Pages

Wednesday, November 23, 2011

வாழவைக்கும் காதலுக்கு .....ஜெ ..!!!!!!

அன்பர்களே....

நாம பதிவுக்கு போறதுக்கு முன்னாடி இந்த பாட்ட 
முழுசா கேட்டுடுங்க .....(அப்பதான் தலைப்புக்கும் 
பதிவுக்கும் சம்மந்தம் இருக்கு-னு நம்புவீங்க)


                               ஒரு செய்தி....படித்தேன்...
கீழ்பாக்கதிலிருந்து ...கொருக்குபெட்டைக்கு செல்ல 
SHARE AUTO-வில் 5 ருபாய் ...அதே இடத்துக்கு 
பேருந்தில் 7 ருபாய் ..என்று ...

பஸ் கட்டண உயர்வை பத்தி எல்லாரும் பதிவு 
போட்டுவிட்டார்கள்....ஆனால் அவர்கள் பார்த்த
பார்வையில் இருந்து நான் வேறுபடுகிறேன் ....

நாம மேட்டர்-ருக்கு போவோம் ....

அம்மா அவர்கள் எவ்வளவு பெரிய தீர்ர்ர்ர்ர்ர்ர்ர்க்ககரசி..... 

எப்படி என்றால்.....

இப்ப நீங்க தினமும் பஸ்-ல வேலைக்கோ 
இல்லை SO AND SO மெட்டருக்கோ போறீங்க ...
அப்ப பஸ்-ல அந்த FIGURE-ம் வராங்க ....
பஸ்-ல ஒரு தொல்லை என்னன்னா ஆம்பிளைங்க 
எல்லாம் முன்னாடி இருக்கணும் ....
லேடீஸ் எல்லாம் பின்னாடி இருக்கணும் .....

இதுக்காக நம்மளை மாதிரி முன்னோர்கள்... 
ஆம்பிளைங்க பெரிய பெரிய போராட்டம் 
எல்லாம் பண்ணி LEFT,,,RIGHT-னு பிரிச்சாங்க...

அதிலையும் என்னாசின்னா ..பஸ்--- FULL
ஆகிடுசினா STANDING ஆகும்...அப்ப 
உஷார் பண்ண பிகர்-ம் ,,,நீங்களும் 
ஒத்தரை ஒருத்தர் பார்க்க முடியாம போய்டும் ...
அப்ப கடந்து தவியா தவிச்சி போயிடுவீங்க 
ரெண்டு பேரும் ......
இப்படியே ஒரு நாள்,,ரெண்டு நாள்-னா பரவாஇல்லை ...
தினமுமே இப்படினா...???

அப்புறம் உங்க பிகர்-ஐ வேற ஒருத்தன் ரூட் விடுவான்....
அப்புறம் உங்களுக்கும் அவனுக்கும் சண்டை நடக்கும் ....
உடனே சப்போர்ட்டுக்கு உங்க FRIENDS,,,அவன் FRIENDS..
எல்லாம் வந்து அது ஒரு பெரிய கலவரம் ஆகிடும் ....
எவ்வளவு நஷ்டம்..இரண்டு பக்கமும்...

இதுக்கு இடைல அந்த பிகர் வீட்ல வேற மாப்பிளை 
பாக்க ஆரம்பிச்சிடுவாங்க...
பாருங்க எவ்வளவு கஷ்டம் ...பஸ்-ல ஒரு பிகர் 
கரெக்ட் பண்ணுரதுல...   

இன்னும் நிறைய இருக்குங்க ...இந்த கஷ்டத 
சொல்ல...பதிவின் நீளம் கருதி..ஒரு சில 
கருத்து மட்டும் சொல்லி இருக்கேன்....
மிச்சத்த நீங்களே நினைச்சிக்கிடுங்க....

அம்மா ஆட்சில நம்ம உளவு துறை வேற பக்காவா 
செயல்படும்...இப்படிதாங்க நாம,,,மத்தவங்க
படற கஷ்டம் எல்லாம் உளவுத்துறை முலமா 
அம்மாவுக்கு போய் செந்துடுச்சி....

இப்பதாங்க அம்மா தீவிரமா சிந்திக்கிறாங்க ...
இவங்க வேற பெண் இல்லையா ...பெண்கள் படற 
கஷ்டம் எல்லாம் இன்னொரு பெண்ணுக்கு தானே தெரியும் ....
உடனே ஆலோசனை பண்ணி பஸ் கட்டணத்தSTD காணாத 
(அதாங்க ...வரலாறு) அளவுக்கு உயர்த்திட்டாங்க....

இதுக்கும்----- மேலே சொன்ன மேட்டர்-கும் என்ன சம்பந்தம் 
என்று கேக்குறீங்களா ???...

இங்க தாங்க "அம்மா" ROCKS...

பஸ் கட்டண உயர்வினால இனி நீங்களும் சரி...மத்தவங்களும் 
சரி...அவுங்க அவுங்க உஷார் பண்ணுற பிகுர்-ம் சரி...எல்லாரும் 
இனி SHARE AUTO-ல தான் போவீங்க ....

இப்ப என்ன நடக்கும்-னு அம்மா நினைச்ச மாதிரியே..
நீங்களும் நினைத்து பாருங்க .... 

பக்கத்துபக்கதில உக்காந்துக்கலாம்...உராசிக்கலாம் ....
டுயட் பாடலாம்...ம்ம்ம்ம் ...

அவங்களும் நல்ல படியா LIFE-ல SETTILE ஆகிடுவாங்க ....ஏன்னா 
நம்ம SHARE AUTO காரங்க வேற ரோம்ப நல்லவங்க ...
எல்லா ஹெல்ப்-ம் பண்ணுவாங்க ...

இப்ப சொல்லுங்க ....காதலை வாழவைக்க அம்மா 
செய்தது புரட்சிதானே ..!!!!

இந்த மாதிரி யாரவது காதலர்களை வாழவச்சிருக்காங்களா????

இனி யாராவது பஸ் கட்டண உயர்வை பத்தி பேசுவீங்களா ?????

அதுக்கு தாங்க மேலே உள்ள பாட்டு ...
பாட்டு அப்படியே "அம்மா"வுக்கு சமர்ப்பணம்.....!!!!!

கருத்து சொல்லாம போனா அம்மா அவர்கள் மேலும் சில 
அதிரடிகளை செய்ய இருப்பதால்---
அன்பர்களே ...மக்களை காப்பாற்றுங்கள் .....


(பால் உயர்வு பத்தி அடுத்த பதிவில் ...என் சிந்தனையை யாரும் காப்பி 
அடிக்காமல் இருந்தால்..!!!!ஹி ஹி )

23 comments:

சக்தி கல்வி மையம் said...

பக்கத்துபக்கதில உக்காந்துக்கலாம்...உராசிக்கலாம் ....
டுயட் பாடலாம்...ம்ம்ம்ம் ...//

என்னா ஒரு வில்லங்கம்..

இம்சைஅரசன் பாபு.. said...

புரட்சி தலைவி அம்மா வாழ்க ..!!

முத்தரசு said...

ஆஹா ஹா......என்ன ஒரு வெறி தனம் - ஆட்டோ வருதுய்யா...அம்மான்னா சும்மா இல்லை

பி கேர் புல்.

Unknown said...

இதுக்கு பேரு வேற என்னமோ சொல்லுவாங்களே ஹிஹி!

வைகை said...

அம்மா நாமம் வாழ்க... அம்மா மக்களுக்கு போட்ட நாமமும் வாழ்க :))

rajamelaiyur said...

விளக்கம் அருமை .. விளங்கிடும்

rajamelaiyur said...

புதுசு புதுசா யோசிகிரிங்க ...

நாய் நக்ஸ் said...

@ vikki,,,,
athu enna mamms....
Enga ponnalum
KATHI
sorukureenga ......!!!!!

Madhavan Srinivasagopalan said...

பால் உயர்வு பத்தி அடுத்த பதிவில் //

வருது.. வருது.. நம்மள நோக்கித்தான் வருது..
ரைட்.. எடு ஓட்டம்..
இந்த ஆட்டைக்கு நா வரல..

MANO நாஞ்சில் மனோ said...

அண்ணே, உங்க சிந்தனையோ சிந்தனை, அம்மா'வை பற்றிய உண்மைகளை சொல்லிவிட்டீர்கள், சன்னலையும் கதவையும் பலமா பூட்டிட்டு இருங்க, ஆட்டோவிலும் லாரிலையும் வளர்மதி தலமையில குண்டாந்தடிகள் வந்துட்டு இருக்கு...!!!

வெளங்காதவன்™ said...

கலக்கல் போஸ்ட்டு....

#சத்தியமா!!!!!!!!

தமிழ்வாசி பிரகாஷ் said...

மனோ கமெண்ட்ஸ் ரிப்பீட்டு....
நம்ம தளத்தில்:
போலீஸிடம் இருந்து எஸ்கேப் ஆன ஏஜ்டு லேடி! (போலீஸ்-லேடி உரையாடலுடன்)

Unknown said...

அய்யா.. சாமியோவ்... நீங்க ஒரு யூத்துதான்னு நான் ஒத்துக்கிறேன்..

உணவு உலகம் said...

கேட்டும்,படித்தும் ரசித்தேன்.

சீனுவாசன்.கு said...

வாங்க வாங்க!
நீங்கள்ளாம் வந்து
கருத்து சொல்லாட்டி எப்பூடி?
அட!நம்ம சைட் பக்கமும் வாங்க!

மாலதி said...

அருமையான பகிர்வு.

Unknown said...

nice
pls visit my blog
mydreamonhome.blogspot.com

யானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி said...

காரசாரமான பதிவு
வாழ்த்துக்கள்

யானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி said...

காரசாரமான பதிவு
வாழ்த்துக்கள்

ம.தி.சுதா said...

ஃஃஃஃஅப்புறம் உங்க பிகர்-ஐ வேற ஒருத்தன் ரூட் விடுவான்....
அப்புறம் உங்களுக்கும் அவனுக்கும் சண்டை நடக்கும்ஃஃஃஃ

யாரப்பா சொன்னது சந்தோசமா தூக்கிட்டு போ என விட வேண்டியது தானே....

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
இந்த வார சினிமா செய்திகளின் தொகுப்பு (21.11.2011-27.11.2011)

PUTHIYATHENRAL said...

* இந்தியாவின் பிரதமராகிறார் மகேந்த ராஜபக்சே! குடிமக்களை பாதுகாக்க முடியாத இந்திய கப்பல்படையும், ராணுவமும் எங்கே போனது. ஓ அவங்கெல்லாம் நம்ம ராஜ பக்சே வீட்டு பண்ணையில் வேலை செய்றாங்க இல்லே அட மறந்தே போச்சி.சிங்களவர்களை பற்றி நமது வடநாட்டு வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகையில் அவர்களது பூர்வீகம் வட இந்தியா என்று சொல்கின்றனர்.ராஜபக்சே மாதிரி நமக்கு ஒரு பிரதமர் கனவிலும் கிடைக்க மாட்டார். அவரை நமது ஹிந்தி பாரத தேசத்துக்கு பிரதமராக்க வேண்டும். please go to visit this link. thank you.

* பெரியாரின் கனவு நினைவாகிறது! முல்லை பெரியாறு ஆணை மீது கேரளா கைவைத்தால் இந்தியா உடைந்து பல பாகங்களாக சிதறி போகும் என்று எச்சரிக்கிறோம். தனித்தமிழகம் அமைக்க வேண்டும் என்கிற பெரியாரின் கனவு நினைவாக போகிறது! தமிழர்கள் ஒன்றிணைய வேண்டும்.இவைகளுக்கு எதிராய் போராட முன்வரவேண்டும். இதற்கெல்லாம் நிரந்தர தீர்வு தனி தமிழ் நாடு அமைப்பதே !. please go to visit this link. thank you.

* நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே! இது என் பொன்டாட்டி தலைதானுங்க... என்னை விட்டுட்டு இன்னொருத்தனோடு கள்ளக்காதல் தொடர்பு வச்சிருந்தா... சொல்லி சொல்லி பார்த்தேன் கேக்கவே இல்லை... முடியலை, போட்டு தள்ளிவிட்டேன்..... பத்திரிக்கைகள் நீதியின், நியாயத்தின் குரலாய் ஒலிக்க வேண்டும். அதை விட்டு கள்ளகாதல் கொலை, நடிகைகளின் கிசுகிசுப்பு, நடிகைகளின் தொப்புள் தெரிய படம், ஆபாச உணர்வுகளை, விரசங்களை தூண்டும் கதைகள் இப்படி என்று எழுதி பத்திரிக்கை விபச்சாரம் நடந்ததுகின்றனர்.!. please go to visit this link. thank you.


* தமிழகத்தை தாக்கும் சுனாமி! தமிழக மக்களே! சிந்தியுங்கள்! மீண்டும் ஒரு சுதந்திர போராட்டத்திற்கு தயாராகுங்கள்! மக்களின் நலனில் அக்கறையில்லாத வட இந்திய ஹிந்தி அரசு முல்லை பெரியாறு அணை முதல் கூடங்குளம், தமிழக மீனவர் பிரச்சனை, காவேரி பிரச்சனை, ஹிந்தி மொழி திணிப்பு, என்று தமிழகத்தை தொடர்ந்து குறிவைத்து தாக்கும் சுனாமியாக திகழ்ந்து வருகிறது. தமிழக மக்கள் அடைந்த துன்பம் போதும். சிந்திப்பீர்! செயல்படுவீர்!. please go to visit this link. thank you.

* தமிழர்களால் துரத்தி அடிக்கப்பட்ட தினமலர்!தமிழினத்தின் வீரமங்கை செங்கொடியின் நினைவிடத்திலே தமிழர் துரோக பத்திரிக்கையான தினமலருக்கு என்ன வேலை. அந்த விழாவின் நோக்கத்தை கொச்சைபடுத்தி செய்தி வெளியிடவா? அல்லது உனது விற்காத பத்தரிக்கைக்கு செங்கொடியின் செய்தியை போட்டு விளம்பரம் தேடவா? please go to visit this link. thank you.

* இந்தியா உடையும்! ஆனா உடையாது!இந்தியா ஏன் உடைய வேண்டும்? உங்களுக்கு ஏன் இந்த கெடுமதி! என்று எண்ணத் தோன்றுகிறதா? அதற்க்கு நிறைய காரணங்கள் உண்டு. ஒன்று ஈழத்து பிரச்சனை, தமிழக மீனவர்கள் பிரச்சனை, காஷ்மீர் பிரச்சனை, சத்தீஸ்கர் பழங்குடி மக்களின் மீது நடத்தப்படும் தாக்குதல், போபால் விசவாய்வு, பாபர் மசூதி இடிப்பு, குஜராத் இனப்படுகொலை. இவை மட்டுமே போதும் இந்தியா உடைவதற்கு தேவையான காரணிகளில் மிக முக்கியமானவை.
please go to visit this link. thank you.

* ஆபத்தானது! கூடங்குளம் அணுமின் நிலையமா? தினமலரா?ஈழத்தமிழர் போராட்டத்தையும், தமிழர்களின் போராட்டங்களையும் தேசவிரோதமாக, பயங்கரவாதமாக சித்தரித்து எழுதிவந்தது தினமலர். please go to visit this link. thank you

* கொன்றவனை கொல்கிறவன் எங்களுக்கு மகாத்மா!ஈழத்து போராளிகளை கொன்று குவித்து, தமிழ் பெண்களின் கற்ப்பை சூறையாடி, சமாதான கொடி ஏந்தி வந்தவர்களையும் பொதுமக்களையும் கூண்டோடு கொலை செய்த கயவர்களை கொல்பவர்கள் யாரோ அவரே எங்களுக்கு மாகாத்மா please go to visit this link. thank you.

* போலி தேசபக்தியின் விலை 2 இலட்சம் தமிழர்களின் உயிர்!நாம் கொண்டிரிருக்கும் மூடத்தனமான போலி தேசபக்தியின் விளைவு ஈழத்திலே இரண்டு இலச்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட காரணமாக் அமைந்து விட்டது. please go to visit this link. thank you.

சி.பி.செந்தில்குமார் said...

சரி சரி கலக்குங்க. நல்லது நடந்தா சரிதான்.

M.R said...

ஹா ஹா ஹா

வஞ்சப் புகழ்ச்சி