Pages

Tuesday, March 18, 2014

பெரியாரின் உண்மையான வாரிசின்--உன்னதமான திருவிழா காணல்.....(கடவுள் இருக்கட்டும்)

வணக்கம் அன்பர்களே...!!!

                            { இந்த பதிவு உங்களுக்கு எப்படி தோன்றும் என்று தெரியவில்லை....ஆனால் கண்டிப்பாக நீங்கள் என்னுடன் ஒத்துபோவீர்கள் என்று தெரியும்....}

[சற்றே பெரிய பதிவு போடோஸ்,,வீடியோஸ்(3gp)-- இணைந்த பதிவு என்பதால்]

மீண்டும் வணக்கம் அன்பர்களே...!!!!

நான் பதின்ம வயதில் இருந்து மூளை சிந்திக்க!!!??? ஆரம்பித்ததில் இருந்து,,...பெரியாரின் புத்தகங்களை நூலகத்தில் படிக்க ஆரம்பித்தது முதல் முழு தீவிர வெறிபிடித்த கடவுள் மறுப்பாளன்...உண்மையாக...இன்றும் என்றும்...

எனது நீண்டகால இனிய நண்பன் சுகுமார் நாலைந்து வருடங்களாக என்னை அவர்கள் சொந்த ஊரான குன்னாரம்பட்டி (கொட்டாம்பட்டி) திருவிழாவிற்கு அழைத்துக்கொண்டே இருந்தார்...சாமி விவகாரம் என்பதால் நான் பெரிதாக ஆர்வம் காட்டாமல் தவிர்த்துவந்தேன்...ஆனால் இவ்வருடம் சென்றுதான் பார்ப்போம் என்று கிளம்பினேன்....அப்பவே கேமரா எடுத்து செல்ல சொன்னார் என் தங்கமணி....எடுத்து செல்லாதது எவ்வளவு மிக பெரிய தவறு அங்கு சென்றபோதுதான் தெரிந்தது....ஆபத்துக்கு பாவம்இல்லை என்று என் கைபேசியில் எடுத்தேன்...கொஞ்சம் சுமார்தான் பொறுத்துக்கொள்ளவும்....

கடந்த 2/3/14 அன்று மதியம் கிளம்பினோம்...திருச்சி தாண்டி சென்றுகொண்டே இருந்தேன்...திடீர் என்று உடம்பில் ஒரு ""எழுச்சி""....காற்றில் ""கம்பியூட்டர் வாசம்""....என்னடா என்று ரோட்டை பார்த்தால் அந்த இடம் திரு செங்கோவி & இம்சை அரசன் பாபு வசிக்கும் கோவில்பட்டியாம்....!!!!

கொட்டாம்பட்டியில் இருந்து உள்ளே 12கிமியில் இருக்கு குன்னாரம்பட்டி என்ற பக்கா கிராமம்...அப்படியே சினிமாவில் காட்டப்படும் உண்மையான கிராமம்....

அன்று இரவு சாமி தேர் வீதி உலா...

                                                 


அதற்கு முன் அம்மனை அந்த ஊர் பொது குளத்தில் வைத்து பூஜை ஆது இது என்று செய்கிறார்கள்...
         ஐயா கனவான்களே.... முதலில் திருவிழாவை பற்றி சொல்லிவிட்டு பிறகு இப்பதிவின் முக்கிய சாரம்சத்துக்கு வருகிறேன்...கொஞ்சம் பெரிய பதிவு தான்... பொறுத்துக்கொள்ளவும்...இறுதி வரை சக்கரத்தையோ பேஜ் டவுனையோ இயக்காமல் தொடரவும்...

பிறகு அம்மன் ஊர்வலம் தேரில்...விடிய விடிய...தேர் கிளம்பும்போது தேர் சக்கரத்தில் வேண்டுதலுக்காக தேங்காய் உடைக்கிறார்கள்...
           
அதிகாலை தேர் நிலைக்கு வந்ததும், பொங்கல் வைக்கிறார்கள்.கோழி அறுப்பு,..தீச்சட்டி,,பால்குடம் எடுத்தல்,,,அருள் வாக்கு கேக்குதல்....என்று போகிறது......மதியத்துக்கு மேல் ஒவ்வொரு வீட்டிலும் அம்மனுக்காக நேர்ந்துவிட்ட கிடாவெட்டு தொடங்குகிறது....வெட்டுராங்கையா 220 கிடாவுக்கு மேல்...

இரவு ஆரம்பித்து விடிய விடிய வள்ளி கந்தன் நாடகம்...அடுத்த நாள் இரவு இன்னிசை கச்சேரி,,,,என்று பெரும் கொண்டாட்டமாக போகிறது இந்த ஊர் திருவிழா....

           


                      

             

   திட்டதட்ட சுமார் 4000 பேருக்குமேல் அனைத்து ஜாதி மக்களும் ஒற்றுமையாக கொண்டாடும் ஒரு திருவிழா...மருந்துக்கு கூட போலீஸ் இல்லை...மேலே உள்ள புகை படத்தில் வந்த இரண்டு போலீஸ்காரர்களும்,, சும்மா ஐந்து நிமிடத்தில் கிளம்பிவிட்டனர்....ஒரு சின்ன சலசலப்பு கூட இல்லை...

ஊரை பற்றி சொல்லனும்னா விவசாயம் ஏதும் இல்லை...அனைத்து வீடுகளிலும் ஆடு,மாடு,,கோழி....வளக்கிறார்கள்...இதுதான் இவர்களின் பொருளாதாரம்...தென்னந்தோப்பு வசதியானவர்கள் வைத்திருந்தாலும்,, தண்ணீர் இல்லை பாச்ச...பத்து கிமிக்கு அப்பால் இருந்து விலைக்கு வாங்கி பைப் மூலம் எடுத்துவருகிறார்கள்...

தண்ணீரை பற்றி சொல்லும் போது வா.மணிகண்டனின்...இந்த   பதிவு நினைவுக்கு வருகிறது...இந்த ஊர் குளத்தில் எப்போதும் தண்ணி இருக்குமாம்...20 அடிக்கு மேல் ஆழம் உள்ள குளம்...மழை இல்லாததால் திருவிழாவிற்காக குளத்துக்குள் ஒரு சிறிய குளம் வெட்டி அதில் நீர் நிரப்பி உள்ளார்கள்...பின் வரும் வீடியோக்கள் பார்த்தால் உங்களுக்கு புரியும்... வறண்ட பூமிதான்...எதற்கும் தாக்கு பிடித்து உயிருடன் இருக்கும் சீமை கருவேல மரங்கள் கூட எப்படி பட்டு போய் இருக்கிறது என்று பாருங்கள்..

     

        
இங்கு பெரும்பாலான வீடுகள் இப்படித்தான் இருக்கின்றன...சமையல் கூடம் எதிராக...

   

என் நண்பன் சுகுமார்....

    


இனி பதிவின் முக்கிய அம்சத்துக்கு போவோம்...


சுமார் 400 தலைக்கட்டு உள்ள அனைத்து ஜாதியினரும்உள்ள சிறிய பக்கா கிராமம்...கடந்த இரண்டு தலைமுறையினர் பொழைப்புக்காக ஊரை விட்டு சென்று விட்டனர்...இவர்களுக்கு முன் உள்ள வயசான 65 வயத்துக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே தனிமையில்,, பழம்கதைகளை பேசி பொழுதை போக்குகின்றனர்.....இன்னுமும் இந்த கிராமத்துக்கு செய்திதாள்கள் வருவதில்லை...கொட்டாம்பட்டிக்கு சென்று யாராவது வாங்கிவந்தால்தான் உண்டு....கேபிள் கிடையாது...இப்போதுதான் ஒருசில வீடுகளில் DTH வந்துள்ளது...{அரசுடிவி...வந்ததனால்}...

உண்மையிலேயே மனிதர்கள் நடமாட்டம் ரொம்ப  குறைவு....
ஊரைவிட்டு பிழைக்க போனவர்கள் அனைவரும் நல்ல நிலைமையில் அந்தஅந்த ஊர்களில் செட்டில் ஆகிவிட்டனர்...நல்ல வேளையில் பலர் இருக்கிறார்கள்...கல்யாணம்,, காதுகுத்து,, பூப்பெய்தல்...மற்றும் துக்க காரியத்துக்கு குடும்பத்தில் யாராவது ஒருவர் வந்து செல்வார்களாம்...

இந்த மாதிரியான சூழ்நிலையில்தான் இந்த ஊர் திருவிழா வருகிறது...இந்த ஊரில் உள்ள மொத்த குடும்பத்தில் அனைத்து உறுப்பினர்களும், அவர்களின் வெளியில் உள்ள சொந்தங்களை,, நன்பர்களை அழைத்து வருகிறனர் .... எது எப்படி இருந்தாலும் இந்தியாவில் எங்கு இருந்தாலும்,, எந்த மாதிரியான சூழ்நிலையில் இருந்தாலும் அனைத்தும் தூக்கி கடாசி விட்டு இங்கு ஒன்று கூடுகின்றனர்...

அனைத்து சொந்தங்களும் வந்தவுடன் அப்படியே கும்பலாக கிளம்பி போய் மற்ற குடும்பத்தை,,உறவினர்களை கண்டுகொண்டு வருகின்றனர்....

ஏயப்பா...நானும் நண்பனுடன் கூட போனேன்...ஒவ்வொரு வீட்டிலையும் சாப்பிட சொல்லி எவ்வளவு கட்டாயப்படுத்துகிறார்கள்...

எவ்வளவு சொந்தங்கள் இந்த ஒரு வருடபிரிவை,,,ஆற்றாமைகளை...பாசத்தை...இந்த மூன்று நாட்களில்  தீர்த்துகொள்கிரார்கள்...அதுவும் இந்த வயசானவர்கள் கண்ணில் நீர் ததும்ப ததும்ப அவர்களின்...தனிமை ஏக்கத்தை போக்கி கொள்கிறார்கள்....இனி அடுத்த வருடம்தான் இவ்வளவு சொந்தங்களையும் ஒன்றாக பார்க்க முடியும் என்ற பிரிவு துயர்....

நம் தமிழ் நாட்டு கலாச்சாரம் ஒன்னும் வீணா போன கலாச்சாரம் இல்லை ஐயா...உண்மையிலேயே உலகுக்கே வழிகாட்டி....
கடவுள் என்ற பெயரால் நடக்கும் பித்தலாட்டங்கள் ஒரு புறம் இருக்க...
இப்படி அனைத்து சொந்தங்களையும் ஒன்றாக இணைத்து கூடி மகிழ்ந்து... கல்யாண வயதில் ஆண்,,பெண் இருந்தால்...இங்கேயே ஓரளவுக்கு கண்டுகொள்ளவும்,,சம்பந்தம் பேச மனதில் விதை விழுகிறது...இந்த மாதிரி கட்டுகோப்பான அனைவரும் வந்தே ஆகவேண்டும் என்ற திருவிழா....

சொந்தங்கள்,,பந்த பாசம்,, அனைத்தும் அருகி வரும் இன்றைய காலகட்டத்தில்...அனைத்தையும் உயிர்ப்புடன் வாழவைத்துக்கொண்டிருப்பது இந்த மாதிரியான திருவிழாக்கள்தான்....

பொதுவா திருவிழா என்றாலே அடிதடி என்று சினிமாவில் பார்த்த நமக்கு நான் சென்ற இந்த ஊர் திருவிழா என்னை அப்படியே மாற்றியது...உன்னதமான பக்கா கிராமத்தை காண நேர்ந்தது...இதே மாதிரி நிறைய ஊர்களில் நடக்கலாம்...

அங்கெல்லாம் கடவுள் என்ற பெயரால் மனிதம் வாழ்கிறது...இப்படி ஒரு கலாச்சாரத்தையும்,,,நிகழ்வுகளையும்... யோசித்த நம் முன்னோர்களுக்கு என் வணக்கங்கள்....

ஐயா...வெளிநாட்டு,,இந்திய வாழ் --தமிழ்நாட்டுகார்களே...உங்களின் சொந்த ஊரில் இந்த மாதிரி திருவிழாக்கள் நடந்தால் காசை பார்க்காமல் ஒரு எட்டு போய்  வாருங்கள்... முக்கியமாக நம் சந்ததியினரையும் அழைத்து செல்லுங்கள்...அவர்களுக்கும் தெரியட்டும்...நம் மண்ணின் உயிர்ப்பு...நாமே ஆதரிக்கவில்லை என்றால் என்னாவது தமிழ்??? இணையத்தில் இருந்தால் போதுமா??கொஞ்சம் கொஞ்சமாக பட்டுக்கொண்டிருக்கும் தமிழ் கலாச்சாரம் மற்றும் வாழ்வாதாரம் துளிர் விடட்டும்...

இறுதியாக.....

கடவுள் என்ற பெயரால் இப்படி ஒரு அருமையான நிகழ்வுகள் நடப்பதால்


கடவுள் இருக்கட்டும்.....


(பெயரளவில்)...
                 
               {இன்னும் சென்டிமெண்டை பிழியலாம்....பதிவு பெரிதானதால் பதிவின் நோக்கம் புரிந்தால் போதும் என்று இத்துடன் முடிக்கிறேன்}

Friday, February 14, 2014

உன்னத தருணம்....[கண்டிப்பாக 18+]

வணக்கம் அன்பர்களே....!!!

ஒரு வழியா பிளாக்கை தூசி தட்டியாச்சி....
இன்னிக்கு பதிவு வருதுன்னா எல்லாரும்--""வெட்டி பிளாக்கர் நடத்துன போட்டி கதை""-- என்று நினைத்து.... ஆவலோடு இருப்பீர்கள்....

நோ...நோ...அது அப்புறம்...இன்னும் இரண்டு போஸ்ட் கழித்து....
இப்ப என்னடா என்றால்.....விமசகர் வட்டத்தில் நடந்த சிறுகதை போட்டிக்கு--
நான் அனுப்பின கதை.....{ச்சூ..ச்சூ...அப்படித்தான் நீங்க நினைக்கணும்...!!!}....

அப்பவே பகிரனும்முன்னு இருந்தேன்...முகநூலில்...நல்லா பொழுது போனதால்....அப்படியே விட்டுவிட்டேன்....இந்த கதை சும்மா ஒரு_____
ஓட்டுவதற்காக எழுதி பார்த்தேன்... 


இனி ஓவர் டு கதை.....கண்டிப்பாக 18+....
_______________________________________________________________________

                                       
உன்னத தருணம்....

வணக்கம் அன்பு சொந்தங்களே.!

இது மதுவதனா..
தினமும் முகபுத்தகத்தில் போடும் ஸ்டேட்ஸ்.அப்புறம் என்ன லைக்,கமெண்ட் கணக்கில் அடங்காது.

இங்க மதுவதனா பத்தி சொல்லியே ஆக வேண்டும்.இதுவரை நீங்கள் கதை,சினிமா,மற்றும் உங்கள் கனவுகளில் வந்த தேவதைகளை
நினைத்து கொள்ளுங்கள்.அவர்கள் அனைவரும் இந்த மதுவதனா-விடம் பிச்சை எடுக்க வேண்டும்.அழகு..அழகு.அழகு..போதும்.
கோடீஸ்வர பெண் ஆனால்  இந்திய அளவில் இல்லை.ஒரு மாநில அளவில் என்று வைத்துக்கொள்ளுங்களேன்.{உங்களுக்கு கற்பனை தானே.SO NO PPM}

அங்கங்கள் வருணிக்க தேவை இல்லை.நீங்கள் முட்டாள் இல்லை.


அறிவுடை நம்பி 

இந்த இந்தியா ஏன் இந்த உலகத்தின் ஒரே பின்,முன், அனைத்து நவீனத்துவ முன்னணி எழுத்தாளர்.இந்த அங்கீகாரம் அவரே அவருக்கு
கொடுத்துக்கொண்டது.

மதுவதனா..

ஹாய் மக்களே.என்னை பத்தி கதை ஆசிரியர் ஏதோ சொல்லி விட்டார்.அதுக்கும் மேலே கற்பனை பண்ணிக்குங்களேன்.

"மது மது"
.
..அம்மா..அவளை உள்ள விடக்கூடாது....வந்து புலம்புவாள்.என்னத்த புலம்பிட போறா?
எழுகழுத வயசாச்சி(34).இன்னும் என்னதான் பண்ணுறது...அப்புறம் அழுகை.இத்தியாதி.இத்தியாதி .{எப்பதான் கல்யாணம் ஆகுமோ?}

எனக்கு மாட்டும் ஆசை இல்லையா?இந்த வயசுல (34)நீங்க என்னன்ன கற்பனை பண்ணுவீங்க?என்னன்ன சென்ஞ்ஜிருப்பீங்க?அதுவும் கோடீஸ்வர வீட்டு பெண்.கொத்திக்கிட்டு போக எத்தனை குரங்குகள் பள்ளி காலத்தில் இருந்தே வட்டம் இடும்?

நான் என்ன செய்வது எல்லாம் அமைந்தால்தானே ?அப்பா பாவம்.சக கோடீஸ்வர முதலாளி அப்பாக்கள் அவர்களுடைய மகனுக்கு கேட்டு நடையா நடந்துவிட்டார்கள்.
அவரும் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் நித்தம் கண்ணீருடன்.சரி ரொம்ப பீடிகை வேண்டாம்.

நான் பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் போது சக தோழிகள் ஒருவாரம் வர மாட்டார்கள்.வயசுக்கு வந்துவிட்டதாக
சொல்லுவார்கள்.அப்போதில் இருந்து எனக்கும் குறுகுறுப்பு.நாம் எப்போது வயசுக்கு வருவோம் என்று?.ஆச்சி இப்ப 34 வயசு.இன்னமும் நான் குழந்தைதான்.இத்தனை வயசில் என்னுடைய மன,உடல் உணர்ச்சிகள்,சொன்னாலும் யாருக்கும் புரியாது.

இந்தியா,வெளி நாட்டு மருத்துவர்கள் அனைவரையும் கன்சல்ட் பண்ணியாச்சி.அனைவருமே சொல்லி வைத்தால் போல் "விரைவில் அனைத்தும் சுமுகமாக நடக்கும்.கவலை வேண்டாம்". என்று ஒரே பல்லவியை பாடினார்கள்.எவ்வளவு நேரம்தான் டிவி,டென்னிஸ்,கிளப் என்று பொழுதை கழிப்பது?

இணையம்தான் மற்றொரு பொழுதுபோக்கு.பதிவுகள்,ஆங்கில,தமிழ் தினசரிகள்,வார இதழ்கள்,படிப்பது.முன்னாள் பள்ளி,கல்லூரிகளில் இணை பயின்றவர்களுடன் முகபுத்தகத்தில் சாட்.அதுவும் நெருக்கமான தோழிகள் வந்துவிட்டால் விடிய விடிய சாட் நடக்கும்.இப்படி ஒரு தோழி அறிமுக படுத்தி வைத்தவர் தான் 

அறிவுடை நம்பி எழுத்தாளர்.ஆரம்பத்தில் அவருடைய எழுத்துக்கள் அவ்வளவு சுவாரசியம் இல்லை என்றாலும்,படிப்பவர்களி உள்ளே இழுத்துபோடும் அந்த எழுத்து நடை மதுவதனாவை ஈர்க்க செய்தது.அவரை பற்றி இணையம்,FB-ல் படிக்க படிக்க ஒரு ஆர்வத்தில் அவருக்கு FRIEND REQUEST அனுப்பினாள்.இங்க ஒரு விஷயம் சொல்லியே ஆக வேண்டும்

மதுவதனா அவளுடைய PROFILE-ல் பெண் என்று குறிப்பிட்டிருந்தாலும்,புகைப்படங்கள் பகிரவில்லை.முன்பே இது பத்தி தெரிந்திருந்ததால்.ஆனால் அவளின் கம்பெனி பேரை போட்டிருந்தாள்.ரீகுவஸ்ட் பார்த்த அறிவுடை நம்பி பெரிய இடம் போல.ஏதாவது தேறும் என்ற நட்பாசையில் ஓகே பட்டனை அழுத்தினார்.

அதன் பிறகு அவர் போடும் ஸ்டேட்ஸ்-ல் இவள் கமெண்ட் போடுவதும்.அவள் போடும் ஸ்டேட்ஸ்-ல் அவர் கமெண்ட் போடுவதும்-ஒரு தொடர் நிகழ்வாகி போனது.அன்று இரவு வழக்கமாக வரும் நெருங்கிய தோழி சாட்-க்கு வராததால் வேறு யாராவது ONLINE-ல் இருக்கிறார்களா என்று பார்த்தாள்.அறிவுடை நம்பி இருக்கவும் சாட்-ல் ஹாய் சொன்னாள்.
அவரும் ரொம்ப கண்ணியமாக ஹாய் சொல்லி சாட் பண்ண ஆரம்பித்தார்.சாட்-ல் அறிவுடைநம்பி மிகுந்த குழந்தைதனமாகவும்,வெகுளிதனத்துடனும்,நடந்துகொண்டார்.

மதுவதனா ஆச்சரியப்பட்டு போனாள்.ஒரு சிலரை தவிர இந்த உலகமே இவரை தூற்றுகிரதே.
இவர் இவ்வளவு அப்பாவியா இருக்காரே?தொடர்ந்து பல நாட்கள் சாட் செய்ய ஆரம்பித்தாள்.இப்போது எல்லாம் அவளுக்கு தினமும் அறிவுடைநம்பி-யுடன் நள்ளிரவு வரை சாட் செய்யாவிட்டால் மறுநாள் விடியாதது போல் ஒரு உணர்வு.சாட்-ல் உலக விஷயங்கள்,அரசியல்,சினிமா,கிசுகிசுக்கள் அனைத்தும் பேசுவார்கள்.

இருவருமே நேரில் சந்திக்க வேண்டும் என்று கேட்டுகொண்டதில்லை.தொலைபேசி எண்ணும்-
வாங்கிக்கொள்ளவில்லை.இப்படியாக நாளொரு மேனியும்,பொழுதொரு வண்ணமாக போய் கொண்டிருந்த நேரத்தில் இன்று நடக்கும் சாட்-ஐ நாம் பார்க்கலாம்.{அடுத்தவர்கள் சாட்-ஐ நாம் எட்டி பார்ப்பது அநாகரீகம் என்றாலும் கதைக்கு தேவை.}

மது :ஹாய்,எப்படி இருக்கீங்க.?

அந :ஹாய்,நல்லா இருக்கேன்.இன்னிக்கு ஒரு சின்ன பார்ட்டி.இப்பதான் வர முடிஞ்சுது.

மது:ஓஹோ சரக்கு உண்டா?

அந:உண்டு.கொஞ்சமாதான் வாங்கிகொடுத்தார்கள்.காசில்லையாம்.என்ன மாதிரியான சமூகத்தில் நான் வாழ்கிறேன்?

மது:அட பாவமே.

அந:உனக்கு தெரிந்திருக்கு.நான் பாவம் என்று.அவனுகளுக்கு தெரியலையே?சரி மது உனக்கு 34 வயசு என்று சொன்னாய்.கோடீஸ்வர பெண் வேறு.நான் கேட்டால்            தப்பாக எடுத்துக்கொள்ள மாட்டில்ல ?

மது:இல்லை சொல்லுங்க.

அந:உனக்கு ஏன் இன்னும் கல்யாணம் ஆகலை?கண்டிப்பா உடல் ரீதியாக ஏதோ பிரச்சனை இருக்கணும்.நான் சொல்லுவது சரியா?

மது:(கண்ணீருடன்.. இவரிடமாவது சொல்லி ஆறுதல் படுத்திக்கொள்ளுவோம் என்ற எண்ணத்தில்)...நான் இன்னும் குழந்தைதான்..என் உடல் கல்யாணத்துக்கு தயார் ஆகவில்லை என்ற காரணத்தை கூறினாள்.[இப்ப அந-ஷாக் ஆகிட்டார்.]

அந:நான் கும்புடுற பாபாஜியும்,பத்தியாவும் விரைவில் உனக்கு அருள் புரிவார்கள்.
     
[இப்படியே சாட் ரொம்ப சென்டிமென்டலா,புரிதலுடன்,நெகிழிச்சியாக சென்று கொண்டிருக்கிறது.]
:::::

::::::

:::::

:::::

:::::


அந:மது..இப்ப நீ என்ன கலர் டிரஸ் போட்டிருக்க?
மது:சிகப்பு..ரத்த சிகப்பு...எனக்கு சிகப்பு நிறம் ரொம்ப புடிக்கும்.என் ரூமில் அனைத்துமே சிகப்பு நிறம்.(இன்னும் வராத காரணம்.)

அந:அப்ப உன்னுடைய படுக்கை கூட சிகப்பு நிறம்தான் என்று சொல்லு.(தவறாக நினைக்க வேண்டாம்.)
மது:இல்லை. ருமே சிகப்பில் இருப்பதால் படுக்கை விரிப்பு மட்டும் பளீர் வெள்ளை.கற்பனை செய்து பாருங்கள்.மொத்த சிகப்பு கலர்..ரூமில் வெள்ளியாக நடுவில் படுக்க விரிப்பு.எவ்வளவு அழகாக இருக்கும்.

{சாட் இப்ப கொஞ்சம் அப்படி இப்படி வேறு பாதை நோக்கி பயணிக்கிறது.மதுவும் விகல்ப்பம் இல்லாமல் பதில் சொல்லிகொண்டிருக்கிறாள்.}
:::::::

::::::::

::::::::

:::::::::

::::::::

::::::::

:::::::


{இப்ப அந்த உலக புகழ் பெற்ற கேள்வி கேக்குறார் அந.}


அந:உனக்கு கீழ WET ஆகுதா??
மது:(கடும் கோபத்துடன்...ச்சே...மனுஷனா இவன்...அவன் புத்தியை காமிச்சிட்டானே.இவனை போய் நம்பி எல்லாத்தயும் சொல்லிட்டேனே.)
         &(*&*^$%^#$^%#%#$@%&ய(&)_)_))_)*&&^%&^%^$%#@@%##@$%^$%^$%&$%^#%$#%@$#@#^%$#%^^&%&*^*&(^&*%^$%#$#

[சாட்-ஐ மூடிவிட்டு சென்று விடுகிறாள்...இரவு முழுவதும் தூக்கம் வராமல் புரண்டு புரண்டு படுக்கிறாள்.]

எப்போது தூங்கினாள்  என்று அவளுக்கே தெரியாது...காலையில் வெகு நேரம் கழித்து மதுவந்தனா இன்னுமும் எழுந்திரிக்கவில்லை என்று அவள் அம்மா
மதுவை எழுப்பினாள்.இரவு ஏற்ப்பட்ட கடும் மனஉளைச்சலில்,கண்கள் எரிய சோம்பல் முறித்துக்கொண்டே எழுந்து பாத்துரூம் சென்றாள்.
வெள்ளை படுக்கை விரிப்பில்-ரத்த கறை.....!!!

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
               

அப்புறம் நண்பர்களே....இந்த கமெண்ட்,,,திரட்டி இணைப்பு எல்லாம் முகநூல் குழி,,,,சூழலில் சிக்கி விட்டதால்.... இன்னுமா இந்த பிளாக் உலகம் நம்மை நம்புது.......????? அது ஒரு கனா காலம்.... இதே போட்டிக்கு அனுப்பின இன்னொரு கதை {என்ற பேர்}....இருக்கு.....