என்னாடா இவன் தொடர்ந்து பதிவு போடுரானேன்னு நினைக்காதீங்க...இன்றைய பதிவுக்கு காரணம் இவர்தான்--திரு.தமிழ்வாசி
அப்புறம் சென்னையில் பதிவர் சந்திப்பு வேற நடக்க போது இல்லையா...
அதுக்கு பொறுப்பாளர்கள்,,,மற்றவர்கள் ப்ரோமோ பண்ணுவதை விட நான் பண்ணாதான் நிகழ்ச்சி ஹிட் ஆகுமாம்...ஒரே தொல்லை போங்க...அதனால...
தேதி முடிவானதும் எல்லாரும் சென்னையை நோக்கி தங்களது நடை பழகிய நடை வண்டியை எடுத்துக்கொண்டு...ஒரு மாதம் முன்பே கிளம்பி விடுங்கள்...
வரும்போது வழியில் அந்தந்த ஊரில் உள்ள பதிவர்களிடம் கையெழுத்து வாங்கிக்கொண்டு வந்தால்...வந்து போற செலவுகளை...பிரபா,,செந்தில்,,சிவகுமார்,,பட்டிக்ஸ்...இன்ன பிற பதிவர்கள் தருவதாக வாக்களித்துள்ளார்கள்....என்ன கருமம்...தேர்தல் வாக்குறுதி என்று நீங்கள் நினைத்தால் நான் பொறுப்பல்ல....!!!
சரி பதிவுக்கு போவோமா...??? {{கொஞ்சம் பெரிய பதிவா போட எவ்வளவு நீட்டி முழக்க வேண்டி இருக்கு..ம்ம்ம்ம்}}
2006 முதல் 2009 வரை பதிவுலகம் செம கலை கட்டியது...அப்போதிருந்த (தற்சமய சீனியர்) பதிவர்கள்...பதிவு மொக்கையோ,,அல்லது சீரியஸ்யோ
பின்னூட்டத்தில் செம கலக்கு கலக்கினார்கள்....பதிவை படிப்பதை விட பின்னூட்டங்கள் படிப்பதில் பொழுது ஓடிடும்....
அந்த கால கட்டங்களில் எனக்கு கணிணி,,நெட் அறிமுகம்,,அனுபவம் மிக மிக
குறைவே...இன்னும் சொல்லபோனால் பதிவுலகம் என்பதே தெரியாமல் இருந்தது...
அதன் பிறகு புதியவர்கள் நிறைய பேர் வர தொடங்கினார்கள்...
குறிப்பாகடெரர்கும்மி மக்கள்,,மனோ,,,விக்கி,,,வீடு,,தமிழ்வாசி,,,செங்கோவி,,,,,சிவகுமார்,,செந்தில்,,
நிருபன்,ஐடியா மணி....இப்படி நிறைய பேர்...{இங்கு நான் குறிப்பிடும் பதிவர்கள் கமெண்ட்-ல் கும்மி அடிப்பவர்களை...மற்றவர்களை ஒதுக்க வில்லை...தற்சமயம் நினைவில் வருபவர்கள்}....பதிவு எப்படிப்பட்டதோ...அதெல்லாம் முக்கியம் இல்லை...கமெண்ட் செக்சன் செமையாக தூள் பறக்கும்.....
இந்த மாதிரி கலக்கல் கமெண்ட் போர்ஷனில் கமெண்ட் போட்டு நிறைய புது பதிவர்கள்...மற்றவர்களை கவனிக்க வைத்தார்கள்...இவர்களும் அங்கு போய் ஊக்குவித்தார்கள்...
குறிப்பாக...சரி வேண்டாம்...அவரை பற்றி கடைசியில் பார்ப்போம்...
இப்ப இந்த போஸ்ட் எதுக்குன்னா....அன்றைய கால கட்டத்தில் ஒரு நாளைக்கு குறைந்தது 50- போஸ்ட்ஆவது வரும்...புதியவர்களுக்கு அது நல்ல ஊக்கமாக இருந்தது...பதிவு,,பின்னூட்டம்,,,பதிவு,,,பின்னூட்டம்...என்று மத்த வேலைகளை பார்க்க முடியாமல் இங்கேயே காலத்தை கழித்தார்கள் பலர்....
திரு திண்டுக்கல் தனபாலன்,,ரமணி ...இப்படி ஒரு சிலர் முதல் ஆளாக வருகை தந்து கமெண்ட்,,வோட் இட்டு செல்வர்....
இப்படி எல்லாமே நல்லபடியாக போய்க்கிட்டு இருக்கும் போது...
ஒருசிலர் வந்து டெம்பிளேட் கமெண்ட் ஆக ----
அருமை,,,
:)))),,
பகிர்வுக்கு நன்றி,,,
முடியலை,,,
சூப்பர்,,,
ஸ்..அபா,,,,
அப்படீனு போடுவாங்க....மக்களும் சரி அவங்களுக்கு நேரம் இல்லை போல...அப்படீன்னு வேற விகல்ப்பம் இல்லாமல் நினைச்சிக்கிட்டு இருப்பாங்க....
இந்த மாதிரி கால கட்டத்துல மிக பெரிய VIP க்கள் வந்து கமெண்ட் போட ஆரம்பிச்சாங்க....கொய்யால....கமெண்ட்-ஆ அது.....பல பதிவர்கள் என் பதிவுக்கு இவங்க கமெண்ட் போட மாட்டாங்களா என்று ஏங்கி,,தவம்,,இருந்து இன்னும் மாந்திரீகம்,,,போலி சாமியார் கிட்ட எல்லாம் போய் வழி கேக்க ஆரம்பிச்சிட்டாங்க....
இருங்க...இருங்க...அவங்க யாருன்னு அதுக்குள்ளே சொன்னா பதிவு முடிஞ்சிடும்...இன்னும் கொஞ்சம் மொக்கை போட்டுடுறேனே....
கமெண்ட்னா கமெண்ட்....அப்படி ஒரு கமெண்ட்....ஜன்ம சாபல்யம் அடைந்த மாதிரி....இவங்க கமெண்ட் வந்தாதான் பதிவின் நோக்கமே பூர்த்தியாகும்...அன்று இரவு பதிவர்கள் நிம்மதியாக தூங்குவாங்கன்னா பார்த்துக்குங்களேன்...
இப்படி பல பல பதிவர்களுக்கு மிக பெரிய ஊக்க சக்தியாக இருந்தவங்க...இப்ப வர்றதில்லை....பார்ப்போம்...இந்த பதிவை படிச்சிட்டு...உசுப்பேரி அவங்க மீண்டும் வராங்கலான்னு...!!!
அப்படி வந்தா...பதிவுலகம்...மீண்டும் கலை கட்டும்....மீண்டும் நாம் அனைவரும் வாழ்வாங்கு வாழலாம்...
ஆனா ஒன்னுங்க...அவங்க யார்கிட்டயும் பாலோயர் ஆகலை...எந்த குழுமத்திலும் இல்லை...எப்படித்தான் பதிவு போட்ட வுடனே வருவாங்க என்று தெரியாது...என்ன மாய ஜாலம் செய்வாங்க என்று தெரியாது...ஆனா ரஜினி சொன்ன மாதிரி வரவேண்டிய நேரத்துல கரெக்ட்ஆ வந்துடுவாங்க...
சோ...இந்த பதிவை படிக்கும் மக்கள் அனைவரும்...அவர்களுக்கு மெயில் அனுப்பி அவர்களை மீண்டும் வரச்சொல்லி வேண்டுகோள் வையுங்கள்....
நமது பதிவுலகத்தை காப்பாற்றுங்கள்...யார் கண்டா அவங்க வந்தா நாடே சுபிச்சம் ஆனாலும் ஆகும்...சரி போதும் அவங்களை பற்றிய பில்டப்பு....
அவங்க இவங்க தாங்க....!!!???இரண்டு பேர் தற்சமயத்துக்கு...இவங்க ஒரே ஆள் இல்லை....
Investment Job.
Visit Here: http://adf.ly/4FKbj
http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html
இன்னும் ஒரு சில பேர் இருக்காங்க..இப்ப அவங்களை காணோமா...அதான் தேட முடியலை...!!! உங்களுக்கு நினைவு வந்தா...கமெண்ட்-ல் சொல்லவும்....
{{{ஆங் ....மறந்தே போயிட்டேனே....குறிப்பாக...சரி வேண்டாம்...அவரை பற்றி கடைசியில் பார்ப்போம்...}}}
இவர்...வேற...வேற...வேற...நம்ம விஜய்,,,கோட்டு கோபிநாத் மாதிரி....மேலே சொன்னவங்களுக்கு அப்படியே எதிர் பதம் இவர்....பதிவுலகில் என் குரு...ஆசான்...வழி காட்டி...இன்னும் பல...அவர்...பன்னிக்குட்டி ராம்சாமி
வேற என்னத்தை சொல்ல....ஹும்.........!!!!!!!
(நண்பர்களே கொஞ்சம் சிரமம் பாராமல் திரட்டிகளில் இணைத்துவிடவும்...அனைத்தும் மறந்துவிட்டது...நன்றி...நன்றி..)