Pages

Tuesday, September 3, 2013

பிரியாணினா சைதை அஜிஸ் வீட்டு பிரியாணிதான்.வாழ்நாளில் சாப்பிட்ட NO1.பிரியாணி.

வணக்கம் அன்பர்களே....

கடந்த சனி அன்று பதிவர் சந்திப்புக்கு செல்ல உறுதியானதும்...
புதன் அன்று நமது சக பதிவர் சைதை அஜிஸ் அவர்களை தொடர்புகொண்டேன்.

"ஐயா...தல...பதிவர் சந்திப்புக்கு சனி அன்றே வந்துவிடுவேன்..."

"ஆஹா...பேஷ்..பேஷ்..வாங்க...கலக்குவோம்..."

ஒரு சின்ன இடைசொறுகல் .....

நானும் வீடு,,,கடை,,மற்றும் நண்பர்கள் வீட்டில் பிரியாணி சாப்பிட்டிருக்கேன்.
அப்போது எல்லாம்...நமக்கு பீஸ் மத்தவங்களைவிட அதிகமாக வைக்கிராங்களா என்றுதான் பார்ப்பேன்...நமக்கு பீஸ் முக்கியம்...

ஆனா பாருங்க....நான் பதிவர் (???!!!) ஆனதும்...நம்ம தல Cable சங்கர்
சாப்பாட்டு கடை-ல் பிரியாணிகளை பத்தி சிலாகிச்சி,சேர்க்கை பொருட்களை
பத்தி பிரிச்சி மேய்ந்து எழுதுவார்...அதை படிக்கும்போதே அந்த பிரியாணியை
நாம் சாப்பிட்ட உணர்வு வரும்....

சரி இவர்தான் இப்படி எழுதுகிறார் என்று பார்த்தா...நம்ம எவர் கிரீன் சூப்பர் ஸ்டார் பதிவர் அபி அப்பா அவர் பதிவுகள்ல பாய் வீட்டு பிரியாணியை
படிக்கிற நமக்கு நாக்குல நீர் ஊருகிரமாதிரி அப்படி சிலாகிச்சி எழுதி இருப்பார்.....

இது போக பல நண்பர்கள் பாய் வீட்டு பிரியாணியை உச்சத்தில் தூக்கி வைத்து இணையத்தில் எழுதி இருக்கிறார்கள்...என்ன தான் பாய் கடை பிரியாணியா இருந்தாலும்...அவர்கள் வீட்டில் செய்யும் பிரியாணியே உலகின் உச்சகட்ட சுவை என்று......நமக்கு அப்படி ஒரு சுவை கொண்ட பிரியாணி கிடைக்காதா என்று பல நாள் நான் ஏங்கியது உண்டு...


""அஜிஸ் சார்...ஒரு சின்ன ஆசை...வெக்கத்தை விட்டு கேக்குறேன்.....
உங்களுக்கோ  அல்லது தங்கள் வீட்டு என் சகோதரிகளுக்கோ ...சிரமம் தருகிறேன் என்று என்ன வேண்டாம்...எனக்கு நெடு நாளாக ஒரு ஆசை..."""பரவாஇல்லை..சொல்லுங்க...நக்ஸ்."


"இல்லை...என்னாடா இவன் இப்படி ஒரு கேவலமான மனிதனா இருக்கான் என்று நினைக்ககூடாது""

""ச்சே..ச்சே...அதெல்லாம் நான் ஒன்றும் நான் நினைக்க மாட்டேன்.நீங்க சொல்லுங்க...""

""பாய் வீட்டு பிரியாணி வேணும்...கடைல வாங்காம...வீட்டுல செய்தது கிடைக்குமா??? அதை சாப்பிட்டால் நான் ஜென்ம சாபல்யம் அடந்துவிடுவேன்...""

""இவ்வளவுதானா..?? நான் ஏற்ப்பாடு செய்கிறேன்...இதுக்கா இவ்வளவு பீடிகை??...கண்டிப்பா வீட்டுல செய்து எடுத்து வருகிறேன்...எத்தனை பேருக்கு வேணும்..??""


நான் அதிகம் தொந்தரவு கொடுக்க விரும்பாமல்..""ஒரு ஐந்து பேருக்கு போதும் தல...""


""ஓகே...ஓகே...சனியன்று மதியம் 1 மணிக்கு பிரியாணியுடன் சந்திக்கிறேன்...""

""நன்றி பாஸ்""


""நன்றி..""

புதன்,,வியாழன்,,வெள்ளி மூணு நாளும் 24 மணிநேரமும் பிரியாணி நினைவாகவே இருந்தேன்...வெள்ளி அன்று ---சனிக்கிழமையே வந்து சேரும் பதிவர்களுக்கு ஒரு சிலரிடம் தகவலை சொன்னேன்...நிறைய பேரிடம் சொன்னால் எனக்கு கிடைக்காம போயிடுமோ என்ற சுயநலம்...

மந்திரம் ஓதுவதை போல பாய் வீட்டு பிரியாணி,,பிரியாணி என்று சொல்லி கொண்டே இருந்தேன்....

சனி அன்று போக்குவரத்து நெரிசலில் சிக்கி பன்னிரண்டு மணிவாக்கில் லாட்ஜ்-ஐ கோகுல் உடன் சென்று அடைந்தேன்...ஆரூர் மூனா செந்தில்,மற்றும் மற்ற நண்பர்களுடன்  மாஹா தியானத்தில் அடைக்கலம் ஆக முயற்சித்துக்கொண்டிருக்கும்போது சைதை அஜிஸ் அவர்கள் போன் செய்தார்...ஒரு பத்து பேருக்கு பிரியாணியுடன் வீட்டை விட்டு கிளம்பி விட்டதாக....

பத்து பேருக்கா....ஆஹா...இன்னிக்கு செம வேட்டைதான்....அப்புறம் என்ன மகா தியானத்தை கொஞ்சநேரம் ஒத்தி போட்டுவிட்டு...இந்த பிரியாணி தியானத்தை தொடர்ந்தது பிறகு மலை ஏறி கொள்வோம் என்று ஒரு மனதாக முடிவு செய்தோம்....

மீண்டும் ஒரு சின்ன இடை சொறுகல் ....

எனக்கு கடந்த ஐந்து வருடங்களாக...மசாலா போட்டு சமைத்த பொருட்கள் செரிக்காமல்...ரொம்ப தொந்தரவு பண்ணும்...இரண்டு சோடா குடித்தால்தான் வயிறு ப்ரீ ஆகி மதமதப்பு குறையும்....

நாங்கள் வழி மேல் விழி வைத்து காத்திருந்த பிரியாணி வந்தே விட்டது...
அஜிஸ் பத்து பேருக்கு என்று சொல்லி விட்டு எடுத்துட்டு வந்தார் பாருங்க ஒரு பெரிய பாத்திரத்தில்...எப்படியும் இருபது பேருக்கு மேல் சாப்பிடலாம்...கூடவே...வெங்காய பச்சடி...தாளிச்சா...!!!!


                                                   


அப்புறம் என்ன ...எல்லாரும் ரவுண்டு கட்டி பிரிச்சி மேய்ந்தோம் ...
ஒரு கட்டத்தில் திணற திணற சாப்பிட்டு விட்டு...மீதியை அடுத்த ரவுண்டுக்கு வைத்திருந்தோம்...

சத்தியமாக சொல்லுறேன்...பாய் வீட்டு பிரியாணி...பிரியாணிதான்....
என்னா டேஸ்ட்டு...எங்கள் வாழ்நாளில் இப்படி ஒரு சுவையான பிரியாணியை இருவரை நாங்கள்  நாங்கள் சாப்பிட்டதில்லை...

திட்டதட்ட ஐந்து பிளேட்க்கு மேல் சாப்பிட்டும் எங்களுக்கு திகட்டவில்லை....
எதுத்துக்கொண்டு வரவில்லை....மறுநாள் காலை பல் விளக்கும்போது...
எந்த தொந்தரவும் பண்ண வில்லை...

இடையில் கேபிள் சங்கர்-க்கு போன் போட்டு பிரியாணியை ருசிக்க அழைத்தோம்...அவருக்கு இருந்த கடும் வேலை...மற்றும் லாட்ஜ் தூரம் கணக்கிட்டு வர முடியவில்லை என்றார்....


என்னை பார்க்க ஓடோடி வந்த ??!!! சக பதிவர்களுக்கு அனைவருக்கும் மிகுந்த பரவசத்தில் பிரியாணி ஊட்டிவிட்டேன்...
நிறைய சக பதிவர்கள்....நான் ஊட்டிவிட்டதனால்...பிறவி பயன் அடைந்தார்கள்....அன்பு ஐயா...அன்பு....

புகைப்படங்கள்...சக பதிவர்கள் வெட்டி பிளாக்கர்ஸ் (முகபுத்தகத்தில்)...
பகிர்ந்திருக்கிரார்கள்...அங்கே சென்று பார்த்துக்கொள்ளுங்கள்...


 ஐயா சைதை அஜிஸ் .......
    தங்களின் ...இந்த அருமையான
        பிரியாணிக்கு கோடானுகோடி நன்றிகள்...!!!!


எங்கள் வாழ்நாளில் மறக்க முடியாத பிரியாணி,,,,பதிவர் சந்திப்பு....


{{{பதிவர் திருவிழாவுக்கு வந்த மிக பிரபலமான பதிவர்,,,[நீங்கள் நினைக்கும் பதிவர்கள் இல்லை]புலவர் ராமானுஜம் என்னை கேட்ட உலக மாஹா கேள்வி....அடுத்த பதிவில்...}}}


(அன்பர்களே..கொஞ்சம் சிரமம் பாராமல் திரட்டிகளில் இணைக்கவும்...இணைப்பவரூக்கு...நன்றியோ நன்றி...)
{எழுத்து பிழை மன்னிக்கவும்.}

   
                                  

15 comments:

Anonymous said...

உண்மையில் பிரியாணி அருமையோ அருமை. அஜீஸ் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். மறுநாள் வரை பிரியாணியைப் பற்றி பெருமையாக பேசிக் கொண்டு இருந்தோம்

நாய் நக்ஸ் said...

மறுநாள் மட்டுமா....????

இனி எப்போதும்,,,வாழ்நாள் முழுக்க...

சேலம் தேவா said...

சைதை அண்ணன் வீட்டு பிரியாணி போச்சே... :(

திண்டுக்கல் தனபாலன் said...

அஜீஸ் அவர்களுக்கு நன்றிகள் பல...

நாய் நக்ஸ் said...

சேலம் தேவா said...
சைதை அண்ணன் வீட்டு பிரியாணி போச்சே... :(///////////////

உங்களுக்கு...

:-(((((((((((((((

நாய் நக்ஸ் said...

Blogger திண்டுக்கல் தனபாலன் said...
அஜீஸ் அவர்களுக்கு நன்றிகள் பல...///////


:-)))))))))))))

TERROR-PANDIYAN(VAS) said...

அருமையான இளம் ஆட்டு கறி பிரியாணி செஞ்சி கொடுக்க எங்க கிட்டையும் ஆள் இருக்குலே.. :))

ஜோதிஜி said...

எ்னனை விட்டுட்டு தின்ன நக்கீரனுக்கும் எனக்கு கொடுக்காமல் விட்ட அஜீஸ் க்கும் கடுமையான கண்டனம்.

Cable சங்கர் said...

சைதையிலேயே இருந்துட்டு எனக்கு மட்டும் பிரியாணி கொடுக்காம சாப்பிட்டா நல்லது இல்லை. அஜீஸ் எனக்கு ஒரு பிரியாணி பார்சல்

Unknown said...

பிரியாணி....வாழ்நாளில் மறக்கமுடியாத சுவை..!நன்றி சைதை அஜிஸ் அண்ணன்!

"தாளிச்சா" இல்ல மேன் "தால்சா"

கேரளாக்காரன் said...

Enakku Biriyaani Venum Dot

ப.கந்தசாமி said...

என்ன மாப்ள, இதை மொதல்லயே சொல்லீருந்தா நானும் வந்திருப்பேன்ல, ஜன்ம சாபல்யம் கெடச்சிருக்குமே?

saidaiazeez.blogspot.in said...

துபாயிலிருந்து சென்னைக்கு வந்தால் என்ன செய்வது என்று கலங்கிக் கொண்டிருந்த எனக்கு ஒரு நம்பிக்கையையும் எதிர்காலத்துக்கு ஒரு தொழிலையும் காட்டிய பதிவர் அன்பர்களுக்கு எனது நன்றிகள் பல.

நாய் நக்ஸ் said...

Blogger சைதை அஜீஸ் said...
துபாயிலிருந்து சென்னைக்கு வந்தால் என்ன செய்வது என்று கலங்கிக் கொண்டிருந்த எனக்கு ஒரு நம்பிக்கையையும் எதிர்காலத்துக்கு ஒரு தொழிலையும் காட்டிய பதிவர் அன்பர்களுக்கு எனது நன்றிகள் பல.////////////

அவசியம் அஜிஸ்....கண்டிப்பா ஆரம்பிங்க.....நல்லா வரும்...ஆனா...இதே டெஸ்ட் ...இருக்கணும்....அதுல எந்த குறையும் வைக்காதீங்க....விலை வேண்டுமானால் கூட வைத்துக்கொள்ளுங்க...

நாய் நக்ஸ் said...

Blogger TERROR-PANDIYAN(VAS) said...
அருமையான இளம் ஆட்டு கறி பிரியாணி செஞ்சி கொடுக்க எங்க கிட்டையும் ஆள் இருக்குலே.. :))///////////////

அப்ப ஒரு மீட்டிங் போட்டுடுவோமே....
உடனே தயாராகவும்....பாண்டி....