Pages

Saturday, August 27, 2011

48-ம் தெரிந்த உலகமஹா..........அறிவாளி

அன்பான வலையுலக மக்களே..சகாக்களே ..!கிட்டதட்ட 7000 வலைப்பூ அன்பர்கள் வேண்டிவிரும்பி இந்த முன்று தொடர் பதிவை தொடரசொல்லி ஒரே அன்பு தொல்லை...! அப்படி நான் தொடரவில்லை என்றால் 7000-பேரும் ப்ளாக் எழுதுவதை நிறுத்திவிடுவோம் என்று விபரீத மிரட்டல் விட்டதால் வேறு வழி இன்றி இந்த தொடர் பதிவை தொடருகிறேன்!!! ((எந்த #@$@#^%&^&*(*()*()^$%$# அழைக்காததை எப்படி எல்லாம் சமாளிக்கவேண்டிதிற்கு ??-சீ..சீ ..மானங்கெட்ட பொழப்பு )))


1. விரும்பும் 3 விஷயங்கள்
௧.ஊசி போன சாம்பார் 
௨.நண்பர்கள் சமைத்து அசத்துவதாக நினைத்து சமைத்து கொல்வது 
௩.நான்தான் டாப் என்று கூகிள் addsence-காக என் வீட்டில் தவம் கிடப்பது 


2. விரும்பாத 3 விஷயங்கள்
௧,அதே 1ன் பதில் 


3. பயப்படும் 3 விஷயங்கள்
௧.கம்ப்யூட்டர் எப்ப என் மூஞ்சில குத்தும்?
௨.ஒரு வேளை நான் ப்ளாக் எழுதுவதை நிறுத்திவிட்டால் இந்த உலகம் என்ன ஆகும்??
௩.எல்லா நல்லதையும் அரசியல்வாதி செய்துவிட்டால் நான் ஆட்சிக்கு வந்து எதை செய்வது ???


4. புரியாத 3 விஷயங்கள்
௧.அதே 3ன் பதில் 


5. உங்கள் மேஜையில் இருக்கும் 3 பொருட்கள்
௧.நான் பேசிய ஒலி-இன் அலை வடிவங்கள் 
௨.நான் ஜொள்ளிய ஜொள்கள்....(ம்..செம கப்பு )
௩.என்னை பார்த்து முறைக்கும் கம்ப்யூட்டர் 


6. உங்களை சிரிக்க வைக்கும் 3 விஷயங்கள்
௧.தமிழ்நாட்டின் சாம் அன்டர்சன் நடனம் (வீடியோ பார்க்கவும் )
௨.வில்பர் சுர்குனராஜ் 
௩.டேர்றோர் குரூப்-ன் மொக்கைகள்

7. இப்பொழுது செய்து கொண்டிருக்கும் 3 காரியங்கள்
௧.இதை தூங்கி கொண்டே எழுதுவது 
௨.எப்போதும் நெட்-ஐ நோண்டிக்கொண்டே இருப்பது 
௩.ரமேஷ் சுப்புராஜ் அளவுக்கு சாப்பிட முயற்சி செய்வது 


8. வாழ்நாள் முடிவதற்குள் செய்ய நினைக்கும் 3 காரியங்கள்
௧.செல்வாவை நல்ல புத்திசாலியாக்க நினைப்பது 
௨.செல்வாவின் ஒனர் -க்கு ---செல்வாவிடம் இருந்து விடுதலை வாங்கிதருவது 
௩.பன்னிகுட்டி,,,ஷகிலாவை வைத்து முழு நீள (நீள தான் மக்கா ) அறிவுபூர்வமான விஞ்ஞான படம் எடுப்பது 


9. உங்களால் செய்து முடிக்க கூடிய 3 விஷயங்கள்
௧.அதே 8 ன் பதில்


10. கற்றுக்கொள்ள விரும்பும் 3 விஷயங்கள்
௧.கம்ப்யூட்டர்-ஐ ஆன் செய்ய 
௨.இதை டைப் அடிக்க 
௩.உலக மக்களை என் ப்ளாக் படிக்கவைக்க 


11. பிடித்த 3 உணவு விஷயங்கள்
௧.மொக்கை 
௨.மரண மொக்கை 
௩.பிறந்த மொக்கை 


12. கேட்க விரும்பாத 3 விஷயங்கள்
௧.TERROR GROUP திருந்திவிட்டார்கள் என்பதை 
௨.TERROR GROUP இன்று POST போட்டுள்ளார்கள் என்பதை 
௩.அகால மரண செய்திகள் (உருப்படியான தகவல்)


13. அடிக்கடி முணுமுணுக்கும் 3 பாடல்கள்
௧.வில்பர் சர்குனராஜ்-ன் -லவ் மெரேஜ்,,,,
௨.சிக்கென்65,,,,
௩.அது என்ன பாட்டு வரி ....மேலே உள்ள வீடியோ பாட்டுங்க 


14. பிடித்த 3 படங்கள்
௧.பன்னிகுட்டி,,,ஷகிலாவை வைத்து முழு நீள (நீள தான் மக்கா ) அறிவுபூர்வமான விஞ்ஞான படம் PART  1
௨.PART  2
௩.PART  3


15. இது இல்லாம வாழ முடியாதுன்னு சொல்ற 3 விஷயம்
௧.நெட் 
௨.மொக்கை 
௩.அரசியல்வாதிகளின் அறிக்கை 


16. இதை எழுத அழைக்கப்போகும் நபர் 3 பேர்
௧.பிறக்கபோகும் குழந்தைகள் 
௨.இன்னும் ப்ளாக் ஆரம்பிக்காதவர்கள் 
௩.முஸ்கி ,,டிஸ்கி ---(எப்பபாரு கமெண்ட் போடரானுக )


முன் குறிப்பு::  16X3=48   தானே...அப்ப தலைப்பு சரிதானே 
இந்த கமெண்ட்-ன்னு ஒன்னு இருக்கு ....
அப்புறம் வோட்-ன்னு ஒன்னு இருக்கு .... 
அதையும் என்னானு பாத்துடுன்களேன்.....


எல்லாம் சும்மா காமெடிக்கு மக்காஸ்.....
தவறாக எடுத்துகொள்ளவேண்டாம் 

Saturday, August 20, 2011

சீ...சீ... எவ்வளவு மோசம் இந்த ஆம்பிளைங்க

ஆபீஸ் வேலை முடிந்து மிக வேகமாக தன் மனைவியை கூப்பிட்டுகொண்டே வீட்டின் உள் நுழைந்தான் கணவன் .......


"அமலா...அமலா ....இன்னைக்கு ஆபீஸ்லேயிந்து வீட்டுக்கு வந்துகொண்டிருந்தேனா அப்ப எனக்கு முன்னாடி மோட்டார் சைக்கிள்ல ஒரு ஜோடி போய்கொண்டிருந்தது........
பின்னாடி உக்காந்து இருந்த பெண் நல்ல அழகா இருந்தா .....
அந்த பெண் முந்தானை விலகி இருந்திச்சி ....
அத பத்தி அவளுக்கு தெரியவில்லை..
அவ பாட்டுக்கும் அவ புருஷன் கூட பேசிக்கொண்டே இருந்தா....
இத பார்த்த மற்ற ஆம்பிளைங்க அந்த வண்டி பின்னாடியே வராங்க.....
செத்த நேரத்தில நிறைய பேர் அந்த வண்டிய பாலோ பண்றாங்க ......
எல்லாரும் அந்த பொண்ணோட அழகை ரசிச்சிக்கிட்டே வராங்க.....
அத பத்தி அவளுக்கும் தெரியவில்லை.......
ச்சே ...இப்படியுமா இந்த ஆம்பிளைங்க இருப்பாங்க ??
ரொம்ப மோசம் ....இவனுங்களை எல்லாம் கொல்லணும்.....
இன்னும் எவ்வளவு தூரம் பாலோ பண்றானுகளோ.....??"
-----என்றபடி கணவன் தன் உடைமைகளை களைய ஆரம்பித்தான் ......
அது வரை அவனை பார்த்துக்கொண்டிருந்த மனைவி கேட்டாள்.......


""ஆமா.... நீங்க எப்ப அந்த வண்டிய ஓவர் டேக்  செஞ்சிங்க ??""
நண்பர்களே.....!!!     இந்த கதை நான் சிறு வயதில் படித்தது .......


பிடித்து இருந்தால் COMMENT-க்கு வாங்க !!!
வோட்டும் போடுங்க !!!!!

Friday, August 12, 2011

இளையராஜாவின் சிம்பொனி

இளையராஜாவின் சிம்பொனி 
பொதுவா இளையராஜா இசை அமைத்த 90'S வரைக்கும் உள்ள பாடல்கள் ஒவ்வொன்றும் சூப்பர்ரோ சூப்பர்.....


அதிலும் சிகப்பு ரோஜாக்கள் பாடல்கள் இருக்கிறதே .........A CLASS....


 இளையராஜா,,வாலி ,,மலேஷியா வாசுதேவன் ,,,ஜானகி ,,
   
இந்த கூட்டணி-இல் வந்த இந்த பாடல் ----- 


""இந்த மின்மினிக்கு கண்ணில் ஒரு "" 


இதில் இளையராஜா ஒரு இசை ராஜாங்கமே நடத்தி இருப்பார்...

இளையராஜா பயன்படுத்தும் வாத்திய கருவிகளை ----முழு பாடலுக்கும் கடைசி வரை பயன்படுத்த மாட்டார் ...(ஒரு சில பாடல்களை தவிர ) 

ஆன்கான்கே கருவிகளை பயன்படுத்தி விட்டு அப்படியே போய்கொண்டு இருப்பார்......

ஆனால் இந்த பாடலில் ஆரம்பிக்கும்போது இசைத்த கருவிகளை கடைசி வரை கொண்டுபோய்ருப்பார் ........

குறிப்பாக வயலின் ...மற்றும் சிறிய கருவிகள்...ஏ... யப்பா...NO CHANCE!!!

இந்த பாடல் எழுதிய வாலி--- இசை அமைத்த இளையராஜா....பாடிய  மலேஷியா வாசுதேவன் ,,,ஜானகி ,,எல்லாரும் அன்று செம மூடில் இருந்திருப்பர்கள் போல.......

இல்லாவிட்டால் இப்படி ஒரு கிளாசிக் பாடல் கிடைக்குமா ????/

அதிலும் இந்த கோரஸ்......விசில் ....என்னத்தை சொல்வது ?????

                        

இது கண்டிப்பாக இளையராஜாவின் சிம்பொனி  தானே ??


சற்று ரசிக்க ........


முஷ்கி அல்லது டிஸ்கி ::::நாங்களும் தலைப்பு பிடிப்போமுல !!!!!

 பண்றவங்க COMMENT--க்கு வாங்க 

Saturday, August 6, 2011

வில்பர் சர்குனராஜ்-ம் -----நம்ம பன்னிகுட்டி ராமசாமி-ம்

நம்ம  பன்னிகுட்டி ராமசாமி(ப.ரா )   தான் சமைச்சதை தானே சாப்பிட்டுவிட்டு மறுநாள் ஷாப்பிங் மால் செல்கிறார்...ஆங் ..அதேதான் ....ஒரு வழியாய் அந்த இடத்தை கண்டுபிடித்து செல்லும்போது நம்ம உலக புகழ் வில்பர் சர்குனராஜ்(வி.ச ) அங்கு நின்றுகொண்டு கக்கா சி.டி-ஐ எல்லாருக்கும் தந்து கொண்டிருக்கிறார் .....சரி வந்ததுதான் வந்திட்டோம் ...வி.ச.-ஐ கண்டுகினு போவோம் என்றபடி ...... பன்னிகுட்டி ராமசாமி:::"வணக்கம்"...

வில்பர் சர்குனராஜ்:::வணக்கம் சொல்லாமல் --சி.டி.. தருகிறார்..அது---"வணக்கம்      சொல்வது எப்படி "  என்ற சி.டி.(உதவியாளரிடம் எதோ கூறுகிறார் ) 

(ப.ரா )::::(அடங்..கொயால...ஆரம்பமேவா...)        "முதலில்--- தமிழன் இந்த அளவுக்கு உலகை கலக்குவது ரொம்ப பெருமையாக உள்ளது ".
(வி.ச )::::ஒரு சி.டி .தருகிறார் ..உலக அளவில் புகழ் பெறுவது எப்படி ??

(ப.ரா )::::(ஐயையோ.!!! இவன் எப்போதுமே இப்படிதானா? இல்லை இப்படித்தான் எப்போவுமேவா ??) 
  "அப்புறம் சர்குனராஜ் எப்படி எல்லா விஷயத்தையும் சி.டி ஆக்கரீங்க             கூடவே கேமரா மென் வைத்துகொள்வீர்களா ???"---என்று கேட்டுவிட்டு சி.டி எதுவும் தராதிஈர்கள் என்கிறார்..  "ஹலோவ்..ஹலோவ்.. இது பேட்டி"" என்கிறார் ..

(வி.ச )::::""அதாவதுங்க... ஹலோவ்-ன்னு சொல்லக்கூடாது ...ஹலோ-ன்னு சொல்லணும் ..இது பற்றி எப்படி ஹலோ சொல்வது என்று நம்ப சி.டி . பார்க்கவும் "".  

(ப.ரா ):::("ஐயோ..இந்த கொசு தொல்லை தாங்க முடியலைடா சாமீ")---""DANCE--அதாங்க  DANCE ல--இந்த கலக்கு கலக்குறிங்களே சின்ன வயசுலேயே கத்துக்கீட்டீங்களா???
(ஆமா --இவரு ஆடறது DANCE--கஷ்டம்டா சாமீ )

(வி.ச )::::"எனக்கு டான்ஸ் குரு யாருன்னு பார்த்தா --பாக்யராஜ்,,ராமராஜன் ,,அப்புறம் முக்கியமா வீராசாமி-விஜய .ராஜேந்தர் ...நீங்க அவங்க டான்ஸ்-ஐ FOLLOW பண்ணிங்கனா உலக புகழ் பெற்ற டான்சர் ஆக ஆகிடலாம்..இது பற்றி எப்படி ........................""  

(ப.ரா )::::(அய்யய்யோ போதும்...போதும் ..ஆணியே புடுங்கவேண்டாம்.)
"அப்புறங்க இன்னும் என்ன --வீடியோ எடுக்கறதா உத்தேசம் ?"(((இன்னும் மிச்சம் வச்சிருக்கனா ??அதை மட்டும்தான்--இவன் வீடியோ போடலை )))


(வி.ச )::::((உதவியாளரிடம் எதோ கூறுகிறார் ) )
       ""வெற்றிலை பாக்கு மடிப்பது எப்படி,,பான் பாரக் போட்டு எப்படி துப்புவது ?,காக்காய் விரட்டுவது எப்படி?,குடித்துவிட்டு வாந்தி எடுப்பது எப்படி?,சரக்கு எப்படி மிக்ஸ் செய்வது ?,--ன்னு மணிமேகலை பிரசுரம் ரேஞ்சுக்கு நிறைய இருக்குங்க """

(ப.ரா ):::::டாய்....:டாய்....:டாய்...(((உலகத்திலே யார்..யாருக்கோ என்னன்னமோ வருது ...இவனுக்கு ஒன்னும் வரமாட்டேங்குது ))) 

(வி.ச ):::"""ம்..ம் ..முக்கியமா இன்னும் இருக்கு,,,வந்து..பூ மிதிக்கிறது எப்படி,,,ஊசி-இல் நூல் கோப்பது எப்படி??,வாழைபழம் தோல் உரிப்பது எப்படி??,ஜிப் போடுவது எப்படி?? இன்னும் முக்கியமா--பஞ்சாமிர்தத்தை எப்படி நக்கி சாப்பிடுவது ??""

(ப.ரா )::::"ஐயோ...ராமா..ராமா...எனக்கு ஏன் இந்த கண்ணு காதை படைசே???""
              (பேசிக்கொண்டிருக்கும்போதே உதவியாளர் வில்பர் சர்குனராஜ்--இடம் ஒரு சி.டி.தருகிறார்..அதை வி.ச---நம்ம பன்னிகுட்டி ராமசாமி-இடம் தருகிறார்அதில் " பன்னிகுட்டி ராமசாமி-இடம் பேசிக்கொண்டிருப்பது எப்படி?--பாகம்-1"---ன்னு இருந்ததை பார்த்ததும் மயங்கி விழுந்தவர் தாயங்க இன்னும் எழுந்தரிக்கவிலை .........
நண்பர்களே ...இந்த பதிவை மேலும் terror kummi   groups  மற்றும் காமெடி கும்முவர்கள் தொடருவார்கள் ...என்ற நம்பிக்கை உடன் ....குனிய வைத்து கும்முபவர்கள்---comment---க்கு வாங்க ,,,,,,