Pages

Saturday, December 17, 2011

ஈரோடு சங்கமம் 2011-ஒரு பார்வை .....


அன்பர்களே....

டிஸ்கி:- 1
இங்க போட வேண்டிய முன்குறிப்பு.----
பின்குறிப்பாக...டிஸ்கி:-2,,3,,4,,5,,-ல் 

ஈரோடு பதிவர் சந்திப்புக்கு முதன் முதலாய் போயிருதேன் .....
சனிக்கிழமை இரவே ஈரோடு சென்றுவிட்டேன்....
சங்கம உறுப்பினர்கள் மிக அருமையாக---இரவே வந்தவர்களுக்கு 
தங்க விடுதி ஏற்ப்பாடு செய்திருந்தனர் ....
வந்திருந்த பதிவர்களிடம் என்னை அறிமுகப்படுதிக்கொண்டேன் ....
சிலர் சந்து பக்கம் ஒதுங்கினார்கள் ....( பேர் வேண்டாமே ப்ளீஸ் )
( என்ன என் ப்ளாக் பேர் சொன்னாலும் அப்படி ஒன்னு இருக்குதா.....என்று கேட்டார்கள் ....நாம வளரனுமோ ?? )

மறுநாள் ஞாயிற்றுகிழமை 9.00 கே விழா நடந்த அரங்கத்திற்கு 
சென்றுவிட்டேன் ....அறிமுகமான பதிவர்களுடன் .....

அட அட என்ன அன்பு இந்த ஈரோடு பதிவர்களிடம் ....
கையை பிடித்து இழுத்து செல்லாத குறையாக என்னை சாப்பாட்டு  கூடத்திற்கு அழைத்துசென்று சாப்பிட உட்கார வைத்துவிட்டு---தான் சென்றார்கள்..... 

காலை டிபன் மிக அருமை...பூரி,,முட்டை,,,குருமா,,இட்லி,,வடை,,,
என மிக பிரமாதமான விருந்து ....சுவையோ ...அப்படி...
மீண்டும் இந்த சுவை இனி அடுத்த சங்கமத்திற்கு தான்...
வேறுஎங்கும் வாய்ப்பேயில்லை....

மிக சரியாக 9.45 க்கு நிகழ்ச்சிகள் ஆரம்பித்தன....
அறிமுகபடலம்.,,ப்ளாக்-ன் எதிர்காலம்,,,ஈரோடு சங்கமத்தின்
உருவாக்கம்...இப்படி நிறைய ....
(இவை பற்றி என் அடுத்த பதிவில்)


நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்த போது மைக்-ல் அறிவிப்பாளர் ஒரு அறிவிப்பு செய்தார் 
தீடீர் என்று அனைவரிடமும் பரபரப்பு.....
இந்த சங்கம-விழாவிற்கு வர முடியாத வெளிநாட்டு
பிரபல பதிவர்கள் இரண்டு பேர் ...போன்
முலமாக எங்களிடம் பேசி நிகழ்ச்சிக்கு வாழ்த்து
தெரிவித்தார்கள்....
ஒரே உற்சாகத்துடன் எழுந்த கைதட்டலில்
மண்டபமே கிடு கிடுத்து போனது....

பிறகு வழக்கம் போல் அதிரடி சஸ்பென்ஸ்.....
நிகழ்ச்சிகள் நடந்தது.....
பிறகு மதிய விருந்து......விருந்துன்னா விருந்து....
அப்படி ஒரு விருந்து ....
நம் வீட்டு விழாவிற்கு கூட இப்படி பார்த்து பார்த்து
செய்து இந்த சுவை-ஐ கொண்டு வந்திருக்க மாட்டோம் ....
(இதை பற்றிய விவரங்கள் படத்துடன் அடுத்த பதிவில்)

மீண்டும் நிகழ்ச்சிகள் மிகுந்த உற்சாகத்துடன் ....
கலை கட்டியது....
மாலை வரை கலை கட்டிய நிழ்ச்சிகள் ...முடிவுக்கு
வந்த போது அதுவரை அனைவரிடமும் இருந்த உற்சாகம்
மொத்தமாக வடிந்து போனது ...
அனைவரிடமும் இன்னும் கொஞ்சம் நேரம் இந்த
நிகழ்ச்சி நீடிக்க கூடாதா என்ற ஏக்கம் அப்பட்டமாக
முகத்தில் தெரிந்தது....

ஒருவருக்கு ஒருவர் ...போன் நம்பர்,,,முகவரி வாங்கி கொண்டு
மீண்டும் அடுத்த சங்கமத்தில் கண்டிப்பாக சந்திப்போம்
என்று மன நிறைவுடன் பிரிந்து சென்றாகள்....
இந்த முறையும் மிஸ் செய்தவர்கள்....கண்டிப்பாகஅடுத்த முறையாவது கலந்து கொள்ளுங்கள்....இது நம்ம வீட்டு
விழா......PLEASE DONT MISS IT...HERE AFTER....
நன்றி....ஈரோடு சங்கம குழுவினர்களே.... HATS OFF.....

டிஸ்கி:-2

என்னடா நாளைதானே சங்கமம்...
இவன் இப்பவே நடந்த மாதிரி எழுதுறானே
என்று நினைக்கிறீங்களா???
எப்படியும் அட்டன் பண்ணவர்கள் இதை பத்தி
பதிவு போட போறாங்க....நாம முந்திக்குவோமே...
அப்படீன்னு.......ஹி....ஹி... (டிஸ்கி 3 ஐ பார்க்கவும்)

டிஸ்கி:-3

அதாவுதுங்க---இப்ப ஒரு படம்..வருவதற்குள்
பிரி-விவ்யு ஷோ பார்த்துட்டு விமர்சனம் எழுதுரதில்லையா...
அது போல தாங்க இதுவும்...போன வருட சங்கம நிகழ்ச்சியினை
வைத்துஇந்த வருட நிகழ்ச்சி உங்கள் பார்வைக்கு ....

ஆமாங்க....இந்த சினிமா விமர்சனத்தின் தொல்லை
தாங்க முடியலை.....அப்பாப்பா...முதல் ஷோ-விற்கு
டிக்கெட்,,எடுத்துட்டேன் முதல் கொண்டு,,
படம் பாக்குறேன்,,,இடைவேளை,,,எண்டு ....இப்படி
எல்லாத்தையும்,,,போடுறாங்க...இதுல வேற ...படம்
நல்லாஇருக்கு-னு சொல்லுறவங்க,,,நல்லாஇல்லை-னு சொல்லுரவங்களோட விமர்சனம் படிச்சிட்டு
இன்னும் தெருவுல கிழித்துக்கொண்டு ஓடாததுதான் பாக்கி....

போற போக்க பார்த்தா படம் பூஜை போட்ட அன்னிக்கே---
""பதிவுலக வரலாற்றில்---முதல் முறையாக எங்கள் தளத்தில்
சூப்பர் ஹிட் விமர்சனம் ...படிக்க தவறாதீர்கள்””னு
போடாததுதான் பாக்கி.....

இன்னும் எத்தனை விவ்யு-ல தான் ஒரு படத்த
விமர்சனம் பண்ணுவீங்க...

இறைவா படத்தை நாங்கள் பார்த்துக்கொள்கிறோம்...
இந்த
பதிவர்களின் சினிமா விமர்சனத்தில் இருந்து எங்களை நீ காப்பாற்று....

டிஸ்கி:-4

இந்த பதிவு முழுக்க முழுக்க கற்பனையே...!!!
யார் மனத்தையும் புண்படுத்த அல்ல...!!!
அப்படி......(அப்புறம் SO AND SO.....நீங்களே FILL பண்ணிக்குங்க)

டிஸ்கி:-5

இந்த பதிவு மிக நீளமாக போய் விட்டதால்....
நீண்ட நாட்களாக பதிவு போடாததால்....
இதை இரண்டு பதிவாக படித்து கொள்ளவும்....
அப்ப விழுந்த இடைவெளி சரி ஆகிடும்தானே???
ஹி..ஹி..நன்றி...!
(3...1 !)