Pages

Wednesday, November 28, 2012

மீன்பாடி வண்டி தோழி.....!!!

வணக்கம் அன்பர்களே....

மிக கடுமையான மின்வெட்டு,,பல்கலைகழக வேலை நிச்சயமின்மை ...
இப்படி பட்ட சுழலில் அனைவரின் பதிவை படிப்பது.....
மின்சாரம் இருந்தால் ...பின்னுட்டம் இடுவது என்று இருந்தேன்...
என் ப்ளாக்-ஐ ஓபன் செய்வதே இல்லை...

நம்ம நண்பர்களும் நீ பதிவே போடவேண்டாம்...சும்மா இருந்தால் போதும்...
என்று மிகபணிவாக கேட்டுக்கொண்டதால்....நானும் அமைதி காத்தேன்....

ஆனா பாருங்க நம்ம பிலாசபி பிரபா இன்னிக்கு ஒரு கவிதை பதிவு
போட்டாரு.....சரி போய் கமெண்ட் போடுவோம்னு மீண்டும் அந்த கவிதையை
படிச்ச உடனே.....

எனக்குள்ள இருக்குற கவிஞன் முழிச்சிக்கிட்டான்.....
பொங்குச்சி பாருங்க கவிதை....
நீங்களும் அனுபவிங்க....அந்த பரவச உணர்வை.....

அதுக்கு முன்னாடி இந்த கவிதையை ஒருவாட்டி படிச்சிடுங்க......
அப்பத்தான் நம்ம கவிதையோட முழு வீரியமும் புரியும்.....

சரி கவிதைக்கு???!!!!?????? போவோமா....???.......





                                      மீன்பாடி வண்டி தோழி.....!!!






உனக்கான பத்து காசு  இல்லாததால் இறக்கி விட்ட பிறகு 
மீன்பாடி  வண்டி வேகமாக செல்கிறது.......


நீ அமர்ந்த ஜன்னலோர இருக்கையில் பான்பராக் துப்பிவிட்டதால் 
வாந்தி வந்துவிட்டதாம் #மசக்கை....

மழை நாட்களில் வேண்டுமென்றே
வெள்ளை வெளிஆடை,,கருப்பு உள்ளாடை அணிகிறேன்....

மஜாக்கள் ஜாக்கிரதை
என்றுதானே எழுதியிருக்க வேண்டும்....

பிடித்தது - நீ என் கையை.......
பறிபோனது என் மோதிரம்.....

வேகத்தடைகளில் வண்டி ஸ்கிட் ஆகிறது....

மீன்பாடி பயணிகளின் டப்பாங்குத்து கூட
உன்னிருப்பில் பாக்கியராஜ்,ராமராஜன் ஸ்டைல் தானே....

உன்னெதிரில் வாய்தவறி வந்த கெட்டவார்த்தையை
உங்கப்பனை  திட்ட பயன்படுத்திக்கொண்டேன்.....

பறவை முனியம்மா அப்படியொன்றும் அழகில்லை....

அந்த லாங் சைஸ் சுருட்டுக்கு மட்டும் எங்கும் 
இப்படி ஒரு நாற்றம் கிடையாது........

கூவத்தை ரசித்துக்கொண்டிருந்த உன்னை 
கூவமே கூவத்தை ரசிக்கிறதே என்றேன்....

உன்வீடும்,என்வீடும் பல 
கண்டங்கள் தள்ளி இருந்திருக்கலாம்....



பிரபா!!! ஒண்ணும் சொல்லுவதற்கில்லை....

நன்றி.......படங்கள்  கூகிள் இமேஜஸ்...