Pages

Sunday, July 14, 2013

காதல் கல்வெட்டு எழுத்துக்கள்....திடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி

வணக்கம் அன்பர்களே.....!!!

நமது--திடங்கொண்டு போராடு – காதல் கடிதம் பரிசுப் போட்டி---ஒன்றை அறிவித்திருந்தார்...ஏதோ ஒரு "ஊதுபத்தி வாசனை"" மயக்கும் நேரத்தில் நானும் கலந்து கொள்கிறேன் என்று அறிவித்துவிட்டேன்...கடைசி தேதியும் நெருங்கிவிட்டது.... நாளை முதல் அலுவலகம்...என்ன செய்யலாம் என்று...கடுமையாக யோசித்த!!?? போது......ஏன் என் தங்கமணிக்கு நான் முன்பு எழுதிய கவிதை என்னும் பேரில் கிறுக்கிய மன உற்சாகங்களை...இங்கே
கொட்ட கூடாது என்று எரிமலை வெடித்தது.....இனி... உங்கள் பாடு...நடுவர்கள் பாடு...
.(இப்ப இவைகள் மிக அதர பழையதாக தோன்றினாலும்,,மற்றவர்கள் இதே மாதிரி எழுதி நீங்கள் படித்திருந்தாலும்...என் தங்கமணிக்கு நான் எழுதியது காதல் கல்வெட்டுக்கல்தான்...).....ரோம்ப ஓட்டாதீங்கப்பா...சேகர் வில் டை...

இந்த கிறுக்கல்கள் 01/01/1991 முதல் எழுதியது.....இனி போட்டிக்கான பதிவு....
------------------------------------------------------------------------------------------------------------

மனதில்
முழுவதும் 
நீ...பூக்களாய்
முத்துக்களாய்
 நிலவாய்....நீ..

சிரிக்கும் 

வெள்ளி
குலுங்கும்
பவழம்..
மயக்கும்
மயில்
மங்கை..நீ...

மனதில்
முழுவதும்...
முழுவதும்..,,நீயே....

அழகின் சிரிப்பு....
அழகு 
அழகாக 
அடிமனதில் 
அலகு-சிறகடிக்க
 மகிழ்சியின் உச்சம்...
அலைகடலின்
 உற்சாகம்...

வண்ணதாமரை...

அழகு நல்லாள் ..நீ...
என் நினைவு முழுவதும்...
நீ...நீ...நீ...நீயே.........................................................................................................................7/1/91


விரலின் மீட்டலில்
வீணையின் ராகம்.....
அன்பு தழுவல்களில்
பூவின் மென்மை.....

முத்த ஒத்தடங்களில்
பூவின் சிறகடிப்பு...

கொஞ்சும் பேச்சுக்களில்
கிளியின் குரல் இனிமை....

கண்களின் அசைவு...
புறாக்களின் சிறகடிப்பு...

அன்பே....
நானோ உன்னை சுற்றும்....
வண்டானேன்...வண்டானேன்...

மலரனையில்..
மஞ்சம் கொண்டு...
மஞ்சள் மங்கை...நீ...
மயக்கினாய்.....

கோவை இதழ்களில்
அமுதுன்ன வந்த என்னை....
நீ....?????!!!!!!!

என் இதயம் முழுவதும்...
உன்னை நீயே ......
செதுக்கிகொண்டாய்.........................................................................................................7/1/91


என் உயிரின் ஒளியே...
பொங்கிவரும் அலைகளாய்...
நம் காதலின் நினைவுகள்...

என் மூச்சில் புதுமணம்...
ஆம்...கண்ணே...நான் உன்னை....
உன் பேரை மட்டுமே
சுவாசிக்கிறேன்................................................................................................................8/1/91

சிலந்தி வலைபோல்
நம் காதலின்....
மெல்லிய உணர்வு
இழைகள்.....
மனித நேயத்தின்.....
அன்பான வலையில் அன்பே
நான் உன்னில் முழுகுகிறேன்.....என்றென்றும்..............................................23/1/91

அன்பே
மாலை நேரத்து வானம் கூட
மஞ்சள் ஒளியில் இருந்து வேறுபடலாம்...
ஆனால்
நீயும் நானும் வேறல்ல.....உன் சுவாசம்....

அன்பே...
பாலைவனம் கூட தன் தன்மையில்
வேறுபட்டு சோலைவனம்  ஆகலாம்...
ஆனால்
நீயும் நானும் வேறல்ல......உன் சுவாசம்.......

அன்பே....
சுட்டெரிக்கும் சூரியன் கூட 

நிலவாக மாறலாம் 
ஆனால்
நீயும் நானும் வேறல்ல......உன் சுவாசம்.......

அன்பே 
நம் இதயத்துடிப்பின்
நேரம் கூட மாறி மாறி ஒலிக்கலாம்...
நீயும் நானும் வேறல்ல......உன் சுவாசம்.................................................................1/3/91


நான் என்னை என்னவென்று சொல்வேனடி....????

என் இதயமோ உன்னை மட்டும்-துடிக்க.....
என் கண்களோ உன்னை தன்னுள் கொண்டுவர....
என் செவிகளோ உன் குயிலின் குரலை-நினைக்க...
என் நாசியோ உன் இனிய மனத்தை-நுகர.....
என் இதழ்களோ உன் குவிந்த அதரத்தை தேட....
என் நினைவுகளே-நீயாகி போனதினால்
நான் என்னை மறந்தேன்...நான் என்னை என்னவென்று சொல்வேனடி.???18/4/91


என்
நிலவவள்
வானவீதியில்
அன்னநடை
நடப்பாளே........
மல்லிகை பூக்களை
நட்சத்திரங்களாக...
இறைத்து...!!!!........................................................................................................................19/4/91

காலை முதல் விதவையாய் இருந்த
சூரியன்--மாலையில் சுமங்கலி ஆனாள்...
பிறை சூடி, பூவிட்டு,பொட்டிட்ட
மணவாளன் யாரோ....???
மனதை மயக்கும் மலை சிகரங்களோ
அன்று--இரவோ--மணவாளன் ஆனது....???

அல்ல.....

என்னவளின் மதி(முக) அழகு கண்டாள் ....
பொறாமைபட்டாள்--வெட்கத்துடன்--முகம்
சிவந்தாளே இந்த தங்க வெள்ளியழகி....!!!!...............................................................19/4/91


@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@  

போட்டிக்கான பதிவு முடிந்தது....இன்னும் இருக்கு.......வேண்டாம்...உங்க உயிர் மேல எனக்கு அக்கறை இருக்கு....!!!!

மக்களே....அன்பு நண்பர்களே....இது வரை மொக்கை போட்ட என்னை பழி வாங்கினால்...தற்சமயம் எழுத நினைத்திருக்கும் கவிதைகள் இனி வெளி இடப்படும் என்று எச்சரிக்கிறேன்...

என் செல்லத்துக்கு நான் எழுத நினைத்த காதல் கடிதம்.....!!!.....மொக்கை பதிவுக்கு இங்கு செல்லவும் 


நண்பர்களே...கொஞ்சம் சிரமம் பாராமல்...திரட்டிகளில் இணைத்துவிடவும்...
எனக்கு username,,pw....மறந்துவிட்டது...

25 comments:

வெளங்காதவன்™ said...

Madhimuka?

திண்டுக்கல் தனபாலன் said...

நீங்கள் சொல்லாவிட்டாலும் காதல் கல்வெட்டுக்கள் தான்... பாராட்டுக்கள்...

வரிகள் ஒவ்வொன்றும் அருமை...

/// இரும்பிலே ஓர் இருதயம் முளைக்குதோ...?
முதல் முறை காதல் அழைக்குதோ...?
பூஜ்ஜியம் ஒன்றோடு... பூவாசம் இன்றோடு... ///

சே... தேவையில்லாமல் எந்திரன் பாடல் ஞாபகம் வந்து விட்டது... (
கவிதைகேற்ற பாடல்களை பிறகு அனுப்புகிறேன்...) ஹிஹி...

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்...

தனிமரம் said...

ஆஹா அண்ணாச்சியின் காதல் பாடல் இப்படியா ஏந்திரா ஏந்திரா:))) போட்டியில் வெற்றி பெற நல்வாழ்த்துக்கள்!

நாய் நக்ஸ் said...

Blogger வெளங்காதவன்™ said...
Madhimuka?////////////

இது கவிதையா....ஏன்...ஏன்...உமக்கு இந்த கொலை வெறி....

Blogger திண்டுக்கல் தனபாலன் said...
நீங்கள் சொல்லாவிட்டாலும் காதல் கல்வெட்டுக்கள் தான்... பாராட்டுக்கள்...

வரிகள் ஒவ்வொன்றும் அருமை...///////

தனிமரம் said...
ஆஹா அண்ணாச்சியின் காதல் பாடல் இப்படியா ஏந்திரா ஏந்திரா:))) போட்டியில் வெற்றி பெற நல்வாழ்த்துக்கள்!///////

நன்றி....நன்றி.....நன்றி....

Anonymous said...

போதையின் உச்சம் நீயே
விஸ்கிக்கே வில்லன் நீயே
டாஸ்மார்க்கின் டான் நீயே
நீயே நீயே நீயே

மிஸ்டு கால் மன்னன் நீயே
போனில் அறுப்பவனும் நீயே
மொக்கை மன்னன் நீயே
நீயே நீயே நீயே

நெருங்கிய நண்பனும் நீயே
இடம் அறியா வில்லனும் நீயே
மொத்தத்தில் எல்லாமே நீயே
நீயே நீயே நீயே

நாங்களும் எழுதுவோம்ல

தமிழ்வாசி பிரகாஷ் said...

நக்ஸ்... இம்புட்டு பாசமான காதல் கடிதமா???

முதல் பரிசு உமக்கு தான்..

MANO நாஞ்சில் மனோ said...

போதையின் உச்சம் நீயே
விஸ்கிக்கே வில்லன் நீயே
டாஸ்மார்க்கின் டான் நீயே
நீயே நீயே நீயே

மிஸ்டு கால் மன்னன் நீயே
போனில் அறுப்பவனும் நீயே
மொக்கை மன்னன் நீயே
நீயே நீயே நீயே

நெருங்கிய நண்பனும் நீயே
இடம் அறியா வில்லனும் நீயே
மொத்தத்தில் எல்லாமே நீயே
நீயே நீயே நீயே

MANO நாஞ்சில் மனோ said...

முதல் பருப்பு ச்சே ச்சீ பரிசு உங்களுக்குத்தான் அண்ணே, பரிசு வாங்கப் போகபோவும்போது நிதானமாக செல்லவும்.

சதீஷ் செல்லதுரை said...

அண்ணே நீங்க எங்கியோ போய்ட்டிங்க.....

பன்னிக்குட்டி ராம்சாமி said...

வரும் 18ம் தேதி முதல் 23ம் தேதி வரை நடைபெற உள்ள மாணவர் காங்கிரஸ் மறுதேர்தலை புறக்கணிக்கப் போவதாக கார்த்தி சிதம்பரம் கோஷ்டி அறிவித்துள்ளது. தமிழக மாணவர் காங்கிரஸ் தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 19ம் தேதி முதல் 23ம் தேதி வரை நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் அணியைச் சேர்ந்த கலையரசன் வெற்றி பெற்று தலைவராக தேர்வு செய்யப்பட்டார். ஆனால் கலையரசன் மாணவரே அல்ல என்றும், அதற்கு ஆதரமாக அவர் கொடுத்த அனைத்து தகவல்களும், ஆவணங்களும் போலி என்றும், எனவே, அவரை தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் கார்த்தி சிதம்பரம் கோஷ்டியைச் சேர்ந்த ராமநாதன் (துணைத் தலைவர்) உள்ளிட்ட 9 பேர் தேர்தல் ஆணையரிடம் புகார் அளித்தனர். இதனால் தேர்தல் முடிவுகள் அறிவிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. மேலும் தேர்தல் முடிவு நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் கலையரசன் மீது புகார் கொடுத்த 9 பேர் மாணவர் காங்கிரசில் இருந்து அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த தகவல் எல்லாம் காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனையடுத்து தமிழக மாணவர் காங்கிரசை கலைத்து ராகுல் காந்தி உத்தரவிட்டார்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

இந்த நிலையில் மாணவர் காங்கிரசுக்கு மறு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி வரும் 18ம் தேதி முதல் 23ம் தேதி வரை மறுதேர்தல் நடைபெறுகிறது. இதற்காக, தமிழக காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் வேட்பு மனுக்கள் பெறப்பட்டு வருகின்றது. தேர்தல் அலுவலர்களாக தனுலாகான், மனுஜெயின் ஆகியோர் நிமிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் மாணவர் காங்கிரஸ் தேர்தலை புறக்கணிப்பதாக கார்த்தி சிதம்பரம் கோஷ்டியைச் சேர்ந்தவர்கள் அறிவித்துள்ளனர். இதனால் மாணவர் காங்கிரஸ் தேர்தலில் மீண்டும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

saidaiazeez.blogspot.in said...

பன்னிக்குட்டியண்ணே
பதிவ படிச்சுட்டு தலமுடியெல்லாம் அப்படியே நெட்டுக்குட்டு நிக்கும்போது நீங்க வேற இப்படி பின்னூட்டம் போட்டு...
ஏன் எல்லோரும் இப்படி கெளம்பிட்டீங்க?
நாங்க என்ன பாவம் பண்ணோ{ம்}?
சீனு உனக்கு இருக்குடீ... பதிவர் சந்திப்புலே!

Manimaran said...


கவிதை நல்லாத்தான் இருக்கு..
வாழ்த்துக்கள்.

நாய் நக்ஸ் said...

Blogger ஆரூர் மூனா செந்தில் said...

Blogger பன்னிக்குட்டி ராம்சாமி said.../////////////


ஏன்யா....நல்லாதானே போய்க்கிட்டு இருக்கு....

ஆனாலும்...இம்புட்டு பொறாமை ஆகக்கூடாது...

நாய் நக்ஸ் said...

Blogger MANO நாஞ்சில் மனோ said...
முதல் பருப்பு ச்சே ச்சீ பரிசு உங்களுக்குத்தான் அண்ணே, பரிசு வாங்கப் போகபோவும்போது நிதானமாக செல்லவும்.

Blogger தமிழ்வாசி பிரகாஷ் said...
நக்ஸ்... இம்புட்டு பாசமான காதல் கடிதமா???


Blogger சதீஷ் செல்லதுரை said...
அண்ணே நீங்க எங்கியோ போய்ட்டிங்க.....

Blogger Manimaran said...

கவிதை நல்லாத்தான் இருக்கு..
வாழ்த்துக்கள்.////////////////


நன்றி....நன்றி...நன்றி....

நாய் நக்ஸ் said...

Blogger சைதை அஜீஸ் said...
பன்னிக்குட்டியண்ணே
பதிவ படிச்சுட்டு தலமுடியெல்லாம் அப்படியே நெட்டுக்குட்டு நிக்கும்போது நீங்க வேற இப்படி பின்னூட்டம் போட்டு...
ஏன் எல்லோரும் இப்படி கெளம்பிட்டீங்க?
நாங்க என்ன பாவம் பண்ணோ{ம்}?
சீனு உனக்கு இருக்குடீ... பதிவர் சந்திப்புலே!//////////////////////

அதானே....
அது ஒன்னும் இல்ல தல....எனக்கு இம்புட்டு அறிவான்னு,,,மக்கள்...திகைச்சிபோய் கிடக்காங்க....

செங்கோவி said...

அடடா..உமக்குள்ள இப்படி ஒரு கவிஞரா?

உண்மையில் நல்லா இருக்குய்யா.

நாய் நக்ஸ் said...

Blogger செங்கோவி said...
அடடா..உமக்குள்ள இப்படி ஒரு கவிஞரா?

உண்மையில் நல்லா இருக்குய்யா.//////


நன்றி...செங்கோவி....

அங்கு...அனைவரும்...நலமா???

Ranjani Narayanan said...

//என் இதயம் முழுவதும் உன்னை நீயே செதுக்கிக் கொண்டாய்//


உங்கள் காதலியின் அழகு கண்டு முகம் சிவந்துபோனதா சூரியன்? நல்ல கற்பனை.

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

நாய் நக்ஸ் said...

Blogger Ranjani Narayanan said...
//என் இதயம் முழுவதும் உன்னை நீயே செதுக்கிக் கொண்டாய்//


உங்கள் காதலியின் அழகு கண்டு முகம் சிவந்துபோனதா சூரியன்? நல்ல கற்பனை.////////////////

நன்றி அம்மா....

Tamizhmuhil Prakasam said...

கவிதைகளனைத்தும் அருமை.போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்.

அனைவருக்கும் அன்பு  said...

காதல் ததும்புகிறது கவி வரிகளில் வாழ்த்துக்கள்

VOICE OF INDIAN said...

அருமையான காதல் கடிதம்... போட்டியில் வெல்ல வாழ்த்துக்கள்....

நாய் நக்ஸ் said...

Blogger Tamizhmuhil Prakasam said...

Blogger கோவை மு சரளா said...

Blogger Bala subramanian said.../////////////////////////


நன்றி...நன்றி....நன்றி....

ஸ்ரீராம். said...

ஹா! ஹா! ஹா! பாட்டாவே படிச்சுட்டீங்களா!