Pages

Monday, December 26, 2011

எனக்கு இனி வேண்டாம்... பதிவர் சந்திப்பு ....

அன்பர்களே...!!!

டிஸ்கி:- 3
எல்லாரும்...நம்ம சி.பி.செந்தில்குமாரை என்னென்னவோ சொல்லுறீங்க...
இந்த மாதிரி அவரை சொன்னது உண்டா...நன்பேண்டா...இந்தஆடியோவை 
கேட்டுவிட்டு சொல்லுங்கள்...
டிஸ்கி:- 4
கொக்கு மாக்காக எண்டர் தட்டி விட்டதால்இந்த பதிவு ரோம்ப பெரிசாக 
போய்விட்டது ....அதனாலே படிக்காம கமெண்ட் போட போகாதீங்க....
நிறைய அதி,,அதி,,, முக்கியமான விஷயத்தை தவற விட்டுவிடுவீர்கள் ....
அடுத்த போஸ்ட் எண்டர் தட்டாம டைப் பண்ணுறேன் ....   


நாம போஸ்ட்-க்கு போவோமா.....

ஈரோடுசங்கமம் சந்திப்பு பற்றி நான் நிகழ்ச்சி நடக்கும் தினத்திற்கு 
முன்தினமே பதிவு போட்டுவிட்டதால் ....
அதிகம் சொல்ல ஏதும் இல்லை ...
மேலும் எல்லாரும் பதிவு போட்டு விட்டதால் 
நான் கடைசியாக போடுகிறேன் ...
நல்ல கவனிப்பு...
நல்ல உணவு....
நல்ல தங்கும் விடுதி ...
இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் ...

(என் வீட்டு அக்னி குண்டம் எரிந்து கொண்டே இருக்கிறது)..............1

நிகழ்ச்சியின்--நிகழ்ச்சி நிரலில் ஒரு சில ஆலோசனைகளை 
மற்ற பதிவர் நண்பர்கள் சொல்லியுள்ளார்கள்...
அடுத்த சந்திப்பில் இது சரிசெய்யப்படும் என்று நம்புவோம் ....
சந்திப்பில்--வந்திருந்த அனைவரையும் சந்தித்தேன்....
(பேர் குறிப்பிட்டு சொன்னால் விடுபட்டவர்கள் 
வருத்த படுவார்கள் ...என்பதால்....)
நான் சந்தித்த அனைவருக்கும் என்னுடைய
வாழ்த்துக்களும்.... நன்றிகளும் .... 

என்ன -- என்னை சந்தித்ததால் இனி அவர்கள் மிக 
பிரமாதமாக பதிவு போடுவார்கள்....என்று நம்புவோம்...
ஹி...ஹி ....

(என் வீட்டில் இதுவரை 10கிலோ மிளகாய் தீர்ந்துவிட்டது)...................2

மற்ற படி மிக அருமை....
இனி பதிவர் சந்திப்பு நடத்துபவர்கள்...
ஈரோடு சங்கமத்தை அளவு கோலாக 
கொண்டு அதை விட சிறப்பாக செய்ய வேண்டும் 
என்று தான் நினைப்பார்கள்....
அவ்வளவு சிறப்பு....

    

( என் வீட்டில் 13 கிலோ உப்பு தீர்ந்துவிட்டது ).........................................3

போதும்யா தலைப்புக்கு வாய்யா என்கிறீர்களா...???

பொதுவா நான் என் முகம் காட்ட விரும்புவதில்லை...
கடைசி வரைக்கும் அப்படியே இருக்க விரும்பினேன் ....
ஆனால் பதிவர் நண்பர்கள் விரும்பி கேட்டுக்கொண்டதால் 
தவிர்க்க முடியாமல் சென்றேன்....

( என் வீடு முழுவதும் ஒரே கார நெடி)........................................................4

என்ன ஆச்சின்னா சந்திப்பில் ஆள் ஆளுக்கு என்னை 
புகைப்படம் எடுத்து தள்ளிவிட்டனர் ....
இனி வேண்டாம் என்று சொன்னாலும் புகைபடம்
போடத்தான் போகிறார்கள் ....என்பதால் விட்டுவிட்டேன்....
நீங்களே மற்ற பதிவர்களின் பதிவை படித்திருப்பீர்கள்....
எல்லாரும் என்னை பற்றியே போட்டுள்ளார்கள் ....
என் பேர் வராத பதிவு இல்லை என்றே சொல்லலாம்....
ஏன் என்று பதிவை படித்த அனைவரும் யோசித்திருப்பீர்கள்....

(என் வீட்டின்--அக்கம்,,,பக்கத்தில் உள்ளவர்களுடன் 
 ஐந்து,,ஆறு நாட்களாக ஒரே சண்டை)......................................................5

என்னால் தொலைபேசிஅழைப்புகளுக்கு பதில்
சொல்ல முடியவில்லை....      
என் மெயில்---இன்பாக்ஸ் புல்லா மெயில்களாக
நிரம்பி கிடக்கிறது ....

( என் அம்மாவுக்கும்,,மனைவிக்கும்,,,கைகள் சோர்த்து விட்டது )......6

என்னால் எங்கும் வெளியில் செல்ல முடியவில்லை.....
என் தந்தைக்கு--வீடு தேடி வருபவர்களுக்கு பதில் சொல்லியே 
தொண்டை கட்டி கொண்டது .....

( தமிழ்நாட்டில் எங்குமே ஜலுசில் வகை மாத்திரை,,,
சிறப்பு-க்கள் கிடைக்கவில்லையாம் )...........................................................7  

என்னதான் சொல்லவரே...சொல்லித்தொலை என்கிறீர்களா....???
இருங்க பதிவு ஒரு குறிப்பிட்ட அளவுக்கு வரட்டும் .....
சட்டுபுட்டுன்னு சின்னதா பதிவு போட முடியுமா...???
நாம பதிவு போடுரதே எப்போதாவதுதான்....
அதான் இந்த மேக்கப் ....ஹி...ஹி....

சரி நாம விஷயத்துக்கு போவோம்....

அது என்னன்னா...
என்னை பார்த்தவுடனே எல்லா பதிவருக்கும் செம பொறாமை....
வயிறு எரிந்தது....
என்னடா இவன் இவ்வளவு அழகா இருக்கானே....
இவன் இருந்தா நாம எடுபடுவோமா என்று ....

இதனாலேயே இரவு வந்த கொஞ்சம் பேர் திரும்பி போய்ட்டாங்க ....
சில பேர் அவுங்க அப்பா அம்மாவை--போனில் திட்டினார்கள்....
அவர்களை அவ்வளவு அழகா பெக்கலையாம் ....
பதிவு உலகத்துக்கு வந்து முகம் கட்டினா எவ்வளவு பிரச்சனை 
பாருங்க....

இதுக்காகதான் நான் நிகழ்ச்சி நடந்த--அப்ப 
இந்த மாதிரி மாறுவேடத்தில் இருக்கவேண்டியதாயிற்று....


ஆமாங்க நான் ஹீரோ மாதிரி இருந்ததை எல்லாரும் அவுங்க 
அவுங்க ப்ளாக்-ல போட்ட உடனே ---போன்,,,மெயில்,,
மற்றும் நேரில் வந்து சினிமாவில் ஹீரோவா நடிக்க சொல்லி 
பயங்கரபிரச்சினை-ங்க...
இதனாலேயே தமிழகம் முழுக்க போராட்டம்,,தீக்குளிப்பு 
எல்லாம் நடக்குதுங்க.... 

(என்னால் எங்கும் வெளியில் செல்ல முடியவில்லை.....
என் தந்தைக்கு--வீடு தேடி வருபவர்களுக்கு பதில் சொல்லியே 
தொண்டை கட்டி கொண்டது .....)

இதனாலதாங்க சொன்னேன்....
இனி எனக்கு பதிவர் சந்திப்பு வேண்டாம் என்று ....
என்ன நான் சொல்லுவது சரிதானே ...!!!!

அப்புறம் என்னடா..... NO....1 TO 6.... வரை என்று கேக்குறீங்களா ....???
அது எனக்கு ஏற்ப்பட்ட கண் திருஷ்ட்டியினால் ----
திருஷ்டி சுத்தி போட்டதன் விளைவு .....

7---எல்லாருக்கும் வயிறு எரிந்ததால் வந்த விளைவு.....
5----அவுங்களும் எவ்வளவு கார நெடி தான் தாங்குவாங்க..???
ஹி...ஹி... 


NO...NO...NO..... அப்படி எல்லாம் அழப்பிடாது..... 

டிஸ்கி:-1 


தலைப்பு இப்படித்தான் CATCHING-ஆ வைக்கணும்னு வருத்தபடாத 
வாலிபர் சங்க தலைவர் சொன்னதால் இந்த தலைப்பு.....


டிஸ்கி:- 2


நான்::

ஆகா அருமையா போஸ்ட் போட்டாச்சி ....இனி பாரேன்...எல்லாரும் வந்து 
அருமை,,,
:)))),,
பகிர்வுக்கு நன்றி,,,
முடியலை,,,
சூப்பர்,,,
ஸ்..அபா,,,,
இன்னும் பல TEMPLATE கமெண்ட் போடுவாங்க...பாரேன்....


என் மனசாட்சி:::


ஏஏய்...இத படிக்கிறதே பெருசு ....இதுல வேற உனக்கு கமெண்ட் வேற போடணுமா ???
அடுத்தவங்க நேரத்தையும்,,,மின்சாரத்தையும் நீ எவ்வளவு வேஸ்ட் பண்ணுற 
தெரியுமா???...நீ எல்லாம் NATIONAL வேஸ்ட் ....BETTER--DO GOOD THINGS....


நான்:::


ஓ...அப்படி சொல்லுறியா ....அப்ப சரி....


மக்களே.... கீழ்கண்ட லின்க்குகளுக்கு போய் கேட்டு பாருங்க....
நீங்களே பாராட்டுவீங்க.....நீங்க சொல்லுரத பொறுத்து இதை தொடருகிறேன்.....

1.http://www.youtube.com/watch?v=6WZupBEVTfk&feature=youtu.be
2.http://www.youtube.com/watch?v=HOTLLSAQcEs
3.http://www.youtube.com/watch?v=EbnBP4HKaT8&feature=youtu.be
4.http://www.youtube.com/watch?v=2E03qv8z4YA&feature=youtu.be
5.http://www.youtube.com/watch?v=GORitdfVUjI&feature=youtu.beஅனைவருக்கும் கிறிஸ்மஸ்,,, மற்றும் 
புத்தாண்டு,,,மற்றும் பொங்கல் 
வாழ்த்துக்கள்......

 Online Works For All said...World No.1 Money Making Site. 100% Without Investment Job. 
அப்படி என்னதான்...வேலைடா ....
HI-TECH-கான அந்த தொழிலா....????
எல்லார் போஸ்ட்-ளையும் இதே கமெண்ட் போட்டு கொல்லுறியே....


Saturday, December 17, 2011

ஈரோடு சங்கமம் 2011-ஒரு பார்வை .....


அன்பர்களே....

டிஸ்கி:- 1
இங்க போட வேண்டிய முன்குறிப்பு.----
பின்குறிப்பாக...டிஸ்கி:-2,,3,,4,,5,,-ல் 

ஈரோடு பதிவர் சந்திப்புக்கு முதன் முதலாய் போயிருதேன் .....
சனிக்கிழமை இரவே ஈரோடு சென்றுவிட்டேன்....
சங்கம உறுப்பினர்கள் மிக அருமையாக---இரவே வந்தவர்களுக்கு 
தங்க விடுதி ஏற்ப்பாடு செய்திருந்தனர் ....
வந்திருந்த பதிவர்களிடம் என்னை அறிமுகப்படுதிக்கொண்டேன் ....
சிலர் சந்து பக்கம் ஒதுங்கினார்கள் ....( பேர் வேண்டாமே ப்ளீஸ் )
( என்ன என் ப்ளாக் பேர் சொன்னாலும் அப்படி ஒன்னு இருக்குதா.....என்று கேட்டார்கள் ....நாம வளரனுமோ ?? )

மறுநாள் ஞாயிற்றுகிழமை 9.00 கே விழா நடந்த அரங்கத்திற்கு 
சென்றுவிட்டேன் ....அறிமுகமான பதிவர்களுடன் .....

அட அட என்ன அன்பு இந்த ஈரோடு பதிவர்களிடம் ....
கையை பிடித்து இழுத்து செல்லாத குறையாக என்னை சாப்பாட்டு  கூடத்திற்கு அழைத்துசென்று சாப்பிட உட்கார வைத்துவிட்டு---தான் சென்றார்கள்..... 

காலை டிபன் மிக அருமை...பூரி,,முட்டை,,,குருமா,,இட்லி,,வடை,,,
என மிக பிரமாதமான விருந்து ....சுவையோ ...அப்படி...
மீண்டும் இந்த சுவை இனி அடுத்த சங்கமத்திற்கு தான்...
வேறுஎங்கும் வாய்ப்பேயில்லை....

மிக சரியாக 9.45 க்கு நிகழ்ச்சிகள் ஆரம்பித்தன....
அறிமுகபடலம்.,,ப்ளாக்-ன் எதிர்காலம்,,,ஈரோடு சங்கமத்தின்
உருவாக்கம்...இப்படி நிறைய ....
(இவை பற்றி என் அடுத்த பதிவில்)


நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்த போது மைக்-ல் அறிவிப்பாளர் ஒரு அறிவிப்பு செய்தார் 
தீடீர் என்று அனைவரிடமும் பரபரப்பு.....
இந்த சங்கம-விழாவிற்கு வர முடியாத வெளிநாட்டு
பிரபல பதிவர்கள் இரண்டு பேர் ...போன்
முலமாக எங்களிடம் பேசி நிகழ்ச்சிக்கு வாழ்த்து
தெரிவித்தார்கள்....
ஒரே உற்சாகத்துடன் எழுந்த கைதட்டலில்
மண்டபமே கிடு கிடுத்து போனது....

பிறகு வழக்கம் போல் அதிரடி சஸ்பென்ஸ்.....
நிகழ்ச்சிகள் நடந்தது.....
பிறகு மதிய விருந்து......விருந்துன்னா விருந்து....
அப்படி ஒரு விருந்து ....
நம் வீட்டு விழாவிற்கு கூட இப்படி பார்த்து பார்த்து
செய்து இந்த சுவை-ஐ கொண்டு வந்திருக்க மாட்டோம் ....
(இதை பற்றிய விவரங்கள் படத்துடன் அடுத்த பதிவில்)

மீண்டும் நிகழ்ச்சிகள் மிகுந்த உற்சாகத்துடன் ....
கலை கட்டியது....
மாலை வரை கலை கட்டிய நிழ்ச்சிகள் ...முடிவுக்கு
வந்த போது அதுவரை அனைவரிடமும் இருந்த உற்சாகம்
மொத்தமாக வடிந்து போனது ...
அனைவரிடமும் இன்னும் கொஞ்சம் நேரம் இந்த
நிகழ்ச்சி நீடிக்க கூடாதா என்ற ஏக்கம் அப்பட்டமாக
முகத்தில் தெரிந்தது....

ஒருவருக்கு ஒருவர் ...போன் நம்பர்,,,முகவரி வாங்கி கொண்டு
மீண்டும் அடுத்த சங்கமத்தில் கண்டிப்பாக சந்திப்போம்
என்று மன நிறைவுடன் பிரிந்து சென்றாகள்....
இந்த முறையும் மிஸ் செய்தவர்கள்....கண்டிப்பாகஅடுத்த முறையாவது கலந்து கொள்ளுங்கள்....இது நம்ம வீட்டு
விழா......PLEASE DONT MISS IT...HERE AFTER....
நன்றி....ஈரோடு சங்கம குழுவினர்களே.... HATS OFF.....

டிஸ்கி:-2

என்னடா நாளைதானே சங்கமம்...
இவன் இப்பவே நடந்த மாதிரி எழுதுறானே
என்று நினைக்கிறீங்களா???
எப்படியும் அட்டன் பண்ணவர்கள் இதை பத்தி
பதிவு போட போறாங்க....நாம முந்திக்குவோமே...
அப்படீன்னு.......ஹி....ஹி... (டிஸ்கி 3 ஐ பார்க்கவும்)

டிஸ்கி:-3

அதாவுதுங்க---இப்ப ஒரு படம்..வருவதற்குள்
பிரி-விவ்யு ஷோ பார்த்துட்டு விமர்சனம் எழுதுரதில்லையா...
அது போல தாங்க இதுவும்...போன வருட சங்கம நிகழ்ச்சியினை
வைத்துஇந்த வருட நிகழ்ச்சி உங்கள் பார்வைக்கு ....

ஆமாங்க....இந்த சினிமா விமர்சனத்தின் தொல்லை
தாங்க முடியலை.....அப்பாப்பா...முதல் ஷோ-விற்கு
டிக்கெட்,,எடுத்துட்டேன் முதல் கொண்டு,,
படம் பாக்குறேன்,,,இடைவேளை,,,எண்டு ....இப்படி
எல்லாத்தையும்,,,போடுறாங்க...இதுல வேற ...படம்
நல்லாஇருக்கு-னு சொல்லுறவங்க,,,நல்லாஇல்லை-னு சொல்லுரவங்களோட விமர்சனம் படிச்சிட்டு
இன்னும் தெருவுல கிழித்துக்கொண்டு ஓடாததுதான் பாக்கி....

போற போக்க பார்த்தா படம் பூஜை போட்ட அன்னிக்கே---
""பதிவுலக வரலாற்றில்---முதல் முறையாக எங்கள் தளத்தில்
சூப்பர் ஹிட் விமர்சனம் ...படிக்க தவறாதீர்கள்””னு
போடாததுதான் பாக்கி.....

இன்னும் எத்தனை விவ்யு-ல தான் ஒரு படத்த
விமர்சனம் பண்ணுவீங்க...

இறைவா படத்தை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்...
இந்த
பதிவர்களின் சினிமா விமர்சனத்தில் இருந்து எங்களை நீ காப்பாற்று....

டிஸ்கி:-4

இந்த பதிவு முழுக்க முழுக்க கற்பனையே...!!!
யார் மனத்தையும் புண்படுத்த அல்ல...!!!
அப்படி......(அப்புறம் SO AND SO.....நீங்களே FILL பண்ணிக்குங்க)

டிஸ்கி:-5

இந்த பதிவு மிக நீளமாக போய் விட்டதால்....
நீண்ட நாட்களாக பதிவு போடாததால்....
இதை இரண்டு பதிவாக படித்து கொள்ளவும்....
அப்ப விழுந்த இடைவெளி சரி ஆகிடும்தானே???
ஹி..ஹி..நன்றி...!
(3...1 !)