Pages

Wednesday, August 29, 2012

சிறை வைக்கப்பட்ட பதிவர்கள்....!!!

வணக்கம் அன்பர்களே...

எல்லாரும் பதிவர் சந்திப்பை பற்றி....பதிவு போடட்டும் என்று காத்திருந்தேன்....

பதிவர் சந்திப்பை அனைவரும் நேரலை,,பதிவுகள் வாயிலாக 
அறிந்திருப்பீர்கள்....அனைவரும் சிறப்பாக எழுதியுள்ளார்கள்....
மிக்க நன்றி...

சரி நாம தலைப்புக்கு வருவோம்....

பதிவர் சந்திப்பு அன்று--பதிவர்கள் அறிமுகம் நடந்துச்சி இல்லையா...
அப்ப என்னை அழைக்க வேண்டாம்...பிரச்சனைகள் வரும் என்று கூறினேன்...

கேட்டாதானே...???

என்னை மிக நீண்ட முன்னுரை கொடுத்து கேபிள்,,சிபி,,அழைத்ததும்....

கூடி இருந்த பதிவர்கள் பயங்கர கரகோஷம்...விசில் சத்தம்...
இவை கட்டுக்கடங்காமல் குறிப்பிட்ட டெசிபல்-ஐ தாண்டி போயிடுச்சி...

அதனால என்ன ஆச்சின்னா....

விழா நடந்த மண்டபமே கிடுகிடுத்து போயிடுச்சி....
மண்டபம் முழுவதும் ஏகப்பட்ட விரிசல்கள்...

மண்டபத்து ஓனர் சும்மா இருப்பாரா...???
இரவு எல்லா செட்டில்மன்ட் பண்ணும்போது இதுக்கு எல்லாம் 
நஷ்ட ஈடு கேட்டு நம்ம விழ குழுவினரை 

சிறை வச்சிட்டாங்க....

அப்புறம் அவங்க எனக்கு போன் பண்ணி விஷயத்தை சொன்னாங்க...
விஷயத்தை கேள்வி பட்டதும்...என்னால தாங்க முடியலை...
நம்மால எவ்வளவு கஷ்டம் இவங்களுக்கு...
ச்சே...என்ன வாழ்க்கைடா இது...???

அப்புறம் கொஞ்சம் (கொஞ்சம் தான்) யோசித்தேன் ....
அந்த மண்டப ஓனர் கிட்ட போன்-ஐ கொடுக்க சொன்னேன்...

நான் அவரிடம் பேசினேன்.....

அதன் பின் நடந்தது எல்லாம் வரலாறு....
மண்டபத்து ஓனர்-நம்ம விழாகுழுவினர்கிட்ட என்ன சொன்னாருன்னா...

""இனி எத்தனை முறை வேண்டுமானாலும் இலவசமா  விழா நடத்திக்கொள்ளுங்கள்...

ஆனா இவர் கிட்ட மட்டும் போன் கொடுத்து பேச சொல்லாதீர்கள்....!!""


ஆகவே பதிவர்களே...மண்டபம் இனி நமக்குதான்....
இனி நாம நினைக்கும்போதெல்லாம் அந்த மண்டபத்துல
பதிவர் சந்திப்பு வைக்குறோம்...ஓகேவா ...???

விழா குழுவினருக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கங்கள்...பாராட்டுக்கள்...


(அட கொடுமையே...இந்த மாதத்துல மூணாவது பதிவு இது...இதுவும் ஒரு வரலாற்று பிழையே)






28 comments:

நாய் நக்ஸ் said...

அன்பர்களே..மொபைல் மூலம் பதிவிட்டதால்..சற்றே அனைத்திலும் இணைத்துவிடுங்கள்...ப்ளீஸ்...

நன்றி...

Madhavan Srinivasagopalan said...

// நம்ம விழ குழுவினரை //

விழுந்து அடிபட்டுக் கொண்ட அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள்..
விழாதவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு தர கோரிக்கை விடுக்கிறேன்..

sathishsangkavi.blogspot.com said...

பாவம் அந்த மண்டப ஓனர்... யார் பெத்த பிள்ளையோ...

வைகை said...

பதிவர் சந்திப்பு அன்று--பதிவர்கள் அறிமுகம் நடந்துச்சி இல்லையா...
அப்ப என்னை அழைக்க வேண்டாம்...பிரச்சனைகள் வரும் என்று கூறினேன்...//

நீங்களே சொன்னீங்களா? # அடடே!


MARI The Great said...

:)

முத்தரசு said...

எப்படியோ ஒரு பதிவு தேத்திட்டீங்க....

வைகை said...

நஷ்ட ஈடு கேட்டு நம்ம விழ குழுவினரை

சிறை வச்சிட்டாங்க....///

என்னய்யா இது அநியாயமா இருக்கு? சிறை நிரப்ப போனா மண்டபத்துல போடறாங்க! மண்டபத்துக்கு போனா சிறைல போடறாங்களா? :-)

வைகை said...

அப்புறம் கொஞ்சம் (கொஞ்சம் தான்) யோசித்தேன் ....
அந்த மண்டப ஓனர் கிட்ட போன்-ஐ கொடுக்க சொன்னேன்...///

இனி போன கையாள தொடுவாரா அவரு? :-)


வைகை said...

அதன் பின் நடந்தது எல்லாம் வரலாறு....//


அப்ப அதுக்கு முன்னாடி நடந்தது புவியியலா? :-)

வைகை said...

ஆகவே பதிவர்களே...மண்டபம் இனி நமக்குதான்....
இனி நாம நினைக்கும்போதெல்லாம் அந்த மண்டபத்துல///


அந்த மண்டபத்துல எழுதி கொடுப்பாங்களா? :-)

திண்டுக்கல் தனபாலன் said...

ஹா... ஹா... ரொம்ப நன்றிங்க...

சக்தி கல்வி மையம் said...

Ada...

வெளங்காதவன்™ said...

:)

ராஜி said...

பதிவர் சந்திப்பு நடத்த நிரந்தரமாக அதுவும் ஓசியில இடம் பிடிச்சு குடுத்த நாய் நக்ஸ் அண்ணன் வாழ்க வாழ்க.

இந்திரா said...

வரலாறு படைத்த நாய் நக்ஸ் வாழ்க..!!

கோவை நேரம் said...

மாம்ஸ்..அப்படியே கொஞ்சம் பட்டா போட்டு இருக்கலாம்..

”தளிர் சுரேஷ்” said...

நல்ல மொக்கை! சூப்பர்!

இன்று என் தளத்தில்!
கழுதை கௌரவம் கிடைக்கலேன்னா!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_29.html
ஹன்சிகா ரகசியங்கள்!
http://thalirssb.blogspot.in/2012/08/blog-post_7318.html

மணி (ஆயிரத்தில் ஒருவன்) said...

இன்று முதல் எனது போன் புக்கிலிருந்து ஒரு நம்பர் டெலிட் செய்யப்பட்டது,

arasan said...

ஹா ஹா ... நாளை வரலாறு சொல்லும்

rajamelaiyur said...

ஓனர் மிரட்டுனதுல நீங்க மயங்கி விழுத்தத போட்டோ எடுத்து போட்டு இருந்தாங்களே ?

Anonymous said...

சேர்த்துட்டேன் !

:)

Unknown said...

:)

Anonymous said...

ஏன்யா என்னை விட்டுட்டு போய் தூங்கினீர்கள். விழாவின் சிறப்பே குறைஞ்சி போச்சு.

CS. Mohan Kumar said...

// நான் அவரிடம் பேசினேன்.....

அதன் பின் நடந்தது எல்லாம் வரலாறு.//

அண்ணே விடாம சிரிச்சுக்கிட்டு இருக்கேன்

முரளிகண்ணன் said...

சூப்பர்

உணவு உலகம் said...

நாங்களெல்லாம் ஃபோன்ல என்னா பாடுபடுறோம்னு அன்னைக்கு அவருக்கு புரிஞ்சிருக்கும்! :)

Unknown said...

ரொம்ப அருமை

Anonymous said...

அன்பு நண்பருக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.