Pages

Friday, February 10, 2012

கேட்டான் பாருங்க ...கேள்வி...!!!

அன்பர்களே....


கொஞ்ச நாளைக்கு முன் என் மகனுக்கும்..எனக்கும் நடந்த உரையாடல்...கீழே...
(மகனுக்கு பன்னிரண்டு வயது)


மகன் : அப்பா.....அப்பா....
(நான் கவனிக்கவில்லை)


மகன் : யோவ்..அப்பா...


நான் : சொல்லுப்பா....


மகன் : அது என்னப்பா எந்த நேரம் பார்த்தாலும் ப்ளாக்'ங்குற, கமெண்ட்ங்குற,                                                                                  போஸ்ட்ங்குற, வாய்ஸ் சாட்ங்குற, போதாதற்கு போன்ல வேற பேசுற..  அதையும் விட்டா பாத்ரூம்க்கு கூட செல்'ல எடுத்துக்குட்டு போற...அப்படி 
என்னதான்பா இருக்கு இந்த ..ப்ளாக்-ல?
இதால ஏதாவது யூஸ் இருக்கா?


நான்::அட என்னப்பா இப்படி கேட்டுட்ட...சொல்லுறேன் கேளு...ப்ளாக் என்பது ஒரு குடும்பம் மாதிரி...நாம அன்றாடம் சந்திக்கும் உறவுகள் அனைவரும் இங்க இருக்காங்க...


நல்ல தமிழ்,மற்றும்..நல்ல பழக்கவழக்கங்களுக்கு நம்ம சீனா தாத்தா இருக்கார்..
அப்புறம்..உனக்கு நல்ல சமையல் செய்துதர தேனம்மை, லெட்சுமி ..பாட்டி இருக்காங்க...
நம்மளை சிரிக்க வைக்க பன்னிக்குட்டி ராமசாமி சித்தப்பு இருக்கார்...அவர் கூட..ஒரு குரூப் இருக்குகுகு பாரு...அந்த குரூப் கூட பேசுனா....நம்ம நேரமே போறதே தெரியாது... அப்புறம்..நீ ஸ்கூல்-ல படிக்கிறல்ல...அந்த வாத்தியார்கள்....ராஜா,,கருண்,,சௌந்தர் ...இப்படி நிறைய பேர் இருக்காங்க...
தமிழை நல்ல படிக்க சொல்லுற..தமிழ் வாசி இருக்கார்..நம்ம வீட்டை எப்படி வச்சிக்கனும்னு சொல்லுற சுரேஷ்,உங்களை எப்படி வளர்க்கனும்னு சொல்லுற...சம்பத் இருக்கார்...நியாயத்தை மட்டும் பேச கழுகு குழுமம் இருக்கு....


இவங்க கூட நம்ம தாய்மாமன் விக்கி இருக்கார்....
யாராவது நம்ம கூட தேவை இல்லாம சண்டைக்கு வந்தால்...அருவாளோட 
கேக்க மனோ மாமா, ஆரூர்.மூனா.செந்தில்,இவங்க எல்லாம் இருக்காங்க...
நம்ம வீட்டுக்குள்ள ஜாலி-யா இருக்க ..நம்ம விகடகவி சிவக்குமார் இருக்காரு...
நாம என்ன என்ன உணவு சாப்பிடனும்னு சரியா சொல்ல உணவு உலகம் ஆபீசர் இருக்கார்...அப்புறம்...எப்போதுமே நம்பர் ஒன்-ஆ வர நம்ம சி.பி.செந்தில்குமார் பெரிப்பா இருக்காரு  
நமக்கு technical support பண்ண சசி,பிரபு இருக்காங்க... இப்படி அண்ணன் தம்பி , அக்கா,அண்ணி, சித்தப்பா,தாத்தா,பாட்டி,மாமான்னு இல்லாத உறவுகளே 
இல்லை மகனே...எல்லா உறவுகள் கூட ஒரே குடும்பமா இருக்கோம்...இதை விட வேற என்னடா வேணும்..?


மகன் : யப்பா ...நீங்க பலே ஆளுப்பா


நான் : என்னடா....சொல்லுற


மகன் : நீ போஸ்ட்டும் அதிகமா போடுவது இல்லை
ஆனாலும் இவ்வளவு சொந்தங்களை வச்சிருக்கே..உன்னை நெனைச்சா...பெருமையா இருக்கப்பா...


நான் : ஹஹ..அதுதான் பாசம்ங்கறது
(இல்லைன்னா ங்கொய்யால நைட் 12 மணிக்கு கூப்பிடுவேன்ல....)


மகன் :  எல்லாஞ் செரிபபா...சினிமா-ல இருக்குற மாதிரி வில்லன்-க இல்லையா...???


நான் : ஸ்ஸ்பாபா.....இருக்காங்கப்பா...அவங்க குரூப்-குரூப்-ஆ நிறைய இருக்காங்க...யார் வேண்டுமானாலும் யார் கூட வேணாலும் சண்டை போடுவாங்க...


மகன் :  யப்பா ...யப்பா...


நான் : என்னடா.. 


மகன் :  வந்து...


நான் : சொல்லுடா....


மகன் :  எல்லா உறவையும் சொன்னீங்க....முக்கியமான 
உறவை சொல்லலை ஏன்பா....?


நான் : அப்படியா...? என்ன உறவு சொல்லு!


மகன் :  வந்து...அடிக்க கூடாது....


நான் : சரி....அடிக்கலை...கேளு....


மகன் :  ம்...ம்..ம்.. எல்லா உறவுகளும் இருக்காங்க...வந்து..இந்த...அத்தையும்,,அத்தை பொண்ணும் இல்லையா....?!


நான் : அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்
(இப்ப என்ன பதில் சொல்லுறது..? பையன் கோர்த்து வுடுறானே)


மகன் :  யோவ் அப்பா பதில் சொல்லு....எங்கே எஸ்கேப் ஆகுற...


நான் : ஹலோ....யாரு.....டவர் கிடைக்கல...ஹலோ சத்தமா...பேசுங்க...ஹலோ...இருங்க வெளிய வந்து பேசுகிறேன்......


மகன் :  அய்யோ அப்பா....சிம்மை கழட்டி நான் கையில வெச்சிருக்கேன்....சிம் இல்லாத போன்ல யாருகிட்ட பேசிறியோ....நீ எப்படியும் இங்க வந்துதானே ஆகுனும் வாடி வா..அம்மா கிட்ட யாரோ பொண்ணுகிட்ட பேசிகிட்டு இருக்கிறேன்ன்னு போட்டு கொடுக்கிறேன் கேட்டதுக்கு அத்தைபொண்ணுன்னு சொன்னீன்னு சொல்லுகிறேன்....இன்னிக்கு பூரிகட்டை அடிதாம்ல
கொய்யா!

   
அன்பர்களே...YOUTUBE-ல சும்மா நோன்டிக்கிட்டு இருந்தப்ப இந்த வீடியோ கிடைச்சிது...சும்மா போட்டு வைக்குறேன்...ரசிங்களேன்...
( மனதுக்குள் எந்த கற்பனையும் வேண்டாம் ப்ளீஸ்...)




(ஏதாவது நண்பர்கள்,உறவுகள் விடுபட்டிருந்தால் மன்னிக்கவும்)

42 comments:

Anonymous said...
This comment has been removed by the author.
Anonymous said...

எங்கள் தங்கம் நக்கீரன் போட்டுள்ள பதிவினை அனைவரும் ரசியுங்கள். தங்கள் குடும்பத்திற்கு ஏற்ற நல்ல கருத்தினை சொல்லியுள்ளார். இதனை பின்பற்றினால் இதுநாள் வரை கஷ்ட வாழ்க்கை நடத்திய அனைவரும் வாழ்க்கையில் முன்னேறலாம். எழுத்துக்கள் அனைத்தும் முத்து முத்தாக உள்ளன. பெயருக்கு மட்டும் சிகப்பு கலர் கொடுத்துள்ள விதம் அருமையோ அருமை. பதிவில் எழுத்தை விட கேள்விக்குறி தான் அதிகம் இருப்பது இன்னும் பதிவிற்கு அழுத்தத்தை கொடுக்கிறது.

யோவ் இதுக்கு மேல எனக்கு டீசன்டா எழுதத்தெரியாதய்யா.

MANO நாஞ்சில் மனோ said...

அண்ணே வீடியோ கிளிப்புல சத்தமே வரலை....?

MANO நாஞ்சில் மனோ said...

மகன் : ம்...ம்..ம்.. எல்லா உறவுகளும் இருக்காங்க...வந்து..இந்த...அத்தையும்,,அத்தை பொண்ணும் இல்லையா....?!//

உங்க அப்பன் தொல்லை தாங்க முடியாம சுவர்ல முட்டிட்டு இருக்கோம், நீயுமா மருமகனே...? முடியல அவ்வ்வ்வ்வ்வ்....

MANO நாஞ்சில் மனோ said...

ஆமா அந்த வீடியோ கிளிப் மூலமா என்ன [[சுத்தம்]] சொல்ல வருகிறீர்...?

MANO நாஞ்சில் மனோ said...

இனி சிபி கண்ணாடி மேல சத்தியமா வீடியோ சாட்டிங்க்ல அருவாளை தூக்கவே மாட்டேன் ஹி ஹி....

இம்சைஅரசன் பாபு.. said...

:))

Unknown said...

பய புள்ள பாடம் நடத்துது...கொய்யால இதுல வீடியோ வேற....கலாய்சிட்டாராமாம்...இனி எதிரணில இருக்கவங்க பயந்துடுவாங்களாம்!

இம்சைஅரசன் பாபு.. said...

//நம்மளை சிரிக்க வைக்க பன்னிக்குட்டி ராமசாமி சித்தப்பு இருக்கார்...அவர் கூட..ஒரு குரூப் இருக்குகுகு பாரு...அந்த குரூப் கூட பேசுனா....நம்ம நேரமே போறதே தெரியாது//

ம்க்கும் ..இது வேறையா ....

Unknown said...

ஹலோ வீடியோ சத்தம் வரலைன்னு சொல்லாதிங்க..மீ..பாவம்...அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Unknown said...

இந்த வீடியோ மூலமா இவரு சொல்ல வர்ரது என்னன்னா....

கனவான்களே இவரு ஸ்போர்ட்ஸ்மேனாம்...இவருக்கு விளையாட்ட பாத்தவங்கள பிடிக்காதாம்...அதாவது இதுல இருந்து சொல்ல வர நீதி(கொடுமை!) என்னன்னா...எங்கயாவது சண்ட நடந்தா அத பாத்துட்டு இருக்க கூடாது இன்னும் பெரிசாக்குரா மாதிரி நடந்துக்கனுமாம்..

இதுல பலர இவரு Unlucky fellowsன்னு வேற சொல்ராரு..நடத்துய்யா!

Madhavan Srinivasagopalan said...

Good Imagination..

Anonymous said...

பன்னிக்குட்டி சித்தப்பு, சிபி பெரியப்பு.. சூப்பர் அப்பு!!

Anonymous said...

//ஏதாவது நண்பர்கள்,உறவுகள் விடுபட்டிருந்தால் மன்னிக்கவும்//

பன்மோகன் தாத்தா...

MANO நாஞ்சில் மனோ said...

விக்கியுலகம் said...
பய புள்ள பாடம் நடத்துது...கொய்யால இதுல வீடியோ வேற....கலாய்சிட்டாராமாம்...இனி எதிரணில இருக்கவங்க பயந்துடுவாங்களாம்!//

நானும் பயந்துட்டேன்ப்பா....

MANO நாஞ்சில் மனோ said...

விக்கியுலகம் said...
இந்த வீடியோ மூலமா இவரு சொல்ல வர்ரது என்னன்னா....

கனவான்களே இவரு ஸ்போர்ட்ஸ்மேனாம்...இவருக்கு விளையாட்ட பாத்தவங்கள பிடிக்காதாம்...அதாவது இதுல இருந்து சொல்ல வர நீதி(கொடுமை!) என்னன்னா...எங்கயாவது சண்ட நடந்தா அத பாத்துட்டு இருக்க கூடாது இன்னும் பெரிசாக்குரா மாதிரி நடந்துக்கனுமாம்..

இதுல பலர இவரு Unlucky fellowsன்னு வேற சொல்ராரு..நடத்துய்யா!//

ஹா ஹா ஹா ஹா முடியல...

சௌந்தர் said...

யாரை சுடுறீங்க நக்கீரன்...??? அப்படி என்ன கோவம்...

cheena (சீனா) said...

யோவ் நக்ஸ் - நான் தாத்தாவா - வன்மையாகக் கண்டிக்கிறேன். பயலுக்கு நல்வாழ்த்துகள் - பொழச்சிக்குவான்ல - நட்புடன் சீனா

தமிழ்வாசி பிரகாஷ் said...

அண்ணே, நக்ஸ்... இங்க வீடியோ சுத்திக்கிட்டே இருக்கே.... ஏதாவது வீடியோக்கு தந்துடிங்களா????

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஐயாம் தி.. ஸ்டீபன் ராஜ்.........

பன்னிக்குட்டி ராம்சாமி said...

என்னது சித்தப்புவா? ஏன்யா இப்படி? ஒரு அழகிய இளம் வாலிபன் மனதை இப்படி நோகடிக்கலாமா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

ஆனா எனக்கு வேடிக்க பார்க்கிறவங்களை புடிக்கும்........ அட கைதட்டுறதுக்கு நாலு அல்லக்கை வேணாமாய்யா?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

///// MANO நாஞ்சில் மனோ said...
அண்ணே வீடியோ கிளிப்புல சத்தமே வரலை....?/////

சத்தமா முக்கியம்?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

////MANO நாஞ்சில் மனோ said...
ஆமா அந்த வீடியோ கிளிப் மூலமா என்ன [[சுத்தம்]] சொல்ல வருகிறீர்...?////

வில்லனை சப்போர்ட் பண்ணா எப்படியும் சுட்டுடுவானுங்க....... அதானே?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////விக்கியுலகம் said...
பய புள்ள பாடம் நடத்துது...கொய்யால இதுல வீடியோ வேற....கலாய்சிட்டாராமாம்...இனி எதிரணில இருக்கவங்க பயந்துடுவாங்களாம்!/////

அது யாருண்ணே எதிரணி?

பன்னிக்குட்டி ராம்சாமி said...

/////இம்சைஅரசன் பாபு.. said...
//நம்மளை சிரிக்க வைக்க பன்னிக்குட்டி ராமசாமி சித்தப்பு இருக்கார்...அவர் கூட..ஒரு குரூப் இருக்குகுகு பாரு...அந்த குரூப் கூட பேசுனா....நம்ம நேரமே போறதே தெரியாது//

ம்க்கும் ..இது வேறையா ..../////

இன்னுமா நம்மளை நம்பிக்கிட்டு இருக்காங்க?

சேலம் தேவா said...

லாலாலா..ன்னு விக்ரமன் பட மூஸிக் ஞாபகத்துக்கு வந்துடுச்சுங்க...
குடும்பகாவியம் மாதிரி குடும்பபதிவு. :)

கோகுல் said...

அருவா விளையாடுது நம்ம மக்கா கையில

கோகுல் said...

உறவுக்கு கை கொடுப்போம்.

சி.பி.செந்தில்குமார் said...

wat u come to say? pls mail me hi hi

முத்தரசு said...

ரசித்தேன்

Anonymous said...

கல்யாண நாளை கொண்டாடும் எங்கள் நாயகன், விடிவெள்ளி, வருங்கால கில்மா ஸ்டார் நக்கீரன் வாழ்க, வாழ்க, மனைவியுடன் இணைந்து வாழ்க. பல்லாண்டு வாழ்க, எங்களை இம்சை எடுக்கும் வரை வாழ்க. உங்களுக்காக இன்றிரவு எக்ஸ்ட்ராவா ஒரு கட்டிங் போட்டுக்கிறேன்.

அப்பாதுரை said...

யார் இந்த நடிகர்? என்ன படம்?

மாலதி said...

அருமை.
வாழ்த்துகள்.

முட்டாப்பையன் said...

வணக்கம்.

விச்சு said...

வலைச்சரத்தில் இன்று இந்தப் பதிவினை அறிமுகம் செய்துள்ளேன். நேரமிருப்பின் வந்து பாருங்கள். தங்களின் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.
http://blogintamil.blogspot.in/2012/02/blog-post_19.html

சம்பத்குமார் said...

தாத்தா உங்களை பல்சுவை பதிவர்கள் என வலைசரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன் பொடிநடையா வாங்க!

பல்சுவை பதிவர்கள்

...αηαη∂.... said...

கலக்கிடிங்க மக்கா :)

gvsivam said...

உன்ன மாதிரி ....ஈன புத்திகாரனுக்கெல்லாம் என் ப்ளாக் open ஆகாது.சாமி நம்பிக்கையோட open பன்னாதான் ப்ளாக் open ஆகும்.

ஆனா நீ அதுக்கெல்லாம் சரிப்படமாட்ட...
சரி..அழாத அழாத...சந்தைல குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் வாங்கித்தரேன்.அடம்புடிக்காம இருக்கனும்.

அழாத டா செல்லம்.

நாய் நக்ஸ் said...

venkatesa gurukkal said...
உன்ன மாதிரி ....ஈன புத்திகாரனுக்கெல்லாம் என் ப்ளாக் open ஆகாது.சாமி நம்பிக்கையோட open பன்னாதான் ப்ளாக் open ஆகும்.

ஆனா நீ அதுக்கெல்லாம் சரிப்படமாட்ட...
சரி..அழாத அழாத...சந்தைல குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் வாங்கித்தரேன்.அடம்புடிக்காம இருக்கனும்.

அழாத டா செல்லம்.////

அப்ப அதுவும் தருவீங்களா...???
ரோஓஓஓஓஒம்ப நாள் ஆச்சி...
ஹி,,,ஹி,,ஹி...

நாய் நக்ஸ் said...

குரு...

இத்தோட லட்சம் வாட்டி சாமிய
pray பண்ணிட்டேன்...

உன் ப்ளாக் ஓபன் ஆகலையே...
செட்டிங்க்ஸ்-ல க்ளோஸ் பண்ணிட்டு
சாமி மேல பாரத்த போடுரீறு....

கோவை நேரம் said...

ஓஹோ...இங்க இருந்து பைட் ஆரம்பிக்குதா...நேரா தமிழ்வாசி போய்டீங்க போல இருக்கே....