Pages

Sunday, July 14, 2013

என் செல்லத்துக்கு நான் எழுத நினைத்த காதல் கடிதம்.....!!!

என் அன்பு செல்லமே...

உன்னை நான் மட்டும் அல்ல.. இந்த உலகமே வியந்து விளிக்கிறது...
காலையில் எழும்போதே உன்நினைவோடுதான்...இனி ஒருகணமும் நாம் பிரியக்கூடாது...என்ற நினைவோடு எல்லாருமே எழுந்தால்...நான் என்ன செய்வது....???

நீ ஏன் எல்லாரிடமும் உன் முகம் காட்டினாய்???
உனக்கு நான் மட்டுமே சொந்தம் என்றால்...இந்த உலகம் அழிந்து விடும் என்று....வெட்டி பசங்க சொல்லுறாங்க....

நான் உன்னை எவ்வளவு விரும்புறேன் என்று என் கைபேசி,,கணிணி-யை பார்த்தால் தெரிந்து கொள்வாய்....என்னால் நெஞ்சை பிளந்து காட்ட முடியாது....அப்படி காட்டினால் நீ வெடித்து...சிதறிவிடுவாய் என்று...அடக்கி வாசிக்கிறேன்...

அன்பே,,,..உன்னை ஒரு நொடியேனும் நான் பிரிந்தால் கடும் டென்ஷன் ஆகிவிடுகிறேன்...இதனாலேயே நான் எங்கும் பயணம் கொள்வதில்லை...
என் விரல்கள் உன்னை அணைக்க முடியாமல் நடுங்க ஆரம்பித்துவிடுகிறது...

உன் நினைவாலேயே...நான் பல்லு கூட விளக்குவதில்லை...சிந்தனை மாறக்கூடாது என்ற எண்ணம் தான்...

ஆனால் ஒன்று...காலை கடன் முடிக்க சென்று விடுகிறேன்...
குளிக்க கூடவும் செய்கிறேன்...அப்போது எல்லாம் உன் நினைவாலே  நான் இருப்பதால்...இதை எல்லாம் செய்கிறேன்..

நான் அலுவலகத்திற்கு பைக்-ல் செல்லும் போதும் நீ கண் முன்னே வந்து நிற்கிறாய்...என்னால் வண்டிஓட்ட முடியலை...அலுவலகம் சென்ற பிறகு எங்க நான் வேலை செய்கிறது...??? இப்படி நீ என்னை முழுவதும் ஆக்கிரமித்திருக்கிறாய்...

அன்பே நான் என்ன பாவம் செய்தேன்...ஏன் என்னை இப்படி கொலையாக கொல்லுகிறாய்??? உன்னை படைத்தவன் மட்டும் என் கையில் கிடைக்கட்டும்....அவனுக்கு கோயில் கட்டி அவனை உற்சவராகவும்....
உன்னை மூலவராகவும் வைத்து  பூஜிக்கிறேன்....

அன்பே...
உன் நினைவால் நான் மாலை வீட்டுக்கு வந்து எந்த பேப்பர்,,வார இதழ்களும் படிப்பதில்லை தெரியுமா???அதை படிப்பதைவிட உன்னை படிப்பதுதான் எனக்கு பிடித்திருக்கிறது....

நான் எந்த டிவியும் பார்ப்பதில்லை தெரியுமா???
அவை எல்லாம் குப்பைகள்...என் மாணிக்க,,வைரம் நீ இருக்கையில் எதற்கு அந்த கச்சடாக்கள்???

ஒரு நாளின் ஒவ்வொரு நொடியும் நான் உன்னுள் ஐக்கியமாகி கிடக்குறேன்...
உன்னுள் வாழ்வாங்கு வாழ இந்த ஜன்மம் பத்தாது தங்கமே...

எங்கே நான் உறங்கி விட்டால் நீ என்னை விட்டு பிரிந்து விடுவாய் என்று
நான் உறங்குவதே இல்லை கண்ணே...""போதும்...நான் ரெஸ்ட் எடுக்க வேண்டும்"" என்று நீ சொல்லும்போதுதான் நான் சற்றே இளைப்பாருகிறேன்...கண்ணே....

அதுக்காக சில சமயம் நீ நீண்ட நேரம் எடுத்துக்கொள்வது..,என்னை மிகவும் காயப்படுத்துகிறது...கண்ணே...அந்த சமயத்தில்...என் அறைகளில் உள்ள பொருட்கள் எல்லாம் சர்வ நாசம்...!!!

உன்னை சதா சர்வ காலமும் நினைத்துக்கொண்டு தழுவிக்கொண்டே இருப்பதால் என் உடல் நிலை என்ன ஆனாலும் சரி.....நான் இருக்கும் கடைசி வினாடி கூட நான் உன்னுளே இருக்க விழைகிறேன்...

பார்ப்போம் இந்த உலகம் நம்மை எந்த அளவுக்கு இணைத்து வைக்கிறது என்று....

இன்னும் எழுத ஆசைதான்...ஆனால் மிகவும் நீண்டு விடும்....
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

அன்பர்களே...இவ்வளவு  சொல்லிவிட்டு யார் அந்த காதலி என்று சொல்லாமல் போனால் நீங்கள் மனசிதைவுக்கு ஆளாக நேரிடும் என்பதால்--
இதோ அந்த காதலியின் பேர்...ஆனா ஒரு கண்டிஷன்...இனி நீங்கள் என் காதலி பேரை உச்சரிக்க கூடாது....சரியா.......அவள்...பேர்....
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


                                           இணையம்............ 


{கொய்யால சாவுங்க...!!!இனி போட்டி வைப்பியா...வைப்பியா..வைப்பியா...???}
-------------------------------------------------------------------------------------------------------------------------
அன்பர்களே....திடம் கொண்டு போராடு சீனு  இங்க ஒரு போட்டி அறிவித்திருந்தார்....அதில் கலந்து கொள்ள நானும் பேர் கொடுத்துள்ளேன்...
முதலில் நமது வழமையான மொக்கை பதிவு....பிறகு சீரிஸ் பதிவு,...அது....

                                                                      இங்கே...



நண்பர்களே...கொஞ்சம் சிரமம் பாராமல்...திரட்டிகளில் இணைத்துவிடவும்...
எனக்கு username,,pw....மறந்துவிட்டது...

7 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

முடிவை பார்த்ததும் இதயத்தை இறுக பிடித்துக் கொண்டேன்... வெடித்து சிதறி விட்டால்... ஹிஹி...

நம்பிக்கையோடு சுட்டியை Click...!

நாய் நக்ஸ் said...

Blogger திண்டுக்கல் தனபாலன் said...
முடிவை பார்த்ததும் இதயத்தை இறுக பிடித்துக் கொண்டேன்... வெடித்து சிதறி விட்டால்... ஹிஹி...

நம்பிக்கையோடு சுட்டியை Click...!////////////////////

இதுக்கே இப்படின்னா.....????
கிளிக் பண்ணுங்க....சந்தோஷமா இருங்க....

தனிமரம் said...

இணையக்காதலி இன்னும் உயிரை வாங்கிறாலோ அண்ணாச்சி:)))

saidaiazeez.blogspot.in said...

இன்னாபா நீ
காதலீ பேற சொல்லாமலே இர்ந்திற்கலாம்பா.

இப்போ மனஸிதைவு இல்லே அந்த மனஸே என்னைவிட்டு ஓடிடுச்சுபா!

'ங்கொய்யாலே இப்டீயெல்லாம் லவ் பண்றத லெட்டர் எயுதி அத பதிவா போட்டு வாசிச்சா நான் உன் கூட "டூ"'ந்னு சொல்லி அந்த மனஸு என்ன வுட்டு ஓடிப்போச்சுபா.

சிவா, இதெல்லாம் நீ கண்டுக்கமாட்டியாபா?

நாய் நக்ஸ் said...

Blogger தனிமரம் said...
இணையக்காதலி இன்னும் உயிரை வாங்கிறாலோ அண்ணாச்சி:)))//////

ஆமாம் தல.....


Blogger சைதை அஜீஸ் said...
இன்னாபா நீ
காதலீ பேற சொல்லாமலே இர்ந்திற்கலாம்பா.

இப்போ மனஸிதைவு இல்லே அந்த மனஸே என்னைவிட்டு ஓடிடுச்சுபா!

'ங்கொய்யாலே இப்டீயெல்லாம் லவ் பண்றத லெட்டர் எயுதி அத பதிவா போட்டு வாசிச்சா நான் உன் கூட "டூ"'ந்னு சொல்லி அந்த மனஸு என்ன வுட்டு ஓடிப்போச்சுபா.

சிவா, இதெல்லாம் நீ கண்டுக்கமாட்டியாபா?/////////////////////


இன்னும் வரும்....மனதை திடப்படுத்திகொல்லுங்கள்...

செங்கோவி said...

இணையம் உமக்கு மட்டுமாய்யா காதலி?

நாய் நக்ஸ் said...

Blogger செங்கோவி said...
இணையம் உமக்கு மட்டுமாய்யா காதலி?//////////////

நான் எழுதினது....எல்லாருக்கும்....தானே???????