Pages

Monday, May 14, 2012

வாழ்க்கைக்கு தேவையான மிக முக்கியமான மூன்று கேள்விகள்...விடை நீங்களே கண்டுபிடியுங்கள்....!!!

வணக்கம் அன்பர்களே...


எச்சரிக்கை.....
இந்த பதிவின் கடைசியில் வாழ்க்கைக்கு தேவையான மிக முக்கிய மூன்று கேள்விகள் இருக்கிறது...அதற்கு மூன்று அதி முக்கியமான லின்ங்களுக்கு
நீங்கள் செல்ல வேண்டும்...


எனவே....
இந்த பதிவு மிக சிறியதாக முடிக்கபடுகிறது { பதிவு மிக பெரியதாக ஆகிடகூடாதில்லையா???அப்புறம் காபி பேஸ்ட் பதிவர்ன்னு பேர் வந்துடும் }


மீண்டும் அன்பர்களே...!!!!????


நான் பதிவு போடலைன்னு எனது கோடானு கோடி ரசிக கண்மணிகள்
மிகவும் கோபபட்டதாலும்....டெசோ அமைப்பு வேறு தொடங்கபடாமல்
நிறுத்திவைக்கபட்டதாலும்...சுற்றும் பூமி நின்றுவிடும் அபாயம் உள்ளதாலும்...
{{ பதிவு மிக பெரியதாக ஆகிடகூடாதில்லையா???}} [மத்தத்தை நீங்களே பில்ட் அப் பண்ணிக்குங்க...]........... இந்த பதிவு.....


அதாவதுங்க பதிவு போட மேட்டர் இல்லாம நான் தவியாதவிச்சேனுங்க....
கிரகம்.....அப்படியே இருந்திருக்கலாம்...தெரியாத்தனமா ஒரு சிலத படிச்சிப்பிட்டேனுங்க.....அப்பதாங்க நாமளும் பதிவு போடலாம்னு மனசு தெம்பாய்டுசிங்க...


சரி போகட்டும் ....நாம பதிவுக்கு (!!!!????) போவோம்...


அதாவதுங்க.....ஒரு சில நல்ல விஷயத்தை நாம படித்தாலோ கேட்டாலோ
அதை நாம மத்தவங்களுக்கு பகிர்ந்துப்போம்....அதே போல விடை தெரியாத
கேள்விகள் நமக்கு தெரியவரும்போது நாம மத்தவங்கள்கிட்ட கேட்டு
தெரிஞ்சிப்போம் ....{அதுக்குத்தானே ப்ளாக் இருக்கிறது }


ஒரு இரண்டு வருடதுக்கு முன்னாடி நம்ம திருவிளையாடல் பாணில
ஒருத்தருக்கு{ நோ லிங்க் } ஒரு கேள்விக்கு பதில் தெரியலைங்க.....அவரும் இந்த
உலகம் முழுவதும் கேட்டு பார்துட்டார்....ஆனா பாருங்க அந்த கேள்விக்கு
இப்ப வரைக்கும் யாருக்கும் பதில் தெரியலைங்க...


அப்படி ஒரு புத்திசாலி கேள்விங்க....
என்னன்னா அந்த கேள்விக்கு இந்த உலகம் உள்ள வரைக்கும் யாராலும்
சரியான பதில் சொல்ல முடியாது....


உடனே இன்னொருத்தருக்கு{ நோ லிங்க் }வந்துச்சி பாருங்க கோபம்...இப்படி ஒரு
உலக மகா கேள்வி அவர்ர்ர்ர்ர்ர்ர்ர் கேட்டுபிட்டாரே....பதிலும் வேற தெரியலையே....நாமளும் இந்தமாதிரி ஒரு கேள்விய கேட்டுபிடனும்.....
அப்படின்னு----இவர் கல்யாணத்தையே இரண்டு வருடம் தள்ளி போட்டாருன்னா பார்துக்குங்களேன்....ஒன்னும் வேலைக்கு ஆகாதுன்னு
தெரிஞ்ச பிறகு வேற வழி இல்லாமல் இவர் கல்யாணத்தை பண்ணிக்கிட்டார்....அதுக்கு அப்புறம் வாழ்க்கையை புரிஞ்ச பிறகு ????!!!!!!!
இவரும் ஒரு கேள்வியை கேட்டுபுட்டார்......


இப்பதாங்க பதிவு உலகத்தில உள்ளவங்க முழிச்சிக்கிட்டாங்க...????!!!!!
ங்கொய்யாலே....இப்படி யாருமே பதில் சொல்லாத முடியாதபடிக்கு
கேள்வி கேக்குரானுகளே.....நாமளும் பதில் சொல்ல தெரியாம இருக்கோமே.....நாமளும் இதே மாதிரி ஒரு கேள்வியை கேட்டுபுடனும்...
அப்படின்னு அவனவனும் மண்டையை உடைச்சிக்கிட்டாணுக....


மூணாவதா{ நோ லிங்க் }ஒருத்தர்....கிளம்புனாரு.... இவர் யாருன்னா....பதிவுலகத்தில
இவர் பெரும்பானவர்களுக்கு ஒரு ரோல் மாடல்....இவரால நிறைய பேர்
பிளாக்கர் ஆகி இருக்காங்கன்னா பாருங்களேன்....ரோம்ப பெரியியியியியியியிய பதிவர்......................................
நாமளே பெரிய பதிவர்...நாம கேக்க மாட்டோமா கேள்வி.....அப்படின்னு...
இவரும் பெரிய பெரிய ஆஆஆஆஆஆஆராய்ச்சி எல்லாம் பண்ணி
ஒன்னும் முடியாமல்......தலை கீழா தண்ணி குடிச்சி கடைசியா அந்த உலக மகாஆஆஆஆஆஆஆ கேள்வியை கேட்டுப்புட்டாரு.....


மனுசனா இவங்க...இந்த மூணு பேர் கேட்ட கேள்விக்கு யாருமே இன்னிக்கு வரைக்கும் பதில் சொல்லலை.....


எனவே மக்களே....நீங்களாவது இந்த மூணு கேள்விக்கும் பதில் சொல்ல முடியுமான்னு பாருங்க...இந்த மூணு பேர்ல யார் சிறப்பா கேள்வி கேட்டுருக்காங்கன்னு ஒருமித்த கருத்து எட்டியவுடன் அவருக்கு
செவ்வாய் கிரகத்திற்கு----நமது பதிவுலக சார்பாக....நமது செலவில்
இன்ப சுற்றுலா ஏற்ப்பாடு பண்ணப்படும் என்று உங்கள் சார்பாக
மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.....




பார்த்தீங்களா......அந்த மூணு கேள்வில மெய் மறந்து உங்களுக்கு அந்த
கேள்விகளை சொல்ல மறந்துட்டேன்.....


முதல் கேள்விக்கு இங்கு..செல்லவும்.....


இரண்டாவது கேள்விக்கு இங்கு..செல்லவும்....


மூன்றாவது கேள்விக்கு இங்கு..செல்லவும்.......








நீதி:-


விதி வலியது...............




{{முன்னாடி...இது தொடர் பதிவாமே...[[ இப்ப மட்டும் என்னவாம்...]] யாருமே கூப்பிடலைன்னா என்ன.......???நாமளே
போடுவோம்,,,,மேலும் விருப்பம் உள்ளவர்கள் தொடர்ந்து கொல்லலாம்...}}