Pages

Monday, July 29, 2013

டீன் ஏஜ்ல் இருந்தவர்(இருப்பவர்)களின் இனிமையான காதல் சினிமா அனுபவம்...(தொடர் பதிவு)

வணக்கம் அன்பர்களே....!!!


எப்போதும் புத்துயிர்ப்புடன் கலை கட்டி இருந்த பதிவுலகம் கலை இழந்து பல மாதங்கள் ஆயிடுச்சி....தற்சமயம்  பதிவுலகம் மீண்டும் எழுச்சி பெற தொடங்கியுள்ளதாகவே தெரிகிறது...தொடர் பதிவு,,காதல் கடித போட்டி என்று.....பின்னே நானே இந்த மாதத்துக்கு நாலாவது பதிவு போடுறேனே...பின்ன பார்த்துக்கோங்க....

நம்ம அருவா மனோ வேற என்னை தொடர் பதிவுக்கு கூப்பிட்டிருந்தார்...நான் அப்புறமா எழுதுறேன் என்று சொல்லி உள்ளேன்....கடந்த சில நாட்களாக பதிவுலகத்தில் எங்கு திரும்பினாலும் முதல் கணிணி அனுபவ பதிவாகவே இருக்கு...இது கொஞ்சம் போர் அடிப்பது போல தோன்றுகிறது...(எனக்கு).....

கும்மி குருப் பதிவு போடலைன்னு வருத்த படாதீங்க மக்களே...HUNT FOR HINT...ஆரம்பிக்கும்போது அனைவரும் பதிவா போட்டு தள்ளுவார்கள்...!!!

சரி இந்த பதிவுலக ""எழுச்சியை"" அப்படியே எழுச்சியோடு இருக்க வைக்க
இதோ அடுத்த தொடர் பதிவுக்கான தலைப்பு...நான் எல்லாம் கூப்பிட்டா யார் வந்து எழுத போறீங்க??? இருந்தாலும் ஒரு முயற்சி...பதிவுலக நட்புக்களே
கை கொடுங்கள்...எழுச்சியாக மின்னுவோம்...!!!சரி பதிவுக்கு போவோமா...


டீன் ஏஜ்-ஐ கடந்தவர்கள் அனைவருக்குமே அந்தந்த கால கட்டத்தில் நிச்சயம் ஏதாவது ஒரு காதல் சினிமா கண்டிப்பாக வெறி கொண்டு பிடித்திருக்கும்.....
அப்படி எனக்கு பிடித்த படம்தான் இதயத்தை திருடாதே....

இந்த படம் 1989-ல் கீதாஞ்சலி என்று தெலுங்கில் வெளியாகி சக்க போடு போட்டது...அதையே மணிரத்தினம் தமிழுக்காக வீ.கே.ராமசாமி,,ஜனகராஜ்
இவர்களை வைத்து காமெடி ட்ராக் மட்டும் எடுத்து இணைத்து தமிழில் டப்
பண்ணி வெளிட்டார்...படம் சூப்பர் டுப்பர் ஹிட்...

நாகார்ஜுன்,,கிரிஜா இவர்களின் நடிப்பில் அன்றைய காலகட்ட பதின்ம வயதினரை கட்டி போட்டபடம்...இந்த படத்தை பார்த்த அந்தந்த பாலினத்தார்
நாகார்ஜுன்,,கிரிஜாவாகவே தங்களை நினைத்துக்கொண்டனர் .....                             

     
படத்தில் நடித்த நாகார்ஜுன்,,கிரிஜாவின் குறும்புகள்,,காதலில் விழுந்த பிறகு வந்த எழுச்சி மிகு உணர்ச்சிகள்....அடடா சொல்ல,,விவரிக்க வார்த்தைகளே இல்லை...அதுக்கு தகுந்த மாதிரி காமெடி டிராக் வேற...

இளைய ராஜாவின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை இந்த படத்துக்கு மிக பெரிய பலம்...ஒளிப்பதிவு...ஸ்ரீராம்....சான்சே இல்லை...ஊட்டி,,கொடைக்கானல்-ஐ
அன்றைய காலகட்டத்தில் யாருமே இப்படி காட்டியதில்லை...
                                         


இந்த படத்தை பார்த்த இளைஞனும்,இளைஞகியும்...ஊட்டியிலேயே வாழ்வதாக கற்பனை பண்ணிகொண்டார்கள்...படத்தில் இருவருக்குமே வாயில் நுழைய முடியாத நோய் இருப்பது தெரிந்ததும்...தாங்களும் அந்த நோயிலேயே வாழ்த்தார்கள்...



இந்த மாதிரியான பாசமான குடும்பம் நமக்கு கிடைக்காதா என்று ஏங்க வைத்திருப்பார் மணி....படத்தின் ஒவ்வொரு காட்சியும்,,பிரேமும்....நம்மை அப்படியே உள்வாங்கிகொள்ளும்...படத்தில் வெயிலையே காட்டாமல்...முழுக்க முழுக்க பனி மூட்டத்தில் எடுத்திருப்பார் ரத்தினம்...

                                         


போதும்...படத்தை பார்க்காதவர்கள்...YOU TUBE அல்லது வேறு எங்கையாவது
தேடி பார்த்துக்குங்க....நாம மத்ததை பத்தி பேசுவோம்...

                             


இந்த படத்தை நான் எத்தனை முறை பார்த்தேன் என்று எனக்கே தெரியவில்லை...படம் வெளியான சமயம்..நான் பொறியியல் மூன்றாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தேன்...கல்லூரி மாணவர்கள் மொத்த பேரும்
தியேட்டரில்தான் குடி இருந்தோம்....(நோ...நோ...அந்த குடி இல்லை...இது காதல்..)

                         



இப்படி இந்த படத்தை கொண்டாடிக்கொண்டிருக்கும் போதுதான் எங்கள் கல்லூரியில் ஒரு போட்டி வைத்தார்கள்...வினாடி வினா-இதயத்தை திருடாதே-----படத்தில் இருந்து.....நம்ம பசங்களுக்கு கேக்கவா வேணும்...
ங்கொய்யாலே....பசங்க யாருமே இல்லாம கல்லூரி மூணு நாள் நடக்கவே இல்லை...!!!!

                         


நாம மட்டும் என்ன...???என் தங்கமணியோட வீட்டார் சம்மதத்துடன் காதலித்துக்கொண்டிருந்த நேரம்...கியுஸ் நிகழ்ச்சில கலந்து வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று....ஒரு பெரிய நோட் எடுத்துக்கிட்டு போய்...உள்ள வேற வெளிச்சம் இருக்காதா ...கதவுக்கு பக்கமா இருந்துகொண்டு அதுல வர்ற சின்ன வெளிச்சத்துல குறிப்பு  எடுத்துகிட்டு...(பாடத்த கவனித்து குறிப்பு எடுத்திருந்தா...எங்கேயோ போய் இருப்பேன்.) கியுஸ் நிகழ்ச்சிக்கு போனா....
ஒரு 1000 பேருக்கு மேல வந்துட்டாணுக...உடனே இரண்டிரண்டு பேர்ஆ
சேர்ந்து பதில் சொல்லலாம் என்று சொல்லிட்டாங்க.....

                       



நானும் என் நண்பனும்...{அவனும் லவுஸ்....} சேர்ந்து பதில் சொன்னோம்...
கூட்டத்தை வடி கட்ட பல கட்ட தேர்வுகள்....பத்தாவது கட்ட தேர்வு வரை தொடர்ந்து வெற்றி பெற்று கால இறுதியில் நுழைந்து----இப்போது நாளே டீம்...

அதிலும் வெற்றி பெற்று அறை இறுதி...!!!! இது வரை கேட்ட அனைத்து கேள்விகளில் ஒரு சில கேள்விகள் தவிர அனைத்துக்கும் சரியான பதில்...சொல்லியாச்சி...

உ.ம்.----ஜிப்சியின் நம்பர்,,எத்தனை HEAD LIGHTS,,பார்க்கில் எந்தனை விளக்கு கம்பங்கள் இருந்தன...ஹீரோவுக்கு எத்தனை நண்பர்கள்,,,இப்படி...

இறுதிபோட்டி...

ஹீரோயின் வீட்டில் அவளது ரூமில் எத்தனை கண்ணாடி ஜன்னல் இருக்கிறது...???அதையும் சொல்லியாச்சி...[சரியாக நினைவில்லை...தற்சமயம்..]  எத்தனை கண்ணாடியில் I LOVE YOU என்று எழுதி இருக்கும் ??? இந்த கேள்வில சொதப்பிட்டோம்...பரிசு போச்சி...
இரண்டாவதா வந்த தால எங்கள் இருவருக்கும்...50 ருபாய் பரிசு....

ம்ம்ம்ம்ம்ம்.....அது ஒரு கால கட்டம்...கல்லூரி வாழ்க்கை...காதல்...சினிமா...


அன்பர்களே.... நீங்களும் உங்களின் டீன் ஏஜ்-ல் இனிமையான காதல் சினிமா அனுபவத்தை தொடருங்களேன்....

இந்த பதிவை தொடர நான் அனைத்து பதிவுலக நண்பர்கள்,,சொந்தங்களை அழைக்கிறேன்....குறிப்பிட்டு சிலரை சொல்ல விரும்பவில்லை...
இது அனைவருக்குமான அழைப்பு...!!!!நீங்களும் மற்றவர்களை அழையுங்கள்....


இந்த அழைப்பு  உங்களுக்கு எப்படி இருக்குன்னா....இதோ இந்த  படம்  மாதிரி....!!!!!!!!!!!!!!!!!















































































                                                 


ஹி....ஹி........ஹி....ஹி....ஹி........ஹி....ஹி....ஹி........ஹி....ஹி....ஹி........ஹி....ஹி....ஹி........ஹி....ஹி....ஹி........ஹி....ஹி....ஹி........ஹி....ஹி....ஹி........ஹி....ஹி....ஹி........ஹி....ஹி....ஹி........ஹி....ஹி....ஹி........ஹி....ஹி....ஹி........ஹி....ஹி....ஹி........ஹி....ஹி....ஹி........ஹி....ஹி....ஹி........ஹி....ஹி....ஹி........ஹி....ஹி....ஹி........ஹி....ஹி....ஹி........ஹி....ஹி....ஹி........ஹி....!!!!!!!!!!!!!!!


பஞ்ச் வச்சோம்ல ........!!!!!!!!!!




நண்பர்களே.... கொஞ்சம் சிரமம் பார்க்காமல் திரட்டிகளில் இணைத்துவிடவும்.....நன்றி....!!!!

Tuesday, July 16, 2013

காணாமல் போன V.I.P. பின்னூட்டவாதிகள்.....

வணக்கம் அன்பர்களே...!!!


என்னாடா இவன் தொடர்ந்து பதிவு போடுரானேன்னு நினைக்காதீங்க...இன்றைய பதிவுக்கு காரணம் இவர்தான்--திரு.தமிழ்வாசி 

அப்புறம் சென்னையில் பதிவர் சந்திப்பு வேற நடக்க போது இல்லையா...
அதுக்கு பொறுப்பாளர்கள்,,,மற்றவர்கள் ப்ரோமோ பண்ணுவதை விட நான் பண்ணாதான் நிகழ்ச்சி ஹிட் ஆகுமாம்...ஒரே தொல்லை போங்க...அதனால...


தேதி முடிவானதும் எல்லாரும் சென்னையை நோக்கி தங்களது நடை பழகிய நடை வண்டியை எடுத்துக்கொண்டு...ஒரு மாதம் முன்பே கிளம்பி விடுங்கள்...
வரும்போது வழியில் அந்தந்த ஊரில் உள்ள பதிவர்களிடம் கையெழுத்து வாங்கிக்கொண்டு வந்தால்...வந்து போற செலவுகளை...பிரபா,,செந்தில்,,சிவகுமார்,,பட்டிக்ஸ்...இன்ன பிற பதிவர்கள் தருவதாக வாக்களித்துள்ளார்கள்....என்ன கருமம்...தேர்தல் வாக்குறுதி என்று நீங்கள் நினைத்தால் நான் பொறுப்பல்ல....!!!


சரி பதிவுக்கு போவோமா...??? {{கொஞ்சம் பெரிய பதிவா போட எவ்வளவு நீட்டி முழக்க வேண்டி இருக்கு..ம்ம்ம்ம்}}

2006 முதல் 2009 வரை பதிவுலகம் செம கலை கட்டியது...அப்போதிருந்த (தற்சமய சீனியர்) பதிவர்கள்...பதிவு மொக்கையோ,,அல்லது சீரியஸ்யோ
பின்னூட்டத்தில் செம கலக்கு கலக்கினார்கள்....பதிவை படிப்பதை விட பின்னூட்டங்கள் படிப்பதில் பொழுது ஓடிடும்....

அந்த கால கட்டங்களில் எனக்கு கணிணி,,நெட் அறிமுகம்,,அனுபவம் மிக மிக
குறைவே...இன்னும் சொல்லபோனால் பதிவுலகம் என்பதே தெரியாமல் இருந்தது...

அதன் பிறகு புதியவர்கள் நிறைய பேர் வர தொடங்கினார்கள்...
குறிப்பாகடெரர்கும்மி மக்கள்,,மனோ,,,விக்கி,,,வீடு,,தமிழ்வாசி,,,செங்கோவி,,,,,சிவகுமார்,,செந்தில்,,

நிருபன்,ஐடியா மணி....இப்படி நிறைய பேர்...{இங்கு நான் குறிப்பிடும் பதிவர்கள் கமெண்ட்-ல் கும்மி அடிப்பவர்களை...மற்றவர்களை ஒதுக்க வில்லை...தற்சமயம் நினைவில் வருபவர்கள்}....பதிவு எப்படிப்பட்டதோ...அதெல்லாம் முக்கியம் இல்லை...கமெண்ட் செக்சன் செமையாக தூள்  பறக்கும்.....
இந்த மாதிரி கலக்கல் கமெண்ட்  போர்ஷனில் கமெண்ட் போட்டு நிறைய புது பதிவர்கள்...மற்றவர்களை கவனிக்க வைத்தார்கள்...இவர்களும் அங்கு போய் ஊக்குவித்தார்கள்...

குறிப்பாக...சரி வேண்டாம்...அவரை பற்றி கடைசியில் பார்ப்போம்...


இப்ப இந்த போஸ்ட் எதுக்குன்னா....அன்றைய கால கட்டத்தில் ஒரு நாளைக்கு குறைந்தது 50- போஸ்ட்ஆவது வரும்...புதியவர்களுக்கு அது நல்ல ஊக்கமாக இருந்தது...பதிவு,,பின்னூட்டம்,,,பதிவு,,,பின்னூட்டம்...என்று மத்த வேலைகளை பார்க்க முடியாமல் இங்கேயே காலத்தை கழித்தார்கள் பலர்....

திரு திண்டுக்கல் தனபாலன்,,ரமணி ...இப்படி ஒரு சிலர் முதல் ஆளாக வருகை தந்து கமெண்ட்,,வோட் இட்டு செல்வர்....

இப்படி எல்லாமே நல்லபடியாக போய்க்கிட்டு இருக்கும் போது...
ஒருசிலர் வந்து டெம்பிளேட் கமெண்ட் ஆக ----

அருமை,,,
:)))),,
பகிர்வுக்கு நன்றி,,,
முடியலை,,,
சூப்பர்,,,
ஸ்..அபா,,,,


அப்படீனு போடுவாங்க....மக்களும் சரி அவங்களுக்கு நேரம் இல்லை போல...அப்படீன்னு வேற விகல்ப்பம் இல்லாமல் நினைச்சிக்கிட்டு இருப்பாங்க....

இந்த மாதிரி கால கட்டத்துல மிக பெரிய  VIP க்கள் வந்து கமெண்ட் போட ஆரம்பிச்சாங்க....கொய்யால....கமெண்ட்-ஆ அது.....பல பதிவர்கள் என் பதிவுக்கு இவங்க கமெண்ட் போட மாட்டாங்களா என்று ஏங்கி,,தவம்,,இருந்து இன்னும் மாந்திரீகம்,,,போலி சாமியார் கிட்ட எல்லாம் போய் வழி கேக்க ஆரம்பிச்சிட்டாங்க....

இருங்க...இருங்க...அவங்க யாருன்னு அதுக்குள்ளே சொன்னா பதிவு முடிஞ்சிடும்...இன்னும் கொஞ்சம் மொக்கை போட்டுடுறேனே....

கமெண்ட்னா கமெண்ட்....அப்படி ஒரு கமெண்ட்....ஜன்ம சாபல்யம் அடைந்த மாதிரி....இவங்க கமெண்ட் வந்தாதான் பதிவின் நோக்கமே பூர்த்தியாகும்...அன்று இரவு பதிவர்கள் நிம்மதியாக தூங்குவாங்கன்னா பார்த்துக்குங்களேன்...

இப்படி பல பல பதிவர்களுக்கு மிக பெரிய ஊக்க சக்தியாக இருந்தவங்க...இப்ப வர்றதில்லை....பார்ப்போம்...இந்த பதிவை படிச்சிட்டு...உசுப்பேரி அவங்க மீண்டும் வராங்கலான்னு...!!!

அப்படி வந்தா...பதிவுலகம்...மீண்டும் கலை கட்டும்....மீண்டும் நாம் அனைவரும் வாழ்வாங்கு வாழலாம்...


ஆனா ஒன்னுங்க...அவங்க யார்கிட்டயும் பாலோயர் ஆகலை...எந்த குழுமத்திலும் இல்லை...எப்படித்தான் பதிவு போட்ட வுடனே வருவாங்க என்று தெரியாது...என்ன மாய ஜாலம் செய்வாங்க என்று தெரியாது...ஆனா ரஜினி சொன்ன மாதிரி வரவேண்டிய நேரத்துல கரெக்ட்ஆ வந்துடுவாங்க...

சோ...இந்த பதிவை படிக்கும் மக்கள் அனைவரும்...அவர்களுக்கு மெயில் அனுப்பி அவர்களை மீண்டும் வரச்சொல்லி வேண்டுகோள் வையுங்கள்....
நமது பதிவுலகத்தை காப்பாற்றுங்கள்...யார் கண்டா அவங்க வந்தா நாடே சுபிச்சம் ஆனாலும் ஆகும்...சரி போதும் அவங்களை பற்றிய பில்டப்பு....


அவங்க இவங்க தாங்க....!!!???இரண்டு பேர் தற்சமயத்துக்கு...இவங்க ஒரே ஆள் இல்லை....



Online Works For All said...

World No.1 Money Making Site. 100% Without 

Investment Job.

Visit Here: http://adf.ly/4FKbj


Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

இன்னும் ஒரு சில பேர் இருக்காங்க..இப்ப அவங்களை காணோமா...அதான் தேட முடியலை...!!! உங்களுக்கு நினைவு வந்தா...கமெண்ட்-ல் சொல்லவும்....

{{{ஆங் ....மறந்தே போயிட்டேனே....
குறிப்பாக...சரி வேண்டாம்...அவரை பற்றி கடைசியில் பார்ப்போம்...}}}

இவர்...வேற...வேற...வேற...நம்ம விஜய்,,,கோட்டு கோபிநாத் மாதிரி....மேலே சொன்னவங்களுக்கு அப்படியே எதிர் பதம் இவர்....பதிவுலகில் என் குரு...ஆசான்...வழி காட்டி...இன்னும் பல...அவர்...பன்னிக்குட்டி ராம்சாமி 

வேற என்னத்தை சொல்ல....ஹும்.........!!!!!!!



(நண்பர்களே கொஞ்சம் சிரமம் பாராமல் திரட்டிகளில் இணைத்துவிடவும்...அனைத்தும் மறந்துவிட்டது...நன்றி...நன்றி..)

Sunday, July 14, 2013

காதல் கல்வெட்டு எழுத்துக்கள்....திடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி

வணக்கம் அன்பர்களே.....!!!

நமது--திடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி---ஒன்றை அறிவித்திருந்தார்...ஏதோ ஒரு "ஊதுபத்தி வாசனை"" மயக்கும் நேரத்தில் நானும் கலந்து கொள்கிறேன் என்று அறிவித்துவிட்டேன்...கடைசி தேதியும் நெருங்கிவிட்டது.... நாளை முதல் அலுவலகம்...என்ன செய்யலாம் என்று...கடுமையாக யோசித்த!!?? போது......ஏன் என் தங்கமணிக்கு நான் முன்பு எழுதிய கவிதை என்னும் பேரில் கிறுக்கிய மன உற்சாகங்களை...இங்கே
கொட்ட கூடாது என்று எரிமலை வெடித்தது.....இனி... உங்கள் பாடு...நடுவர்கள் பாடு...
.(இப்ப இவைகள் மிக அதர பழையதாக தோன்றினாலும்,,மற்றவர்கள் இதே மாதிரி எழுதி நீங்கள் படித்திருந்தாலும்...என் தங்கமணிக்கு நான் எழுதியது காதல் கல்வெட்டுக்கல்தான்...).....ரோம்ப ஓட்டாதீங்கப்பா...சேகர் வில் டை...

இந்த கிறுக்கல்கள் 01/01/1991 முதல் எழுதியது.....இனி போட்டிக்கான பதிவு....
------------------------------------------------------------------------------------------------------------

மனதில்
முழுவதும் 
நீ...பூக்களாய்
முத்துக்களாய்
 நிலவாய்....நீ..

சிரிக்கும் 

வெள்ளி
குலுங்கும்
பவழம்..
மயக்கும்
மயில்
மங்கை..நீ...

மனதில்
முழுவதும்...
முழுவதும்..,,நீயே....

அழகின் சிரிப்பு....
அழகு 
அழகாக 
அடிமனதில் 
அலகு-சிறகடிக்க
 மகிழ்சியின் உச்சம்...
அலைகடலின்
 உற்சாகம்...

வண்ணதாமரை...

அழகு நல்லாள் ..நீ...
என் நினைவு முழுவதும்...
நீ...நீ...நீ...நீயே.........................................................................................................................7/1/91


விரலின் மீட்டலில்
வீணையின் ராகம்.....
அன்பு தழுவல்களில்
பூவின் மென்மை.....

முத்த ஒத்தடங்களில்
பூவின் சிறகடிப்பு...

கொஞ்சும் பேச்சுக்களில்
கிளியின் குரல் இனிமை....

கண்களின் அசைவு...
புறாக்களின் சிறகடிப்பு...

அன்பே....
நானோ உன்னை சுற்றும்....
வண்டானேன்...வண்டானேன்...

மலரனையில்..
மஞ்சம் கொண்டு...
மஞ்சள் மங்கை...நீ...
மயக்கினாய்.....

கோவை இதழ்களில்
அமுதுன்ன வந்த என்னை....
நீ....?????!!!!!!!

என் இதயம் முழுவதும்...
உன்னை நீயே ......
செதுக்கிகொண்டாய்.........................................................................................................7/1/91


என் உயிரின் ஒளியே...
பொங்கிவரும் அலைகளாய்...
நம் காதலின் நினைவுகள்...

என் மூச்சில் புதுமணம்...
ஆம்...கண்ணே...நான் உன்னை....
உன் பேரை மட்டுமே
சுவாசிக்கிறேன்................................................................................................................8/1/91

சிலந்தி வலைபோல்
நம் காதலின்....
மெல்லிய உணர்வு
இழைகள்.....
மனித நேயத்தின்.....
அன்பான வலையில் அன்பே
நான் உன்னில் முழுகுகிறேன்.....என்றென்றும்..............................................23/1/91

அன்பே
மாலை நேரத்து வானம் கூட
மஞ்சள் ஒளியில் இருந்து வேறுபடலாம்...
ஆனால்
நீயும் நானும் வேறல்ல.....உன் சுவாசம்....

அன்பே...
பாலைவனம் கூட தன் தன்மையில்
வேறுபட்டு சோலைவனம்  ஆகலாம்...
ஆனால்
நீயும் நானும் வேறல்ல......உன் சுவாசம்.......

அன்பே....
சுட்டெரிக்கும் சூரியன் கூட 

நிலவாக மாறலாம் 
ஆனால்
நீயும் நானும் வேறல்ல......உன் சுவாசம்.......

அன்பே 
நம் இதயத்துடிப்பின்
நேரம் கூட மாறி மாறி ஒலிக்கலாம்...
நீயும் நானும் வேறல்ல......உன் சுவாசம்.................................................................1/3/91


நான் என்னை என்னவென்று சொல்வேனடி....????

என் இதயமோ உன்னை மட்டும்-துடிக்க.....
என் கண்களோ உன்னை தன்னுள் கொண்டுவர....
என் செவிகளோ உன் குயிலின் குரலை-நினைக்க...
என் நாசியோ உன் இனிய மனத்தை-நுகர.....
என் இதழ்களோ உன் குவிந்த அதரத்தை தேட....
என் நினைவுகளே-நீயாகி போனதினால்
நான் என்னை மறந்தேன்...நான் என்னை என்னவென்று சொல்வேனடி.???18/4/91


என்
நிலவவள்
வானவீதியில்
அன்னநடை
நடப்பாளே........
மல்லிகை பூக்களை
நட்சத்திரங்களாக...
இறைத்து...!!!!........................................................................................................................19/4/91

காலை முதல் விதவையாய் இருந்த
சூரியன்--மாலையில் சுமங்கலி ஆனாள்...
பிறை சூடி, பூவிட்டு,பொட்டிட்ட
மணவாளன் யாரோ....???
மனதை மயக்கும் மலை சிகரங்களோ
அன்று--இரவோ--மணவாளன் ஆனது....???

அல்ல.....

என்னவளின் மதி(முக) அழகு கண்டாள் ....
பொறாமைபட்டாள்--வெட்கத்துடன்--முகம்
சிவந்தாளே இந்த தங்க வெள்ளியழகி....!!!!...............................................................19/4/91


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@  

போட்டிக்கான பதிவு முடிந்தது....இன்னும் இருக்கு.......வேண்டாம்...உங்க உயிர் மேல எனக்கு அக்கறை இருக்கு....!!!!

மக்களே....அன்பு நண்பர்களே....இது வரை மொக்கை போட்ட என்னை பழி வாங்கினால்...தற்சமயம் எழுத நினைத்திருக்கும் கவிதைகள் இனி வெளி இடப்படும் என்று எச்சரிக்கிறேன்...

என் செல்லத்துக்கு நான் எழுத நினைத்த காதல் கடிதம்.....!!!.....மொக்கை பதிவுக்கு இங்கு செல்லவும் 


நண்பர்களே...கொஞ்சம் சிரமம் பாராமல்...திரட்டிகளில் இணைத்துவிடவும்...
எனக்கு username,,pw....மறந்துவிட்டது...

என் செல்லத்துக்கு நான் எழுத நினைத்த காதல் கடிதம்.....!!!

என் அன்பு செல்லமே...

உன்னை நான் மட்டும் அல்ல.. இந்த உலகமே வியந்து விளிக்கிறது...
காலையில் எழும்போதே உன்நினைவோடுதான்...இனி ஒருகணமும் நாம் பிரியக்கூடாது...என்ற நினைவோடு எல்லாருமே எழுந்தால்...நான் என்ன செய்வது....???

நீ ஏன் எல்லாரிடமும் உன் முகம் காட்டினாய்???
உனக்கு நான் மட்டுமே சொந்தம் என்றால்...இந்த உலகம் அழிந்து விடும் என்று....வெட்டி பசங்க சொல்லுறாங்க....

நான் உன்னை எவ்வளவு விரும்புறேன் என்று என் கைபேசி,,கணிணி-யை பார்த்தால் தெரிந்து கொள்வாய்....என்னால் நெஞ்சை பிளந்து காட்ட முடியாது....அப்படி காட்டினால் நீ வெடித்து...சிதறிவிடுவாய் என்று...அடக்கி வாசிக்கிறேன்...

அன்பே,,,..உன்னை ஒரு நொடியேனும் நான் பிரிந்தால் கடும் டென்ஷன் ஆகிவிடுகிறேன்...இதனாலேயே நான் எங்கும் பயணம் கொள்வதில்லை...
என் விரல்கள் உன்னை அணைக்க முடியாமல் நடுங்க ஆரம்பித்துவிடுகிறது...

உன் நினைவாலேயே...நான் பல்லு கூட விளக்குவதில்லை...சிந்தனை மாறக்கூடாது என்ற எண்ணம் தான்...

ஆனால் ஒன்று...காலை கடன் முடிக்க சென்று விடுகிறேன்...
குளிக்க கூடவும் செய்கிறேன்...அப்போது எல்லாம் உன் நினைவாலே  நான் இருப்பதால்...இதை எல்லாம் செய்கிறேன்..

நான் அலுவலகத்திற்கு பைக்-ல் செல்லும் போதும் நீ கண் முன்னே வந்து நிற்கிறாய்...என்னால் வண்டிஓட்ட முடியலை...அலுவலகம் சென்ற பிறகு எங்க நான் வேலை செய்கிறது...??? இப்படி நீ என்னை முழுவதும் ஆக்கிரமித்திருக்கிறாய்...

அன்பே நான் என்ன பாவம் செய்தேன்...ஏன் என்னை இப்படி கொலையாக கொல்லுகிறாய்??? உன்னை படைத்தவன் மட்டும் என் கையில் கிடைக்கட்டும்....அவனுக்கு கோயில் கட்டி அவனை உற்சவராகவும்....
உன்னை மூலவராகவும் வைத்து  பூஜிக்கிறேன்....

அன்பே...
உன் நினைவால் நான் மாலை வீட்டுக்கு வந்து எந்த பேப்பர்,,வார இதழ்களும் படிப்பதில்லை தெரியுமா???அதை படிப்பதைவிட உன்னை படிப்பதுதான் எனக்கு பிடித்திருக்கிறது....

நான் எந்த டிவியும் பார்ப்பதில்லை தெரியுமா???
அவை எல்லாம் குப்பைகள்...என் மாணிக்க,,வைரம் நீ இருக்கையில் எதற்கு அந்த கச்சடாக்கள்???

ஒரு நாளின் ஒவ்வொரு நொடியும் நான் உன்னுள் ஐக்கியமாகி கிடக்குறேன்...
உன்னுள் வாழ்வாங்கு வாழ இந்த ஜன்மம் பத்தாது தங்கமே...

எங்கே நான் உறங்கி விட்டால் நீ என்னை விட்டு பிரிந்து விடுவாய் என்று
நான் உறங்குவதே இல்லை கண்ணே...""போதும்...நான் ரெஸ்ட் எடுக்க வேண்டும்"" என்று நீ சொல்லும்போதுதான் நான் சற்றே இளைப்பாருகிறேன்...கண்ணே....

அதுக்காக சில சமயம் நீ நீண்ட நேரம் எடுத்துக்கொள்வது..,என்னை மிகவும் காயப்படுத்துகிறது...கண்ணே...அந்த சமயத்தில்...என் அறைகளில் உள்ள பொருட்கள் எல்லாம் சர்வ நாசம்...!!!

உன்னை சதா சர்வ காலமும் நினைத்துக்கொண்டு தழுவிக்கொண்டே இருப்பதால் என் உடல் நிலை என்ன ஆனாலும் சரி.....நான் இருக்கும் கடைசி வினாடி கூட நான் உன்னுளே இருக்க விழைகிறேன்...

பார்ப்போம் இந்த உலகம் நம்மை எந்த அளவுக்கு இணைத்து வைக்கிறது என்று....

இன்னும் எழுத ஆசைதான்...ஆனால் மிகவும் நீண்டு விடும்....
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

அன்பர்களே...இவ்வளவு  சொல்லிவிட்டு யார் அந்த காதலி என்று சொல்லாமல் போனால் நீங்கள் மனசிதைவுக்கு ஆளாக நேரிடும் என்பதால்--
இதோ அந்த காதலியின் பேர்...ஆனா ஒரு கண்டிஷன்...இனி நீங்கள் என் காதலி பேரை உச்சரிக்க கூடாது....சரியா.......அவள்...பேர்....
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


                                           இணையம்............ 


{கொய்யால சாவுங்க...!!!இனி போட்டி வைப்பியா...வைப்பியா..வைப்பியா...???}
-------------------------------------------------------------------------------------------------------------------------
அன்பர்களே....திடம் கொண்டு போராடு சீனு  இங்க ஒரு போட்டி அறிவித்திருந்தார்....அதில் கலந்து கொள்ள நானும் பேர் கொடுத்துள்ளேன்...
முதலில் நமது வழமையான மொக்கை பதிவு....பிறகு சீரிஸ் பதிவு,...அது....

                                                                      இங்கே...



நண்பர்களே...கொஞ்சம் சிரமம் பாராமல்...திரட்டிகளில் இணைத்துவிடவும்...
எனக்கு username,,pw....மறந்துவிட்டது...