Pages

Friday, September 30, 2011

அன்பர்களே..கண்டிப்பா இன்று முழுவதும் "#%^$" தான் நினைப்பீர்கள் !!!

அன்பர்களே !!!


பொதுவா ஒரு சில நாளில் நமக்கு-- மனதுக்குபிடித்த ஏதாவது ஒரு நல்ல விஷயத்தை பார்த்தாலோ அல்லது கேட்டாலோ அன்று முழுவதும் அதே 
நினைவு தான் இருக்கும் .....

இப்படிதான் சுவாமி -----------(உங்களுக்கு பிடித்த பேர் போட்டுக்கோங்க ) 
ஒரு அறிய கருத்த சொல்லி இருக்கார்.... 

இவர் மட்டும் இல்லீங்க ....
சில பல மேல் நாட்டு அறிஞர்களும் --( நாம வெளிநாட்டுகாரன் சொன்னாத்தானே ஒத்துக்குவோம். )--பெரியவர்களும் சொல்லிருக்காங்க .....

இவங்க என்ன சொல்லிருக்காங்கனா.....

நாம ஆசையா எத விரும்புறோமோ அன்னிக்கு அது அமைந்துட்டால் ...
அன்று முழுவதும் அதே சிந்தனை,,,எல்லா விஷயத்திலும் எதிரொலிக்கும்.....

உதாரணத்துக்கு.....


ஒரு நல்ல பாட்டு ,,,
நல்ல இயற்கை காட்சிகள் ,,,
பிடித்த பொருட்கள் ,,,,,,
இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம் .....


நல்ல பாட்டை நாள்முழுவதும் பாடிக்கொண்டே இருப்போம் .....
நல்ல இயற்கை காட்சிகள் பார்த்தால் அந்த காட்சியை எல்லாத்திலையும் 
அமைத்து பார்போம் .....


இந்த மாதிரிதாங்க....இப்ப நான் சொல்லபோறதும் ......
இன்னிக்கு முழுக்க இந்த வார்தையதான் மனசுக்குள்ள சொல்லபோறிங்க ..... 
மத்தவங்ககிட்ட இப்படியேதான் பேச போறிங்க....

இத உங்களால கண்டிப்பா மறுக்கமுடியாதுங்க...
நான் வேணா பந்தயம் கட்டுறேங்க !!!


அப்படி என்னதான் அந்த வார்த்தை என்று 
கேட்கறின்களா ???


அப்பாடா.....தலைப்பு பொருந்திவந்துடுச்சி...!!!
இனி அந்த வார்த்தையை சொல்லலாம் .......  


அட அதாங்க .......


..........."மொக்கை "........
டிஸ்கி:-பார்த்திங்களா... படம் போட மறந்துட்டேன் ....நீங்களே ஒரு நல்ல படமா,,, உங்க மனசுக்கு பிடித்த படமா நினைத்துக்கோங்க ...... (அது எந்த படமா இருந்தாலும் சரி !!!)
முஸ்கி:-படத்த நினைச்சி கிட்டு...."மொக்கை "....ஐ 
இன்னிக்கு மறந்து டாதிங்க !!!!

அப்புறம் என்ன உங்க மகிழ்ச்சியை COMMENT,,,VOTE-ல காட்டுங்க .....


Tuesday, September 27, 2011

தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிகள் -பாகம் 1

அன்பர்களே !..தீபாவளி வரப்போகிறது ...எல்லா சேனல்களும் என்ன சிறப்பு நிகழ்ச்சி போடுவது என்று மண்டையை உடைத்து கொள்கிறது ...இதோ நம் ஆலோசனை .....
1.நம்ம பன்னிகுட்டி ராமசாமியை -சின்ன டாகுடர் விஜய் பேட்டி எடுக்கலாம் ...
     (இதுக்கு மேல  பன்னிகுட்டி ராமசாமி....?????)


2.நம்ம சிரிப்பு போலிசை வைத்து உண்ணும் விரதம் என்று எடுக்கலாம் ...
   ( இல்லாவிட்டால் பழிவாங்க--- உண்ணாவிரதம் ....???)


3..தமிழ் வாசியை வைத்து-இயந்திரங்களை அன்னிமேசன் செய்ய சொல்லலாம்....
    (இயந்திரதுக்கு ஏதும் ஆனால் நான் பொறுப்பல்ல )


4..நம்ம சி.பி ..செந்திலை வைத்து எக்ஸாம் ஹாலில் காபி &பேஸ்ட் அடிப்பது எப்படி என்று டெமோ காட்ட சொல்லலாம் .....
     (மற்றவர்கள் பெயில் ஆனால் சி .பி ...பொறுப்பல்ல )


5...வந்தேமாதரம் சசியை வைத்து மற்ற சேனல்களை ஹாக் செய்யலாம் ....
   (வேற சேனல் தெரியாதில்ல.....)


6..ஜாக்கி சேகர்-ஐ வைத்து நல்ல தமிழ் வார்த்தைகளை கண்டுபிடிக்க சொல்லலாம் .....
   (தமிழ் அறிஞர்கள்......????)


7..நம்ம லேப்டாப் மனோவை வைத்து நல்ல நல்ல காதல் கதைகளை சொல்லசொல்லலாம் ...
    (காதல் கதை.... காவியம் ஆனால் ...ராயல்டி எனக்குதான் )


8...கோகுலத்தில் சூரியன் வெங்கட் -ஐ வைத்து பல்பு வாங்குவது எப்படி??என்று சிறப்பு நிகழ்ச்சி செய்யலாம்...   
  (ஸ்டுடியோ பல்பு வெடித்தால் வெங்கட் பொறுப்பல்ல ...)


9...சென்கோவி-ஐ வைத்து நடிப்பில் சிறந்தவர் திரிஷா-வா இல்லை கமலா காமேஷ் -ஆ என்று பட்டிமன்றம் வைக்கலாம் ....
   (திரிஷா ரசிகர்கள் தற்கொலை செய்து கொண்டால் சென்கொவிதான் பொறுப்பு)


இது எதுவுமே வேண்டாம் ....தீபாவளியை எவனுமே கொண்டாட கூடாது என்றால் நம்ம ......


10..செல்வாவை அன்று முழவதும் பேசசொல்லி லைவ் ப்ரோக்கிரம் காட்டலாம் 
   (மறு நாள் மக்கள் தொகை பாதியாக குறைந்தால் செல்வாதான் பொறுப்பு )


இன்னும் இருக்கு ....பல பாகங்கள் ...!!!! 
வெடி வெடிக்கரவங்க COMMENT,VOTE -ல வெடிக்கவும் !!!
    (என் மேல் கோவம் வந்தால் தயவு செய்து மெயில் பண்ணவும் )

Monday, September 26, 2011

என்ன சுகம்---"இந்த சுகம்" ???

அன்பர்களே !!!
கடந்த 15 நாட்களாக என் கம்ப்யூட்டர்-க்கு மறை கழன்று விட்டதால் பதிவு போடமுடியவில்லை .....
இந்த 15 நாளில் என்னென்ன நடந்தது தெரியுமா ?
அதை தெரிந்து கொள்ளும் முன் கடந்த 2 மாதத்திற்கு முன்பிருந்தே தினமும் வீட்டில் நடந்ததை தெரிந்துகொள்ளுங்கள் .....FLASH BACK........

"ஏங்க கடைக்குபோய் பால் வாங்கிட்டு வாங்க ?"


"போம்மா ..எனக்கு வேலை இருக்கு !"

" ஏங்க கொஞ்சம் இந்த ரைஸ் மில் வரைக்கும் போய் இதெல்லாம் அறைசிட்டு வாங்க "


"ஏய் என்ன நினைத்துக்கொண்டு இருக்க ??..இங்க உலகம் முழவதும் உள்ள பிரெண்ட்ஸ் என்னை காணோம் என்று தேடுவார்கள் ....போ ...போ ..."

"ஏங்க உடம்புக்கு முடியலை...போய் டிபன் வாங்கிட்டு வாங்க "


"இங்க நானே பேஜ் லோடு ஆகமாட்டேங்குது-னு மண்டையை பிச்சிக்கிட்டு இருக்கேன் .... இவளுக்கு இப்பதான் டிபன் வாங்கிட்டு வரணுமாம் ....போய் அரிசி -ஐ மென்னு துன்னு !!"

"இந்த பைப்ல தண்ணி வரலை என்னன்னு பாருங்க "


"ஏன்மா உயிர எடுக்கற ...இதல்லாம் நீ பார்க்கககூடாதா ?? நான் ரொம்ப பிசி !!"...

இப்படியே போய்க்கிட்டு இருந்துச்சி தினமும் .......
இப்ப 15 நாளா.......
பைப் ...சரி செய்தாச்சி....!!!
மில்-லில் எல்லாம் அரைத்தாச்சி!!!
உடம்பு நல்லா இருந்தாலும் டிபன் வாங்கி கொடுத்து .......
OVER TANK CLEAN பண்ணியாச்சி .......
பசங்களுக்கு பாடம் சொல்லி தந்தாச்சி....


இன்னும் என்னன்ன வேலை இருக்கோ அதை எல்லாம் கேக்காமலே
செய்து ரொம்ப ரொம்ப நல்ல பேர் எடுத்தேனே......!!!!

                         


இப்ப சொல்லுங்க "என்ன சுகம் ....
இந்த சுகம்???"---தானே?  


அப்புறம் என்ன.... உங்க ஜனநாயக கடமை -ஐ (COMMENT&VOTE) நீங்க கண்டிப்பா செய்வீங்கன்னு எனக்கு தெரியும்......


   

Friday, September 9, 2011

கூகிள்-க்கு இசையமைப்பாளர் தேவையாம் !!!!

வணக்கம் அன்பர்களே ...சில நாட்களாக போஸ்ட்க்கு லீவ் விட்டதற்கு காரணம்
கூகிள்க்கும்,எனக்கும் நடந்த காதல்தான்..நீங்களே பாருங்களேன்-எங்க காதலை ....இந்த காதலை முழு பரிமாணத்தில் புரிந்துகொள்ள முதலில் இந்த பாடலை கேளுங்கள்...

பின்னர் எங்கள் காதல் சம்பாஷனையை கேளுங்கள் ...

                            

கூகிள் வலைபூவே அன்போடு பதிவர் நான் நான் எழுதும் லெட்டர் ..சீ மடல் இல்ல கடுதாசி வாசிக்கலாமா ...
வேண்டாம் ..பதிவே இருக்கட்டும் ...படி ...


வலைபூவே அன்போடு பதிவர் நான் எழுதும் பதிவே 


பாட்டவே படிச்சிட்டியா ...அப்ப நானும் ....
மொதல்ல வலைபூவே சொன்னன்லே இங்க BLOGSPOT போடுக்க 
BLOGSPOT-டே உன் வீட்டு கூகிள் சவுக்கியமா 
பதிவர் நான் இங்கு சவுக்கியமே ....

BLOGSPOT-டே உன் வீட்டு கூகிள் சவுக்கியமா 
பதிவர் நான் இங்கு சவுக்கியமே ....


உன்னை நினைத்துப்பார்க்கும்போது பதிவு எண்ணங்கள் 
அருவி மாதிரி கொட்டுது ....
அதை எழுதனும்னு உக்காந்ததா--இந்த TYPING தான் 

உன்னை எண்ணிபார்க்கையில் பதிவு கொட்டுது..


அதான்...

அதை எழுதநினைக்கையில்--இந்த TYPING முட்டுது....


அதே தான் பிரமாதம் பதிவு பதிவு படி...

வலைபூவே அன்போடு பதிவர் நான் எழுதும் பதிவே 

BLOGSPOT-டே உன் வீட்டு கூகிள் சவுக்கியமா 
பதிவர் நான் இங்கு சவுக்கியமே ....
உன்னை எண்ணிபார்க்கையில் பதிவு கொட்டுது..
அதை எழுதநினைக்கையில்-- TYPING முட்டுது...ஒஹோ 

வலைபூவே அன்போடு பதிவர் நான் எழுதும் பதிவே 

BLOGSPOT-டே உன் வீட்டு கூகிள் சவுக்கியமா 
பதிவர் நான் இங்கு சவுக்கியமே ....ம்.ம்..ம் ...எனக்கு உண்டான கமெண்ட் அது தன்னால வந்துடும் 
அது என்னமோ தெரியல...என்ன மாயமோ தெரியல...
எனக்கு ஒரு வோட்டுமே விழுறதில்லை....
இதுவும் எழுதிக்கோ...நடுவுல நடுவுல 
HACKED,,BLOCKED,,CRASHED... எல்லாம் போட்டுக்க..
எனக்கு எத்தனை கமெண்ட்னாளும் என் பதிவு தாங்கிரும் ..
வோட் குத்தும்போது உன் உடம்பு தாங்குமா? தாங்காது 
GOOGLE..GOOGLE..GOOGLE..


அதையும் எழுதனுமா??


ம் ம் இது பதிவு....
என் பதிவு என்னான்னு சொல்லாம ஏங்க ஏங்க அழுகையா வருது ...
ஆனா நான் அழுது என் சோகம் உன்னை HACK பண்ணிடும்மோன்னு
நினைக்கும்போது வர்ற அழுகைகூட நின்னுடுது...ஹா ..ஹா ..
மனிதர் படித்து உணர்ந்துகொள்ள இது மனித பதிவுஅல்ல.....பதிவுஅல்ல........பதிவுஅல்ல... 
அதையும் தாண்டி மொக்கையானது....மொக்கையானது....மொக்கையானது....


குண்டான FONT இங்கு தன்னாலே மாறிப்போன 
மாயம் என்ன GOOGLE-லே ...GOOGLE..லே 
கமெண்ட்டே இல்லை என்று ஆனபோது என் பதிவு தாங்கிக்கொள்ளும் 
உந்தன் மேனி தாங்காது வலைபூவே...!!
என்தன் பதிவு என்னான்னு சொல்லாம ஏங்க ஏங்க அழுகை வந்தது 
எந்தன் போஸ்ட் உன்னை தாக்கும் என்றேன்னும்போது 
வந்த பதிவும் நின்றது !!!

மனிதர் படித்து உணர்ந்துகொள்ள இது மனித பதிவு அல்ல 
அதையும் தாண்டி மொக்கையானது...


.GOOGLE..லே உன்னை தாங்கிபிடிக்கும் பதிவர் நான் தானே தெரியுமா?
வலைபூவே உலக மொக்கைஇல் பாதி நீயே...அதுவும் உனக்கு புரியுமா?  

சுப மொக்கையே.... மொக்க மொக்கையே 
BLOGSPOT மொக்க மொக்கையே ..........!!!!


.GOOGLE..லே உன்னை தாங்கிபிடிக்கும் பதிவர் நான் தானே தெரியுமா?
 உனக்கு புரியுமா?   


ல ல லா 
ல ல லா 
ல ல லா 
ல ல லா 
ல ல லா 


இந்த பாட்டுக்கு தாங்க GOOGLE-க்கு இசையமைப்பாளர் தேவையாம் !!!!
உங்களுக்கு தெரிந்தா ரேகமென்ட் பண்ணுங்களேன்!!!


அப்புறம் என்னங்க உங்க கடமை (கமெண்ட்,,வோட்,,)எல்லாத்தையும் செஞ்சுட்டு போங்க !!!!!