Pages

Tuesday, March 18, 2014

பெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)

வணக்கம் அன்பர்களே...!!!

                            { இந்த பதிவு உங்களுக்கு எப்படி தோன்றும் என்று தெரியவில்லை....ஆனால் கண்டிப்பாக நீங்கள் என்னுடன் ஒத்துபோவீர்கள் என்று தெரியும்....}

[சற்றே பெரிய பதிவு போடோஸ்,,வீடியோஸ்(3gp)-- இணைந்த பதிவு என்பதால்]

மீண்டும் வணக்கம் அன்பர்களே...!!!!

நான் பதின்ம வயதில் இருந்து மூளை சிந்திக்க!!!??? ஆரம்பித்ததில் இருந்து,,...பெரியாரின் புத்தகங்களை நூலகத்தில் படிக்க ஆரம்பித்தது முதல் முழு தீவிர வெறிபிடித்த கடவுள் மறுப்பாளன்...உண்மையாக...இன்றும் என்றும்...

எனது நீண்டகால இனிய நண்பன் சுகுமார் நாலைந்து வருடங்களாக என்னை அவர்கள் சொந்த ஊரான குன்னாரம்பட்டி (கொட்டாம்பட்டி) திருவிழாவிற்கு அழைத்துக்கொண்டே இருந்தார்...சாமி விவகாரம் என்பதால் நான் பெரிதாக ஆர்வம் காட்டாமல் தவிர்த்துவந்தேன்...ஆனால் இவ்வருடம் சென்றுதான் பார்ப்போம் என்று கிளம்பினேன்....அப்பவே கேமரா எடுத்து செல்ல சொன்னார் என் தங்கமணி....எடுத்து செல்லாதது எவ்வளவு மிக பெரிய தவறு அங்கு சென்றபோதுதான் தெரிந்தது....ஆபத்துக்கு பாவம்இல்லை என்று என் கைபேசியில் எடுத்தேன்...கொஞ்சம் சுமார்தான் பொறுத்துக்கொள்ளவும்....

கடந்த 2/3/14 அன்று மதியம் கிளம்பினோம்...திருச்சி தாண்டி சென்றுகொண்டே இருந்தேன்...திடீர் என்று உடம்பில் ஒரு ""எழுச்சி""....காற்றில் ""கம்பியூட்டர் வாசம்""....என்னடா என்று ரோட்டை பார்த்தால் அந்த இடம் திரு செங்கோவி & இம்சை அரசன் பாபு வசிக்கும் கோவில்பட்டியாம்....!!!!

கொட்டாம்பட்டியில் இருந்து உள்ளே 12கிமியில் இருக்கு குன்னாரம்பட்டி என்ற பக்கா கிராமம்...அப்படியே சினிமாவில் காட்டப்படும் உண்மையான கிராமம்....

அன்று இரவு சாமி தேர் வீதி உலா...

                                                 


அதற்கு முன் அம்மனை அந்த ஊர் பொது குளத்தில் வைத்து பூஜை ஆது இது என்று செய்கிறார்கள்...
         ஐயா கனவான்களே.... முதலில் திருவிழாவை பற்றி சொல்லிவிட்டு பிறகு இப்பதிவின் முக்கிய சாரம்சத்துக்கு வருகிறேன்...கொஞ்சம் பெரிய பதிவு தான்... பொறுத்துக்கொள்ளவும்...இறுதி வரை சக்கரத்தையோ பேஜ் டவுனையோ இயக்காமல் தொடரவும்...

பிறகு அம்மன் ஊர்வலம் தேரில்...விடிய விடிய...தேர் கிளம்பும்போது தேர் சக்கரத்தில் வேண்டுதலுக்காக தேங்காய் உடைக்கிறார்கள்...
           
அதிகாலை தேர் நிலைக்கு வந்ததும், பொங்கல் வைக்கிறார்கள்.கோழி அறுப்பு,..தீச்சட்டி,,பால்குடம் எடுத்தல்,,,அருள் வாக்கு கேக்குதல்....என்று போகிறது......மதியத்துக்கு மேல் ஒவ்வொரு வீட்டிலும் அம்மனுக்காக நேர்ந்துவிட்ட கிடாவெட்டு தொடங்குகிறது....வெட்டுராங்கையா 220 கிடாவுக்கு மேல்...

இரவு ஆரம்பித்து விடிய விடிய வள்ளி கந்தன் நாடகம்...அடுத்த நாள் இரவு இன்னிசை கச்சேரி,,,,என்று பெரும் கொண்டாட்டமாக போகிறது இந்த ஊர் திருவிழா....

           


                      

             

   திட்டதட்ட சுமார் 4000 பேருக்குமேல் அனைத்து ஜாதி மக்களும் ஒற்றுமையாக கொண்டாடும் ஒரு திருவிழா...மருந்துக்கு கூட போலீஸ் இல்லை...மேலே உள்ள புகை படத்தில் வந்த இரண்டு போலீஸ்காரர்களும்,, சும்மா ஐந்து நிமிடத்தில் கிளம்பிவிட்டனர்....ஒரு சின்ன சலசலப்பு கூட இல்லை...

ஊரை பற்றி சொல்லனும்னா விவசாயம் ஏதும் இல்லை...அனைத்து வீடுகளிலும் ஆடு,மாடு,,கோழி....வளக்கிறார்கள்...இதுதான் இவர்களின் பொருளாதாரம்...தென்னந்தோப்பு வசதியானவர்கள் வைத்திருந்தாலும்,, தண்ணீர் இல்லை பாச்ச...பத்து கிமிக்கு அப்பால் இருந்து விலைக்கு வாங்கி பைப் மூலம் எடுத்துவருகிறார்கள்...

தண்ணீரை பற்றி சொல்லும் போது வா.மணிகண்டனின்...இந்த   பதிவு நினைவுக்கு வருகிறது...இந்த ஊர் குளத்தில் எப்போதும் தண்ணி இருக்குமாம்...20 அடிக்கு மேல் ஆழம் உள்ள குளம்...மழை இல்லாததால் திருவிழாவிற்காக குளத்துக்குள் ஒரு சிறிய குளம் வெட்டி அதில் நீர் நிரப்பி உள்ளார்கள்...பின் வரும் வீடியோக்கள் பார்த்தால் உங்களுக்கு புரியும்... வறண்ட பூமிதான்...எதற்கும் தாக்கு பிடித்து உயிருடன் இருக்கும் சீமை கருவேல மரங்கள் கூட எப்படி பட்டு போய் இருக்கிறது என்று பாருங்கள்..

     

        
இங்கு பெரும்பாலான வீடுகள் இப்படித்தான் இருக்கின்றன...சமையல் கூடம் எதிராக...

   

என் நண்பன் சுகுமார்....

    


இனி பதிவின் முக்கிய அம்சத்துக்கு போவோம்...


சுமார் 400 தலைக்கட்டு உள்ள அனைத்து ஜாதியினரும்உள்ள சிறிய பக்கா கிராமம்...கடந்த இரண்டு தலைமுறையினர் பொழைப்புக்காக ஊரை விட்டு சென்று விட்டனர்...இவர்களுக்கு முன் உள்ள வயசான 65 வயத்துக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே தனிமையில்,, பழம்கதைகளை பேசி பொழுதை போக்குகின்றனர்.....இன்னுமும் இந்த கிராமத்துக்கு செய்திதாள்கள் வருவதில்லை...கொட்டாம்பட்டிக்கு சென்று யாராவது வாங்கிவந்தால்தான் உண்டு....கேபிள் கிடையாது...இப்போதுதான் ஒருசில வீடுகளில் DTH வந்துள்ளது...{அரசுடிவி...வந்ததனால்}...

உண்மையிலேயே மனிதர்கள் நடமாட்டம் ரொம்ப  குறைவு....
ஊரைவிட்டு பிழைக்க போனவர்கள் அனைவரும் நல்ல நிலைமையில் அந்தஅந்த ஊர்களில் செட்டில் ஆகிவிட்டனர்...நல்ல வேளையில் பலர் இருக்கிறார்கள்...கல்யாணம்,, காதுகுத்து,, பூப்பெய்தல்...மற்றும் துக்க காரியத்துக்கு குடும்பத்தில் யாராவது ஒருவர் வந்து செல்வார்களாம்...

இந்த மாதிரியான சூழ்நிலையில்தான் இந்த ஊர் திருவிழா வருகிறது...இந்த ஊரில் உள்ள மொத்த குடும்பத்தில் அனைத்து உறுப்பினர்களும், அவர்களின் வெளியில் உள்ள சொந்தங்களை,, நன்பர்களை அழைத்து வருகிறனர் .... எது எப்படி இருந்தாலும் இந்தியாவில் எங்கு இருந்தாலும்,, எந்த மாதிரியான சூழ்நிலையில் இருந்தாலும் அனைத்தும் தூக்கி கடாசி விட்டு இங்கு ஒன்று கூடுகின்றனர்...

அனைத்து சொந்தங்களும் வந்தவுடன் அப்படியே கும்பலாக கிளம்பி போய் மற்ற குடும்பத்தை,,உறவினர்களை கண்டுகொண்டு வருகின்றனர்....

ஏயப்பா...நானும் நண்பனுடன் கூட போனேன்...ஒவ்வொரு வீட்டிலையும் சாப்பிட சொல்லி எவ்வளவு கட்டாயப்படுத்துகிறார்கள்...

எவ்வளவு சொந்தங்கள் இந்த ஒரு வருடபிரிவை,,,ஆற்றாமைகளை...பாசத்தை...இந்த மூன்று நாட்களில்  தீர்த்துகொள்கிரார்கள்...அதுவும் இந்த வயசானவர்கள் கண்ணில் நீர் ததும்ப ததும்ப அவர்களின்...தனிமை ஏக்கத்தை போக்கி கொள்கிறார்கள்....இனி அடுத்த வருடம்தான் இவ்வளவு சொந்தங்களையும் ஒன்றாக பார்க்க முடியும் என்ற பிரிவு துயர்....

நம் தமிழ் நாட்டு கலாச்சாரம் ஒன்னும் வீணா போன கலாச்சாரம் இல்லை ஐயா...உண்மையிலேயே உலகுக்கே வழிகாட்டி....
கடவுள் என்ற பெயரால் நடக்கும் பித்தலாட்டங்கள் ஒரு புறம் இருக்க...
இப்படி அனைத்து சொந்தங்களையும் ஒன்றாக இணைத்து கூடி மகிழ்ந்து... கல்யாண வயதில் ஆண்,,பெண் இருந்தால்...இங்கேயே ஓரளவுக்கு கண்டுகொள்ளவும்,,சம்பந்தம் பேச மனதில் விதை விழுகிறது...இந்த மாதிரி கட்டுகோப்பான அனைவரும் வந்தே ஆகவேண்டும் என்ற திருவிழா....

சொந்தங்கள்,,பந்த பாசம்,, அனைத்தும் அருகி வரும் இன்றைய காலகட்டத்தில்...அனைத்தையும் உயிர்ப்புடன் வாழவைத்துக்கொண்டிருப்பது இந்த மாதிரியான திருவிழாக்கள்தான்....

பொதுவா திருவிழா என்றாலே அடிதடி என்று சினிமாவில் பார்த்த நமக்கு நான் சென்ற இந்த ஊர் திருவிழா என்னை அப்படியே மாற்றியது...உன்னதமான பக்கா கிராமத்தை காண நேர்ந்தது...இதே மாதிரி நிறைய ஊர்களில் நடக்கலாம்...

அங்கெல்லாம் கடவுள் என்ற பெயரால் மனிதம் வாழ்கிறது...இப்படி ஒரு கலாச்சாரத்தையும்,,,நிகழ்வுகளையும்... யோசித்த நம் முன்னோர்களுக்கு என் வணக்கங்கள்....

ஐயா...வெளிநாட்டு,,இந்திய வாழ் --தமிழ்நாட்டுகார்களே...உங்களின் சொந்த ஊரில் இந்த மாதிரி திருவிழாக்கள் நடந்தால் காசை பார்க்காமல் ஒரு எட்டு போய்  வாருங்கள்... முக்கியமாக நம் சந்ததியினரையும் அழைத்து செல்லுங்கள்...அவர்களுக்கும் தெரியட்டும்...நம் மண்ணின் உயிர்ப்பு...நாமே ஆதரிக்கவில்லை என்றால் என்னாவது தமிழ்??? இணையத்தில் இருந்தால் போதுமா??கொஞ்சம் கொஞ்சமாக பட்டுக்கொண்டிருக்கும் தமிழ் கலாச்சாரம் மற்றும் வாழ்வாதாரம் துளிர் விடட்டும்...

இறுதியாக.....

கடவுள் என்ற பெயரால் இப்படி ஒரு அருமையான நிகழ்வுகள் நடப்பதால்


கடவுள் இருக்கட்டும்.....


(பெயரளவில்)...
                 
               {இன்னும் சென்டிமெண்டை பிழியலாம்....பதிவு பெரிதானதால் பதிவின் நோக்கம் புரிந்தால் போதும் என்று இத்துடன் முடிக்கிறேன்}

12 comments:

செங்கோவி said...

நுணுக்கு நுணுக்கி ஆராய்ந்து நாத்திகவாதிகள் இழப்பது, இந்த கொண்டாட்ட மனநிலையைத் தான். கிராமத்தானுக்கு ஒன்றும் தெரியாது, ஆனால் சந்தோசமாக இருப்பான்..உண்மையைச் சொன்னதுக்கு நன்றி நக்ஸ்!

நாய் நக்ஸ் said...

நன்றி செங்கோவி....

ஆனால் நான் மாற வாய்ப்பில்லை....கலாச்சார சிந்தனை....அவ்வளவுதான்....

saidaiazeez.blogspot.in said...

அண்ணே சூப்பரா ஒரு திருவிழாவை கண்முன் கொண்டுவந்து நிறுத்தினதுக்கு எனது வாழ்த்துக்கள்.
நல்லதோ கெட்டதோ, விழாக்கள் என்பது ஒரு get together. அவ்வளவுதான். இதில் கலந்துக்கொள்ளவேண்டும் என்று எத்தனையோபேர் கடனவுடன வாங்கியும் வந்திருப்பார்கள். அதனால் நாளை சங்கடம் வந்தாலும் இன்றைய சந்தோஷம் முக்கியம் என்பதை இது மாதிரியான விழாக்கள் காட்டுகின்றன.
மக்களை ஒன்றுபடுத்தி மனிதர்களாக மாற்ற வந்த ஒரு கொள்கையை (மதம்) ஒரு சிலரின் சுயநலத்தால் இன்று அதே கொள்கை மக்களை மாக்களாக்கி பிறித்துப்போட்டு படுத்தியெடுக்கிறது!

திண்டுக்கல் தனபாலன் said...

இதோ இங்கும்... வருடா வருடம் கோட்டை மாரியம்மன் மாசித் திருவிழா மேலும் மேலும் சிறப்பாகத் தான் கொண்டாடப்படுகிறது...

உங்களின் ஆலோசனையும் நன்று... ஆதங்கமும் நன்று...

உணவு உலகம் said...

அருமையான பகிர்வு. கடைசி வார்த்தை வரை நல்ல ஈர்ப்பு.

நாய் நக்ஸ் said...

@அஜிஸ்..
அருமை....உண்மைதான்...எல்லாம் சுயநலம்தான் காரணம்...நன்றி...


@DD....
வாழ்த்துக்கள்...நன்றி...

@ஆபீசர்....

நன்றி....!!!

Madhavan Srinivasagopalan said...

The whole idea of religion / belief in God all for the purpose of having peaceful-happy life in the world.

Unknown said...

thanks uncle

மணவை said...

அன்புள்ள அய்யா திரு.நக்கீரன் அவர்களே...
வணக்கம். .பெரியாரின் புத்தகங்களை நூலகத்தில் படிக்க ஆரம்பித்தது முதல் முழு தீவிர வெறிபிடித்த கடவுள் மறுப்பாளன்...உண்மையாக...இன்றும் என்றும்... வாழ்த்துகள்.

தங்கள் கிராமத்திற்கே கூட்டிச் சென்று...அருமையான விழாவைப் பார்க்க வைத்துவிட்டீர்கள்.

அங்கெல்லாம் கடவுள் என்ற பெயரால் மனிதம் வாழ்கிறது...இப்படி ஒரு கலாச்சாரத்தையும்,,,நிகழ்வுகளையும்... யோசித்த நம் முன்னோர்களுக்கு என் வணக்கங்கள்....
நல்ல பதிவு.
பெரியார் பிறந்தநாளுக்காக கவிதை எழுதியுள்ளேன்.

எனது ‘ வலைப்பூ’ பக்கம் வருகை புரிந்து கருத்திட அன்புடன் அழைக்கின்றேன்.
நன்றி.
-மாறாத அன்புடன்,
மணவை ஜேம்ஸ்.
manavaijamestamilpandit.blogspot.in

venkat said...

அருமை தோழரே

Avargal Unmaigal said...

மரம் செடி கொடி மற்றும் மண் வறண்டு கிடக்கலாம். ஆனால் கடவுளின் பெயரில் கொண்டாடப்படும் இப்படிப்பட்ட திருவிழாக்கள் மூலம் மனித மனம் இன்னும் வறண்டு போகாமல் இருக்கிறது என்பது உங்களின் பதிவுகள் முலம் அறிய முடிகிறது.

Ramesh DGI said...

Thank you for post and your blog. My friend showed me your blog and I have been reading it ever since.
Tamil News
Latest Tamil News
Tamil Newspaper
Kollywood News
Tamil News Live
Online Tamil News
Tamil Cinema News
Tamil Film News
Tamil Movie News
Latest Tamil Movie News