Pages

Monday, November 21, 2011

புத்தாண்டு வரபோகிறது ...தொடர் பதிவு---தொல்லைகளும் கூடவே ...

அன்பர்களே..!

இதோ இன்னும் கொஞ்ச நாளில் புத்தாண்டு வரப்போகிறது...
நாம் பதிவர்கள் எல்லாம் இப்போதே மூளையை கசக்கிக்கொண்டு 
இருப்பார்கள் ...

என்ன தொடர் பதிவு போடலாம்....அது ஹிட் ஆகுமா ???
யார் யாரை தொடர் பதிவுக்கு கூப்பிடலாம்...
இப்படிஎல்லாம் மூளையை கசக்கிக்கொண்டு இருப்பார்கள் ...
( பார்த்து ரோம்ப கசக்கினா அயன் செய்ய வேண்டி வரும்...
அப்புறம் அம்மா அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தா தான் சரிவரும் )
அது எப்படி கசக்குவது....துணி கசக்குவது மாதிரியா ???

நாம மேட்டருக்கு வருவோம்....
நம்ம பதிவர்களுக்காக தொடர் பதிவு MATTER-கள் சில 
உங்கள் பார்வைக்கு...இதை நீங்க கண்டிப்பா யூஸ் 
பண்ணிக்கலாம் ...(FREE OF COST...ஓ அப்படி சொல்ல கூடாதாம்...
விலை இல்லாதது...)  

யாருப்பா அங்க....உடனே என்னை எதிர் கட்சிகாரன் என்பது....
நான் அந்த அளவுக்கு வொர்த் இல்லிங்க ... 

1.நல்ல சேத்து தரைய்ல பலகை போட்டு வழிசிட்டு 
அதுல தொடர்சியா நடங்க....அது தொடர் பதிவாகிடும்...

2.சேத்து தரை இல்லைனா சிமெண்ட் போட்டு காயும் முன் 
அதில் நடக்கவும் ...

3.இன்னிக்கு நீங்க தும்முநீங்களா,,,இன்னிக்கு என்ன சாப்பிட்டீங்க ,,,
அப்படின்னு கேள்வி கேட்டுட்டு ,,,,

4.இதே கேள்விய --இந்தவாரம் என்ன பண்ணீங்க.,,,இந்த மாதம் 
என்ன பண்ணீங்க,,,,இந்த வருடம் என்ன பண்ணீங்க...னு கேட்டிங்கன்னா 
நாலு கேள்வி கிடைச்சிடும் ....

5.முக்கியமான ஒன்னு---இந்த புத்தாண்டில் என்ன உறுதி மொழி 
எடுக்க போறீங்க ??? (யார் அதை FOLLOW பண்ண போறா???)

6.முதன் முதலில் சைக்கிள் ஓட்டியது,,,கார் ஒட்டியது ,,,
கிழிந்த டிரௌசர் போட்டுகிட்டு சைக்கிள் டயர் ஒட்டியது ....

7.முதன் முதலில் பிகர் பார்த்தது---அந்த பரவச அனுபவம் ....
இப்படி ஏதாவது கேளுங்க ...

8.முதல்முதல தம் அடிச்சது ,,,அது வீ ட்டுல தெரியாது-னு பல்பு வாங்குனது ....

9.அதி முக்கியமான ஒன்னு முதல்முதல சரக்கடிசிட்டு வாந்தி எடுத்தது ....

10.இப்படி லூசு தனமா எதையாவது எழுதி,,,,
மனோ ,,,
விக்கி,,,
KUMMI GROUP--நண்பர்கள்...
ரெட்டை வால்,,
விளங்காதவன்,,,
வெளியூர்காரன்,,,
சென்கோவி ,,
தமிழ்வாசி,,,
ராஜபாட்டை ,,,
கருண்,,,
சௌந்தர் ,,,,
உள் நாடு ,,,
வெளிநாட்டில்,இருக்கிற பதிவர்கள் அனைவரையும் ....
(திடீர் என்று நினைவு வரலை...மன்னிக்கவும் ...)
இந்த தொடர் பதிவுக்கு அழைக்கிறேன் .....ஹி ..ஹி ...


டிஸ்கி 1 :-செய்முறை தேர்வு நடப்பதால் கடுமையான வேலை...
விடுமுறை நாட்களிலும் வேலை .....
யார் பதிவுக்கும் COMMENT போட முடியவில்லை ....
ஆனால் எல்லா பதிவையும் படித்துவிடுகிறேன்....

டிஸ்கி 2:-இந்த தொடர் பதிவை நீங்கள் தொடரவில்லை என்றால் 
செல்வா கதைகளை நான் தொடருவேன் என்று எச்சரிக்கிறேன் ....
இனி உங்கள் பாடு .....(நான் தொடர்ந்தால் என்ன ஆகும் ???) 

டிஸ்கி 3:-Online Works For All Says:

Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html
எப்படியும் இவர் வந்து பதிவை படிக்காம இந்த கமெண்ட் போட போறார்....
அவருக்கு ஏன் சிரமம்...அதை நாமலே போட்டுடுவோம்.....

(யப்பா சாமீ...முடியலை ....விட்டுடு சாமீ ...உன் கையை காலா,,இன்னும் எதைஎதையோ எப்படியோ 
நினைத்து கேக்குறோம்...இல்ல வேற கமெண்ட் போடு ....
V.K.Ravindra Kumar 
Phone: 99653 05150 
Mail: contactraindar@gmail.com 
இது தாங்க இவர் முகவரி)

இவர் கமெண்ட்-ஐ 
SPAM-ல போடுங்க ...

ரோம்ப வெறி புடிச்ச மாதிரி இருக்கா???
அப்ப கமெண்ட்-ல கொலைவெறியோட தாக்குங்க.....

26 comments:

NaSo said...

//இப்படிஎல்லாம் மூலையை கசக்கிக்கொண்டு இருப்பார்கள் ...//

பாஸ் அது மூளை தானே?

நாய் நக்ஸ் said...

திருத்திவிட்டேன் ...நன்றி ..

முத்தரசு said...

ரூம் போட்டு யோசித்து பகிர்ந்தமைக்கு நன்றி

வெளங்காதவன்™ said...

கக்கா போகும்போது உதித்த கணநேர யோசனை என்பதால், விட்டுவிடுகிறேன்!

#என்னா ஒரு வில்லத்தனம்?

வெளங்காதவன்™ said...

//Online Works For All Says:

Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html
எப்படியும் இவர் வந்து பதிவை படிக்காம இந்த கமெண்ட் போட போறார்....
அவருக்கு ஏன் சிரமம்...அதை நாமலே போட்டுடுவோம்.....////

ROFL...

வெளங்காதவன்™ said...

//NAAI-NAKKS said...

திருத்திவிட்டேன் ...நன்றி ..////

நான் கூட திருந்திட்டீங்கலோன்னு நெனச்சேன்...

#வர வர, கண்ணு மங்களா தெர்து.... பிராண்ட மாத்தணும்...
:)

Unknown said...

யோவ் நீ என்னதான்யா நெனச்சிட்டு இருக்க...தொடர் பதிவுன்னு சொல்லிட்டு...ரெண்டு நாளா தலைப்பு மட்டும் உம்மோட ப்ளோக்ல ஓடிட்டு இருந்ததே அது போலையா ஹிஹி!

MANO நாஞ்சில் மனோ said...

நாசமாபோச்சு போங்க என்னையும் இழுத்து விட்டாச்சு....சிபி பன்னாடை தப்பிச்சுட்டானே....

தமிழ்வாசி பிரகாஷ் said...

அட... இப்பவே இப்படி கலக்கரிங்களே... இன்னும் புத்தாண்டு சமயம் என்னென்ன போட போரிங்களோ பதிவா?

தொடர்பதிவு தானே எழுதணும். உங்கள போல நானும் தலைப்பை மட்டும் ரெண்டு நாளைக்கு உலாவ விடறேன்.

Unknown said...

//ரோம்ப வெறி புடிச்ச மாதிரி இருக்கா???
அப்ப கமெண்ட்-ல கொலைவெறியோட தாக்குங்க.....//
உங்களுக்கு ரோம்ப ரோம்ப சாரி ரொம்ப ரொம்ப வெறியாயிடுச்சா என்ன நாய்நக்ஸ் சார்....வெயில்வேற அதிகமாயில்லையே இப்ப மழைக்காலம்தானே...அதுக்கே இப்படின்னா வெய்யக்காலம் வந்தா எப்புடியோ....

சந்தானம் as பார்த்தா said...

முதலில் தொடர அழைக்கப்பட்ட laptop மனோ அண்ணன் தொடர் பதிவு போடுமாறு கேட்டு கொள்கிறேன்...

சந்தானம் as பார்த்தா said...

//

யாருப்பா அங்க....உடனே என்னை எதிர் கட்சிகாரன் என்பது....
நான் அந்த அளவுக்கு வொர்த் இல்லிங்க ...

//

அப்ப எந்த அளவுக்கு வொர்த் நீங்க???

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

வெளங்காதவன் said...

//NAAI-NAKKS said...

திருத்திவிட்டேன் ...நன்றி ..////

நான் கூட திருந்திட்டீங்கலோன்னு நெனச்சேன்...

#வர வர, கண்ணு மங்களா தெர்து.... பிராண்ட மாத்தணும்...
:)//

எலேய் யாரடா அது மங்களா? உன் பிகரா?

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !//

படித்ததில் பிடித்தது

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இன்று என் வலையில்

நண்டும், விரால் மீனும்தான் கிடைத்தது

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இன்று என் வீட்டு பாத்ரூமில்

பினாயில் காலியாகிவிட்டது

நாய் நக்ஸ் said...

மெய்யாலுமா ..???
சாருக்கு--
Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !.......20 கமெண்ட் பார்சல்....

நாய் நக்ஸ் said...

யப்பா சாமீ...நீங்களுமா ????
உங்களுக்கும் ஒரு டிஸ்கி
போடவேண்டியதுதான் .....:))))))

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இன்று என் வீட்டு கிச்சனில்

ஒண்ணுமே சமைக்காம தெருவில் போய் பிச்சை எடுத்து saappitten

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

இன்று என் வயிற்றில்

பூரியும் மசால் கிழங்கும்

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

NAAI-NAKKS said...

யப்பா சாமீ...நீங்களுமா ????
உங்களுக்கும் ஒரு டிஸ்கி
போடவேண்டியதுதான் .....:))))))//

hehe

ம.தி.சுதா said...

அத்தனை பதிவர்களையும் நம்மாளு மிரட்டலுக்கு அடிபணியுமாறு அன்பாக வேண்டுகிறேன்....

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
மழை காலச் சளித் தொல்லைக்கு வீட்டில் ஒரு சிக்கன மந்திரம் Nuisance cold solution

செட்டப் செல்லப்பா said...

அனைவருக்கும் வணக்கம்

செட்டப் செல்லப்பா said...

அண்ணே புத்தாண்டுக்கு ஸ்பெசலா எதாச்சும் வேணுமாண்ணே?

rajamelaiyur said...

தொடரலாம் .. தொடராமலும் இருக்கலாம் .. தொடர்ந்து தொடராம இருக்கலாம்
அன்புடன்
ராஜா

நெருப்பு நரியுடன்(FIREBOX) சில விளையாட்டுகள்.

நிரூபன் said...

கலக்கல் காமெடிப் பதிவு பாஸ்..

அந்த ஆன்லைன் பிசினஸ் விளம்பரத்திற்கு வைச்சீங்க பாருங்க ஆப்பூஊஊஊஊஊஊஊஊஊஊஊஉ

செம காமெடி