Pages

Wednesday, August 29, 2012

சிறை வைக்கப்பட்ட பதிவர்கள்....!!!

வணக்கம் அன்பர்களே...

எல்லாரும் பதிவர் சந்திப்பை பற்றி....பதிவு போடட்டும் என்று காத்திருந்தேன்....

பதிவர் சந்திப்பை அனைவரும் நேரலை,,பதிவுகள் வாயிலாக 
அறிந்திருப்பீர்கள்....அனைவரும் சிறப்பாக எழுதியுள்ளார்கள்....
மிக்க நன்றி...

சரி நாம தலைப்புக்கு வருவோம்....

பதிவர் சந்திப்பு அன்று--பதிவர்கள் அறிமுகம் நடந்துச்சி இல்லையா...
அப்ப என்னை அழைக்க வேண்டாம்...பிரச்சனைகள் வரும் என்று கூறினேன்...

கேட்டாதானே...???

என்னை மிக நீண்ட முன்னுரை கொடுத்து கேபிள்,,சிபி,,அழைத்ததும்....

கூடி இருந்த பதிவர்கள் பயங்கர கரகோஷம்...விசில் சத்தம்...
இவை கட்டுக்கடங்காமல் குறிப்பிட்ட டெசிபல்-ஐ தாண்டி போயிடுச்சி...

அதனால என்ன ஆச்சின்னா....

விழா நடந்த மண்டபமே கிடுகிடுத்து போயிடுச்சி....
மண்டபம் முழுவதும் ஏகப்பட்ட விரிசல்கள்...

மண்டபத்து ஓனர் சும்மா இருப்பாரா...???
இரவு எல்லா செட்டில்மன்ட் பண்ணும்போது இதுக்கு எல்லாம் 
நஷ்ட ஈடு கேட்டு நம்ம விழ குழுவினரை 

சிறை வச்சிட்டாங்க....

அப்புறம் அவங்க எனக்கு போன் பண்ணி விஷயத்தை சொன்னாங்க...
விஷயத்தை கேள்வி பட்டதும்...என்னால தாங்க முடியலை...
நம்மால எவ்வளவு கஷ்டம் இவங்களுக்கு...
ச்சே...என்ன வாழ்க்கைடா இது...???

அப்புறம் கொஞ்சம் (கொஞ்சம் தான்) யோசித்தேன் ....
அந்த மண்டப ஓனர் கிட்ட போன்-ஐ கொடுக்க சொன்னேன்...

நான் அவரிடம் பேசினேன்.....

அதன் பின் நடந்தது எல்லாம் வரலாறு....
மண்டபத்து ஓனர்-நம்ம விழாகுழுவினர்கிட்ட என்ன சொன்னாருன்னா...

""இனி எத்தனை முறை வேண்டுமானாலும் இலவசமா  விழா நடத்திக்கொள்ளுங்கள்...

ஆனா இவர் கிட்ட மட்டும் போன் கொடுத்து பேச சொல்லாதீர்கள்....!!""


ஆகவே பதிவர்களே...மண்டபம் இனி நமக்குதான்....
இனி நாம நினைக்கும்போதெல்லாம் அந்த மண்டபத்துல
பதிவர் சந்திப்பு வைக்குறோம்...ஓகேவா ...???

விழா குழுவினருக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்...பாராட்டுக்கள்...


(அட கொடுமையே...இந்த மாதத்துல மூணாவது பதிவு இது...இதுவும் ஒரு வரலாற்று பிழையே)






Wednesday, August 22, 2012

அடியா அது...???இப்படி ஒரு பொழப்பு தேவையா...???

""டேய் மாப்புள...

பதிவர் சந்திப்பு வெற்றிகரமா நடந்திடும் போலிருக்கு...
நம்ம சைடு பெண்கள் கூட கலந்துப்பாங்க போல...

பதிவுலகில் ஒற்றுமை வருது மாப்புள...
விடக்கூடாது...எல்லாரும் ஒற்றுமையா இருந்தா... நாம எப்படி 
ரத்தம் குடிக்கிறது...???

விடக்கூடாது மாப்புள...என்ன செய்யலாம்...??
செம ஐடியா பண்ணனும்...இது வரைக்கும் வரேன்னு சொன்னவங்க 
எல்லாரும் யோசிக்கணும்...அந்த மாதிரி மேட்டர்ஐ கைல எடுக்கணும்...

அவ்வளவுதானே...விடு மாப்புள...இந்த குடிய பத்தி எழுதினா...
பிச்சிக்கும்....அதுல அப்படியே ரோம்ப பிரபல பதிவர்களை சேர்த்துடு...
அப்புறம் பாரு...ராக்கெட்-க்கு நெருப்பு வச்ச மாதிரி சும்மா ஜிவ்வுன்னு 
பறக்கும்....""

அவ்வளவுதான்...
பதிவு போட்டாச்சி...கடைசில என்ன ஆச்சின்னா...
ராக்கெட் திரும்பிடுச்சி...!!!

சும்மா சுத்தி சுத்தி அடிச்ச அடில....
எல்லாமே பிதுங்கிடுச்சி....
கழுவி கழுவி ஊத்துனதில வாயே திறக்க முடியலை..
ஆனா இல்லாத கௌரவம் இருக்கே...அத அப்படியே வலிக்காத மாதிரி 
நடிக்க வேண்டியதா போச்சி...

இப்ப யோசிச்சி என்ன பயன்...???
ஐடியா கொடுத்தவனுக்கு எதால மாலை போடணுமோ 
அதால போடுங்க...

என்ன இப்பசந்திப்பு  இனி படு பயங்கரமா ஹிட்  ஆகும்..
இப்படிதான் இலவச விளம்பரம் தரனும்...
அப்படியே மைட்டேன்  பண்ணுங்க...அப்பரண்டிஸ்களா...

ஆனா வாங்குன அடி இனி ஜன்மத்துக்கும் மறக்காது...

 நம்ம ஆளின் இன்றைய நிலைமை...

நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க படம் மாற்றப்பட்டது!


அங்கு வந்து நியாத்தை எடுத்துரைத்த நண்பர்கள் அனைவருக்கும் 
நன்றி...நன்றி....நன்றி...!!!






Thursday, August 16, 2012

அது நடந்தே விட்டது...!!! (வரலாற்று பிழை)

வணக்கம் அன்பர்களே...

ஒரு தொலைபேசி உரையாடல்...

"ஹலோ..நக்கீரனா..??

ஆமாங்க.

நாங்க ஆவில இருந்து பேசுறோம்.என்விகடன்ன்னு தனியா பாண்டி மண்டலத்துக்கு ஒரு சிறிய புக் போடுறோம்.அதுல உங்க வலை தளத்தை,
முதல் புக்ல போடலாம்ன்னு  இருக்கோம்.

இந்த விஷயம் உங்க ஆசிரியர்,ஒனேர்க்கு தெரியுமா..???

அவர்தாங்க பேச சொன்னார்...
ஏற்கெனவே 1991-92-ல நீங்க மாணவ நிருபரா வேளை பார்த்தீங்களாம் ..
அப்ப ஆவி நால்லா போச்சாம்...இப்ப கொஞ்சம் டல்ஆம்..




அதான் உங்க வலைதளைத்தை அறிமுகப்படுத்தி கொஞ்சம் விற்பனையை 
தக்க வச்சிக்கலாம்முன்னு....


ஸ்டாப்...ஸ்டாப்...
ஆரம்பத்துலேயே என் தளத்தை அறிமுகபடுத்திட்டா....அப்புறம் மத்தவங்க எல்லாம் ரொம்ப வருத்தத் படுவாங்க..ஆவில வரணும்ன்னா இவ்வளவு 
உலக தரம் இருக்கனுமான்னு...???
அப்புறம் அவங்க தளத்தை எல்லாம் மூடிட்டு போய்டுவாங்க...
அவங்களை நம்பி இருக்குற திரட்டிகள் எல்லாம் என்னா ஆகுறது.?
பதிவர் சந்திப்பு எல்லாம் என்ன ஆகுறது..???
நிறைய பேர் பொழப்பு என்ன ஆகுறது...???

இதை எல்லாம் உங்க ஓனர் கிட்ட எடுத்து சொல்லுங்க ...""

டோக்....

மீண்டும் விடாம போன் கால்கள் தொடர்ந்ததால்...அந்த நம்பர்ஐ 
டெலீட் பண்ண வேண்டியாதாய் போச்சி.

அப்புறமும் பாருங்க மீண்டும் போன்...""இந்த நம்பர் யாருயா கொடுத்தது...???

எல்லாம் நம்ம பதிவர்கள் தாங்க....

ஐயைய்ய்ய்யோ ...இதுக்கு தான் பிரபல பதிவரா இருக்க கூடாதுன்னு சொல்றது .என்விகடன்ல என் ப்ளாக் வரவேண்டாம்ன்னு சொன்னா கேக்குறீங்களா ???...

சார்...அதில்லை...சார்...

என் விகடன்-ஐ நிப்பாட்டிடோம் .

சரி.நல்ல விஷயம்தான்.

அது இனி இ-புக்ஆ--ஆக போகுது.

சரி...ம்ம்...

இப்ப உலகம் முழுவதும் எல்லாரும் ப்ரீயா படிக்கலாம் ...

அப்ப ஓகே..நல்ல விஷயம்தான்...

அதான் சார்...முன்னாடியாச்சும் ...ஒரு குறிப்பிட்ட மண்டலத்துக்கு மட்டும்தான் நம்ம பதிவர்கள் தெரிவாங்க...இப்ப அப்படி இல்லை...
அதுவும் இல்லாம இப்பெல்லாம் யாரும் அதிகமா..காசு கொடுத்து புக் வாங்கி படிக்குறதில்லை..,கம்பேர் பண்ணா இணையத்துல படிக்குரவங்கதான் அதிகம்.

ஆமா...ஆமா...

இப்பெல்லாம் நிறைய பேர் சப்ஸ்கிரிப்ஷன் கட்டி படிக்குறாங்க...

சரி...

அதான் இப்பவாச்சும் உங்க தளத்தை அறிமுகப்படுத்தி...
உலக அளவுல நாங்களும் புகழ் பெறுவோம் ..நாங்களும் பொழச்சுப்போம்.. 

நாராயணா....இந்த கொசு தொல்லை தாங்க முடியலப்பா....

சரி போங்க...பொழச்சி  போங்க..."".

எனவே அன்பர்களே...இனி நீங்கள உங்கள் பதிவுக்கு என் பதிவுகள் மாதிரி 
தரத்தை அளவு கோலாக வைத்துக்கொண்டு பதிவு போடவும்...

ஏதோ இந்த வாரம் என் விகடன்ல வருமாம்...பார்த்து தெரிஞ்சிக்குங்க....

வந்துரூச்சி ...

ஆனா நம்ம பிலாசபி பிரபாவுக்கு ஆனா மாதிரி...
மாப்பிள்ளை நான்தான்...ஆனா போட்டிருக்குற சட்டை 
என்னுதில்லை...என்கிற மாதிரி ஆகிடுச்சு.....
ஏதோ ஜட்டி மட்டுமாச்சும் என்னுதை போட விட்டாங்களே...!!!

லிங்க் :-

http://en.vikatan.com/article.php?aid=22893&sid=622&mid=35

(ஒரு வேலை டிராப்ட்-ல இருக்குறத படிச்சிருப்பானுகளோ...???)
________________________________________________________________________________

அப்புறம் இன்னொரு போன் உரையாடல்...மூன்று மாதத்திற்கு முன்....

"""ஹலோ சிபி சித்தப்புவா...???

ஆமாயா...சொல்லு நக்ஸ்..

ஒண்ணும் இல்லை ..ஏதோ ஆவியாம்...என் விகடன்ஆம் ...அதுல வலையோசைல ஒவ்வொரு மண்டலத்துக்கும் ஒரு பதிவை வாராவாராம் 
அறிமுகப்படுத்துறாங்களாம்...

அதுக்கு மெயில் அனுப்புனுமாம்...நீ கொஞ்சம் அட்ராசக்கையை ....
மெயில் பண்ணி  விடு...
(சில,,பல நாட்கள் கழித்து...)

ஹலோ சிபி...இன்னுமா நீ ஆவிக்கு மெயில் அனுப்பலை...???

அனுப்புனேன்யா...

என்ன ஆச்சி...???

போன் பண்ணாங்க....

யாரு...

எடிட்டர்,,ஒனேர் ....

என்ன சொன்னார்...???

அது வந்து...வந்து...

சொல்லுயா...

ஆவி,,ஜுவி,,அவள் விகடன்,,இப்படி அவங்க போடுற புக் எல்லாத்துக்கும் 
நான்தான் வெளியிட்டாளராம்...நீயே எப்படி உன்னை பத்தி உன் புக்-ல 
போட்டுக்கலாம்...நாம என்ன அந்த அளவுக்கா......பத்திரிகை ...... 
நடத்துறோம்-ன்னு கேட்டுட்டார்...."""


:-)))))))))))



அன்பர்களே...இவை யாவும் கற்பனை--இல்லைன்னு  நான் சொன்னா நீங்க நம்பவா போறீங்க..??? 

என் அன்பு பதிவர் நண்பர்களுக்கு என் நன்றியை காணிக்கையாக்குகிறேன்.....

என்றென்றும் உங்கள் அன்புக்கு நான் அடிமை....