Pages

Monday, June 25, 2012

பதிவுலகில் முதல் முறையாக பல ஆயிரம் கோடிகள் பரிசு....!!!..(முதலில் முந்துபவர்களுக்கே)

வணக்கம் அன்பர்களே.....

என்னடா இவன் பதிவு போடலைன்னு நீங்க எல்லாரும் வருத்தத்தில 
இருப்பது எனக்கு மிகுந்த வருத்தம் அளித்தது...!!!!!?????


பல பேர் நான் பதிவு போட்டா நெட் கனேச்ஷன் கட் பண்ண தயாராக இருப்பதாலும்,,,சிலர் பதிவுலகை விட்டு போய்டுவோம் என்று மிரட்டியதாலும்----அந்த மாதிரி வரலாற்று பிழை நடந்துவிடக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில் தான் நான் பதிவு போடலை...


ஆனா பாருங்க ...விதி வலியது...

நானும் தினமும் என் ப்ளாக்-ஐ பல முறை திறந்து திறந்து பார்த்தேன்....
ஒண்ணும் வேலைக்கு ஆகலை...

எனக்கு வந்த நைஜீரியா நாட்டின் பல ஆயிரம் கோடி பரிசு மெயில்களை ஆக்டிவேட் செய்யாமல் பல மாதங்களாக அப்படியே வைத்திருந்தேன்...

யார் அந்த அதிர்ஷ்டசாலி ......????

அவருக்கு தான் அந்த பல ஆயிரம் கோடி பரிசு மெயில்....

ஓவர் பில்ட் அப் உடம்புக்கு ஆகாது என்பதால்.....

விஷயத்துக்கு வரேன்...

பொதுவா எல்லாரும் நூறாவது பதிவு ,,இருநூறாவது பதிவு,லட்சம் ஹிட்ஸ்--அப்படித்தான் கொண்டாடுவாங்க....

நமக்கு அந்த அளவுக்கு வொர்த் இல்லை என்பதால்...நூறு எல்லாரும் 
கொண்டாடும் விஷயம் என்பதாலும்....

நாம கொஞ்சம் மாத்தி நூத்தி பதினொன்னு (111)பாலோவேர் கொண்டாடுவோம்...

இதுக்கு தாங்க இத்தனை நாள் காத்து கிடந்தேன்....

இப்ப நூறாவது பலோவேர் வந்துட்டார்.....

இப்ப யார் அந்த (111)அதிர்ஷ்டசாலி .....??????

அவருக்கு--நைஜீரியா நாட்டின் பல ஆயிரக்கணக்கான வளங்களை பெற்று செலவு பண்ண முடியாமல் நமக்காக காத்திருக்கும் அந்த மிகபெரிய 
தன்வந்தர்கள் அனுப்பிய பல மெயில்கள்--காத்துக்கொண்டிருக்கிறது...!!!

நாய் நக்ஸ்-ஐ நம்பினோர் கைவிடப்படார்.....

முந்துங்கள்....நாளை கோடிஸ்வரன் ஆகும் வாய்ப்பு உங்கள் வீட்டு கணிணியை தட்டுகிறது....உங்கள் வாழ்வே மாறப்போகிறது...!!!

சொக்கா...சொக்கா....!!!!

(யாருப்பா அது நாய் நக்ஸ் வாழ்க...வாழ்கனு கோஷம் போடுறது???)

டிஸ்கி :-1

ஆறுதல் பரிசு....
என் மொபைல்க்கு வந்த சில பல பரிசு எஸ்.எம்.எஸ்கள் 

டிஸ்கி :-2

பதிவர்னா மாதத்திற்கு ஒரு பதிவாவது போடனுமாமே...???
இல்லாட்டி எந்த பதிவர் சந்திப்புக்கும்,,,வீட்டு விசேஷத்துக்கும் கூப்பிட மாட்டாங்களாமே....!!!

அதுக்குதான் இந்த பதிவு...


அப்புறம்...ஏற்கெனவே பாலோயேர் ஆனவங்க ஏமாந்திடக்கூடாதில்லையா..???
அவங்களுக்காக...


டிஸ்கி :-3


ஏற்கெனவே பாலோயேர் ஆனவங்க...இன்றைய தேதிக்கு முன் ஆரம்பித்த பொய் ஐடி,,ப்ளாக் -ல இருந்து பலோயர் ஆகலாம்.
அதுவும் இல்லை என்றால்....நான் கொடுக்க இருக்கும் பல ஆயிரம் கோடிகளுக்கு 25% கமிசன் என் பெயருக்கு டிடி எடுத்து ஸ்கேன் பண்ணி என் மெயில்-க்கு அனுப்பினால்....111 வது பலோயர் நீங்கள் வரும்வரை 
மற்றவர்களை நீக்கிக்கிட்டே இருப்பேன்...டீல் ஓகே வா ...????????


டிஸ்கி:-4


இந்த பதிவின் நூறாவது கமெண்ட்க்கு டெல்லியில் இருந்து வாங்கி வந்த...வீட்டு உபயோக பொருட்கள்---சோப்பு டப்பா,கர்சீப் ,ரேடியோ,மிக்ஸ்சி,இன்னும் பல அறிய பரிசுகள் காத்துக்கொண்டிருக்கிறது.


முந்துங்கள் பதிவர்களே...முந்துங்கள்....!!!!!!!!!!
வாழ்க்கையில் வளம் பெறுங்கள்...!!!!!!!!!