Pages

Monday, December 26, 2011

எனக்கு இனி வேண்டாம்... பதிவர் சந்திப்பு ....

அன்பர்களே...!!!

டிஸ்கி:- 3
எல்லாரும்...நம்ம சி.பி.செந்தில்குமாரை என்னென்னவோ சொல்லுறீங்க...
இந்த மாதிரி அவரை சொன்னது உண்டா...நன்பேண்டா...இந்தஆடியோவை 
கேட்டுவிட்டு சொல்லுங்கள்...




டிஸ்கி:- 4
கொக்கு மாக்காக எண்டர் தட்டி விட்டதால்இந்த பதிவு ரோம்ப பெரிசாக 
போய்விட்டது ....அதனாலே படிக்காம கமெண்ட் போட போகாதீங்க....
நிறைய அதி,,அதி,,, முக்கியமான விஷயத்தை தவற விட்டுவிடுவீர்கள் ....
அடுத்த போஸ்ட் எண்டர் தட்டாம டைப் பண்ணுறேன் ....   


நாம போஸ்ட்-க்கு போவோமா.....

ஈரோடுசங்கமம் சந்திப்பு பற்றி நான் நிகழ்ச்சி நடக்கும் தினத்திற்கு 
முன்தினமே பதிவு போட்டுவிட்டதால் ....
அதிகம் சொல்ல ஏதும் இல்லை ...
மேலும் எல்லாரும் பதிவு போட்டு விட்டதால் 
நான் கடைசியாக போடுகிறேன் ...
நல்ல கவனிப்பு...
நல்ல உணவு....
நல்ல தங்கும் விடுதி ...
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் ...

(என் வீட்டு அக்னி குண்டம் எரிந்து கொண்டே இருக்கிறது)..............1

நிகழ்ச்சியின்--நிகழ்ச்சி நிரலில் ஒரு சில ஆலோசனைகளை 
மற்ற பதிவர் நண்பர்கள் சொல்லியுள்ளார்கள்...
அடுத்த சந்திப்பில் இது சரிசெய்யப்படும் என்று நம்புவோம் ....
சந்திப்பில்--வந்திருந்த அனைவரையும் சந்தித்தேன்....
(பேர் குறிப்பிட்டு சொன்னால் விடுபட்டவர்கள் 
வருத்த படுவார்கள் ...என்பதால்....)
நான் சந்தித்த அனைவருக்கும் என்னுடைய
வாழ்த்துக்களும்.... நன்றிகளும் .... 

என்ன -- என்னை சந்தித்ததால் இனி அவர்கள் மிக 
பிரமாதமாக பதிவு போடுவார்கள்....என்று நம்புவோம்...
ஹி...ஹி ....

(என் வீட்டில் இதுவரை 10கிலோ மிளகாய் தீர்ந்துவிட்டது)...................2

மற்ற படி மிக அருமை....
இனி பதிவர் சந்திப்பு நடத்துபவர்கள்...
ஈரோடு சங்கமத்தை அளவு கோலாக 
கொண்டு அதை விட சிறப்பாக செய்ய வேண்டும் 
என்று தான் நினைப்பார்கள்....
அவ்வளவு சிறப்பு....









    









( என் வீட்டில் 13 கிலோ உப்பு தீர்ந்துவிட்டது ).........................................3

போதும்யா தலைப்புக்கு வாய்யா என்கிறீர்களா...???

பொதுவா நான் என் முகம் காட்ட விரும்புவதில்லை...
கடைசி வரைக்கும் அப்படியே இருக்க விரும்பினேன் ....
ஆனால் பதிவர் நண்பர்கள் விரும்பி கேட்டுக்கொண்டதால் 
தவிர்க்க முடியாமல் சென்றேன்....

( என் வீடு முழுவதும் ஒரே கார நெடி)........................................................4

என்ன ஆச்சின்னா சந்திப்பில் ஆள் ஆளுக்கு என்னை 
புகைப்படம் எடுத்து தள்ளிவிட்டனர் ....
இனி வேண்டாம் என்று சொன்னாலும் புகைபடம்
போடத்தான் போகிறார்கள் ....என்பதால் விட்டுவிட்டேன்....
நீங்களே மற்ற பதிவர்களின் பதிவை படித்திருப்பீர்கள்....
எல்லாரும் என்னை பற்றியே போட்டுள்ளார்கள் ....
என் பேர் வராத பதிவு இல்லை என்றே சொல்லலாம்....
ஏன் என்று பதிவை படித்த அனைவரும் யோசித்திருப்பீர்கள்....

(என் வீட்டின்--அக்கம்,,,பக்கத்தில் உள்ளவர்களுடன் 
 ஐந்து,,ஆறு நாட்களாக ஒரே சண்டை)......................................................5

என்னால் தொலைபேசிஅழைப்புகளுக்கு பதில்
சொல்ல முடியவில்லை....      
என் மெயில்---இன்பாக்ஸ் புல்லா மெயில்களாக
நிரம்பி கிடக்கிறது ....

( என் அம்மாவுக்கும்,,மனைவிக்கும்,,,கைகள் சோர்த்து விட்டது )......6

என்னால் எங்கும் வெளியில் செல்ல முடியவில்லை.....
என் தந்தைக்கு--வீடு தேடி வருபவர்களுக்கு பதில் சொல்லியே 
தொண்டை கட்டி கொண்டது .....

( தமிழ்நாட்டில் எங்குமே ஜலுசில் வகை மாத்திரை,,,
சிறப்பு-க்கள் கிடைக்கவில்லையாம் )...........................................................7  

என்னதான் சொல்லவரே...சொல்லித்தொலை என்கிறீர்களா....???
இருங்க பதிவு ஒரு குறிப்பிட்ட அளவுக்கு வரட்டும் .....
சட்டுபுட்டுன்னு சின்னதா பதிவு போட முடியுமா...???
நாம பதிவு போடுரதே எப்போதாவதுதான்....
அதான் இந்த மேக்கப் ....ஹி...ஹி....

சரி நாம விஷயத்துக்கு போவோம்....

அது என்னன்னா...
என்னை பார்த்தவுடனே எல்லா பதிவருக்கும் செம பொறாமை....
வயிறு எரிந்தது....
என்னடா இவன் இவ்வளவு அழகா இருக்கானே....
இவன் இருந்தா நாம எடுபடுவோமா என்று ....

இதனாலேயே இரவு வந்த கொஞ்சம் பேர் திரும்பி போய்ட்டாங்க ....
சில பேர் அவுங்க அப்பா அம்மாவை--போனில் திட்டினார்கள்....
அவர்களை அவ்வளவு அழகா பெக்கலையாம் ....
பதிவு உலகத்துக்கு வந்து முகம் கட்டினா எவ்வளவு பிரச்சனை 
பாருங்க....

இதுக்காகதான் நான் நிகழ்ச்சி நடந்த--அப்ப 
இந்த மாதிரி மாறுவேடத்தில் இருக்கவேண்டியதாயிற்று....


ஆமாங்க நான் ஹீரோ மாதிரி இருந்ததை எல்லாரும் அவுங்க 
அவுங்க ப்ளாக்-ல போட்ட உடனே ---போன்,,,மெயில்,,
மற்றும் நேரில் வந்து சினிமாவில் ஹீரோவா நடிக்க சொல்லி 
பயங்கரபிரச்சினை-ங்க...
இதனாலேயே தமிழகம் முழுக்க போராட்டம்,,தீக்குளிப்பு 
எல்லாம் நடக்குதுங்க.... 

(என்னால் எங்கும் வெளியில் செல்ல முடியவில்லை.....
என் தந்தைக்கு--வீடு தேடி வருபவர்களுக்கு பதில் சொல்லியே 
தொண்டை கட்டி கொண்டது .....)

இதனாலதாங்க சொன்னேன்....
இனி எனக்கு பதிவர் சந்திப்பு வேண்டாம் என்று ....
என்ன நான் சொல்லுவது சரிதானே ...!!!!

அப்புறம் என்னடா..... NO....1 TO 6.... வரை என்று கேக்குறீங்களா ....???
அது எனக்கு ஏற்ப்பட்ட கண் திருஷ்ட்டியினால் ----
திருஷ்டி சுத்தி போட்டதன் விளைவு .....

7---எல்லாருக்கும் வயிறு எரிந்ததால் வந்த விளைவு.....
5----அவுங்களும் எவ்வளவு கார நெடி தான் தாங்குவாங்க..???
ஹி...ஹி... 


NO...NO...NO..... அப்படி எல்லாம் அழப்பிடாது..... 

டிஸ்கி:-1 


தலைப்பு இப்படித்தான் CATCHING-ஆ வைக்கணும்னு வருத்தபடாத 
வாலிபர் சங்க தலைவர் சொன்னதால் இந்த தலைப்பு.....


டிஸ்கி:- 2


நான்::

ஆகா அருமையா போஸ்ட் போட்டாச்சி ....இனி பாரேன்...எல்லாரும் வந்து 
அருமை,,,
:)))),,
பகிர்வுக்கு நன்றி,,,
முடியலை,,,
சூப்பர்,,,
ஸ்..அபா,,,,
இன்னும் பல TEMPLATE கமெண்ட் போடுவாங்க...பாரேன்....


என் மனசாட்சி:::


ஏஏய்...இத படிக்கிறதே பெருசு ....இதுல வேற உனக்கு கமெண்ட் வேற போடணுமா ???
அடுத்தவங்க நேரத்தையும்,,,மின்சாரத்தையும் நீ எவ்வளவு வேஸ்ட் பண்ணுற 
தெரியுமா???...நீ எல்லாம் NATIONAL வேஸ்ட் ....BETTER--DO GOOD THINGS....


நான்:::


ஓ...அப்படி சொல்லுறியா ....அப்ப சரி....


மக்களே.... கீழ்கண்ட லின்க்குகளுக்கு போய் கேட்டு பாருங்க....
நீங்களே பாராட்டுவீங்க.....நீங்க சொல்லுரத பொறுத்து இதை தொடருகிறேன்.....

1.http://www.youtube.com/watch?v=6WZupBEVTfk&feature=youtu.be
2.http://www.youtube.com/watch?v=HOTLLSAQcEs
3.http://www.youtube.com/watch?v=EbnBP4HKaT8&feature=youtu.be
4.http://www.youtube.com/watch?v=2E03qv8z4YA&feature=youtu.be
5.http://www.youtube.com/watch?v=GORitdfVUjI&feature=youtu.be



அனைவருக்கும் கிறிஸ்மஸ்,,, மற்றும் 
புத்தாண்டு,,,மற்றும் பொங்கல் 
வாழ்த்துக்கள்......









 Online Works For All said...







World No.1 Money Making Site. 100% Without Investment Job. 




அப்படி என்னதான்...வேலைடா ....
HI-TECH-கான அந்த தொழிலா....????
எல்லார் போஸ்ட்-ளையும் இதே கமெண்ட் போட்டு கொல்லுறியே....






Saturday, December 17, 2011

ஈரோடு சங்கமம் 2011-ஒரு பார்வை .....


அன்பர்களே....

டிஸ்கி:- 1
இங்க போட வேண்டிய முன்குறிப்பு.----
பின்குறிப்பாக...டிஸ்கி:-2,,3,,4,,5,,-ல் 

ஈரோடு பதிவர் சந்திப்புக்கு முதன் முதலாய் போயிருதேன் .....
சனிக்கிழமை இரவே ஈரோடு சென்றுவிட்டேன்....
சங்கம உறுப்பினர்கள் மிக அருமையாக---இரவே வந்தவர்களுக்கு 
தங்க விடுதி ஏற்ப்பாடு செய்திருந்தனர் ....
வந்திருந்த பதிவர்களிடம் என்னை அறிமுகப்படுதிக்கொண்டேன் ....
சிலர் சந்து பக்கம் ஒதுங்கினார்கள் ....( பேர் வேண்டாமே ப்ளீஸ் )
( என்ன என் ப்ளாக் பேர் சொன்னாலும் அப்படி ஒன்னு இருக்குதா.....என்று கேட்டார்கள் ....நாம வளரனுமோ ?? )

மறுநாள் ஞாயிற்றுகிழமை 9.00 கே விழா நடந்த அரங்கத்திற்கு 
சென்றுவிட்டேன் ....அறிமுகமான பதிவர்களுடன் .....

அட அட என்ன அன்பு இந்த ஈரோடு பதிவர்களிடம் ....
கையை பிடித்து இழுத்து செல்லாத குறையாக என்னை சாப்பாட்டு  கூடத்திற்கு அழைத்துசென்று சாப்பிட உட்கார வைத்துவிட்டு---தான் சென்றார்கள்..... 

காலை டிபன் மிக அருமை...பூரி,,முட்டை,,,குருமா,,இட்லி,,வடை,,,
என மிக பிரமாதமான விருந்து ....சுவையோ ...அப்படி...
மீண்டும் இந்த சுவை இனி அடுத்த சங்கமத்திற்கு தான்...
வேறுஎங்கும் வாய்ப்பேயில்லை....

மிக சரியாக 9.45 க்கு நிகழ்ச்சிகள் ஆரம்பித்தன....
அறிமுகபடலம்.,,ப்ளாக்-ன் எதிர்காலம்,,,ஈரோடு சங்கமத்தின்
உருவாக்கம்...இப்படி நிறைய ....
(இவை பற்றி என் அடுத்த பதிவில்)


நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்த போது மைக்-ல் அறிவிப்பாளர் ஒரு அறிவிப்பு செய்தார் 
தீடீர் என்று அனைவரிடமும் பரபரப்பு.....
இந்த சங்கம-விழாவிற்கு வர முடியாத வெளிநாட்டு
பிரபல பதிவர்கள் இரண்டு பேர் ...போன்
முலமாக எங்களிடம் பேசி நிகழ்ச்சிக்கு வாழ்த்து
தெரிவித்தார்கள்....
ஒரே உற்சாகத்துடன் எழுந்த கைதட்டலில்
மண்டபமே கிடு கிடுத்து போனது....

பிறகு வழக்கம் போல் அதிரடி சஸ்பென்ஸ்.....
நிகழ்ச்சிகள் நடந்தது.....
பிறகு மதிய விருந்து......விருந்துன்னா விருந்து....
அப்படி ஒரு விருந்து ....
நம் வீட்டு விழாவிற்கு கூட இப்படி பார்த்து பார்த்து
செய்து இந்த சுவை-ஐ கொண்டு வந்திருக்க மாட்டோம் ....
(இதை பற்றிய விவரங்கள் படத்துடன் அடுத்த பதிவில்)

மீண்டும் நிகழ்ச்சிகள் மிகுந்த உற்சாகத்துடன் ....
கலை கட்டியது....
மாலை வரை கலை கட்டிய நிழ்ச்சிகள் ...முடிவுக்கு
வந்த போது அதுவரை அனைவரிடமும் இருந்த உற்சாகம்
மொத்தமாக வடிந்து போனது ...
அனைவரிடமும் இன்னும் கொஞ்சம் நேரம் இந்த
நிகழ்ச்சி நீடிக்க கூடாதா என்ற ஏக்கம் அப்பட்டமாக
முகத்தில் தெரிந்தது....

ஒருவருக்கு ஒருவர் ...போன் நம்பர்,,,முகவரி வாங்கி கொண்டு
மீண்டும் அடுத்த சங்கமத்தில் கண்டிப்பாக சந்திப்போம்
என்று மன நிறைவுடன் பிரிந்து சென்றாகள்....
இந்த முறையும் மிஸ் செய்தவர்கள்....கண்டிப்பாகஅடுத்த முறையாவது கலந்து கொள்ளுங்கள்....இது நம்ம வீட்டு
விழா......PLEASE DONT MISS IT...HERE AFTER....
நன்றி....ஈரோடு சங்கம குழுவினர்களே.... HATS OFF.....

டிஸ்கி:-2

என்னடா நாளைதானே சங்கமம்...
இவன் இப்பவே நடந்த மாதிரி எழுதுறானே
என்று நினைக்கிறீங்களா???
எப்படியும் அட்டன் பண்ணவர்கள் இதை பத்தி
பதிவு போட போறாங்க....நாம முந்திக்குவோமே...
அப்படீன்னு.......ஹி....ஹி... (டிஸ்கி 3 ஐ பார்க்கவும்)

டிஸ்கி:-3

அதாவுதுங்க---இப்ப ஒரு படம்..வருவதற்குள்
பிரி-விவ்யு ஷோ பார்த்துட்டு விமர்சனம் எழுதுரதில்லையா...
அது போல தாங்க இதுவும்...போன வருட சங்கம நிகழ்ச்சியினை
வைத்துஇந்த வருட நிகழ்ச்சி உங்கள் பார்வைக்கு ....

ஆமாங்க....இந்த சினிமா விமர்சனத்தின் தொல்லை
தாங்க முடியலை.....அப்பாப்பா...முதல் ஷோ-விற்கு
டிக்கெட்,,எடுத்துட்டேன் முதல் கொண்டு,,
படம் பாக்குறேன்,,,இடைவேளை,,,எண்டு ....இப்படி
எல்லாத்தையும்,,,போடுறாங்க...இதுல வேற ...படம்
நல்லாஇருக்கு-னு சொல்லுறவங்க,,,நல்லாஇல்லை-னு சொல்லுரவங்களோட விமர்சனம் படிச்சிட்டு
இன்னும் தெருவுல கிழித்துக்கொண்டு ஓடாததுதான் பாக்கி....

போற போக்க பார்த்தா படம் பூஜை போட்ட அன்னிக்கே---
""பதிவுலக வரலாற்றில்---முதல் முறையாக எங்கள் தளத்தில்
சூப்பர் ஹிட் விமர்சனம் ...படிக்க தவறாதீர்கள்””னு
போடாததுதான் பாக்கி.....

இன்னும் எத்தனை விவ்யு-ல தான் ஒரு படத்த
விமர்சனம் பண்ணுவீங்க...

இறைவா படத்தை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்...
இந்த
பதிவர்களின் சினிமா விமர்சனத்தில் இருந்து எங்களை நீ காப்பாற்று....

டிஸ்கி:-4

இந்த பதிவு முழுக்க முழுக்க கற்பனையே...!!!
யார் மனத்தையும் புண்படுத்த அல்ல...!!!
அப்படி......(அப்புறம் SO AND SO.....நீங்களே FILL பண்ணிக்குங்க)

டிஸ்கி:-5

இந்த பதிவு மிக நீளமாக போய் விட்டதால்....
நீண்ட நாட்களாக பதிவு போடாததால்....
இதை இரண்டு பதிவாக படித்து கொள்ளவும்....
அப்ப விழுந்த இடைவெளி சரி ஆகிடும்தானே???
ஹி..ஹி..நன்றி...!
(3...1 !)

     

Wednesday, November 23, 2011

வாழவைக்கும் காதலுக்கு .....ஜெ ..!!!!!!

அன்பர்களே....

நாம பதிவுக்கு போறதுக்கு முன்னாடி இந்த பாட்ட 
முழுசா கேட்டுடுங்க .....(அப்பதான் தலைப்புக்கும் 
பதிவுக்கும் சம்மந்தம் இருக்கு-னு நம்புவீங்க)


                               



ஒரு செய்தி....படித்தேன்...
கீழ்பாக்கதிலிருந்து ...கொருக்குபெட்டைக்கு செல்ல 
SHARE AUTO-வில் 5 ருபாய் ...அதே இடத்துக்கு 
பேருந்தில் 7 ருபாய் ..என்று ...

பஸ் கட்டண உயர்வை பத்தி எல்லாரும் பதிவு 
போட்டுவிட்டார்கள்....ஆனால் அவர்கள் பார்த்த
பார்வையில் இருந்து நான் வேறுபடுகிறேன் ....

நாம மேட்டர்-ருக்கு போவோம் ....

அம்மா அவர்கள் எவ்வளவு பெரிய தீர்ர்ர்ர்ர்ர்ர்ர்க்ககரசி..... 

எப்படி என்றால்.....

இப்ப நீங்க தினமும் பஸ்-ல வேலைக்கோ 
இல்லை SO AND SO மெட்டருக்கோ போறீங்க ...
அப்ப பஸ்-ல அந்த FIGURE-ம் வராங்க ....
பஸ்-ல ஒரு தொல்லை என்னன்னா ஆம்பிளைங்க 
எல்லாம் முன்னாடி இருக்கணும் ....
லேடீஸ் எல்லாம் பின்னாடி இருக்கணும் .....

இதுக்காக நம்மளை மாதிரி முன்னோர்கள்... 
ஆம்பிளைங்க பெரிய பெரிய போராட்டம் 
எல்லாம் பண்ணி LEFT,,,RIGHT-னு பிரிச்சாங்க...

அதிலையும் என்னாசின்னா ..பஸ்--- FULL
ஆகிடுசினா STANDING ஆகும்...அப்ப 
உஷார் பண்ண பிகர்-ம் ,,,நீங்களும் 
ஒத்தரை ஒருத்தர் பார்க்க முடியாம போய்டும் ...
அப்ப கடந்து தவியா தவிச்சி போயிடுவீங்க 
ரெண்டு பேரும் ......
இப்படியே ஒரு நாள்,,ரெண்டு நாள்-னா பரவாஇல்லை ...
தினமுமே இப்படினா...???

அப்புறம் உங்க பிகர்-ஐ வேற ஒருத்தன் ரூட் விடுவான்....
அப்புறம் உங்களுக்கும் அவனுக்கும் சண்டை நடக்கும் ....
உடனே சப்போர்ட்டுக்கு உங்க FRIENDS,,,அவன் FRIENDS..
எல்லாம் வந்து அது ஒரு பெரிய கலவரம் ஆகிடும் ....
எவ்வளவு நஷ்டம்..இரண்டு பக்கமும்...

இதுக்கு இடைல அந்த பிகர் வீட்ல வேற மாப்பிளை 
பாக்க ஆரம்பிச்சிடுவாங்க...
பாருங்க எவ்வளவு கஷ்டம் ...பஸ்-ல ஒரு பிகர் 
கரெக்ட் பண்ணுரதுல...   

இன்னும் நிறைய இருக்குங்க ...இந்த கஷ்டத 
சொல்ல...பதிவின் நீளம் கருதி..ஒரு சில 
கருத்து மட்டும் சொல்லி இருக்கேன்....
மிச்சத்த நீங்களே நினைச்சிக்கிடுங்க....

அம்மா ஆட்சில நம்ம உளவு துறை வேற பக்காவா 
செயல்படும்...இப்படிதாங்க நாம,,,மத்தவங்க
படற கஷ்டம் எல்லாம் உளவுத்துறை முலமா 
அம்மாவுக்கு போய் செந்துடுச்சி....

இப்பதாங்க அம்மா தீவிரமா சிந்திக்கிறாங்க ...
இவங்க வேற பெண் இல்லையா ...பெண்கள் படற 
கஷ்டம் எல்லாம் இன்னொரு பெண்ணுக்கு தானே தெரியும் ....
உடனே ஆலோசனை பண்ணி பஸ் கட்டணத்தSTD காணாத 
(அதாங்க ...வரலாறு) அளவுக்கு உயர்த்திட்டாங்க....

இதுக்கும்----- மேலே சொன்ன மேட்டர்-கும் என்ன சம்பந்தம் 
என்று கேக்குறீங்களா ???...

இங்க தாங்க "அம்மா" ROCKS...

பஸ் கட்டண உயர்வினால இனி நீங்களும் சரி...மத்தவங்களும் 
சரி...அவுங்க அவுங்க உஷார் பண்ணுற பிகுர்-ம் சரி...எல்லாரும் 
இனி SHARE AUTO-ல தான் போவீங்க ....

இப்ப என்ன நடக்கும்-னு அம்மா நினைச்ச மாதிரியே..
நீங்களும் நினைத்து பாருங்க .... 

பக்கத்துபக்கதில உக்காந்துக்கலாம்...உராசிக்கலாம் ....
டுயட் பாடலாம்...ம்ம்ம்ம் ...

அவங்களும் நல்ல படியா LIFE-ல SETTILE ஆகிடுவாங்க ....ஏன்னா 
நம்ம SHARE AUTO காரங்க வேற ரோம்ப நல்லவங்க ...
எல்லா ஹெல்ப்-ம் பண்ணுவாங்க ...

இப்ப சொல்லுங்க ....காதலை வாழவைக்க அம்மா 
செய்தது புரட்சிதானே ..!!!!

இந்த மாதிரி யாரவது காதலர்களை வாழவச்சிருக்காங்களா????

இனி யாராவது பஸ் கட்டண உயர்வை பத்தி பேசுவீங்களா ?????

அதுக்கு தாங்க மேலே உள்ள பாட்டு ...
பாட்டு அப்படியே "அம்மா"வுக்கு சமர்ப்பணம்.....!!!!!

கருத்து சொல்லாம போனா அம்மா அவர்கள் மேலும் சில 
அதிரடிகளை செய்ய இருப்பதால்---
அன்பர்களே ...மக்களை காப்பாற்றுங்கள் .....


(பால் உயர்வு பத்தி அடுத்த பதிவில் ...என் சிந்தனையை யாரும் காப்பி 
அடிக்காமல் இருந்தால்..!!!!ஹி ஹி )

Monday, November 21, 2011

புத்தாண்டு வரபோகிறது ...தொடர் பதிவு---தொல்லைகளும் கூடவே ...

அன்பர்களே..!

இதோ இன்னும் கொஞ்ச நாளில் புத்தாண்டு வரப்போகிறது...
நாம் பதிவர்கள் எல்லாம் இப்போதே மூளையை கசக்கிக்கொண்டு 
இருப்பார்கள் ...

என்ன தொடர் பதிவு போடலாம்....அது ஹிட் ஆகுமா ???
யார் யாரை தொடர் பதிவுக்கு கூப்பிடலாம்...
இப்படிஎல்லாம் மூளையை கசக்கிக்கொண்டு இருப்பார்கள் ...
( பார்த்து ரோம்ப கசக்கினா அயன் செய்ய வேண்டி வரும்...
அப்புறம் அம்மா அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தா தான் சரிவரும் )
அது எப்படி கசக்குவது....துணி கசக்குவது மாதிரியா ???

நாம மேட்டருக்கு வருவோம்....
நம்ம பதிவர்களுக்காக தொடர் பதிவு MATTER-கள் சில 
உங்கள் பார்வைக்கு...இதை நீங்க கண்டிப்பா யூஸ் 
பண்ணிக்கலாம் ...(FREE OF COST...ஓ அப்படி சொல்ல கூடாதாம்...
விலை இல்லாதது...)  

யாருப்பா அங்க....உடனே என்னை எதிர் கட்சிகாரன் என்பது....
நான் அந்த அளவுக்கு வொர்த் இல்லிங்க ... 

1.நல்ல சேத்து தரைய்ல பலகை போட்டு வழிசிட்டு 
அதுல தொடர்சியா நடங்க....அது தொடர் பதிவாகிடும்...

2.சேத்து தரை இல்லைனா சிமெண்ட் போட்டு காயும் முன் 
அதில் நடக்கவும் ...

3.இன்னிக்கு நீங்க தும்முநீங்களா,,,இன்னிக்கு என்ன சாப்பிட்டீங்க ,,,
அப்படின்னு கேள்வி கேட்டுட்டு ,,,,

4.இதே கேள்விய --இந்தவாரம் என்ன பண்ணீங்க.,,,இந்த மாதம் 
என்ன பண்ணீங்க,,,,இந்த வருடம் என்ன பண்ணீங்க...னு கேட்டிங்கன்னா 
நாலு கேள்வி கிடைச்சிடும் ....

5.முக்கியமான ஒன்னு---இந்த புத்தாண்டில் என்ன உறுதி மொழி 
எடுக்க போறீங்க ??? (யார் அதை FOLLOW பண்ண போறா???)

6.முதன் முதலில் சைக்கிள் ஓட்டியது,,,கார் ஒட்டியது ,,,
கிழிந்த டிரௌசர் போட்டுகிட்டு சைக்கிள் டயர் ஒட்டியது ....

7.முதன் முதலில் பிகர் பார்த்தது---அந்த பரவச அனுபவம் ....
இப்படி ஏதாவது கேளுங்க ...

8.முதல்முதல தம் அடிச்சது ,,,அது வீ ட்டுல தெரியாது-னு பல்பு வாங்குனது ....

9.அதி முக்கியமான ஒன்னு முதல்முதல சரக்கடிசிட்டு வாந்தி எடுத்தது ....

10.இப்படி லூசு தனமா எதையாவது எழுதி,,,,
மனோ ,,,
விக்கி,,,
KUMMI GROUP--நண்பர்கள்...
ரெட்டை வால்,,
விளங்காதவன்,,,
வெளியூர்காரன்,,,
சென்கோவி ,,
தமிழ்வாசி,,,
ராஜபாட்டை ,,,
கருண்,,,
சௌந்தர் ,,,,
உள் நாடு ,,,
வெளிநாட்டில்,இருக்கிற பதிவர்கள் அனைவரையும் ....
(திடீர் என்று நினைவு வரலை...மன்னிக்கவும் ...)
இந்த தொடர் பதிவுக்கு அழைக்கிறேன் .....ஹி ..ஹி ...


டிஸ்கி 1 :-செய்முறை தேர்வு நடப்பதால் கடுமையான வேலை...
விடுமுறை நாட்களிலும் வேலை .....
யார் பதிவுக்கும் COMMENT போட முடியவில்லை ....
ஆனால் எல்லா பதிவையும் படித்துவிடுகிறேன்....

டிஸ்கி 2:-இந்த தொடர் பதிவை நீங்கள் தொடரவில்லை என்றால் 
செல்வா கதைகளை நான் தொடருவேன் என்று எச்சரிக்கிறேன் ....
இனி உங்கள் பாடு .....(நான் தொடர்ந்தால் என்ன ஆகும் ???) 

டிஸ்கி 3:-Online Works For All Says:

Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html
எப்படியும் இவர் வந்து பதிவை படிக்காம இந்த கமெண்ட் போட போறார்....
அவருக்கு ஏன் சிரமம்...அதை நாமலே போட்டுடுவோம்.....

(யப்பா சாமீ...முடியலை ....விட்டுடு சாமீ ...உன் கையை காலா,,இன்னும் எதைஎதையோ எப்படியோ 
நினைத்து கேக்குறோம்...இல்ல வேற கமெண்ட் போடு ....
V.K.Ravindra Kumar 
Phone: 99653 05150 
Mail: contactraindar@gmail.com 
இது தாங்க இவர் முகவரி)

இவர் கமெண்ட்-ஐ 
SPAM-ல போடுங்க ...

ரோம்ப வெறி புடிச்ச மாதிரி இருக்கா???
அப்ப கமெண்ட்-ல கொலைவெறியோட தாக்குங்க.....

Sunday, November 20, 2011

இரட்டை பிறவி விஷ்ணு ....(சவால் சிறுகதைப்போட்டி -2011)

விஷ்ணு செப்டம்பர் 30-ம் தேதி முதல் ஒரு வித பரபரப்புக்கு உள்ளானார் ...
அவர் தூக்கத்தைதொலைத்து ஒரு மாதம் ஆகபோகிறது ....
எங்கும் எதிலும் ...அதாவது சாப்பிடும்போதும் சரி ,,,பாத்ரூம் போனாலும் சரி ...
கடைக்கு சென்றாலும் சரி .....சும்மா வெட்டியா ஊர் சுற்றும்போதும் சரி...
தூங்கும் போதும் சரி ...அவரூக்கு இதே நினைப்புதான் ....

(இங்க ஒரு விஷயம் ...விஷ்ணு என்பவர் ஒரு பிரபல பதிவர்...
இன்னும் திருமணம் ஆகவில்லை ....வேலை வெட்டி கிடையாது ...
 செப்டம்பர் 30-ம் தேதி முதல் ஒரு சவால் சிறு கதை போட்டி 
ஆரம்பம்....)

"ஐயோ நான் என்ன செய்வேன்...ஏது செய்வேன் .....
அவனவனும் ஒரு கதை ....ரெண்டு கதை எழுதிடானுகளே ...
நான் என்ன பண்ணுவேன் .....எனக்கு ஒரு நாட் கூட வரலையே ....
வந்த நாட்-ஐ டேவலப் பண்ணுரதுக்குள்ள யாரவது அதை போட்டுராணுக....
இவனுகளுக்கு எப்படி நாம தின்க் பண்றது தெரிது ???"

இந்த மாதிரி தாங்க நம்ம கதை நாயகன் புலம்புறார் ...

"என்ன பண்ணலாம் ??
கிரைம் கதை எழுதலாமா ? இல்லை குடும்ப கதை எழுதலாமா ?
காதல் ??? இல்லை நகைச்சுவை ???"

இப்படியே யோசிக்கிறார் ..யோசித்துக்கொண்டே இருக்கிறார் ...
ஒண்ணும் புடி படலை ...

மீண்டும் மீண்டும் அந்த புகைப்படத்தில் தன்னையே பொருத்தி 
பார்க்கிறார் ...தானே ஒரு விஷ்ணு என்கிற இன்போர்மர்-ஆகவும் ...
தனக்கு தானே கூப்பிட்டு கொள்ளுவது போலவும் ....
இப்படியெல்லாம் தன்னையே உருவகப்படுத்துக் கொள்கிறார் ...
அப்படியும் ஒண்ணும் புடி படவில்லை ...

அப்புறம் அந்த இரண்டு க்ளு பேப்பர்ரையும் தனக்குள் பொருத்தி 
பார்க்கிறார் ...  

Mr. கோகுல்,
S W H2 6F - இதுதான் குறியீடு கவனம் 
- விஷ்ணு

 Sir,
எஸ்.பி. கோகுலிடம் நான் தவறான
குறியீட்டைத்தான் கொடுத்திருக்கிறேன்
கவலை வேண்டாம்.
-- விஷ்ணு
"இதுல நாம கோகுல்-ஆ ...இல்லை ..விஷ்ணு -வா ...??

எப்படி கதையை ஆரம்பிக்கலாம் ??

பேசாம எல்லா கதையும் கலந்து கட்டி எழுதுவோமா ??
ஏதாவது எழுதி கனவு கண்டதா முடிச்சிடலாமா ..??"

திடீர்னு ஒரு யோசனை ...S W H2 6F-இந்த கோடு-ஐ கூகிள்-ல தேடினா என்ன ??
உடனே செயல்படுத்துகிறார் ....

அப்படி தேடும்போது..வருகிற தேடல் எல்லாம் ....இந்த கோடு வைத்து 
எழுதிய கதையாவே வருது ...
நொந்து..வெறுத்து போகிறார்...
கடைசியா ..ஒரு பேஜ் ஓபன் பண்ணுறார் ...அது இப்படி வருது...

Airline Two Letter Codes....

40 Mile AirQ5
AB Airlines7L
ABSA Cargo - Aerolinhas Breseleiras SAM3
AccessAirZA
ACES ColombiaVX
Action AirlinesXQ
Acvilla Air - Aor Romanian CarrierWZ
Ade Air AlbaniaZY
Adria AirwaysJP
Advance Leasing4G
Aer ArannRE
Aer LingusEI
Aero Asia InternationalE4
Aero ContinenteN6
Aero Contractors Company of Nigeria - ACNNU
  
.
.
.
.
.
.
.
.
Wright Air Service8V
Xiamen AirlinesMF
Yanda AirlinesST
Yangon AirwaysHK
Yemenia - Yemen AirwaysIY
Yute Air Alaska4Y
Zimbabwe Express AirlinesZ7
Zimex AviationC4
 "ஆகா கிடைச்சிடுச்சி" ..என்று துள்ளி குதிக்கிறார் ....
Air Namibia---SW

City Bird Airlines--H2
Laker Airways---6F

"சோ ...இந்த கோடு எல்லாம் AIR LINES தான் குறிக்குதா??
இனி போட்டு தாக்க வேண்டியதுதான் ... 
இப்ப 3 AIRLINES வச்சி கதைய கொண்டுபோகனும்" ....

இப்ப மீண்டும் குழம்புகிறார் ....எந்த PLATFORM-ல கதை-ஐ 
ஆரம்பிக்கலாம் என்று .....

இங்க தாங்க நம்ம பதிவர்ரோட அம்மா வராங்க .....
வீட்டு வேலை...வயல் வேலை எல்லாம் சொல்லுறாங்க ....
அவரும் எதையும் தட்டாம செயுறாரு ....
ஆனா கதை எழுதற MOOD மட்டும் போகலை ...
பரபரப்பா இயங்குரார்...

நண்பனுக்கு போன் செய்து கேட்கிறார் ...
நண்பனும் ஒண்ணும் ஐடியா இல்லை என்கிறார் ....
யாருமே எழுதாத கதை எழுதணும்னா ....எல்லாரும் 
எழுதிய கதையை படித்துவிட்டு தான் கருத்து கூறமுடியும்....
அதுவும் கடைசி நேரத்தில் தான் அது SET ஆகும் ...அது வரை பொறு ..என்கிறார் ...

 மீண்டும் விக்கிபிடியா-வில தேடினார் 
H2-க்கு 


Black Hummer H2 in a parking lot
ManufacturerAM General and General Motors
ProductionUSA: 2003–2009
AssemblyMishawaka, IndianaUnited States
ClassFull-size SUV
Body style4-door crew cab truck
4-door SUV
LayoutFront engine Four-wheel drive
PlatformGMT913 (SUT)
Engine6.0L 325 hp (242 kW) V8 (2003–07)
6.2L 393 hp (293 kW) V8 (2008–09)
Transmission4L65E 4-speed (2003–2007)
6L80E 6-speed (2008–2009)
automatic
WheelbaseSUT: 122.8 in (3,119 mm)
SUV: 122.8 in (3,119 mm)
LengthSUT: 203.5 in (5,169 mm)
SUV: 203.5 in (5,169 mm)
Width81.2 in (2,062 mm)
Height79.2 in (2,012 mm)
2003–05: 77.8 in (1,976 mm)
Curb weight6,614 lbs
RelatedHummer H1
Hummer H3
Hummer H3T

இப்படி வந்தது ....
பிறகு ...

SW-க்கு 

From Wikipedia, the free encyclopedia
SWsw and s/w may stand for:

Contents

  [hide

[edit]Geography

  • Southwest, one of the four ordinal directions
  • The FIPS country code for Sweden
  • SW postcode area, a group of postcode districts in southwest London, England
  • SW, a car registration plate code for Schweinfurt, Bavaria, Germany

[edit]Companies

[edit]Military

[edit]Science, computing and electronics

[edit]Sport

[edit]Language



அப்புறம்...6F


6F

From Wikipedia, the free encyclopedia
6F or 6-F can refer to:

[edit]See also


இதையெல்லாம் வைத்து இப்ப ஒரு முடிவுக்கு வந்துவிடுகிறார் ...

நாம எழுத போற கதைய படிச்சிட்டு மற்ற கதை எழுதின நண்பர்கள் ...
தானாகவே விலகிகொனும் ....
இந்த மாதிரி கதை நாம எழுதலையே என்று ...

இப்ப விஷ்ணு அம்மா --"தம்பி விஷ்ணு பக்கத்து வீட்டு தாத்தாவுக்கு 
உடம்பு சரி இல்லை ...கொஞ்சம் ஹோச்பிடல் கூட்டிட் டு போ" ... என்று கூறவும்...
அதையும் செய்கிறார்...இருந்தாலும் மனதில் கதை நினைப்பு ஓடிக்கிட்டே இருக்கு ...

(((இடை சொருகல் :-..எல்லாத்தையும் சேர்த்தால் 500 வார்த்தை வந்துடுச்சா ???அப்ப சரி )))
அது ஒண்ணும் இல்லிங்க ...செகப்பு கலர்-ல இருக்குறது எல்லாம் விஷ்ணு -வோட இன்னொரு 
உருவம் ....
நீல கலர்-ல இருக்குறது எல்லாம் விஷ்ணுவோட ஒரிஜினல் உருவம் ....
அதாங்க SPLIT PERSONALITY ....

ஹி ...ஹி ...அவ்வளவு தாங்க கதை .....

(பச்சை கலர் நம்ம வர்ணனை )

நண்பர்களே எனக்கு UDANZ-ல ACCOUNT இல்லை ...வோட் போட 
உங்க ஆர்வம புரிஉஎது ..மன்னிக்கவும் .....