என்னுடைய---இன்றைய மற்றும் ஒரு பதிவு....
செல்ல இங்கு கிளிக் பண்ணவும்....
அன்பர்களே.....
மிகுந்த சிரமத்துக்கு இடையில் நேற்று மாலை மின்சாரம். ஒரு வழியாக கிடைக்க பெற்றேன். கற்காலத்தில் இருந்த என்னை, அன்புடன் தொலைபேசி மற்றும் மெயில் முலமாக விசாரித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. பெயர் குறிப்பிட்டு சொன்னால் அதுவே ஒரு நீண்ட பதிவாகிவிடும்.
உண்மைதாங்க இந்த பதிவுலகத்தில் என்னை விசாரிக்க இவ்வளவு நண்பர்களா....???
அப்படி நான் என்ன கிழித்துவிட்டேன். ஒன்றுமே இல்லை.என்னினும் உங்கள் அன்பு என்னை கண் கலங்க வைத்தது உண்மை.மீண்டும் மீண்டும் மீண்டும் என் மேல் அன்பு கொண்ட அன்பு உள்ளங்களுக்கு நன்றி.....நன்றி ...நன்றி...!!!!!!
நாம வழக்கம் போல் மொக்கை என்னும் படு மோசமான பதிவுக்கு செல்வோமா ???
நான் ஆரம்பித்திலேயே சொல்லிடறேன்...இந்த பதிவு யாரையும் மனசில் வைத்து எழுதபடலை.நான் யாரையும் நக்கல்,கிண்டல் பண்ணவும் இல்லை.
சும்மா ஜாலி-யா எழுத நினைத்து எழுதுகிறேன். இது சத்தியம். சத்தியம். சத்தியம்.
நாட்டுல எவ்வளவோ பிரச்சனைங்க, அதுல பாருங்க.
1) யாருக்கும் முச்சு விட சுத்தமான காத்தே கிடைக்கலை. இதுக்குதாங்க இயற்கைக்கு ரோம்ப கவலை வந்துடுச்சு. உடனே யோசித்து ( ரூம் போட்டு ) கடல்-ல உள்ள நல்ல சுத்தமான காற்றை எங்களை மாதிரி ரோம்ப புண்ணியம் செஞ்சவங்க இருக்குற இடத்துக்கு கொடுத்துச்சி.
2) அடுத்து அவன்னவன் இந்த ஈர்ஏழு உலகத்திலும் இல்லாத விலை மதிப்பற்ற(!!!)அரிசியை தின்னுட்டு பெருசு கொடுத்த டி.வி-ல படம்,சீரியல் பார்த்துக்கிட்டு உடல் உழைப்பு இல்லாமல் சும்மாவே இருக்கானுக. இதுக்கு தாங்க தானே புயல் வைச்சுது ஆப்பு. இப்ப பாருங்க குடிதண்ணிக்கே எப்படி அலையுரனுக. இதுக்கே இப்படினா "அதுக்கு" தண்ணிக்கு எவ்வளவு அலையனும் ???
3) அப்புறம் இந்த கர்போன் ரேட்டிங்காம் இல்ல. இது எவ்வளவு பசுமையா இருக்கோ அந்த அளவுக்கு ஏதோ POINTS,காசம்ல. இதை வச்சி பெரிய ஆட்கள் எல்லாம் நிறைய சம்பாதிக்கிறாங்களாம். அதான் மத்தவங்களோட பசுமையில் அவன் என்ன காசு பாக்குறது. புடுங்கி எறி எல்லாத்தையும்-னு புயல் புடுங்கி போட்டுடுச்சி.
4) பெண்கள்--நவீன சமையல் இயந்திரத்தால--எந்த வித உடல் சார்ந்த உழைப்பும் இல்லாம உடம்பை கெடுத்துக்கிட்டு..நிறைய மருத்துவத்துக்கு செலவு பண்றாங்களாம். நம்ம பாண்டி,,கடலூர் மாவட்ட பெண்கள் மேல் எவ்வளவு அக்கறை இந்த புயலுக்கு....பாருங்க...எல்லா பெண்களையும் உடல் சார்ந்த வேலை செய்ய வைத்து மருத்துவ செலவை மிச்சம் பண்ணி இருக்கு....
5) இந்த கற்காலம் கற்காலம்னு இந்த பள்ளிக்கூடத்து பசங்க வரலாற்றுல
படிச்சி மறந்துடுதுங்க. வரலாறு மிக முக்கியம். அதை மாணவர்கள் மறக்கலாமா??? அதான் எல்லா மாணவர்களையும் கற்காலத்துக்கு தானே புயல் அழைத்து சென்றது...இனி மாணவர்கள் வரலாற்றை மறப்பார்களா ???
6) ஏற்கெனவே இன்னொரு பதிவு போட்டுவிட்டதால் மிக நீண்ட இரண்டு பதிவுகளை படிக்க உங்களுக்கு மிகுந்த ஆயாசமாக இருக்கும் என்பதால். இரண்டுக்கும் கமெண்ட் போடவேண்டிய கட்டாயம் உங்களுக்கு இருப்பதால். இந்த மாதிரி, இந்த மாதிரி-னு நீங்களே யோசித்து நிறைய POINTS FILL UP பண்ணிக்குங்க. நான் மேலும் இரண்டு பாயிண்ட் சொல்லிட்டு இந்த பதிவை முடிச்சுக்கிறேன்.
பாயிண்ட் நெம்பர் இல்லை. ஏன்னா நீங்க ரோம்ப புத்திசாலி.எத்தனை பாயிண்ட் யோசிப்பீங்கன்னு கணக்கே இல்லை.பெரிய ஐயா,,சின்ன ஐயா-னு இரண்டு பேர் இருக்காங்க. இவங்களுக்கு ஒரு கட்சி இருந்துச்சி (!) அந்த கட்சிக்கு "மரம்வெட்டி கட்சி"-னு பேர் இருந்துச்சி. நம்மளைவிட யாருயா அம்மாம் பெரிய அப்பாடக்கர்னு இயற்கைக்கு வந்துச்சி பாருங்க கோபபபபபம்.
எல்லா மரம்,,மின்சார கம்பம்--எல்லாத்தையும் புடுங்கி போட்டுடுச்சி. இனி யாரவது அந்த கட்சியை மரம்வெட்டி கட்சி-னு சொல்லுவீங்க?????
அப்புறம் பசுமை புரட்சினு எல்லா பெருசு, சிறுசு, காவி வெட்டி கட்டுனவங்க,இன்னும் இன்னிக்கு முளைத்த காளான்கள் எல்லாம் மர கன்றுகளை கைல வச்சிக்கிட்டு நட இடம் இல்லாம லோலோ-னு அலையுறாங்க. அந்த மர கன்றுகள் எல்லாம் காஞ்சி செத்துபோரத பார்த்த
இயற்கை. அவற்றை நட இடம் பார்த்து கொடுத்துருக்கு.
அடுத்து ...
இந்த நாய் நக்ஸ்னு ஒருத்தன் இருக்கான்யா.பதிவுன்னு போட்டு கொலையா கொல்லுரான்யா.அப்படின்னு நீங்க புலம்புன புலம்பல் இயற்கைக்கு கேட்டுடுச்சி. அதான் பாருங்க. என்னை மட்டும் தாக்கவேண்டிய புயல் அது முடியாம, என் மேல் உள்ள கோபத்தை காட்ட ( நான் ரொம்ப நல்லவன், சத்தியவான், உத்தமன் இன்னும் என்னன்னவோ.... )
நான் இருக்கும் மாவட்டத்தையே காலி பண்ணிடுச்சி.....
நீதி :-நல்லவர்களை அழிக்க நினைத்தால் உலகம் அழியும்.....
அனைவருக்கும் ....
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் மற்றும் இனிய பொங்கல் தின சிறப்பு வாழ்த்துக்கள்.....