Pages

Friday, February 10, 2012

கேட்டான் பாருங்க ...கேள்வி...!!!

அன்பர்களே....


கொஞ்ச நாளைக்கு முன் என் மகனுக்கும்..எனக்கும் நடந்த உரையாடல்...கீழே...
(மகனுக்கு பன்னிரண்டு வயது)


மகன் : அப்பா.....அப்பா....
(நான் கவனிக்கவில்லை)


மகன் : யோவ்..அப்பா...


நான் : சொல்லுப்பா....


மகன் : அது என்னப்பா எந்த நேரம் பார்த்தாலும் ப்ளாக்'ங்குற, கமெண்ட்ங்குற,                                                                                  போஸ்ட்ங்குற, வாய்ஸ் சாட்ங்குற, போதாதற்கு போன்ல வேற பேசுற..  அதையும் விட்டா பாத்ரூம்க்கு கூட செல்'ல எடுத்துக்குட்டு போற...அப்படி 
என்னதான்பா இருக்கு இந்த ..ப்ளாக்-ல?
இதால ஏதாவது யூஸ் இருக்கா?


நான்::அட என்னப்பா இப்படி கேட்டுட்ட...சொல்லுறேன் கேளு...ப்ளாக் என்பது ஒரு குடும்பம் மாதிரி...நாம அன்றாடம் சந்திக்கும் உறவுகள் அனைவரும் இங்க இருக்காங்க...


நல்ல தமிழ்,மற்றும்..நல்ல பழக்கவழக்கங்களுக்கு நம்ம சீனா தாத்தா இருக்கார்..
அப்புறம்..உனக்கு நல்ல சமையல் செய்துதர தேனம்மை, லெட்சுமி ..பாட்டி இருக்காங்க...
நம்மளை சிரிக்க வைக்க பன்னிக்குட்டி ராமசாமி சித்தப்பு இருக்கார்...அவர் கூட..ஒரு குரூப் இருக்குகுகு பாரு...அந்த குரூப் கூட பேசுனா....நம்ம நேரமே போறதே தெரியாது... அப்புறம்..நீ ஸ்கூல்-ல படிக்கிறல்ல...அந்த வாத்தியார்கள்....ராஜா,,கருண்,,சௌந்தர் ...இப்படி நிறைய பேர் இருக்காங்க...
தமிழை நல்ல படிக்க சொல்லுற..தமிழ் வாசி இருக்கார்..நம்ம வீட்டை எப்படி வச்சிக்கனும்னு சொல்லுற சுரேஷ்,உங்களை எப்படி வளர்க்கனும்னு சொல்லுற...சம்பத் இருக்கார்...நியாயத்தை மட்டும் பேச கழுகு குழுமம் இருக்கு....


இவங்க கூட நம்ம தாய்மாமன் விக்கி இருக்கார்....
யாராவது நம்ம கூட தேவை இல்லாம சண்டைக்கு வந்தால்...அருவாளோட 
கேக்க மனோ மாமா, ஆரூர்.மூனா.செந்தில்,இவங்க எல்லாம் இருக்காங்க...
நம்ம வீட்டுக்குள்ள ஜாலி-யா இருக்க ..நம்ம விகடகவி சிவக்குமார் இருக்காரு...
நாம என்ன என்ன உணவு சாப்பிடனும்னு சரியா சொல்ல உணவு உலகம் ஆபீசர் இருக்கார்...அப்புறம்...எப்போதுமே நம்பர் ஒன்-ஆ வர நம்ம சி.பி.செந்தில்குமார் பெரிப்பா இருக்காரு  
நமக்கு technical support பண்ண சசி,பிரபு இருக்காங்க... இப்படி அண்ணன் தம்பி , அக்கா,அண்ணி, சித்தப்பா,தாத்தா,பாட்டி,மாமான்னு இல்லாத உறவுகளே 
இல்லை மகனே...எல்லா உறவுகள் கூட ஒரே குடும்பமா இருக்கோம்...இதை விட வேற என்னடா வேணும்..?


மகன் : யப்பா ...நீங்க பலே ஆளுப்பா


நான் : என்னடா....சொல்லுற


மகன் : நீ போஸ்ட்டும் அதிகமா போடுவது இல்லை
ஆனாலும் இவ்வளவு சொந்தங்களை வச்சிருக்கே..உன்னை நெனைச்சா...பெருமையா இருக்கப்பா...


நான் : ஹஹ..அதுதான் பாசம்ங்கறது
(இல்லைன்னா ங்கொய்யால நைட் 12 மணிக்கு கூப்பிடுவேன்ல....)


மகன் :  எல்லாஞ் செரிபபா...சினிமா-ல இருக்குற மாதிரி வில்லன்-க இல்லையா...???


நான் : ஸ்ஸ்பாபா.....இருக்காங்கப்பா...அவங்க குரூப்-குரூப்-ஆ நிறைய இருக்காங்க...யார் வேண்டுமானாலும் யார் கூட வேணாலும் சண்டை போடுவாங்க...


மகன் :  யப்பா ...யப்பா...


நான் : என்னடா.. 


மகன் :  வந்து...


நான் : சொல்லுடா....


மகன் :  எல்லா உறவையும் சொன்னீங்க....முக்கியமான 
உறவை சொல்லலை ஏன்பா....?


நான் : அப்படியா...? என்ன உறவு சொல்லு!


மகன் :  வந்து...அடிக்க கூடாது....


நான் : சரி....அடிக்கலை...கேளு....


மகன் :  ம்...ம்..ம்.. எல்லா உறவுகளும் இருக்காங்க...வந்து..இந்த...அத்தையும்,,அத்தை பொண்ணும் இல்லையா....?!


நான் : அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
(இப்ப என்ன பதில் சொல்லுறது..? பையன் கோர்த்து வுடுறானே)


மகன் :  யோவ் அப்பா பதில் சொல்லு....எங்கே எஸ்கேப் ஆகுற...


நான் : ஹலோ....யாரு.....டவர் கிடைக்கல...ஹலோ சத்தமா...பேசுங்க...ஹலோ...இருங்க வெளிய வந்து பேசுகிறேன்......


மகன் :  அய்யோ அப்பா....சிம்மை கழட்டி நான் கையில வெச்சிருக்கேன்....சிம் இல்லாத போன்ல யாருகிட்ட பேசிறியோ....நீ எப்படியும் இங்க வந்துதானே ஆகுனும் வாடி வா..அம்மா கிட்ட யாரோ பொண்ணுகிட்ட பேசிகிட்டு இருக்கிறேன்ன்னு போட்டு கொடுக்கிறேன் கேட்டதுக்கு அத்தைபொண்ணுன்னு சொன்னீன்னு சொல்லுகிறேன்....இன்னிக்கு பூரிகட்டை அடிதாம்ல
கொய்யா!

   
அன்பர்களே...YOUTUBE-ல சும்மா நோன்டிக்கிட்டு இருந்தப்ப இந்த வீடியோ கிடைச்சிது...சும்மா போட்டு வைக்குறேன்...ரசிங்களேன்...
( மனதுக்குள் எந்த கற்பனையும் வேண்டாம் ப்ளீஸ்...)
(ஏதாவது நண்பர்கள்,உறவுகள் விடுபட்டிருந்தால் மன்னிக்கவும்)

Wednesday, February 1, 2012

எனக்கு நானே...

அன்பர்களே ....


டிஸ்கி :-
                  நீங்க..ப்ளாக் எல்லாம் மாறிவரலைங்க...நாய் நக்ஸ் ப்ளாக்-கு தான் வந்திருக்கீங்க....விஷயம் என்னான்னு பதிவுல சொல்லுறேனே....

உலக மக்களே ...யாரோ ஒருத்தன் DOG-LICK -னு இருக்கானாமே...(கவனிக்கவும் நான் நாய்-நக்ஸ் -ஐ சொல்லவில்லை)
இவன் போஸ்ட்-ம் போடுறதில்லை...ஒன்னும் கிழிக்கிறதில்லை...
ஆனா...செய்யுற வேலை இருக்கு பாருங்க...அந்த சகுனி தோத்தான் போங்க....


இவன் வலை உலகுக்கு வந்ததே ஒரு விபத்துங்க...(நமக்கு)
ஆரம்பத்துல வந்த புதுசுல கமுக்கமா இருந்தானுங்க...அப்புறம் மெயில் அனுப்பி எல்லார்கிட்டயும் சாட் பண்ண ஆரம்பிச்சான்ங்க...அப்படியே 
தன்னுடைய போஸ்ட்-க்கு கமெண்ட் போட வச்சான்ங்க...இப்படி ஆரம்பிச்சானுங்க...  


அப்புறம்--தான் ரோம்ப வளர்ந்துட்டதா நினைப்பு வந்துடுச்சி...(எது வளந்துதுன்னு அவனுக்கே வெளிச்சம்)
எல்லார் ப்ளாக்-லயும் போய் நக்கலா கமெண்ட் போட ஆரம்பிச்சான் ...


அப்ப அவனை யாரும் கண்டுக்களைங்க...ஏதோ குளைக்குதுன்னு ..(!!!???)
விட்டுட்டாங்க...அங்க தாங்க இவனுக்கு ஏறுச்சி திமுறு...தேவை இல்லாம 
எங்கையாவது போய் வம்பு இழுக்குற மாதிரி எதையாவது கமெண்ட் என்கிற பேர்ல வாந்தி எடுத்துட்டு போய்டுவான்ங்க...  
அதுக்கு அப்புறம் என்னங்க...போஸ்ட் போட்டவனும் சரி...கமெண்ட் போட்ட மத்தவங்களும் சரி...அடிச்சிக்க வேண்டியதுதான் ...இவன் உக்கார்ந்து ரசிச்சிக்கிட்டு இருப்பான்ங்க...


இப்படி தாங்க..முன்னாடி பிரன்ச் வாசனை திரட்டி பிரச்னை அப்ப 
வாலண்டியரா நானும் ரவுடி தான்-னு ஆஜர் ஆனான் ...ஆனா யாருமே 
கண்டுக்கலை...தன்னுடைய பருப்பு வேகலைன்னு தெரிஞ்சதும் 
பம்மிட்டான்...


அப்புறம் கொஞ்ச நாள் அமைதியா இருந்தான்... 
ஆனா எங்கையாவது போய் உதை வாங்குவான்...இவனை யாருமே 
ஒரு பொருட்டா மதிக்குறதில்லை...என்னடா பண்ணுறது...நாம பேர் 
FAMOUS ஆகணும்-னு காத்துக்கிட்டு இருந்தானுங்க...
ரெண்டு பேர் சும்மா தமாஷா அடிச்சி பேசி விளையாண்டுக்கிட்டு இருந்தாங்க...அப்பதாங்க இவனுடைய நரி தந்திரம் வெளியே வந்துசிங்க.... 


ஒரு "வீட்டையே" போளந்து போட்டான்...சம்சாரம் அது மின்சாரம் 
படத்துல வரமாதிரி வீட்டுக்கு குறுக்கே கோடு போட்டான்க..
கூட ஒரு வெட்டி ஆ-----ரையும்,, சேர்த்து வீணாக்கிபுட்டான்...
கூட்டு குடும்பத்தை சிதைசிப்புடான்க...
தேன் கூட்டுல கல் விட்டு எறிஞ்சிட்டான்... 


ஆகவே நண்பர்களே...இனி இவனை புறக்கணியுங்கள்...
இதை விட...இவனுக்கு பெரிய தண்டனை கிடையாது...


ஹி...ஹி... ஒன்னும் இல்லை அன்பர்களே ...
நாம எதுக்கு அடுத்தவங்களுக்கு வேலை வைக்கணும்.....
பாவம் ரோம்ப சிரமம்...அதன் எனக்கு நானே...உள்குத்து போட்டுகிட்டேன்...
ஹே...ஹே ...ஹே....     


மன்மோகன் சிங் said..
கரெக்ட் தான் தலைவா..நீங்க சொல்லுறது ....
இவனை எல்லாம் நாம தொரத்தி தொரத்தி அடிக்கணும்...
Reply


எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் Said...
இப்ப நான் லவ் மூடுல இருக்கேன்...
நான் ரோம்ம்ம்ம்ம்ப பிஸி ...
மிச்சத்தை என் அல்லக்கைகள் தொடருவார்கள்....
நான் சவரம் செய்துவிட்டு வருகிறேன்....
Reply


கழுதகுட்டி மொக்கைசாமி Said....
அட இப்படில்லாம் நடக்குதா...
நான் நடுநிலைவாதி ...ஹே...ஹே...
Reply


ஒருவன் ஒருவன் முதலாளி Said....
குச்சி...நான் அப்பவே சொன்னேன் இல்ல ...
நீ தான் வேண்டாம்...பாவம் பொழச்சி போகட்டும் என்றாய்....
இப்போதைக்கு போறேன்...முதுகுல குத்த அப்புறம் வரேன்...
Reply


மங்கி யுனிவர்ஸ்  Said....
இந்த பொழப்புக்கு .................போகலாம் மாப்புள...
Reply


யாருக்கு யாரோ Said....
ஆமா சார்...இவன் மொகதிரைய நல்ல கிழிச்சீங்க சார்...
பாராட்டுக்கள்....
Reply


இணையத்தில் நீங்களும் சம்பாரிக்கலாம்

இல்லாமல் உங்களாலும் இணயத்தில் சம்பாரிக்க முடியும். இந்த தளம் கடந்த 4 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இது 100 சதவீதம் உண்மை. பணம் பெற்றதற்க்கான Proof உள்ளது.

http://www.bestaffiliatejobs.blogspot.com/2011/12/get-paid-every-30-seconds.html
Reply
இல்லாமல் உங்களாலும் இணயத்தில் சம்பாரிக்க முடியும். இந்த தளம் கடந்த 4 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இது 100 சதவீதம் உண்மை. பணம் பெற்றதற்க்கான Proof உள்ளது.

http://www.bestaffiliatejobs.blogspot.com/2011/12/get-paid-every-30-seconds.html
Reply
பாரஸ்ட் ராஜா Said....
அட பாவி அவன் நல்லா இருப்பானா ???
அருமை..பகிர்வுக்கு நன்றி....
Reply


Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !
http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html
Reply
மங்கி யுனிவர்ஸ்  Said....
இவன் பலே தில்லான்லங்கடி ஆளா இருப்பன் போலிருக்கே ... 
Reply
எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் Said...
@$#%#%^&@^*(&!)(__()(!)_(_+)(_)*()*&@*&(^%$#%@$!$##%&^%த&*&_)()(&(*^*&%#
(*(!@&*^#*&^*(!&#)!(+_)#+_!)(@#_)*!@)(^#!$*@!)_(#+_!)@_+)#_@*#^#%#^&%@#
Reply
ஒருவன் ஒருவன் முதலாளி Said....
நான் ஏகாம்பரத்தின் கருத்தை வழிமொழிகிறேன்....
Reply
மன்மோகன் சிங் said...
வலை உலகின் இந்த கருங்காளியை சரியாக அடையாளம் 
காட்டுணிர்கள் நண்பா...நன்றி...
Reply
கழுதகுட்டி மொக்கைசாமி Said....
 /////எதையாவது கமெண்ட் என்கிற பேர்ல வாந்தி எடுத்துட்டு போய்டுவான்ங்க...  //////
அப்புறம் ப்ளாக்-ஐ கழுவுநீங்கள்ளா இல்லையா...
Reply
யாருக்கு யாரோ Said....
யப்பா இப்பவாது இவனை பத்தி தெரிஞ்சிதே ...
நன்றி தலை....
Reply
அன்பர்களே...இது முழுக்க முழுக்க நகைச் சுவைக்காக (???!!!!!?????)
மட்டுமே....இதுல ஏதும் அர்த்தம் கண்டுபிடிக்க முயற்சிக்க வேண்டாம்...
ப்ளீஸ்...