Pages

Tuesday, January 10, 2012

கடலூர்-ஐ புரட்டி போட்ட தானே புயல்--சீரியஸ் பதிவு ....


என்னுடைய இன்றைய மற்றும் ஒரு பதிவு....


செல்ல இங்கு கிளிக் பண்ணவும்....

அன்பர்களே .....

கடலூர் மாவட்டம் எத்துனையோ சோதனைகளை சந்தித்துள்ளது. சுனாமி, கடும் வெள்ளம், தொடர் கடும் மழை. இப்படி எத்துனையோ ஆனால் இந்த முறை வந்த தானே புயல், கடலூர் மாவட்டம்,பாண்டி,மற்றும் அதனை சுத்தி உள்ள இடங்களை கபளீகரம் செய்துவிட்டது.  

சென்ற வியாழன் இரவு (29/12/11) லேசாக ஆரம்பித்த காற்று,  நள்ளிரவில் கடுமையாக வீச ஆரம்பித்தது.மறுநாள் வெள்ளி மதியம் வரை புயல் கோரத்தாண்டவம் ஆடியது. லேசான காற்று அடிக்கும்போதே மின்சாரம் தடை பட்டது.  அப்போது ஆரம்பித்த மக்களின் வாழ்வாதார பிரச்சனை
இன்னும் தொடர்கிறது. 


புயல் அடித்த பிறகு நான் சிதம்பரத்தை விட்டு எங்கும் செல்லவில்லை. ஆனால் ஞாயிறு (8௦/௦1/12) அன்று பாண்டி வரை சென்றேன். ஒன்பது நாட்கள் கழித்து நான் சென்ற பாதையில் நான் கண்ட காட்சிகள் உங்களுக்காக. மொபைல், மற்றும் காரில் சென்று கொண்டிருந்தபோது எடுத்த படங்கள்.
சுமாராக தான் இருக்கும்.  அட்ஜஸ்ட் பண்ணிகொள்ளுங்கள். 

நான் சென்ற பாதை சிதம்பரம் TO கடலூர், கடலூர் TO பாகூர், கரிசாலம்பக்கம்,  உருவையாறு, வில்லியனூர் வரை . இந்த பாதை பாண்டியின் உள்கிராமம் வழி 
மீண்டும் வில்லியனூரில் இருந்து சிதம்பரம் திரும்பி வரும்போது எடுத்த படங்கள் .
























இது வரை பார்த்த படங்கள்.  உங்களுக்கு சுமாராகதான் புயலை காட்டியது....
அடுத்த இரண்டு படங்களை பாருங்கள். ஒரு இரும்பு போஸ்ட் எப்படி முறுக்கிக்கொண்டு இருக்கிறது என்று. மேலும் தென்னைமரம் எப்படி பறந்து வந்து விழுந்திருக்கிறது என்று . இந்த அளவுக்கு முறுக்கு விழ எப்படி காற்று அடித்திருக்கவேண்டும் ?






அடுத்து கடலூர்,  இது ABT மாருதி டீலர். SHOWROOM .முழுவதும் 15 MM கண்ணாடியால் கட்டப்பட்டது. ஒரு கண்ணடி கூட மிஞ்சவில்லை.





பொதுவாக கடலூரில் இருந்து சிதம்பரம் நோக்கி செல்பவர்கள் சிப்காட் அருகில் உள்ள காடு மாதிரியான இடத்தை பார்த்தவுடன் கண்டிப்பாக வண்டியை நிறுத்தி ஓய்வு எடுப்பார்கள் ...அப்படிப்பட்ட ரம்மியமான இடம். இது பெரிய பெரிய மரங்கள்... மரங்கள் ... மரங்கள் ....  வெளிச்சமே தெரியாது,  அப்படியே அமேசான் காட்டுக்குள் போன மாதிரி இருக்கும் . அந்த இடம் இப்போது இப்படி









அடுத்து தென்னை மரதொப்பு. இங்கும் காரில் பயணிப்பவர்கள் ஓய்வு எடுப்பார்கள்....







அன்பர்களே இது நான் சென்ற வழியில் எடுத்தது. இதை விட மோசமான
பதிப்புகள் கடலூர் மாவட்டத்தில் உள்ள பண்ருட்டியில் இங்கு உள்ள மக்களின் வருவாயே பலாபழம் மற்றும் முந்திரி மட்டுமே.  இந்த சீசன் உள்ள முன்று மாதங்கள் மட்டுமே இவர்களுக்கு வருவாய். இதை வைத்து தான் மீதி உள்ள மாதங்களை ஒட்டவேண்டும்.

பண்ருட்டி மற்றும் சுத்தி உள்ள பகுதியை ஒரு டாப் வியு பார்த்தால் பச்சை, பச்சை, பச்சை.....  இன்று அவை எல்லாம் அடியோடு அழிந்துவிட்டது. இனி சோத்துக்கு ....?????????????????????????????????????????

அடுத்து மத்திய சிறை உள்ள கேப்பர்குவாரி மலை....இந்த ஏரியா முழுவதும் வாழை, மற்றும் பண பயிர்கள் மட்டுமே . இந்த பகுதி முழுவதும் அடியோடு நாசம்....

மரம் வெட்டி அப்புறபடுத்த ஆள் கிடைக்கவில்லை. கிடைத்தாலும் ஒரு ஆளுக்கு ஒரு நாள் கூலி மட்டுமே 1000 ருபாய்.மரம் வெட்ட தேவையான வாள் மற்றும் இதர பொருட்களுக்கு கடும் பற்றாக்குறை. ( ஒரு மாவட்டத்தில் உள்ள மொத்த மரத்தையுமே அப்புற படுத்த வேண்டும் ) என் உறவினர் ஒருவர் ENGG. பொருட்கள் விற்கும் கடை வைத்துள்ளார். அவர் கடையில் மட்டுமே மரம் அறுக்கும் இயந்திரம் சுமார் 1000 விற்றதாம இந்த ஒரு வாரத்தில்.

இன்னும் நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். சொல்ல சொல்ல சோகம் தீராது. அடுத்த விஷயத்துக்கு செல்வோம். இத்தனை நாட்கள் ஆகியும் மின்சாரம் வரவில்லை, நிவாரணம் தரவில்லை, இதுதான் தற்போதைக்கு பெரிய பேச்சு....

மின்சாரத்தை பொருத்தவரை நான் சிதம்பரத்தில் பக்கத்தில் இருந்து
பார்த்ததில் தெரிந்துகொண்டது . ஒரு நகருக்கே புதிதாக மின்சாரம் தர ஏற்பாடு செய்யவேண்டும்.  அதற்கு வேண்டிய தளவாட சாமான்கள் அனைத்தும் திடீர் என்று வானத்தில் இருந்து குதித்துவிடுமா?. எதிர்பாராத புயல் பாதிப்பு கைவசம் இருப்பு எவ்வளவு இருக்கும்?. தேவைகள் கணக்கிட முடியாதவை. வேலை செய்ய செய்ய தான் தெரியவரும்...

மின்வாரிய ஊழியர்கள் எவ்வளவு தான் தினமும் கடுமையான வேலை செய்வார்கள்? ஒரு நாள் இரண்டு நாள் என்றால் பரவாஇல்லை தொடர்ச்சியாக. ஒரு நாளைக்கு எத்தனை வாட்டி போஸ்ட் ஏறவேண்டும் தெரியுமா? எவ்வளவு பிட்டிங்க்ஸ் முடுக்கவேண்டும். சொல்லுவது எளிது கண் கூடாக பார்த்தால் தான் தெரியும்....

அவர்களும் முடிந்த அளவுக்கு விரைவாக வேலை செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். மின் இணைப்பு முதலில் எளிதாக கொடுக்க முடிந்த இடத்திற்கு கொடுக்கிறார்கள். மின்மாற்றி, போஸ்ட், வேண்டும் என்கிற இடத்திற்கு சற்று தாமதம் ஆகிறது. புதிதாக மின் இணைப்பு கொடுப்பது எளிது...ஆனால் பழுது பார்ப்பது என்பது . ( அதுவும் முழு மாவட்டத்திற்கு என்பது ) மிக மிக மிக கடினமான செயல் . பழைய போஸ்ட்டை பள்ளம தோண்டி எடுக்கணும். பிறகு புதிய போஸ்ட் நடணும் பிறகு கம்பி இழுக்கணும். மற்ற தேவையான பிட்டிங்க்ஸ் மாட்டனும். வீடுகளுக்கு மின் வயர் இணைப்பை சரி பார்க்கணும். ஒரு மாவட்டம் முழுவதும் இப்படி பட்ட
வேலை. தினமும் எவ்வளவு ஆயாசமாக இருக்கும் ? .

அடுத்து நிவாரணம் ....

நிவாரணத்தை பொருத்தவரை வீடுகள், பயிர்களுக்கு தரவேண்டும் ...

இழப்பீடு கணக்கிடபடவேண்டும், நிதி ஒதுக்கவேண்டும். இப்படி நிறைய
வழிமுறைகள் இருக்கின்றன...உடனே பணம் வேண்டும் என்று எல்லா இடத்திலும் மறியல், முற்றுகை நடக்கிறது ....

இந்த பணத்தை வாங்கி கொண்டு உடனே சொந்த வீடு,,விவசாய வேலை பார்த்துவிடுவார்களா ?அட போங்கப்பா .உடனே டாஸ்மாக் போகணும். 
சொந்த உழைப்பில் வராத காசை கவலை இல்லாமல் செலவு பண்ணனும். இது தான் டார்கெட். 

ஒரு சிலர் விதிவிலக்கு உண்டு . அதுக்காக எல்லாரையும் குறை சொல்ல வில்லை. அரசை முழுவதுமாக சப்போர்ட் பண்ணவும் இல்லை .

இனி அதை பத்தி பார்ப்போம் ....

இந்த மாதிரி பேரிடர் காலங்களில்உடனே என்ன செய்யவேண்டும் என்று அதிகாரிகளுக்கு தெரிந்திருந்தாலும்,,உடனே களம் இறங்கவில்லை. அனைத்து துறை அதிகாரிகளும் ஏதோ ஒரு உத்தரவுக்கு காத்திருந்தார்கள். தன்னிச்சையாக முடிவெடுக்கும் அதிகாரம் இருந்தும் யாரோ யாருக்கோ உத்தரவு தரும் வரை பொறுத்திருந்தார்கள். அல்லது அப்படி வேஷம் கட்டினார்கள்.

இந்த மாதிரியான நேரங்களில் உணவு மற்றும் குடிநீர். இதுதான் அதி அதி அதி அதி முக்கியமானது. இங்கேதான் அரசு சார்பில் கோட்டை விடப்பட்டது. மின்சாரம் இல்லாததால் குடி நீர் ஏற்றும் மோட்டார்கள் இயக்க முடியவில்லை. வெளி மாவட்டத்தில் இருந்து லாரிகள் முலம் வினியோகம் செய்யப்பட்டது.  ஏறக்குறைய 300 கி.மி தூரத்தில் இருந்து எடுத்து வர பட்டது. எவ்வளவு கூட்டம். தண்ணீர் பிடிக்க அடிதடி எவ்வளவு செலவு கணக்கிட்டால் எங்கேயோ போகும். இதற்கு பேசாமல் ஜனரேட்டேர் வாடகைக்கு எடுத்து OVERTANK-க்கு தண்ணி ஏற்றி விட்டால் அந்தந்த வீடுகளில் தண்ணீர் பிடித்துக்கொள்வார்கள்.சண்டை சச்சரவு இருந்திருக்காது. இயற்கை உபாதைகளுக்கு தண்ணீர் இல்லாமல் பெண்கள் பட்ட கஷ்டம் சொல்லி மாளாது. 

இதுக்கு பிறகு தான் உணவு.உணவு விஷயத்தில் பெரிதாக ஒண்ணும் சொல்லுவதற்கு இல்லை. அரசு சார்பில் உணவு வழங்கப்பட்டாலும். குடிநீர் கிடைத்திருந்தால் மக்களே  சமைத்து சாப்பிட்டிருப்பர்கள். செல்போன், தொலைக்காட்சி பிரச்சனை தான் அடுத்து.

( அதுவும் இந்த சீரியல் பிரச்சனை இருக்கு பாருங்க. நம்ம மக்கள் அண்டை நாட்டோடு சண்டை என்றால் கூட சாதரணமாக எடுத்துக்கொள்வார்கள். ஆனால் இந்த சீரியல் விஷயம் தெரியவில்லை என்றால் நடக்கும் பாருங்க மனப்போராட்டம் ....சொல்லி மாளாது )

ஐயா சாமிகளே...இந்த சொகுசு சார்ந்த விஷயங்கள் எல்லாம் எப்போதிருந்து வந்தது ????.ஆதி காலத்தில் இருந்தா ???

இவை எல்லாம் இடையில் வந்தது ...இவை இல்லாமல் நாம் பெற்றோர்கள் வாழவில்லையா? அந்த அளவுக்கு சுகமாக வாழ்ந்து கொண்டிருப்பதால். இவை இல்லாமல் இருக்க முடியவில்லை.இது தான் நிஜம் . அதற்காகதான் இவ்வளவு புலம்பல்.

இன்னும் நிறைய இருக்கிறது. பேச,எழுத. அப்படியே பேசினாலும், எழுதினாலும், இது தீராது நீண்டு கொண்டேதான் இருக்கும். பதிவின் நீளம் கருதி இத்துடன் முடிக்கிறேன்...

எங்களை, நம்மை மீண்டும் கற்காலத்திற்கு கொண்டு சென்ற தானே புயலுக்கு
நன்றி சொல்லுவோம். இந்த மாதிரி பேரிடர் காலங்களில் அரசை சார்ந்திராமல் எப்படி சமாளிப்பது என்று நம் சந்ததியினருக்கு கற்று தருவோம்.

இந்த பதிவு எந்தவித கருத்தோ, குறையோ கூற இல்லை. ஜஸ்ட் உண்மை நிலவரத்தை எந்த வித கலப்பும் இல்லாமல். உண்மையாக சொல்ல தோணியது சொன்னேன். எனக்கு நேற்றுதான் மின்சாரம் வந்தது. 

பின் குறிப்பு 1 :- நீங்கள் மிக மோசமான துர்நாற்றம் அடங்கிய காற்று பிரிதலை உங்கள் அனுபவத்தில் முகர்ந்து இருப்பீர்கள்...அதை சற்றே நினைவு கூறவும். அதிக பட்சம் 20 நொடி உங்களால் தாங்க முடியும்....

அதே போல் பல துர்நாற்றம் கலந்து உள்ள காற்றை 24*7*365 நாட்களும் கடலூர் சிப்காட்--ஐ சுற்றி உள்ள கிராமமக்கள் சுவாசித்து வாழ்கிறார்கள். மிக மோசமான. இந்த துர்நாற்றம் தற்சமயம் ( புயலால் ) இல்லை. மின்சாரம் தடைபட்டதால்.சிப்காட்டில் உள்ள ரசாயனம் உற்பத்தி செயும் தொழிற்சாலைகள் இயங்கவில்லை.

சிப்காட்டை சுற்றி உள்ள கிராம மக்கள் நல்ல காற்றை தற்காலிகமாக சுவாசித்து வருகிறார்கள்.... இந்த கொடுமையை எந்த கணக்கில் சேர்ப்பது?

பின் குறிப்பு 2 :- இந்த பதிவில் கடலூர் மாவட்டம் என்பது சிதம்பரத்தையும்
உள்ளடக்கியது.

அனைவருக்கும்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் மற்றும் இனிய பொங்கல் தின சிறப்பு வாழ்த்துக்கள்.....

14 comments:

நிகழ்காலத்தில்... said...

நடைமுறைச் சிக்கல்கள் புரிகிறது. விரைவில் அடிப்படை வசதிகள் பெற பிரார்த்திக்கிறேன்.

இத்தனை இக்கட்டான நிலையிலும் தகவல்களை எங்களுக்குத் தெரிவித்த உங்களுக்கு என் வணக்கங்கள்.

சேலம் தேவா said...

சீக்கிரம் நிவாரணம் பெற வேண்டிக்கத்தான் முடியும். :(

கடைசில வாழ்த்து சொல்றது நக்கல் மாதிரி தெரியுது.

தமிழ்வாசி பிரகாஷ் said...

முழுமையான புயல் பாதிப்பு அனுபவத்தை பகிர்ந்திருகிங்க....

புயலால் நல்ல காற்று கிடைத்தது என்பது சோகத்திலும் சற்று மகிழ்ச்சி அளிக்க கூடிய விஷயம். ஆனால் அந்த தூய காற்று எத்தனை நாட்களுக்கு கிடைக்கும்?

தமிழ்வாசி பிரகாஷ் said...

சேலம் தேவா said...
கடைசில வாழ்த்து சொல்றது நக்கல் மாதிரி தெரியுது.///

அவர் நேற்று தான் மின்சாரம் கிடைத்து பதிவு எழுதியுள்ளார். அதனால் புத்தாண்டு வாழ்த்தை சற்று தாமதமாக கூறியுள்ளார். இதில் என்ன நக்கல் இருக்கிறது?????

தமிழ்வாசி பிரகாஷ் said...

மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் தாங்கள் மேற்கண்ட புகைப்படங்களை எடுத்திருப்பதாகவே தெரிகிறது.
பகிர்ந்தமைக்கு நன்றி....

Unknown said...

படங்களைப் பார்க்கும் போது புயலின் சீற்றத்தை கணிக்க முடிகிறது....அரசு இயந்திரம் யார் உத்தரவுக்கு காத்திருக்கிறது சம்பளம் வாங்கும் போது...அந்த பணத்தில் புயலால் பாதித்த ஏழை தமிழனின் வியர்வை வாசம் உன்னை வாட்டுமே!கேள்விகள் உன்னைக் குடையுமே!உனக்கு மக்களின் வரி பணத்தில் வாழுகிறாய் போயஸ் தோட்டத்திலிருந்தோ அறிவாலயத்திலிருந்தோ தரப்படுவதில்லை....அரசு ஊழியர்கள் புரிந்து கொண்டால் சரி....

சேலம் தேவா said...

//இதில் என்ன நக்கல் இருக்கிறது?????//

தவறான புரிதலுக்கு மன்னிக்கவும்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

புயல் பாதிப்பு பற்றி முழுமையாக புரிந்து கொள்ள முடிந்தது, புயல் கரையைக் கடப்பதற்கு முன் தினமே அது Very Severe Cyclonic Storm என்ற வகைபடுத்தலுக்கு வந்துவிட்டது. இது ஒரிசாவில் அடித்த Super Cyclone க்கு ஒரு ஸ்டெப் கீழ அவ்ளோதான். அந்தளவுக்கு வேகமான புயல் என்று வானிலை அறிக்கை கூறும் போது அரசும் மக்களும் இன்னும் எச்சரிக்கையுடன் கொஞ்சம் தயாராகி இருந்திருக்க வேண்டும். அன்று கூட சில மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றதாக செய்தியில் வந்தது வருத்தமாக இருந்தது.

150 கிமீ வேகம் வரை காற்று வீசும் என்று அன்று முழுதும் தொலைக்காட்சியில் சொல்லிக் கொண்டே இருந்தார்கள். அந்த வேகத்தில் மின்கம்பங்கள் சாயவில்லை என்றால் தான் ஆச்சர்யம். எப்படியோ இது ஒரு நல்ல படிப்பினையாக இருக்கட்டும். சீக்கிரமே இயல்பு நிலை திரும்பும் என நம்புகிறேன்!

cheena (சீனா) said...

அன்பின் நக்கீரன் - இயறகையின் சீற்றம் - என்ன செய்வது - நாம் எதிர் பாராத ஒன்று - முன்னேற்பாடுகள் செய்ய இயலாத நிலை - அரசு இயந்திரம் எவ்வளவு தான் வேகமாகச் செயல் பட்டாலும் இயல்பு நிலை திரும்ப மாதங்களாகும். ம்ம்ம்ம் - உண்மை நிலையினை படங்களூடன் பகிர்ந்தமை நன்று நக்கீரன் - விரைவினில் இயல்பு நிலை திரும்ப பிரார்த்தனைகளுடன் கூடிய நல்வாழ்த்துகள் . நட்புடன் சீனா

Anonymous said...

புயலின் தாக்கத்தை விளக்கும் முக்கியமான பதிவு. நன்றி தலைவா. தெரிந்தவர்களுக்கு லிங்க் குடுக்கிறேன். மேலும் பல தகவல்களை தாருங்கள்.

Mohamed Faaique said...

சாதாரணமான புயல் என்றுதான் நினைத்திருந்தேன். ரொம்பக் கடுமையாக இருக்கிறதே..

கூடிய சீக்கிரன் சுமுக நிலைக்கு திரும்பும் என் நம்புவோம்..

உணவு உலகம் said...

புயலின் தாக்கம் புடைத்தெடுதிருக்கிறது. கோரதாண்டவம் ஆடிய புயலின் வேகம்+பாதிப்பு உங்கள் பகிர்வில் துல்லியமாக உணர முடிகிறது. இருந்தும் எங்களால் ஆறுதல் மட்டுமே சொல்ல இயலுகிறது.

Unknown said...

நம் துயரத்தை அருமையாக வெளிக்கொணர்ந்து வந்துள்ளது இப்புகைப்படங்கள்...

MANO நாஞ்சில் மனோ said...

ஆண்டவா நான் நினைத்ததை விட மிக மோசமாக அல்லாவா இந்த புயல் இருந்திருக்கிறது.....!!! உங்கள் வேதனை புரியுது அண்ணே...!!!