Pages

Wednesday, November 28, 2012

மீன்பாடி வண்டி தோழி.....!!!

வணக்கம் அன்பர்களே....

மிக கடுமையான மின்வெட்டு,,பல்கலைகழக வேலை நிச்சயமின்மை ...
இப்படி பட்ட சுழலில் அனைவரின் பதிவை படிப்பது.....
மின்சாரம் இருந்தால் ...பின்னுட்டம் இடுவது என்று இருந்தேன்...
என் ப்ளாக்-ஐ ஓபன் செய்வதே இல்லை...

நம்ம நண்பர்களும் நீ பதிவே போடவேண்டாம்...சும்மா இருந்தால் போதும்...
என்று மிகபணிவாக கேட்டுக்கொண்டதால்....நானும் அமைதி காத்தேன்....

ஆனா பாருங்க நம்ம பிலாசபி பிரபா இன்னிக்கு ஒரு கவிதை பதிவு
போட்டாரு.....சரி போய் கமெண்ட் போடுவோம்னு மீண்டும் அந்த கவிதையை
படிச்ச உடனே.....

எனக்குள்ள இருக்குற கவிஞன் முழிச்சிக்கிட்டான்.....
பொங்குச்சி பாருங்க கவிதை....
நீங்களும் அனுபவிங்க....அந்த பரவச உணர்வை.....

அதுக்கு முன்னாடி இந்த கவிதையை ஒருவாட்டி படிச்சிடுங்க......
அப்பத்தான் நம்ம கவிதையோட முழு வீரியமும் புரியும்.....

சரி கவிதைக்கு???!!!!?????? போவோமா....???.......

                                      மீன்பாடி வண்டி தோழி.....!!!


உனக்கான பத்து காசு  இல்லாததால் இறக்கி விட்ட பிறகு 
மீன்பாடி  வண்டி வேகமாக செல்கிறது.......


நீ அமர்ந்த ஜன்னலோர இருக்கையில் பான்பராக் துப்பிவிட்டதால் 
வாந்தி வந்துவிட்டதாம் #மசக்கை....

மழை நாட்களில் வேண்டுமென்றே
வெள்ளை வெளிஆடை,,கருப்பு உள்ளாடை அணிகிறேன்....

மஜாக்கள் ஜாக்கிரதை
என்றுதானே எழுதியிருக்க வேண்டும்....

பிடித்தது - நீ என் கையை.......
பறிபோனது என் மோதிரம்.....

வேகத்தடைகளில் வண்டி ஸ்கிட் ஆகிறது....

மீன்பாடி பயணிகளின் டப்பாங்குத்து கூட
உன்னிருப்பில் பாக்கியராஜ்,ராமராஜன் ஸ்டைல் தானே....

உன்னெதிரில் வாய்தவறி வந்த கெட்டவார்த்தையை
உங்கப்பனை  திட்ட பயன்படுத்திக்கொண்டேன்.....

பறவை முனியம்மா அப்படியொன்றும் அழகில்லை....

அந்த லாங் சைஸ் சுருட்டுக்கு மட்டும் எங்கும் 
இப்படி ஒரு நாற்றம் கிடையாது........

கூவத்தை ரசித்துக்கொண்டிருந்த உன்னை 
கூவமே கூவத்தை ரசிக்கிறதே என்றேன்....

உன்வீடும்,என்வீடும் பல 
கண்டங்கள் தள்ளி இருந்திருக்கலாம்....பிரபா!!! ஒண்ணும் சொல்லுவதற்கில்லை....

நன்றி.......படங்கள்  கூகிள் இமேஜஸ்...

   
                                    

Wednesday, August 29, 2012

சிறை வைக்கப்பட்ட பதிவர்கள்....!!!

வணக்கம் அன்பர்களே...

எல்லாரும் பதிவர் சந்திப்பை பற்றி....பதிவு போடட்டும் என்று காத்திருந்தேன்....

பதிவர் சந்திப்பை அனைவரும் நேரலை,,பதிவுகள் வாயிலாக 
அறிந்திருப்பீர்கள்....அனைவரும் சிறப்பாக எழுதியுள்ளார்கள்....
மிக்க நன்றி...

சரி நாம தலைப்புக்கு வருவோம்....

பதிவர் சந்திப்பு அன்று--பதிவர்கள் அறிமுகம் நடந்துச்சி இல்லையா...
அப்ப என்னை அழைக்க வேண்டாம்...பிரச்சனைகள் வரும் என்று கூறினேன்...

கேட்டாதானே...???

என்னை மிக நீண்ட முன்னுரை கொடுத்து கேபிள்,,சிபி,,அழைத்ததும்....

கூடி இருந்த பதிவர்கள் பயங்கர கரகோஷம்...விசில் சத்தம்...
இவை கட்டுக்கடங்காமல் குறிப்பிட்ட டெசிபல்-ஐ தாண்டி போயிடுச்சி...

அதனால என்ன ஆச்சின்னா....

விழா நடந்த மண்டபமே கிடுகிடுத்து போயிடுச்சி....
மண்டபம் முழுவதும் ஏகப்பட்ட விரிசல்கள்...

மண்டபத்து ஓனர் சும்மா இருப்பாரா...???
இரவு எல்லா செட்டில்மன்ட் பண்ணும்போது இதுக்கு எல்லாம் 
நஷ்ட ஈடு கேட்டு நம்ம விழ குழுவினரை 

சிறை வச்சிட்டாங்க....

அப்புறம் அவங்க எனக்கு போன் பண்ணி விஷயத்தை சொன்னாங்க...
விஷயத்தை கேள்வி பட்டதும்...என்னால தாங்க முடியலை...
நம்மால எவ்வளவு கஷ்டம் இவங்களுக்கு...
ச்சே...என்ன வாழ்க்கைடா இது...???

அப்புறம் கொஞ்சம் (கொஞ்சம் தான்) யோசித்தேன் ....
அந்த மண்டப ஓனர் கிட்ட போன்-ஐ கொடுக்க சொன்னேன்...

நான் அவரிடம் பேசினேன்.....

அதன் பின் நடந்தது எல்லாம் வரலாறு....
மண்டபத்து ஓனர்-நம்ம விழாகுழுவினர்கிட்ட என்ன சொன்னாருன்னா...

""இனி எத்தனை முறை வேண்டுமானாலும் இலவசமா  விழா நடத்திக்கொள்ளுங்கள்...

ஆனா இவர் கிட்ட மட்டும் போன் கொடுத்து பேச சொல்லாதீர்கள்....!!""


ஆகவே பதிவர்களே...மண்டபம் இனி நமக்குதான்....
இனி நாம நினைக்கும்போதெல்லாம் அந்த மண்டபத்துல
பதிவர் சந்திப்பு வைக்குறோம்...ஓகேவா ...???

விழா குழுவினருக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்...பாராட்டுக்கள்...


(அட கொடுமையே...இந்த மாதத்துல மூணாவது பதிவு இது...இதுவும் ஒரு வரலாற்று பிழையே)


Wednesday, August 22, 2012

அடியா அது...???இப்படி ஒரு பொழப்பு தேவையா...???

""டேய் மாப்புள...

பதிவர் சந்திப்பு வெற்றிகரமா நடந்திடும் போலிருக்கு...
நம்ம சைடு பெண்கள் கூட கலந்துப்பாங்க போல...

பதிவுலகில் ஒற்றுமை வருது மாப்புள...
விடக்கூடாது...எல்லாரும் ஒற்றுமையா இருந்தா... நாம எப்படி 
ரத்தம் குடிக்கிறது...???

விடக்கூடாது மாப்புள...என்ன செய்யலாம்...??
செம ஐடியா பண்ணனும்...இது வரைக்கும் வரேன்னு சொன்னவங்க 
எல்லாரும் யோசிக்கணும்...அந்த மாதிரி மேட்டர்ஐ கைல எடுக்கணும்...

அவ்வளவுதானே...விடு மாப்புள...இந்த குடிய பத்தி எழுதினா...
பிச்சிக்கும்....அதுல அப்படியே ரோம்ப பிரபல பதிவர்களை சேர்த்துடு...
அப்புறம் பாரு...ராக்கெட்-க்கு நெருப்பு வச்ச மாதிரி சும்மா ஜிவ்வுன்னு 
பறக்கும்....""

அவ்வளவுதான்...
பதிவு போட்டாச்சி...கடைசில என்ன ஆச்சின்னா...
ராக்கெட் திரும்பிடுச்சி...!!!

சும்மா சுத்தி சுத்தி அடிச்ச அடில....
எல்லாமே பிதுங்கிடுச்சி....
கழுவி கழுவி ஊத்துனதில வாயே திறக்க முடியலை..
ஆனா இல்லாத கௌரவம் இருக்கே...அத அப்படியே வலிக்காத மாதிரி 
நடிக்க வேண்டியதா போச்சி...

இப்ப யோசிச்சி என்ன பயன்...???
ஐடியா கொடுத்தவனுக்கு எதால மாலை போடணுமோ 
அதால போடுங்க...

என்ன இப்பசந்திப்பு  இனி படு பயங்கரமா ஹிட்  ஆகும்..
இப்படிதான் இலவச விளம்பரம் தரனும்...
அப்படியே மைட்டேன்  பண்ணுங்க...அப்பரண்டிஸ்களா...

ஆனா வாங்குன அடி இனி ஜன்மத்துக்கும் மறக்காது...

 நம்ம ஆளின் இன்றைய நிலைமை...

நண்பர்களின் வேண்டுகோளுக்கு இணங்க படம் மாற்றப்பட்டது!


அங்கு வந்து நியாத்தை எடுத்துரைத்த நண்பர்கள் அனைவருக்கும் 
நன்றி...நன்றி....நன்றி...!!!


Thursday, August 16, 2012

அது நடந்தே விட்டது...!!! (வரலாற்று பிழை)

வணக்கம் அன்பர்களே...

ஒரு தொலைபேசி உரையாடல்...

"ஹலோ..நக்கீரனா..??

ஆமாங்க.

நாங்க ஆவில இருந்து பேசுறோம்.என்விகடன்ன்னு தனியா பாண்டி மண்டலத்துக்கு ஒரு சிறிய புக் போடுறோம்.அதுல உங்க வலை தளத்தை,
முதல் புக்ல போடலாம்ன்னு  இருக்கோம்.

இந்த விஷயம் உங்க ஆசிரியர்,ஒனேர்க்கு தெரியுமா..???

அவர்தாங்க பேச சொன்னார்...
ஏற்கெனவே 1991-92-ல நீங்க மாணவ நிருபரா வேளை பார்த்தீங்களாம் ..
அப்ப ஆவி நால்லா போச்சாம்...இப்ப கொஞ்சம் டல்ஆம்..
அதான் உங்க வலைதளைத்தை அறிமுகப்படுத்தி கொஞ்சம் விற்பனையை 
தக்க வச்சிக்கலாம்முன்னு....


ஸ்டாப்...ஸ்டாப்...
ஆரம்பத்துலேயே என் தளத்தை அறிமுகபடுத்திட்டா....அப்புறம் மத்தவங்க எல்லாம் ரொம்ப வருத்தத் படுவாங்க..ஆவில வரணும்ன்னா இவ்வளவு 
உலக தரம் இருக்கனுமான்னு...???
அப்புறம் அவங்க தளத்தை எல்லாம் மூடிட்டு போய்டுவாங்க...
அவங்களை நம்பி இருக்குற திரட்டிகள் எல்லாம் என்னா ஆகுறது.?
பதிவர் சந்திப்பு எல்லாம் என்ன ஆகுறது..???
நிறைய பேர் பொழப்பு என்ன ஆகுறது...???

இதை எல்லாம் உங்க ஓனர் கிட்ட எடுத்து சொல்லுங்க ...""

டோக்....

மீண்டும் விடாம போன் கால்கள் தொடர்ந்ததால்...அந்த நம்பர்ஐ 
டெலீட் பண்ண வேண்டியாதாய் போச்சி.

அப்புறமும் பாருங்க மீண்டும் போன்...""இந்த நம்பர் யாருயா கொடுத்தது...???

எல்லாம் நம்ம பதிவர்கள் தாங்க....

ஐயைய்ய்ய்யோ ...இதுக்கு தான் பிரபல பதிவரா இருக்க கூடாதுன்னு சொல்றது .என்விகடன்ல என் ப்ளாக் வரவேண்டாம்ன்னு சொன்னா கேக்குறீங்களா ???...

சார்...அதில்லை...சார்...

என் விகடன்-ஐ நிப்பாட்டிடோம் .

சரி.நல்ல விஷயம்தான்.

அது இனி இ-புக்ஆ--ஆக போகுது.

சரி...ம்ம்...

இப்ப உலகம் முழுவதும் எல்லாரும் ப்ரீயா படிக்கலாம் ...

அப்ப ஓகே..நல்ல விஷயம்தான்...

அதான் சார்...முன்னாடியாச்சும் ...ஒரு குறிப்பிட்ட மண்டலத்துக்கு மட்டும்தான் நம்ம பதிவர்கள் தெரிவாங்க...இப்ப அப்படி இல்லை...
அதுவும் இல்லாம இப்பெல்லாம் யாரும் அதிகமா..காசு கொடுத்து புக் வாங்கி படிக்குறதில்லை..,கம்பேர் பண்ணா இணையத்துல படிக்குரவங்கதான் அதிகம்.

ஆமா...ஆமா...

இப்பெல்லாம் நிறைய பேர் சப்ஸ்கிரிப்ஷன் கட்டி படிக்குறாங்க...

சரி...

அதான் இப்பவாச்சும் உங்க தளத்தை அறிமுகப்படுத்தி...
உலக அளவுல நாங்களும் புகழ் பெறுவோம் ..நாங்களும் பொழச்சுப்போம்.. 

நாராயணா....இந்த கொசு தொல்லை தாங்க முடியலப்பா....

சரி போங்க...பொழச்சி  போங்க..."".

எனவே அன்பர்களே...இனி நீங்கள உங்கள் பதிவுக்கு என் பதிவுகள் மாதிரி 
தரத்தை அளவு கோலாக வைத்துக்கொண்டு பதிவு போடவும்...

ஏதோ இந்த வாரம் என் விகடன்ல வருமாம்...பார்த்து தெரிஞ்சிக்குங்க....

வந்துரூச்சி ...

ஆனா நம்ம பிலாசபி பிரபாவுக்கு ஆனா மாதிரி...
மாப்பிள்ளை நான்தான்...ஆனா போட்டிருக்குற சட்டை 
என்னுதில்லை...என்கிற மாதிரி ஆகிடுச்சு.....
ஏதோ ஜட்டி மட்டுமாச்சும் என்னுதை போட விட்டாங்களே...!!!

லிங்க் :-

http://en.vikatan.com/article.php?aid=22893&sid=622&mid=35

(ஒரு வேலை டிராப்ட்-ல இருக்குறத படிச்சிருப்பானுகளோ...???)
________________________________________________________________________________

அப்புறம் இன்னொரு போன் உரையாடல்...மூன்று மாதத்திற்கு முன்....

"""ஹலோ சிபி சித்தப்புவா...???

ஆமாயா...சொல்லு நக்ஸ்..

ஒண்ணும் இல்லை ..ஏதோ ஆவியாம்...என் விகடன்ஆம் ...அதுல வலையோசைல ஒவ்வொரு மண்டலத்துக்கும் ஒரு பதிவை வாராவாராம் 
அறிமுகப்படுத்துறாங்களாம்...

அதுக்கு மெயில் அனுப்புனுமாம்...நீ கொஞ்சம் அட்ராசக்கையை ....
மெயில் பண்ணி  விடு...
(சில,,பல நாட்கள் கழித்து...)

ஹலோ சிபி...இன்னுமா நீ ஆவிக்கு மெயில் அனுப்பலை...???

அனுப்புனேன்யா...

என்ன ஆச்சி...???

போன் பண்ணாங்க....

யாரு...

எடிட்டர்,,ஒனேர் ....

என்ன சொன்னார்...???

அது வந்து...வந்து...

சொல்லுயா...

ஆவி,,ஜுவி,,அவள் விகடன்,,இப்படி அவங்க போடுற புக் எல்லாத்துக்கும் 
நான்தான் வெளியிட்டாளராம்...நீயே எப்படி உன்னை பத்தி உன் புக்-ல 
போட்டுக்கலாம்...நாம என்ன அந்த அளவுக்கா......பத்திரிகை ...... 
நடத்துறோம்-ன்னு கேட்டுட்டார்...."""


:-)))))))))))அன்பர்களே...இவை யாவும் கற்பனை--இல்லைன்னு  நான் சொன்னா நீங்க நம்பவா போறீங்க..??? 

என் அன்பு பதிவர் நண்பர்களுக்கு என் நன்றியை காணிக்கையாக்குகிறேன்.....

என்றென்றும் உங்கள் அன்புக்கு நான் அடிமை....


Monday, June 25, 2012

பதிவுலகில் முதல் முறையாக பல ஆயிரம் கோடிகள் பரிசு....!!!..(முதலில் முந்துபவர்களுக்கே)

வணக்கம் அன்பர்களே.....

என்னடா இவன் பதிவு போடலைன்னு நீங்க எல்லாரும் வருத்தத்தில 
இருப்பது எனக்கு மிகுந்த வருத்தம் அளித்தது...!!!!!?????


பல பேர் நான் பதிவு போட்டா நெட் கனேச்ஷன் கட் பண்ண தயாராக இருப்பதாலும்,,,சிலர் பதிவுலகை விட்டு போய்டுவோம் என்று மிரட்டியதாலும்----அந்த மாதிரி வரலாற்று பிழை நடந்துவிடக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில் தான் நான் பதிவு போடலை...


ஆனா பாருங்க ...விதி வலியது...

நானும் தினமும் என் ப்ளாக்-ஐ பல முறை திறந்து திறந்து பார்த்தேன்....
ஒண்ணும் வேலைக்கு ஆகலை...

எனக்கு வந்த நைஜீரியா நாட்டின் பல ஆயிரம் கோடி பரிசு மெயில்களை ஆக்டிவேட் செய்யாமல் பல மாதங்களாக அப்படியே வைத்திருந்தேன்...

யார் அந்த அதிர்ஷ்டசாலி ......????

அவருக்கு தான் அந்த பல ஆயிரம் கோடி பரிசு மெயில்....

ஓவர் பில்ட் அப் உடம்புக்கு ஆகாது என்பதால்.....

விஷயத்துக்கு வரேன்...

பொதுவா எல்லாரும் நூறாவது பதிவு ,,இருநூறாவது பதிவு,லட்சம் ஹிட்ஸ்--அப்படித்தான் கொண்டாடுவாங்க....

நமக்கு அந்த அளவுக்கு வொர்த் இல்லை என்பதால்...நூறு எல்லாரும் 
கொண்டாடும் விஷயம் என்பதாலும்....

நாம கொஞ்சம் மாத்தி நூத்தி பதினொன்னு (111)பாலோவேர் கொண்டாடுவோம்...

இதுக்கு தாங்க இத்தனை நாள் காத்து கிடந்தேன்....

இப்ப நூறாவது பலோவேர் வந்துட்டார்.....

இப்ப யார் அந்த (111)அதிர்ஷ்டசாலி .....??????

அவருக்கு--நைஜீரியா நாட்டின் பல ஆயிரக்கணக்கான வளங்களை பெற்று செலவு பண்ண முடியாமல் நமக்காக காத்திருக்கும் அந்த மிகபெரிய 
தன்வந்தர்கள் அனுப்பிய பல மெயில்கள்--காத்துக்கொண்டிருக்கிறது...!!!

நாய் நக்ஸ்-ஐ நம்பினோர் கைவிடப்படார்.....

முந்துங்கள்....நாளை கோடிஸ்வரன் ஆகும் வாய்ப்பு உங்கள் வீட்டு கணிணியை தட்டுகிறது....உங்கள் வாழ்வே மாறப்போகிறது...!!!

சொக்கா...சொக்கா....!!!!

(யாருப்பா அது நாய் நக்ஸ் வாழ்க...வாழ்கனு கோஷம் போடுறது???)

டிஸ்கி :-1

ஆறுதல் பரிசு....
என் மொபைல்க்கு வந்த சில பல பரிசு எஸ்.எம்.எஸ்கள் 

டிஸ்கி :-2

பதிவர்னா மாதத்திற்கு ஒரு பதிவாவது போடனுமாமே...???
இல்லாட்டி எந்த பதிவர் சந்திப்புக்கும்,,,வீட்டு விசேஷத்துக்கும் கூப்பிட மாட்டாங்களாமே....!!!

அதுக்குதான் இந்த பதிவு...


அப்புறம்...ஏற்கெனவே பாலோயேர் ஆனவங்க ஏமாந்திடக்கூடாதில்லையா..???
அவங்களுக்காக...


டிஸ்கி :-3


ஏற்கெனவே பாலோயேர் ஆனவங்க...இன்றைய தேதிக்கு முன் ஆரம்பித்த பொய் ஐடி,,ப்ளாக் -ல இருந்து பலோயர் ஆகலாம்.
அதுவும் இல்லை என்றால்....நான் கொடுக்க இருக்கும் பல ஆயிரம் கோடிகளுக்கு 25% கமிசன் என் பெயருக்கு டிடி எடுத்து ஸ்கேன் பண்ணி என் மெயில்-க்கு அனுப்பினால்....111 வது பலோயர் நீங்கள் வரும்வரை 
மற்றவர்களை நீக்கிக்கிட்டே இருப்பேன்...டீல் ஓகே வா ...????????


டிஸ்கி:-4


இந்த பதிவின் நூறாவது கமெண்ட்க்கு டெல்லியில் இருந்து வாங்கி வந்த...வீட்டு உபயோக பொருட்கள்---சோப்பு டப்பா,கர்சீப் ,ரேடியோ,மிக்ஸ்சி,இன்னும் பல அறிய பரிசுகள் காத்துக்கொண்டிருக்கிறது.


முந்துங்கள் பதிவர்களே...முந்துங்கள்....!!!!!!!!!!
வாழ்க்கையில் வளம் பெறுங்கள்...!!!!!!!!!

Monday, May 14, 2012

வாழ்க்கைக்கு தேவையான மிக முக்கியமான மூன்று கேள்விகள்...விடை நீங்களே கண்டுபிடியுங்கள்....!!!

வணக்கம் அன்பர்களே...


எச்சரிக்கை.....
இந்த பதிவின் கடைசியில் வாழ்க்கைக்கு தேவையான மிக முக்கிய மூன்று கேள்விகள் இருக்கிறது...அதற்கு மூன்று அதி முக்கியமான லின்ங்களுக்கு
நீங்கள் செல்ல வேண்டும்...


எனவே....
இந்த பதிவு மிக சிறியதாக முடிக்கபடுகிறது { பதிவு மிக பெரியதாக ஆகிடகூடாதில்லையா???அப்புறம் காபி பேஸ்ட் பதிவர்ன்னு பேர் வந்துடும் }


மீண்டும் அன்பர்களே...!!!!????


நான் பதிவு போடலைன்னு எனது கோடானு கோடி ரசிக கண்மணிகள்
மிகவும் கோபபட்டதாலும்....டெசோ அமைப்பு வேறு தொடங்கபடாமல்
நிறுத்திவைக்கபட்டதாலும்...சுற்றும் பூமி நின்றுவிடும் அபாயம் உள்ளதாலும்...
{{ பதிவு மிக பெரியதாக ஆகிடகூடாதில்லையா???}} [மத்தத்தை நீங்களே பில்ட் அப் பண்ணிக்குங்க...]........... இந்த பதிவு.....


அதாவதுங்க பதிவு போட மேட்டர் இல்லாம நான் தவியாதவிச்சேனுங்க....
கிரகம்.....அப்படியே இருந்திருக்கலாம்...தெரியாத்தனமா ஒரு சிலத படிச்சிப்பிட்டேனுங்க.....அப்பதாங்க நாமளும் பதிவு போடலாம்னு மனசு தெம்பாய்டுசிங்க...


சரி போகட்டும் ....நாம பதிவுக்கு (!!!!????) போவோம்...


அதாவதுங்க.....ஒரு சில நல்ல விஷயத்தை நாம படித்தாலோ கேட்டாலோ
அதை நாம மத்தவங்களுக்கு பகிர்ந்துப்போம்....அதே போல விடை தெரியாத
கேள்விகள் நமக்கு தெரியவரும்போது நாம மத்தவங்கள்கிட்ட கேட்டு
தெரிஞ்சிப்போம் ....{அதுக்குத்தானே ப்ளாக் இருக்கிறது }


ஒரு இரண்டு வருடதுக்கு முன்னாடி நம்ம திருவிளையாடல் பாணில
ஒருத்தருக்கு{ நோ லிங்க் } ஒரு கேள்விக்கு பதில் தெரியலைங்க.....அவரும் இந்த
உலகம் முழுவதும் கேட்டு பார்துட்டார்....ஆனா பாருங்க அந்த கேள்விக்கு
இப்ப வரைக்கும் யாருக்கும் பதில் தெரியலைங்க...


அப்படி ஒரு புத்திசாலி கேள்விங்க....
என்னன்னா அந்த கேள்விக்கு இந்த உலகம் உள்ள வரைக்கும் யாராலும்
சரியான பதில் சொல்ல முடியாது....


உடனே இன்னொருத்தருக்கு{ நோ லிங்க் }வந்துச்சி பாருங்க கோபம்...இப்படி ஒரு
உலக மகா கேள்வி அவர்ர்ர்ர்ர்ர்ர்ர் கேட்டுபிட்டாரே....பதிலும் வேற தெரியலையே....நாமளும் இந்தமாதிரி ஒரு கேள்விய கேட்டுபிடனும்.....
அப்படின்னு----இவர் கல்யாணத்தையே இரண்டு வருடம் தள்ளி போட்டாருன்னா பார்துக்குங்களேன்....ஒன்னும் வேலைக்கு ஆகாதுன்னு
தெரிஞ்ச பிறகு வேற வழி இல்லாமல் இவர் கல்யாணத்தை பண்ணிக்கிட்டார்....அதுக்கு அப்புறம் வாழ்க்கையை புரிஞ்ச பிறகு ????!!!!!!!
இவரும் ஒரு கேள்வியை கேட்டுபுட்டார்......


இப்பதாங்க பதிவு உலகத்தில உள்ளவங்க முழிச்சிக்கிட்டாங்க...????!!!!!
ங்கொய்யாலே....இப்படி யாருமே பதில் சொல்லாத முடியாதபடிக்கு
கேள்வி கேக்குரானுகளே.....நாமளும் பதில் சொல்ல தெரியாம இருக்கோமே.....நாமளும் இதே மாதிரி ஒரு கேள்வியை கேட்டுபுடனும்...
அப்படின்னு அவனவனும் மண்டையை உடைச்சிக்கிட்டாணுக....


மூணாவதா{ நோ லிங்க் }ஒருத்தர்....கிளம்புனாரு.... இவர் யாருன்னா....பதிவுலகத்தில
இவர் பெரும்பானவர்களுக்கு ஒரு ரோல் மாடல்....இவரால நிறைய பேர்
பிளாக்கர் ஆகி இருக்காங்கன்னா பாருங்களேன்....ரோம்ப பெரியியியியியியியிய பதிவர்......................................
நாமளே பெரிய பதிவர்...நாம கேக்க மாட்டோமா கேள்வி.....அப்படின்னு...
இவரும் பெரிய பெரிய ஆஆஆஆஆஆஆராய்ச்சி எல்லாம் பண்ணி
ஒன்னும் முடியாமல்......தலை கீழா தண்ணி குடிச்சி கடைசியா அந்த உலக மகாஆஆஆஆஆஆஆ கேள்வியை கேட்டுப்புட்டாரு.....


மனுசனா இவங்க...இந்த மூணு பேர் கேட்ட கேள்விக்கு யாருமே இன்னிக்கு வரைக்கும் பதில் சொல்லலை.....


எனவே மக்களே....நீங்களாவது இந்த மூணு கேள்விக்கும் பதில் சொல்ல முடியுமான்னு பாருங்க...இந்த மூணு பேர்ல யார் சிறப்பா கேள்வி கேட்டுருக்காங்கன்னு ஒருமித்த கருத்து எட்டியவுடன் அவருக்கு
செவ்வாய் கிரகத்திற்கு----நமது பதிவுலக சார்பாக....நமது செலவில்
இன்ப சுற்றுலா ஏற்ப்பாடு பண்ணப்படும் என்று உங்கள் சார்பாக
மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.....
பார்த்தீங்களா......அந்த மூணு கேள்வில மெய் மறந்து உங்களுக்கு அந்த
கேள்விகளை சொல்ல மறந்துட்டேன்.....


முதல் கேள்விக்கு இங்கு..செல்லவும்.....


இரண்டாவது கேள்விக்கு இங்கு..செல்லவும்....


மூன்றாவது கேள்விக்கு இங்கு..செல்லவும்.......
நீதி:-


விதி வலியது...............
{{முன்னாடி...இது தொடர் பதிவாமே...[[ இப்ப மட்டும் என்னவாம்...]] யாருமே கூப்பிடலைன்னா என்ன.......???நாமளே
போடுவோம்,,,,மேலும் விருப்பம் உள்ளவர்கள் தொடர்ந்து கொல்லலாம்...}}
Friday, April 27, 2012

உணவுஉலகம் ஆபிசரின் அன்பும்,,பதிவர்களால் கிடுகிடுத்த நெல்லையும்...

அன்பர்களே....


ஆபிசர்-ன் மகள் திருமணத்திற்கு சென்ற பதிவர்கள்,,பண்ணிய அளப்பரையையும் ...மற்ற கூத்துக்களையும் இவர்கள் பதிவில் பாருங்கள்...


http://www.adrasaka.com
http://rajamelaiyur.blogspot.in
http://www.tamilvaasi.com
http://www.artveedu.com/


செய்முறை தேர்வு ஆரம்பித்துவிட்டதால்...காலை 6.30 மணி முதல்...
மாலை 6.30 வரை...மிக கடுமையான வேலை...சனி,ஞாயிறு அனைத்து நாட்களும் வேலை...{இல்லாட்டினா மட்டும்...அப்படியே...போயா...யோவ்...}


முதலில் ஒன்றை சொல்லிக்கிறேன்...


என் சொந்த,,தனிப்பட்ட காரணத்தினால் மிக கடுமையான மன அழுத்ததில் கடந்த சில நாட்களாக--இருந்த என்னை மீண்டும் சகஜ நிலைக்கு கொண்டுவந்த....
கும்மி,,மற்றும் ஆருயிர் நண்பர்கள் அனைவருக்கும் என் சிரம் தாழ்ந்த..


நன்றிகள்.....!!!!


[மீண்டும் நான் இங்கு உறவாடுவது--இவர்களின் உதவியால்தான்.]


இணைய நட்பு எப்படிஎல்லாம் நம்மை ஆட்கொண்டுள்ளது என்பதை...
இந்த நான் பேச நினைப்பதெல்லாம் லிங்க்-ல் தெரிந்துகொள்ளலாம்...


ஆபிசர் மகள் திருமணத்தில் அவரின் கனிவான உபசரிப்பு....நாம் எப்படி 
நம் நண்பர்களை பேன வேண்டும் என்பதற்கு மிக சிறந்த எடுத்துக்காட்டு...


HATS OFF OFFICER....


அதே போல அங்கு சந்தித்த பதிவர்களின் நட்பும்,,அடித்த கூத்துக்களும்...
என் வாழ்நாளிலேயே மறக்க முடியாது... 
இனி அடிக்கடி இந்த மாதிரி சந்திப்புக்கள் தேவைபடும்....


ஆங்....ஒன்றை மறந்துட்டேனே.....


நான் சென்று வந்ததால் இனி நெல்லை-க்கு மிகப்பெரிய பெருமை...
இனி நெல்லை நல்லா வரும்....ஹி...ஹி...ஹி.... 


(((((16 பந்தியில் சாப்பிட்ட மனோ...இந்த பதிவை தொடர முடியவில்லை...மன்னிக்கவும்...CONCEPT என்னான்னா....இவர்கள் அனைவரும் ஜாலியாக பேசிக்கொண்டிருப்பது-பாகம்2.....

சரக்கு சாப்பிட...கூல் டிரிங்க்ஸ் {மிக்சிங்-க்கு--"கலப்படம் பண்ண "}வாங்க சிபி ஆபிசர்க்கு தவறுதலாக போன் பண்ணிவிட----கலப்படம் நடக்கிறது என்று ஆபிசர் (போன் பண்ணியது யார் என்று தெரியாமல்) இவர்களை கைது பண்ணிடுறார்-பாகம் 3))))

Friday, April 6, 2012

பதினாறு பந்தியில் சாப்பிட்ட மனோ! பட்டினியில் பன்னி!&விக்கி! நடந்தது என்ன?--1

திருநெல்வேலி சந்தையில வாங்கிய சட்டை


வணக்கம் அன்பர்களே....


நம்ம உணவு உலகம் ஆபீசர் மகள் திருமணத்திற்கு நம்ம பதிவர்கள் அனைவரும் செல்ல முடிவெடுத்து ட்ரெயின் டிக்கெட் கன்போம் ஆக ஆக
செட் செட்ஆ புறப்படுகிறார்கள். மனோ மட்டும் வித்தவுட்ல வருகிறார்!


இந்த இடத்துல தான் ஒரு ப்ரோக்ராம் போடுறாங்க...நம்ம பன்னிகுட்டி,,,விக்கி,,, மற்றும் தொடர் பயணக்கட்டுரை எழுதி (சரோஜாதேவி) புக்ல இடம்பிடிக்க போராடும் மனோ.....


மனோ : டேய் விக்கி,பக்கி எங்கடா இருக்க ???


விக்கி : அட நாதாரி "இந்த" உலகத்துல தான்டா இருக்கேன்...


மனோ : ஆகா ...வலியப் போய் மாட்டிக்கிட்டோமோ...???
                 திருநெல்வேலி வரியா இல்லையாடா....???


விக்கி : வருவேன்...வரமாட்டேன்...என்ன இப்போ..???
                 வந்தா என் போட்டோ 1455647839586978958675868797098
                 போட்டு கொன்னுடுவ....ராஸ்கல்!


மனோ : அடங்கொய்யால....சொல்லுடா...!பன்னிகுட்டி வேற வராருடா....


விக்கி :  போடா...அவர் நம்மள மாதிரி "நோட்டாங்கை" பதிவர்கள் 
                  எல்லாம் சந்திக்க மாட்டாருடா .....அவர் ரேஞ்சே வேற....


மனோ : இல்லைடா உண்மையில வர்றார் ....


விக்கி : அப்படியா ...சரி அப்ப நானும் வரேன்...


பன்னிக்குட்டி : யோவ் கேட்டா ஆபிசர் சோறு போடமாட்டாரா இப்படி வேசம் போட்டு வர்ரீரு!
மனோ பன்னிகுட்டி-க்கு போன் பண்ணி விக்கி வருவதை சொல்லுகிறார்...


பன்னி : விக்கியா??? அவர் தனியா வர மாட்டாரே ....கூட P.A. இல்லாம 
அவர் போற இரண்டு இடம்...ஒன்னு)--ஆபீஸ் பாத்ரூம் ...இரண்டு)--அவர் வீடு ...(ஏன்னா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வளவு சப்பை பிகர்????!!!!)


மனோ : தனியாதான் வாரானாம்...இங்க தமிழ் நாட்டில P.A.-வை யாரும் சைட் அடிச்சிட கூடாதாம்...தவிர சிபி-க்கு வேற பயப்புடுறான்....


மூவரும் சாட்-ல பேசி முடிவு பண்ணுகிறார்கள்.முதல் நாளே திருநெல்வேலி போய் ரூம் போட்டு சரக்கு அடித்து என்ஜாய் பண்ணுவதாக பிளான். ஆனா விக்கி,,பன்னி என்னா சொல்லுரங்கன்னா----"டேய் மனோ நாம சரக்கு அடிக்கும்போது ஒரு அல்லக்கை,ஊறுகாயா யாராவது இருந்தா நல்லா பொழுது போகும் இல்ல...யாரை கூப்பிட்டுக்கலாம் ???"


இது பத்தி டிஸ்கசன் நடக்கும் போது,,மூணு பெரும் அவங்க யார் மேல கொலை வெறியா இருக்காங்களோ அவங்க அவங்க பேரை சொல்லுறாங்க....


பன்னி : எனக்கு சின்ன,பெரிய டாகுடர்தான் வேணும்..


விக்கி : எனக்கு P.A. சீ..."அந்த" இரண்டு பேர் வேணும்...


மனோ : எனக்கு என் மேல கொலை வேறி்ல இருக்குற நக்ஸ்,சிவகுமார் 
                 தான் வேணும் ..... பல்லை கடிக்கிறார் பல் செட் கழண்டு விழுந்தது,                 நைசாக டபக்கென்று யாருக்கும் தெரியாமல் மாட்டிக்கொண்டார்! (இருட்டு கடை அல்வா 455 கிலேவை ஒரே முட்டாக தின்றதால் மனோ பல் எல்லாம் கழண்டு விழுந்து விட்டது)


இப்படி இவங்களுக்குள்ள சண்டை வந்துடுது...விக்கி என்ன சொல்லுறார்ன்னா-- "பன்னி உங்க கிட்டதான் தொழில்நுட்ப ஆட்கள் இருக்காங்களே அவங்களை விட்டு கம்ப்யூட்டர்-ல ஒரு ப்ரோக்ராம் பண்ணி அந்த சூப்பர்மேன்-னை தேர்ந்து எடுப்போம் " 


பன்னிகுட்டி-யும் ஒத்துக்கிட்டு அவங்க குரூப்ல  சூப்பர்மேன்-னை  தேர்ந்தெடுக்க ஒரு ப்ரோக்ராம் செய்ய சொல்லுகிறார்...KEYWORD....."சூப்பர் பதிவர்கள்"....இது ரொம்ப முக்கியம்...--அப்படின்னு INSTRUCTION கொடுத்துடுறார். 


ப்ரோக்ராம்-மும் ரெடி ஆகிடுச்சி....SKYPE-ல 
விக்கி,,மனோ,,பன்னி மூணு பேரும் கம்யூட்டர்-ல அவங்க அவங்க சொன்ன பெயரை FEED பண்ணுறாங்க ....


பாட்டி எத்தனை வேசம் போட்டு வந்தாலும் பன்னி கண்டுபிடிச்சிடுறார் எப்படி?

அட மடையா உன்னுடைய ரூபாய்க்கு நாலு கண்ணாடிய கழட்டுடா
அப்பதாங்க ஒரு பெயர் வந்தது.....


KEY WORD  சூப்பர் பதிவர்கள்ன்னு கொடுத்ததால, இவங்க கொடுத்த பேரை கம்ப்யூட்டர் ஏத்துக்காம வந்த பேர் 
சித்தப்பு சிபி.செந்தில்குமார்....


ஆபீசர் வீட்டு கல்யாணம் நடக்கும் வரை இந்த பதிவு மூணு பார்ட் ஆக தொடரும்.....{மனோ மாதிரி நானும் தொடர் பதிவு ......போடணும் இல்ல} 

இந்த பதிவு முழுக்க முழுக்க கற்பனையே....யார் மனதாவது புண் பட்டிருந்தால்...
ரூம் போட்டு மனோ,,இன்னும் பிற (உங்களுக்கு பிடித்த) பதிவர்களை
திட்டி தீர்க்கவும்....

[இந்த பதிவிற்கு உதவி திரு.வீடு சுரேஷ் குமார்....நன்றி...!!!]

Tuesday, March 13, 2012

டெரர் கும்மியும்---எனக்கு கிடைக்காத பரிசும்...(சதி திட்டமா???)

அன்பர்களே ....


டெரர் கும்மி விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன....
இந்த அறிவிப்பு வந்ததுமுதல் என் மெயில் இன்பாக்ஸ் முழுவதும்...
கணக்கிடமுடியாத அளவுக்கு...(...!!!???) மெயில்கள் ....


(இன்னிக்கு கும்மி விருது அறிவிக்கபோறோம் என்று முன்கூட்டியே 
எனக்கு சொல்லி இருந்தால்...நான் விளக்க போஸ்ட் போட்டிருப்பேன்...)


அது என்னானா...
உலகம் முழுவதும் இருந்து என் ரசிகர்கள்...(..!!!???)
இந்த விருதுக்கு ஆட்சேபம் தெரிவித்து...
நிறைய பேர்...தீ குளிக்க போவதாகவும்,,பஸ்,,ரயில் ,,விமானம்,,& கப்பல்-
மறியல் செய்யபோவதாகவும்...இந்த விஷயத்தை உடனடியாக...
ஐ.நா. சபைக்கு தெரியபடுத்தி...இலங்கை தீர்மானத்துக்கு முன் 
இந்த விஷயத்தை எடுக்க சொல்லி வலிறுத்த போவதாகவும்...
இன்னும் நிறைய போராட்டங்களை அறிவிக்கபோவதாகவும்...
இப்படி எல்லாம் சொல்லி மெயில் அனுப்பி இருந்தாங்க...
மெயில்-ன் எண்ணிக்கை நமது கருப்பு பணத்தை விட...பலமடங்கு ..


உலகில் உள்ள எல்லா சர்வர்-களும் ஹாங் ஆய்டுச்சினா பாருங்களேன்...
எல்லா மெயில்-ஐயும் என்னால் படிக்க முடியவில்லை என்பதால்...
ஒரு சில மெயில்-களை படித்து ...அதன் பின் மற்ற மெயில்-களின் 
சார அம்சம் இதுதான் என்று புரிந்துகொண்டேன்...
இது மட்டுமா...போன் மூலமும் ஏகப்பட்ட விசாரிப்புகள்....
[விஷயத்துக்கு வாடாஆஆஆஆ]


அதாவது எனக்கு [நாய்-நக்ஸ்]ஒரு பிரிவில் கூட விருது தரவில்லை...
இது கண்டிப்பா ஒரு தலை பட்சமானது....
இந்த விருதை அனைவரும் புறக்கணிக்க வேண்டும்...
கடுமையான கண்டனங்களை தெரிவிக்க வேண்டும்...
இதற்க்காக நாய்-நக்ஸ் ரசிகர்கள் அனைவரும்...விரைவில் ஒன்று கூடி 
அடுத்த கட்ட நடவடிக்கை-ஐ ஆலோசிக்கவேண்டும்....


இதுதாங்க...அந்த மெயில்-ன் சார அம்சம்...


என்னால்...அவ்வளவு மெயில்-களுக்கும் பதில் அனுப்ப முடியாது என்பதால்...
இந்த போஸ்ட்..


என் அன்பார்ந்த ரசிக கண்மணிகளே ...[பார்ர்ர்ர்ர்ர்ரா]...
கும்மி விருதுகள் அறிவித்த உடனே எனக்கு நிறைய மெயில்-கள்...
என்னை இந்த போட்டியில் கலந்து கொள்ள வேண்டாம் என்று...
அப்படி கலந்து கொண்டால் போட்டி இடும் யாருக்கும் எந்த பரிசும் 
கிடைக்காது...எல்லா பரிசும் உங்களுக்கே கிடைத்து விடும் ...
தயவு செய்து கருணை காட்டுங்கள்...நாங்கள்---"நீங்கள் தான் 
அனைத்திலும் டாப் என்று ஒத்துக்கொள்கிறோம்"---என்று...


இப்படி,...வந்த மெயில்கள் என்னை கண் கலங்க வைத்தது...
உடனே முடிவு பண்ணேன் ...இந்த விருதுக்கு...நமது போஸ்ட்-ஐ 
பதிவு பண்ண வேண்டாம் என்று...{யாருப்பா அது...நெஞ்சிலும்,,,வயிற்றிலும்
அடித்துக்கொண்டு அழுவது.???}


ஆகவே...என் மக்களே...அப்பவே இந்த முடிவை நான் அறிவித்திருந்தால்...
இப்போது மாதிரியே...அப்போதும்...இப்படி போராட்டம்...பண்ணுவீர்கள் என்பதால்....நான் உங்களிடம் மறைத்துவிட்டேன்....
மன்னிக்கவும்...என் ரசிக கண்மணிகளே...மீண்டும் மற்றொரு போட்டியில்..
நமது----இல்லாத திறமையை காண்பிப்போம்....
அதுவரை அமைதி காக்கவும் என்று...உங்களை..
இரு கரம் கூப்பி வேண்டி விரும்பி கேட்டு கொள்கிறேன்...


டாய்...டாய்....டாய்....யாருடா அது.....நல்லா தூங்கிக்கிட்டு இருக்கவன் மேல
தண்ணி ஊத்துனது...?????
ச்சே ...கனவா....????


ஹி...ஹி...ஹி...உண்மையை சொல்லுகிறேனே.....
நான் போட்டில கலந்துக்கிட்டாலும்...முதல் ரவுண்டு-லேயே 
வெளியேறபோவது...உறுதி ...இந்த சினிமாவுல வர மாதிரி....
ரிஜக்ட் ஆன நம்ம பேப்பர்...ஏதாவது காத்துல பறந்து...
நம்ம பேர் முன்னாடி வந்துடுச்சினா...நடுவர்களுக்கும்...கெட்ட பேர்.....
போட்டியை நடத்துரவுங்களுக்கும் கெட்ட பேர்.....


என்னால எவ்வளவு பெரிய சங்கடமும் யாருக்கும் வரக்கூடாது...என்கிற 
நல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல எண்ணத்துலதான் நான் கலந்துக்கலை....
{கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....துப்புங்க எஜமான் துப்புங்க}


டிஸ்கி :- இந்த பதிவு சும்மா நகைசுவைக்காகவே...(அப்படி ஒண்ணு இதுல இருந்தா...!!!!????)...நானும் ஒரு மாசமா...பதிவு தேத்த எவ்வளவு கஷ்டபடுறேன் 
தெரியுமா????...சட்டில இருந்தா தானே அகப்பைல வரதுக்கு....[அப்பாடா..இந்த 
மாசத்துக்கு ஒரு பதிவு போட்டாச்சி...போங்க...போங்க...இனி..அடுத்த..உலக 
மகா போஸ்ட்..வரும்போது நானே சொல்லி அனுப்புறேன்...]


பரிசு பெற்ற அனைவருக்கும்...மீண்டும்...மீண்டும்...வாழ்த்துக்கள்...
கும்மி குரூப் நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்....
அடுத்த முறையாவது...நான் வெற்றி பெறுமாறு எனக்காக...ஒரு பிரிவு,,,
பரிசு ரெடி பண்ணவும்...
[தலைப்புக்கு நன்றி...சி.பி]
(கொளுத்திபோட்டிங்)
                                                                                                                                                                                                                                                                                                                                           

Tuesday, March 6, 2012

O.C.நெய் பொங்கல்


அன்பர்களே...


அதிகமாக...O.C.-ல நெய் பொங்கல்,,,
புளியோதரை...
சுண்டல்,,,சக்கரை பொங்கல்..எல்லாம் ...
சாப்பிட்டா....இப்படிதான்...கொழுப்பு..
நெண்டுமாம்...


அன்பர்களே ...இந்த புகை படம்....
பார்த்துட்டு...காஞ்சி( ஆய் MAN ) நினைவு வந்தா..நான் பொறுப்பு இல்லை...
இதுக்கு அப்புறம்....
உங்க...இஷ்டம்...


அடிக்கிற அடியில் தாரை தப்பட்டை ....கிழிந்து 
தொங்கட்டும்......


ரெடி...ஸ்டார்ட் ...மியூசிக்.....
Friday, February 10, 2012

கேட்டான் பாருங்க ...கேள்வி...!!!

அன்பர்களே....


கொஞ்ச நாளைக்கு முன் என் மகனுக்கும்..எனக்கும் நடந்த உரையாடல்...கீழே...
(மகனுக்கு பன்னிரண்டு வயது)


மகன் : அப்பா.....அப்பா....
(நான் கவனிக்கவில்லை)


மகன் : யோவ்..அப்பா...


நான் : சொல்லுப்பா....


மகன் : அது என்னப்பா எந்த நேரம் பார்த்தாலும் ப்ளாக்'ங்குற, கமெண்ட்ங்குற,                                                                                  போஸ்ட்ங்குற, வாய்ஸ் சாட்ங்குற, போதாதற்கு போன்ல வேற பேசுற..  அதையும் விட்டா பாத்ரூம்க்கு கூட செல்'ல எடுத்துக்குட்டு போற...அப்படி 
என்னதான்பா இருக்கு இந்த ..ப்ளாக்-ல?
இதால ஏதாவது யூஸ் இருக்கா?


நான்::அட என்னப்பா இப்படி கேட்டுட்ட...சொல்லுறேன் கேளு...ப்ளாக் என்பது ஒரு குடும்பம் மாதிரி...நாம அன்றாடம் சந்திக்கும் உறவுகள் அனைவரும் இங்க இருக்காங்க...


நல்ல தமிழ்,மற்றும்..நல்ல பழக்கவழக்கங்களுக்கு நம்ம சீனா தாத்தா இருக்கார்..
அப்புறம்..உனக்கு நல்ல சமையல் செய்துதர தேனம்மை, லெட்சுமி ..பாட்டி இருக்காங்க...
நம்மளை சிரிக்க வைக்க பன்னிக்குட்டி ராமசாமி சித்தப்பு இருக்கார்...அவர் கூட..ஒரு குரூப் இருக்குகுகு பாரு...அந்த குரூப் கூட பேசுனா....நம்ம நேரமே போறதே தெரியாது... அப்புறம்..நீ ஸ்கூல்-ல படிக்கிறல்ல...அந்த வாத்தியார்கள்....ராஜா,,கருண்,,சௌந்தர் ...இப்படி நிறைய பேர் இருக்காங்க...
தமிழை நல்ல படிக்க சொல்லுற..தமிழ் வாசி இருக்கார்..நம்ம வீட்டை எப்படி வச்சிக்கனும்னு சொல்லுற சுரேஷ்,உங்களை எப்படி வளர்க்கனும்னு சொல்லுற...சம்பத் இருக்கார்...நியாயத்தை மட்டும் பேச கழுகு குழுமம் இருக்கு....


இவங்க கூட நம்ம தாய்மாமன் விக்கி இருக்கார்....
யாராவது நம்ம கூட தேவை இல்லாம சண்டைக்கு வந்தால்...அருவாளோட 
கேக்க மனோ மாமா, ஆரூர்.மூனா.செந்தில்,இவங்க எல்லாம் இருக்காங்க...
நம்ம வீட்டுக்குள்ள ஜாலி-யா இருக்க ..நம்ம விகடகவி சிவக்குமார் இருக்காரு...
நாம என்ன என்ன உணவு சாப்பிடனும்னு சரியா சொல்ல உணவு உலகம் ஆபீசர் இருக்கார்...அப்புறம்...எப்போதுமே நம்பர் ஒன்-ஆ வர நம்ம சி.பி.செந்தில்குமார் பெரிப்பா இருக்காரு  
நமக்கு technical support பண்ண சசி,பிரபு இருக்காங்க... இப்படி அண்ணன் தம்பி , அக்கா,அண்ணி, சித்தப்பா,தாத்தா,பாட்டி,மாமான்னு இல்லாத உறவுகளே 
இல்லை மகனே...எல்லா உறவுகள் கூட ஒரே குடும்பமா இருக்கோம்...இதை விட வேற என்னடா வேணும்..?


மகன் : யப்பா ...நீங்க பலே ஆளுப்பா


நான் : என்னடா....சொல்லுற


மகன் : நீ போஸ்ட்டும் அதிகமா போடுவது இல்லை
ஆனாலும் இவ்வளவு சொந்தங்களை வச்சிருக்கே..உன்னை நெனைச்சா...பெருமையா இருக்கப்பா...


நான் : ஹஹ..அதுதான் பாசம்ங்கறது
(இல்லைன்னா ங்கொய்யால நைட் 12 மணிக்கு கூப்பிடுவேன்ல....)


மகன் :  எல்லாஞ் செரிபபா...சினிமா-ல இருக்குற மாதிரி வில்லன்-க இல்லையா...???


நான் : ஸ்ஸ்பாபா.....இருக்காங்கப்பா...அவங்க குரூப்-குரூப்-ஆ நிறைய இருக்காங்க...யார் வேண்டுமானாலும் யார் கூட வேணாலும் சண்டை போடுவாங்க...


மகன் :  யப்பா ...யப்பா...


நான் : என்னடா.. 


மகன் :  வந்து...


நான் : சொல்லுடா....


மகன் :  எல்லா உறவையும் சொன்னீங்க....முக்கியமான 
உறவை சொல்லலை ஏன்பா....?


நான் : அப்படியா...? என்ன உறவு சொல்லு!


மகன் :  வந்து...அடிக்க கூடாது....


நான் : சரி....அடிக்கலை...கேளு....


மகன் :  ம்...ம்..ம்.. எல்லா உறவுகளும் இருக்காங்க...வந்து..இந்த...அத்தையும்,,அத்தை பொண்ணும் இல்லையா....?!


நான் : அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
(இப்ப என்ன பதில் சொல்லுறது..? பையன் கோர்த்து வுடுறானே)


மகன் :  யோவ் அப்பா பதில் சொல்லு....எங்கே எஸ்கேப் ஆகுற...


நான் : ஹலோ....யாரு.....டவர் கிடைக்கல...ஹலோ சத்தமா...பேசுங்க...ஹலோ...இருங்க வெளிய வந்து பேசுகிறேன்......


மகன் :  அய்யோ அப்பா....சிம்மை கழட்டி நான் கையில வெச்சிருக்கேன்....சிம் இல்லாத போன்ல யாருகிட்ட பேசிறியோ....நீ எப்படியும் இங்க வந்துதானே ஆகுனும் வாடி வா..அம்மா கிட்ட யாரோ பொண்ணுகிட்ட பேசிகிட்டு இருக்கிறேன்ன்னு போட்டு கொடுக்கிறேன் கேட்டதுக்கு அத்தைபொண்ணுன்னு சொன்னீன்னு சொல்லுகிறேன்....இன்னிக்கு பூரிகட்டை அடிதாம்ல
கொய்யா!

   
அன்பர்களே...YOUTUBE-ல சும்மா நோன்டிக்கிட்டு இருந்தப்ப இந்த வீடியோ கிடைச்சிது...சும்மா போட்டு வைக்குறேன்...ரசிங்களேன்...
( மனதுக்குள் எந்த கற்பனையும் வேண்டாம் ப்ளீஸ்...)
(ஏதாவது நண்பர்கள்,உறவுகள் விடுபட்டிருந்தால் மன்னிக்கவும்)

Wednesday, February 1, 2012

எனக்கு நானே...

அன்பர்களே ....


டிஸ்கி :-
                  நீங்க..ப்ளாக் எல்லாம் மாறிவரலைங்க...நாய் நக்ஸ் ப்ளாக்-கு தான் வந்திருக்கீங்க....விஷயம் என்னான்னு பதிவுல சொல்லுறேனே....

உலக மக்களே ...யாரோ ஒருத்தன் DOG-LICK -னு இருக்கானாமே...(கவனிக்கவும் நான் நாய்-நக்ஸ் -ஐ சொல்லவில்லை)
இவன் போஸ்ட்-ம் போடுறதில்லை...ஒன்னும் கிழிக்கிறதில்லை...
ஆனா...செய்யுற வேலை இருக்கு பாருங்க...அந்த சகுனி தோத்தான் போங்க....


இவன் வலை உலகுக்கு வந்ததே ஒரு விபத்துங்க...(நமக்கு)
ஆரம்பத்துல வந்த புதுசுல கமுக்கமா இருந்தானுங்க...அப்புறம் மெயில் அனுப்பி எல்லார்கிட்டயும் சாட் பண்ண ஆரம்பிச்சான்ங்க...அப்படியே 
தன்னுடைய போஸ்ட்-க்கு கமெண்ட் போட வச்சான்ங்க...இப்படி ஆரம்பிச்சானுங்க...  


அப்புறம்--தான் ரோம்ப வளர்ந்துட்டதா நினைப்பு வந்துடுச்சி...(எது வளந்துதுன்னு அவனுக்கே வெளிச்சம்)
எல்லார் ப்ளாக்-லயும் போய் நக்கலா கமெண்ட் போட ஆரம்பிச்சான் ...


அப்ப அவனை யாரும் கண்டுக்களைங்க...ஏதோ குளைக்குதுன்னு ..(!!!???)
விட்டுட்டாங்க...அங்க தாங்க இவனுக்கு ஏறுச்சி திமுறு...தேவை இல்லாம 
எங்கையாவது போய் வம்பு இழுக்குற மாதிரி எதையாவது கமெண்ட் என்கிற பேர்ல வாந்தி எடுத்துட்டு போய்டுவான்ங்க...  
அதுக்கு அப்புறம் என்னங்க...போஸ்ட் போட்டவனும் சரி...கமெண்ட் போட்ட மத்தவங்களும் சரி...அடிச்சிக்க வேண்டியதுதான் ...இவன் உக்கார்ந்து ரசிச்சிக்கிட்டு இருப்பான்ங்க...


இப்படி தாங்க..முன்னாடி பிரன்ச் வாசனை திரட்டி பிரச்னை அப்ப 
வாலண்டியரா நானும் ரவுடி தான்-னு ஆஜர் ஆனான் ...ஆனா யாருமே 
கண்டுக்கலை...தன்னுடைய பருப்பு வேகலைன்னு தெரிஞ்சதும் 
பம்மிட்டான்...


அப்புறம் கொஞ்ச நாள் அமைதியா இருந்தான்... 
ஆனா எங்கையாவது போய் உதை வாங்குவான்...இவனை யாருமே 
ஒரு பொருட்டா மதிக்குறதில்லை...என்னடா பண்ணுறது...நாம பேர் 
FAMOUS ஆகணும்-னு காத்துக்கிட்டு இருந்தானுங்க...
ரெண்டு பேர் சும்மா தமாஷா அடிச்சி பேசி விளையாண்டுக்கிட்டு இருந்தாங்க...அப்பதாங்க இவனுடைய நரி தந்திரம் வெளியே வந்துசிங்க.... 


ஒரு "வீட்டையே" போளந்து போட்டான்...சம்சாரம் அது மின்சாரம் 
படத்துல வரமாதிரி வீட்டுக்கு குறுக்கே கோடு போட்டான்க..
கூட ஒரு வெட்டி ஆ-----ரையும்,, சேர்த்து வீணாக்கிபுட்டான்...
கூட்டு குடும்பத்தை சிதைசிப்புடான்க...
தேன் கூட்டுல கல் விட்டு எறிஞ்சிட்டான்... 


ஆகவே நண்பர்களே...இனி இவனை புறக்கணியுங்கள்...
இதை விட...இவனுக்கு பெரிய தண்டனை கிடையாது...


ஹி...ஹி... ஒன்னும் இல்லை அன்பர்களே ...
நாம எதுக்கு அடுத்தவங்களுக்கு வேலை வைக்கணும்.....
பாவம் ரோம்ப சிரமம்...அதன் எனக்கு நானே...உள்குத்து போட்டுகிட்டேன்...
ஹே...ஹே ...ஹே....     


மன்மோகன் சிங் said..
கரெக்ட் தான் தலைவா..நீங்க சொல்லுறது ....
இவனை எல்லாம் நாம தொரத்தி தொரத்தி அடிக்கணும்...
Reply


எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் Said...
இப்ப நான் லவ் மூடுல இருக்கேன்...
நான் ரோம்ம்ம்ம்ம்ப பிஸி ...
மிச்சத்தை என் அல்லக்கைகள் தொடருவார்கள்....
நான் சவரம் செய்துவிட்டு வருகிறேன்....
Reply


கழுதகுட்டி மொக்கைசாமி Said....
அட இப்படில்லாம் நடக்குதா...
நான் நடுநிலைவாதி ...ஹே...ஹே...
Reply


ஒருவன் ஒருவன் முதலாளி Said....
குச்சி...நான் அப்பவே சொன்னேன் இல்ல ...
நீ தான் வேண்டாம்...பாவம் பொழச்சி போகட்டும் என்றாய்....
இப்போதைக்கு போறேன்...முதுகுல குத்த அப்புறம் வரேன்...
Reply


மங்கி யுனிவர்ஸ்  Said....
இந்த பொழப்புக்கு .................போகலாம் மாப்புள...
Reply


யாருக்கு யாரோ Said....
ஆமா சார்...இவன் மொகதிரைய நல்ல கிழிச்சீங்க சார்...
பாராட்டுக்கள்....
Reply


இணையத்தில் நீங்களும் சம்பாரிக்கலாம்

இல்லாமல் உங்களாலும் இணயத்தில் சம்பாரிக்க முடியும். இந்த தளம் கடந்த 4 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இது 100 சதவீதம் உண்மை. பணம் பெற்றதற்க்கான Proof உள்ளது.

http://www.bestaffiliatejobs.blogspot.com/2011/12/get-paid-every-30-seconds.html
Reply
இல்லாமல் உங்களாலும் இணயத்தில் சம்பாரிக்க முடியும். இந்த தளம் கடந்த 4 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இது 100 சதவீதம் உண்மை. பணம் பெற்றதற்க்கான Proof உள்ளது.

http://www.bestaffiliatejobs.blogspot.com/2011/12/get-paid-every-30-seconds.html
Reply
பாரஸ்ட் ராஜா Said....
அட பாவி அவன் நல்லா இருப்பானா ???
அருமை..பகிர்வுக்கு நன்றி....
Reply


Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !
http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html
Reply
மங்கி யுனிவர்ஸ்  Said....
இவன் பலே தில்லான்லங்கடி ஆளா இருப்பன் போலிருக்கே ... 
Reply
எல்லாம் தெரிந்த ஏகாம்பரம் Said...
@$#%#%^&@^*(&!)(__()(!)_(_+)(_)*()*&@*&(^%$#%@$!$##%&^%த&*&_)()(&(*^*&%#
(*(!@&*^#*&^*(!&#)!(+_)#+_!)(@#_)*!@)(^#!$*@!)_(#+_!)@_+)#_@*#^#%#^&%@#
Reply
ஒருவன் ஒருவன் முதலாளி Said....
நான் ஏகாம்பரத்தின் கருத்தை வழிமொழிகிறேன்....
Reply
மன்மோகன் சிங் said...
வலை உலகின் இந்த கருங்காளியை சரியாக அடையாளம் 
காட்டுணிர்கள் நண்பா...நன்றி...
Reply
கழுதகுட்டி மொக்கைசாமி Said....
 /////எதையாவது கமெண்ட் என்கிற பேர்ல வாந்தி எடுத்துட்டு போய்டுவான்ங்க...  //////
அப்புறம் ப்ளாக்-ஐ கழுவுநீங்கள்ளா இல்லையா...
Reply
யாருக்கு யாரோ Said....
யப்பா இப்பவாது இவனை பத்தி தெரிஞ்சிதே ...
நன்றி தலை....
Reply
அன்பர்களே...இது முழுக்க முழுக்க நகைச் சுவைக்காக (???!!!!!?????)
மட்டுமே....இதுல ஏதும் அர்த்தம் கண்டுபிடிக்க முயற்சிக்க வேண்டாம்...
ப்ளீஸ்...


Tuesday, January 10, 2012

புயல் நல்லது - மொக்கை பதிவு


என்னுடைய---இன்றைய மற்றும் ஒரு பதிவு....


செல்ல இங்கு கிளிக் பண்ணவும்....


அன்பர்களே.....

மிகுந்த சிரமத்துக்கு இடையில் நேற்று மாலை மின்சாரம். ஒரு வழியாக கிடைக்க பெற்றேன். கற்காலத்தில் இருந்த என்னை, அன்புடன் தொலைபேசி மற்றும் மெயில் முலமாக விசாரித்த அனைத்து நண்பர்களுக்கும் நன்றி. பெயர்  குறிப்பிட்டு சொன்னால் அதுவே ஒரு நீண்ட பதிவாகிவிடும்.

உண்மைதாங்க இந்த பதிவுலகத்தில் என்னை விசாரிக்க இவ்வளவு நண்பர்களா....???

அப்படி நான் என்ன கிழித்துவிட்டேன். ஒன்றுமே இல்லை.என்னினும் உங்கள் அன்பு என்னை கண் கலங்க வைத்தது உண்மை.மீண்டும் மீண்டும் மீண்டும் என் மேல் அன்பு கொண்ட அன்பு உள்ளங்களுக்கு நன்றி.....நன்றி ...நன்றி...!!!!!!

நாம வழக்கம் போல் மொக்கை என்னும் படு மோசமான பதிவுக்கு செல்வோமா ???

நான் ஆரம்பித்திலேயே சொல்லிடறேன்...இந்த பதிவு யாரையும் மனசில் வைத்து எழுதபடலை.நான் யாரையும் நக்கல்,கிண்டல் பண்ணவும் இல்லை.
சும்மா ஜாலி-யா எழுத நினைத்து எழுதுகிறேன். இது சத்தியம். சத்தியம். சத்தியம்.

நாட்டுல எவ்வளவோ பிரச்சனைங்க, அதுல பாருங்க.

1) யாருக்கும் முச்சு விட சுத்தமான காத்தே கிடைக்கலை. இதுக்குதாங்க இயற்கைக்கு ரோம்ப கவலை வந்துடுச்சு. உடனே யோசித்து ( ரூம் போட்டு ) கடல்-ல உள்ள நல்ல சுத்தமான காற்றை எங்களை மாதிரி ரோம்ப புண்ணியம் செஞ்சவங்க இருக்குற இடத்துக்கு கொடுத்துச்சி.

2) அடுத்து அவன்னவன் இந்த ஈர்ஏழு உலகத்திலும் இல்லாத விலை மதிப்பற்ற(!!!)அரிசியை தின்னுட்டு பெருசு கொடுத்த டி.வி-ல படம்,சீரியல் பார்த்துக்கிட்டு உடல் உழைப்பு இல்லாமல் சும்மாவே இருக்கானுக. இதுக்கு தாங்க தானே புயல் வைச்சுது ஆப்பு. இப்ப பாருங்க குடிதண்ணிக்கே எப்படி அலையுரனுக. இதுக்கே இப்படினா "அதுக்கு" தண்ணிக்கு எவ்வளவு அலையனும் ???

3) அப்புறம் இந்த கர்போன் ரேட்டிங்காம் இல்ல. இது எவ்வளவு பசுமையா இருக்கோ அந்த அளவுக்கு ஏதோ POINTS,காசம்ல. இதை வச்சி பெரிய ஆட்கள் எல்லாம் நிறைய சம்பாதிக்கிறாங்களாம். அதான் மத்தவங்களோட பசுமையில் அவன் என்ன காசு பாக்குறது. புடுங்கி எறி எல்லாத்தையும்-னு புயல் புடுங்கி போட்டுடுச்சி.

4) பெண்கள்--நவீன சமையல் இயந்திரத்தால--எந்த வித உடல் சார்ந்த உழைப்பும் இல்லாம உடம்பை கெடுத்துக்கிட்டு..நிறைய மருத்துவத்துக்கு செலவு பண்றாங்களாம். நம்ம பாண்டி,,கடலூர் மாவட்ட பெண்கள் மேல் எவ்வளவு அக்கறை இந்த புயலுக்கு....பாருங்க...எல்லா பெண்களையும் உடல் சார்ந்த வேலை செய்ய வைத்து மருத்துவ செலவை மிச்சம் பண்ணி இருக்கு....

5) இந்த கற்காலம் கற்காலம்னு இந்த பள்ளிக்கூடத்து பசங்க வரலாற்றுல
படிச்சி மறந்துடுதுங்க. வரலாறு மிக முக்கியம். அதை மாணவர்கள் மறக்கலாமா??? அதான் எல்லா மாணவர்களையும் கற்காலத்துக்கு தானே புயல் அழைத்து சென்றது...இனி மாணவர்கள் வரலாற்றை மறப்பார்களா ???

6) ஏற்கெனவே இன்னொரு பதிவு போட்டுவிட்டதால் மிக நீண்ட இரண்டு பதிவுகளை படிக்க உங்களுக்கு மிகுந்த ஆயாசமாக இருக்கும் என்பதால். இரண்டுக்கும் கமெண்ட் போடவேண்டிய கட்டாயம் உங்களுக்கு இருப்பதால். இந்த மாதிரி, இந்த மாதிரி-னு நீங்களே யோசித்து நிறைய POINTS FILL UP பண்ணிக்குங்க. நான் மேலும் இரண்டு பாயிண்ட் சொல்லிட்டு இந்த பதிவை முடிச்சுக்கிறேன்.

பாயிண்ட் நெம்பர் இல்லை. ஏன்னா நீங்க ரோம்ப புத்திசாலி.எத்தனை பாயிண்ட் யோசிப்பீங்கன்னு கணக்கே இல்லை.பெரிய ஐயா,,சின்ன ஐயா-னு இரண்டு பேர் இருக்காங்க. இவங்களுக்கு ஒரு கட்சி இருந்துச்சி (!)  அந்த கட்சிக்கு "மரம்வெட்டி கட்சி"-னு பேர் இருந்துச்சி. நம்மளைவிட யாருயா அம்மாம் பெரிய அப்பாடக்கர்னு இயற்கைக்கு வந்துச்சி பாருங்க கோபபபபபம்.

எல்லா மரம்,,மின்சார கம்பம்--எல்லாத்தையும் புடுங்கி போட்டுடுச்சி. இனி யாரவது அந்த கட்சியை மரம்வெட்டி கட்சி-னு சொல்லுவீங்க?????

அப்புறம் பசுமை புரட்சினு எல்லா பெருசு, சிறுசு, காவி வெட்டி கட்டுனவங்க,இன்னும் இன்னிக்கு முளைத்த காளான்கள் எல்லாம் மர கன்றுகளை கைல வச்சிக்கிட்டு நட இடம் இல்லாம லோலோ-னு அலையுறாங்க. அந்த மர கன்றுகள் எல்லாம் காஞ்சி செத்துபோரத பார்த்த
இயற்கை. அவற்றை நட இடம் பார்த்து கொடுத்துருக்கு.

அடுத்து ...

இந்த நாய் நக்ஸ்னு ஒருத்தன் இருக்கான்யா.பதிவுன்னு போட்டு கொலையா கொல்லுரான்யா.அப்படின்னு நீங்க புலம்புன புலம்பல் இயற்கைக்கு கேட்டுடுச்சி. அதான் பாருங்க. என்னை மட்டும் தாக்கவேண்டிய புயல் அது முடியாம, என் மேல் உள்ள கோபத்தை காட்ட ( நான் ரொம்ப நல்லவன், சத்தியவான், உத்தமன் இன்னும் என்னன்னவோ.... )

நான் இருக்கும் மாவட்டத்தையே காலி பண்ணிடுச்சி.....


நீதி :-நல்லவர்களை அழிக்க நினைத்தால் உலகம் அழியும்.....


அனைவருக்கும் ....

இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் மற்றும் இனிய பொங்கல் தின சிறப்பு வாழ்த்துக்கள்.....