுத்த பதிவில்)


நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்த போது மைக்-ல் அறிவிப்பாளர் ஒரு அறிவிப்பு செய்தார் 
தீடீர் என்று அனைவரிடமும் பரபரப்பு.....
இந்த சங்கம-விழாவிற்கு வர முடியாத வெளிநாட்டு
பிரபல பதிவர்கள் இரண்டு பேர் ...போன்
முலமாக எங்களிடம் பேசி நிகழ்ச்சிக்கு வாழ்த்து
தெரிவித்தார்கள்....
ஒரே உற்சாகத்துடன் எழுந்த கைதட்டலில்
மண்டபமே கிடு கிடுத்து போனது....

பிறகு வழக்கம் போல் அதிரடி சஸ்பென்ஸ்.....
நிகழ்ச்சிகள் நடந்தது.....
பிறகு மதிய விருந்து......விருந்துன்னா விருந்து....
அப்படி ஒரு விருந்து ....
நம் வீட்டு விழாவிற்கு கூட இப்படி பார்த்து பார்த்து
செய்து இந்த சுவை-ஐ கொண்டு வந்திருக்க மாட்டோம் ....
(இதை பற்றிய விவரங்கள் படத்துடன் அடுத்த பதிவில்)

மீண்டும் நிகழ்ச்சிகள் மிகுந்த உற்சாகத்துடன் ....
கலை கட்டியது....
மாலை வரை கலை கட்டிய நிழ்ச்சிகள் ...முடிவுக்கு
வந்த போது அதுவரை அனைவரிடமும் இருந்த உற்சாகம்
மொத்தமாக வடிந்து போனது ...
அனைவரிடமும் இன்னும் கொஞ்சம் நேரம் இந்த
நிகழ்ச்சி நீடிக்க கூடாதா என்ற ஏக்கம் அப்பட்டமாக
முகத்தில் தெரிந்தது....

ஒருவருக்கு ஒருவர் ...போன் நம்பர்,,,முகவரி வாங்கி கொண்டு
மீண்டும் அடுத்த சங்கமத்தில் கண்டிப்பாக சந்திப்போம்
என்று மன நிறைவுடன் பிரிந்து சென்றாகள்....
இந்த முறையும் மிஸ் செய்தவர்கள்....கண்டிப்பாகஅடுத்த முறையாவது கலந்து கொள்ளுங்கள்....இது நம்ம வீட்டு
விழா......PLEASE DONT MISS IT...HERE AFTER....
நன்றி....ஈரோடு சங்கம குழுவினர்களே.... HATS OFF.....

டிஸ்கி:-2

என்னடா நாளைதானே சங்கமம்...
இவன் இப்பவே நடந்த மாதிரி எழுதுறானே
என்று நினைக்கிறீங்களா???
எப்படியும் அட்டன் பண்ணவர்கள் இதை பத்தி
பதிவு போட போறாங்க....நாம முந்திக்குவோமே...
அப்படீன்னு.......ஹி....ஹி... (டிஸ்கி 3 ஐ பார்க்கவும்)

டிஸ்கி:-3

அதாவுதுங்க---இப்ப ஒரு படம்..வருவதற்குள்
பிரி-விவ்யு ஷோ பார்த்துட்டு விமர்சனம் எழுதுரதில்லையா...
அது போல தாங்க இதுவும்...போன வருட சங்கம நிகழ்ச்சியினை
வைத்துஇந்த வருட நிகழ்ச்சி உங்கள் பார்வைக்கு ....

ஆமாங்க....இந்த சினிமா விமர்சனத்தின் தொல்லை
தாங்க முடியலை.....அப்பாப்பா...முதல் ஷோ-விற்கு
டிக்கெட்,,எடுத்துட்டேன் முதல் கொண்டு,,
படம் பாக்குறேன்,,,இடைவேளை,,,எண்டு ....இப்படி
எல்லாத்தையும்,,,போடுறாங்க...இதுல வேற ...படம்
நல்லாஇருக்கு-னு சொல்லுறவங்க,,,நல்லாஇல்லை-னு சொல்லுரவங்களோட விமர்சனம் படிச்சிட்டு
இன்னும் தெருவுல கிழித்துக்கொண்டு ஓடாததுதான் பாக்கி....

போற போக்க பார்த்தா படம் பூஜை போட்ட அன்னிக்கே---
""பதிவுலக வரலாற்றில்---முதல் முறையாக எங்கள் தளத்தில்
சூப்பர் ஹிட் விமர்சனம் ...படிக்க தவறாதீர்கள்””னு
போடாததுதான் பாக்கி.....

இன்னும் எத்தனை விவ்யு-ல தான் ஒரு படத்த
விமர்சனம் பண்ணுவீங்க...

இறைவா படத்தை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்...
இந்த
பதிவர்களின் சினிமா விமர்சனத்தில் இருந்து எங்களை நீ காப்பாற்று....

டிஸ்கி:-4

இந்த பதிவு முழுக்க முழுக்க கற்பனையே...!!!
யார் மனத்தையும் புண்படுத்த அல்ல...!!!
அப்படி......(அப்புறம் SO AND SO.....நீங்களே FILL பண்ணிக்குங்க)

டிஸ்கி:-5

இந்த பதிவு மிக நீளமாக போய் விட்டதால்....
நீண்ட நாட்களாக பதிவு போடாததால்....
இதை இரண்டு பதிவாக படித்து கொள்ளவும்....
அப்ப விழுந்த இடைவெளி சரி ஆகிடும்தானே???
ஹி..ஹி..நன்றி...!
(3...1 !)

     

43 comments:

வெளங்காதவன்™ said...

Yov... Ithellaam oru pozhappaa???]

:)

நாய் நக்ஸ் said...

Yov... Ithellaam oru pozhappaa???]////

ஹி..ஹி...

முத்தரசு said...

லொள்ளு...ஹிம். நடக்கட்டும் ரைட்டு

நாய் நக்ஸ் said...

மனசாட்சி said...
லொள்ளு...ஹிம். நடக்கட்டும் ரைட்டு////

வேற நமக்கு என்ன தெரியும்....
இதான் ....

Anonymous said...

நல்லா சொன்னிங்க போங்க..
விமர்சனம் தொல்லை பயங்கரம் . அதும் சிலர் இருகாங்க பாருங்க ஐயோ . வேண்டாம் விடுங்க .. அவங்கள பத்தி எழுதுன உங்க பதிவ விட நீளமாயிரும் . அதுக்கு தான் 4 பேர் இருக்காங்களே ..

நாய் நக்ஸ் said...

எனக்கு பிடித்தவை said...
நல்லா சொன்னிங்க போங்க..
விமர்சனம் தொல்லை பயங்கரம் . அதும் சிலர் இருகாங்க பாருங்க ஐயோ . வேண்டாம் விடுங்க .. அவங்கள பத்தி எழுதுன உங்க பதிவ விட நீளமாயிரும் . அதுக்கு தான் 4 பேர் இருக்காங்களே ..////

நன்றி ....சரியான புரிதல்....

dheva said...

நக்கீரன்..@ நல்லா இருக்குங்க....இந்த முன்னூட்ட ரகளை....ஹா ஹா ஹா!

நாய் நக்ஸ் said...

dheva said...
நக்கீரன்..@ நல்லா இருக்குங்க....இந்த முன்னூட்ட ரகளை....ஹா ஹா ஹா!////

:))))

Unknown said...

அடடா இப்படி வேற ஆரம்பிசிட்டீங்கலாய்யா...இது ஒரு ட்ராண்ட் ஆயிருமே...அய்யய்யோ காப்பாத்துங்க....!

நாய் நக்ஸ் said...

விக்கியுலகம் said...
அடடா இப்படி வேற ஆரம்பிசிட்டீங்கலாய்யா...இது ஒரு ட்ராண்ட் ஆயிருமே...அய்யய்யோ காப்பாத்துங்க....!/////

இப்படியும் ஒரு டிரண்டு
ஆரம்பிப்போமே .....

கொஞ்ச நாள் ஓடும் இல்லை....

Anonymous said...

World No.1 Money Making Site. 100% Without Investment Job.

Visit Here: http://adf.ly/4FKbj

முத்தரசு said...

கேரளாவைச் சார்ந்த ஸ்தாபனங்கள் நகைகடை, துணிக்கடை, ஹோட்டல் உள்ளிட்ட எந்த நிறுவனத்திலும் தமிழர்கள் நுழைய மாட்டோம் என்று தீர்மானம் போட்டு கடைப்பிடிக்க வேண்டும். குறிப்பாக கேரள டீக்கடைகளையும் புறக்கணிக்க வேண்டும்.

அதை விடுத்து கல்லால் அடிப்பதும் கடையை உடைப்பதும் கூடாது.

தமிழ்வாசி பிரகாஷ் said...

ஹா ஹா இதுவும் நல்லா இருக்கே... முன்னூட்ட விமர்சனம்...

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Online Works For All said...

World No.1 Money Making Site. 100% Without Investment Job.

Visit Here: http://adf.ly/4FKbj//

உனக்கு ஒரு சாவே வராதா. சாவடிக்கிறானே.

வெங்கட் said...

@ வெளங்காதவன்..,

// Yov... Ithellaam oru pozhappaa???]//

அதை நீங்க சொல்றீங்க..?! என்ன
கொடுமை இது..

நேத்து உங்க பதிவை படிச்சிட்டோம்ல..

வெளங்காதவன்™ said...

//வெங்கட் said...

@ வெளங்காதவன்..,

// Yov... Ithellaam oru pozhappaa???]//

அதை நீங்க சொல்றீங்க..?! என்ன
கொடுமை இது..

நேத்து உங்க பதிவை படிச்சிட்டோம்ல.////

இன்னும் இருக்கீங்களா?????

:-)

cheena (சீனா) said...

அன்பின் நக்ஸ் - மறந்து விட்டு சென்ற ஆண்டின் சங்கமத்தினைப் பற்றீய இடுகையினை மறு பதிவாகப் போட்டு விட்டீர்களோ என நினைத்தேன். அப்புறம் தான் புரிந்தது - இது முன்னோட்டமென்று. நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

MANO நாஞ்சில் மனோ said...

ஆஹா அருவாளுக்கு பலமா வேலை குடுக்குராங்களே...!!!

MANO நாஞ்சில் மனோ said...

இறைவா படத்தை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்...
இந்த
பதிவர்களின் சினிமா விமர்சனத்தில் இருந்து எங்களை நீ காப்பாற்று....//

சிபி'யின் டங்குவாரை பலமா இழுக்குரீங்களே அண்ணே...!!!

MANO நாஞ்சில் மனோ said...

இந்த பதிவு மிக நீளமாக போய் விட்டதால்....
நீண்ட நாட்களாக பதிவு போடாததால்....
இதை இரண்டு பதிவாக படித்து கொள்ளவும்....
அப்ப விழுந்த இடைவெளி சரி ஆகிடும்தானே???
ஹி..ஹி..நன்றி...!//

நாசமாகபோச்சு போங்க....

RAVI said...

மச்சீ சனிக்கிழமை இரவு,ஞாயிறு காலை,மதியம் உணவுக்கு சீன் போடுறாப்புல :)

Madhavan Srinivasagopalan said...

நாளைக்கு பசிசல், ஆதிராவின் சிறுகதைப் போட்டி பரிசளிப்பு விழா..
அதப் பத்தி இன்னைக்கு நைட்டே பதிவு போட்டுடுங்க..
மிஸ் பண்ணிடாதீங்க..

குறையொன்றுமில்லை. said...

ப்ரீவியூஷோ நல்லாவே இருக்கு. அதுபோலவே ரியல் ஷோ பத்தியும் போய்வந்து சொல்லுங்க.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

முன்னோட்டம் போட்டாச்சு, இனி அடுத்து பின்னோட்டம், கண்ணோட்டம், விட்டுட்டு ஓட்டம்லாம் வருமா?

ரஹீம் கஸ்ஸாலி said...

அநியாயத்திற்கு ஸ்பீடா இருக்கேய்யா நீ....

M.R said...

சின்சியரா படிச்சுட்டு வந்தேன் கடைசியில் காமடி ஹைய்யோ ஹைய்யோ ...

திண்டுக்கல் தனபாலன் said...

படித்தேன். ரசித்தேன்.
அருமை! கலக்குறீங்க...
பகிர்விற்கு நன்றி நண்பரே!
என் வலையில்:
"நீங்க மரமாக போறீங்க..."

Prabu Krishna said...

லேட்டா வந்துட்டன் போல.

சரி இது நடந்த அப்புறம் எழுதின பதிவா நினைச்சுகிறேன்.

சசிகுமார் said...

நல்ல கற்பனை சார் உங்களுக்கு...

Anonymous said...

இன்று.

காதல் கதைகள் - எனக்கு 55 உனக்கு 25

Unknown said...

அய்யா நம்ம பதிவுக்கு வாங்க, நீங்க தான் அதில் ஹீரோ

Unknown said...

பல்பு வாங்கிய நாய் நக்ஸ் நக்கீரன் - முடிஞ்சா நீங்களும் கலாய்க்கலாம்


http://thothavanda.blogspot.com/2011/12/blog-post_20.html

Nanri - senthil anna

ஸ்ரீராம். said...

இன்று, மற்ற பதிவுகள் படித்து விட்டு இதைப் படிக்கும்போது பெருமளவு ஒத்துப் போகிறது!

Rathnavel Natarajan said...

வாழ்த்துகள்.

CS. Mohan Kumar said...

உங்களை ஈரோட்டில் சந்தித்ததில் மிக மகிழ்ச்சி நக்கீரன். செம ஜாலியான ஆளு நீங்க. சென்னை வந்தால் பேசுங்க

சி.பி.செந்தில்குமார் said...

ஈரோடுக்கு வந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன்

Unknown said...

watch it.

http://www.thothavanda.blogspot.com/2011/12/blog-post_21.html

Unknown said...

நீங்க மேடையில...செல்ப் போனை வச்சு படம் காட்டும் போது நான் அரங்கை விட்டு வெளியேறினேன்....(நண்பர் ஒருவர் அழைத்ததால் !)

MaduraiGovindaraj said...

நல்ல கற்பனை சார் உங்களுக்கு...

உணவு உலகம் said...

நானும் லேட்டா வந்ததால், ரசிச்சு படிச்சேன். கடைசியில பார்த்தா இது முன்னோட்டம். சூப்பர்.

Mohamed Faaique said...

டிஸ்கி’லயே ஒரு விழிப்புணர்வுப் பதிவு நீங்க பெரிய ஆளுதானுங்க....

அம்பாளடியாள் said...

பகிர்வுக்கு மிக்க நன்றி என் கிறிஸ்மஸ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
உங்களிற்கும் உங்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் உரித்தாகட்டும் சகோ .